ஒரு பதிவரின் மனக் குறிப்பும் மெட்ரோ பயணமும்
-------------------------------------------------------------------------------
ஒவ்வொரு
ஆண்டும் மேமாதம் 7-ம் நாள் என்மனம் அந்த நாளை நினைக்காமல் இருக்காது அந்தநாள்
07-05-1968 என் இரண்டாம் மகன் பிறந்த நாள்அந்த நாளின் நினைவுகள் மனதில் மோதி ஒரு introspection-க்கு வழி வகுக்கிறது.என் இரண்டாம் மகன் பிறந்த நாள். நாங்கள்
அப்போது BHEL குடியிருப்பில் இருந்தோம்.அன்று
விடியற்காலை சுமார் நான்கு மணி இருக்கும். என் மனைவி எழுந்து குளித்து அறையில்
அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தாள். நான் விழித்துக் கொண்டு என்ன ஆயிற்று என்று
கேட்டேன். பிரசவ நேரம் நெருங்கி விட்டது போல் தெரிகிறது என்றாள். நானும் என்
நண்பனும் ( அவன் அப்போது என்னுடன் தங்கிக் கொண்டிருந்தான்)தயாராகி BHEL மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றோம்.
அது எங்கள் வீட்டில்இருந்து
சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கும். நான் ஒரு புறமும் அவன் மறுபுறமும் நடந்து
வர அவளைக் காலையில் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் சென்றோம். அவளது நிலையைப்
பரிசோதித்த டாக்டர் அவளை நேராக லேபர் வார்டில் அட்மிட் செய்தார். அவ்வளவு தூரம்
நடந்து வந்தீர்களா என்று ஆச்சரியத்துடன் கேட்டார். அட்மிட் செய்த ஒரு மணி
நேரத்தில் என் இரண்டாம் மகனைப் பிரசவித்தாள்.
இப்பொழுதும் ஏதாவது பேச்சின் ஊடே “ என்னைப் பிரசவத்துக்கு
நடத்திச் சென்றீர்களே . ஏதாவது ஏடாகூடமாய் நடந்திருந்தால் “ என்று சொல்லிக்
காட்டுவாள். என்ன செய்வது. ? சில நேரங்களில் IGNORANCE
IS BLISS என்று
நினைத்துக் கொள்வேன். அவளை அன்று லேபர் வார்டில் பார்த்தபோது அவள் முகத்தில்
தெரிந்த வலியின் வேதனையைக் கண்டு தீர்மானம் செய்தேன்..இதற்கு மேல் குழந்தைகள் வேண்டாம்.
இவள் இந்த அவஸ்தைக்கு இனி உள்ளாகக் கூடாது” என்று. இரண்டாவது குழந்தை பெண்ணாக இருக்க விரும்பினாலும்
ஆணாகப் பிறந்தாலும் மூன்றாவது குழந்தை என்னும் பேச்சுக்கே இடம் கொடுக்கவில்லை.
என்னவாயிருந்தாலும் அவளுக்கு
என் அறியாமையை ( அலட்சியம் என்பாள் அவள் ) சுட்டிக்காட்ட அது ஒரு வாய்ப்பாக
இருக்கிறது (இன்றும்)
இந்த
ஆண்டும் என் மகனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல நானும் என் மனைவியும் அவன் வீட்டுக்குச்
சென்றோம்
போகும்
போது வெறுங்கையுடன் செல்லலாமா . என் மனைவியே பேக் செய்த கேக்குடன் சென்றோம் (பார்க்க
பூவையின் எண்ணங்கள்அவனின்றிகேக் பேக்கலாம்
) http://kamalabalu294.blogspot.in/2013/12/blog-post_25.html
இத்தனை வயதுக்குப்
பின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் எல்லாம்
வெகு சம்பிரதாயப்படி பிறந்தநாள்
வாழ்த்துக்களுடன் முடிவடையும் ஒரு சின்ன சந்தோஷத்துக்காக கேக் எடுத்துக்
கொண்டு போனோம் ஒரு இனிதான மாலையில்
சிம்பிளாக பிறந்த நாள் கொண்டாடப்
பட்டது
அவனின்றி பேக்கிய கேக் |
HAPPY BIRTHDAY SON |
வைக்கிங் தாத்தா ஸ்டார் வார் வாளுடன் பேரனுடன் |
பெங்களூரில் அண்டர்
கிரௌண்ட் மெட்ரோ செயல் பட ஆரம்பித்து
விட்டதுஎன் வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும்
மெட்ரோ லைன் க்ரீன் லைன் இன்னும்
அண்டகிரௌண்ட்ரயிலுக்கு கனெக்ட் ஆகவில்லை
ஆனால் ஊதா லைன் என்று
அழைக்கப்படும் பையப்பனஹள்ளி ரயில் நிலையத்திலிருந்து மைசூர் ரோட் வரை ஊதா
லைன் எனப்படும் இதில் மஹாத்மா காந்தி
சாலையிலிருந்து சிடி ரெயில்வே ஸ்டேஷன் வரை
நிலத்துக்கு அடியில் ரயில் இயக்கம் துவங்கி விட்டது. நான் ஜப்பானிலும் புது
டெல்லியிலும் மெட்ரோ ரயிலில்
பயணித்திருக்கிறேன் . ஆனால் தென் இந்தியாவில் முதன் முதலாக பெங்களூரில் இயக்கப் படும் மெட்ரோ ரயிலில்
பயணித்ததில்லை. மகன் வீட்டுக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லச் சென்றவன் மெட்ரோ
ரயிலில் பயணிக்க விருப்பம் தெரிவித்தேன் நான் எள் என்னும் முன் எண்ணையாக
நின்றான் என் மகன் என் மகன் வீட்டிலிருந்து மூன்று
கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பையப்பனஹள்ளி ரயில் நிலையத்துக்கு நான் என் மனைவி என்
மகன் மற்றும் பேரன் ஆகியோர் காரில் பயணித்து
ரயில் நிலையம் அடைந்தோம்
மெட்ரோ ரயில் பயணம்
பேரூந்து பயணத்தைவிட மலிவானது குளிர்சாதன
வசதியுடன் பயணிக்கலாம் ஆளுக்கு ரூ 26 -/ டிக்கெட் எடுத்து பையப்பனஹள்ளியிலிருந்து கெம்பகௌடா எனப்படும் மெஜஸ்டிக்
வரை 35 நிமிடங்களுக்குள் சேர்ந்து
விட்டோம் டிக்கட் வாங்கும் இடத்தில் டிக்கட்டுக்குப் பதில் ஒரு டோக்கன் தருகிறார்கள்அதை நடை மேடைக்குச் செல்லும்
வழியில் இருக்கும் விக்கெட் கேட் மேல்
வைத்து எடுக்கவேண்டும் ஒரு கதவு திறந்து வழி விடுகிறது அதே போல் போய்ச் சேர்ந்த
நிலையத்தை விட்டு வெளியே வர அந்த டோக்கனை ஒரு ஸ்லாட்டில் போட கதவு திறந்து வழி
விடுகிறது
எனக்கு நிலத்தடியில்
ரயிலில் பயணிப்பதே குறிக் கோள் ஒவ்வொரு நிலத்தடி ரயில் நிலையமும் அத்தனை ஆழத்தில் பிரம்மாண்டமாய் நிறுவப்பட்டிருக்கிறது நடைமேடைகளும் எஸ்கலேட்டர்களும் லிஃப்டுகளும் படிகளும்
அது ஒரு வேறு உலகம் இத்தனையும் எல்லா ஸ்டேஷன்களிலும் இருக்கிறதுநிலத்தடி
பாதையே நான்கு கிலோமீட்டருக்கும் மேலாக இருக்கிறது அவ்வளவு ஆழத்தில் நிலத்தை
குடைந்து ரயில் பாதைகள் போட்டு ரயில் நிலையங்கள் அமைத்து எல்லாமே பிரமிப்பாய்
இருக்கிறது சொன்ன நேரத்தில் முடியவில்லை என்னும் கோபம் எல்லாம் பயணிக்கும் போது
மறந்து விடுகிறதுஎங்கள் பகுதியில் இருக்கும் க்ரீன் லைனும் இன்னும் மூன்று மாதத்தில் நிலத்தடி நிலையங்களோடு
இணைக்கப்பட்டு விடும் பிறகு பெங்களூரில்
பயணங்க்கள் எளிதாகி விடும் சீப்பாகி விடும் பயண நேரமும் குறைந்து விடும்
பயணத்தின்போது
அடுத்துவரும் ரயில் நிலையத்தின் பெயரும் நடை மேடை எந்தப்பக்கம் என்று அறிவிப்புகள்
இருக்கிறது ரயில் நிற்கும் போது ஒரு மணிச் சத்தத்துடன் கதவு தானாகத் திறக்கிறது
பின் மணிச்சத்ததுடன் கதவு மூடுகிறது காணொளிகள் 1)பையப்பன ஹள்ளியிலிருந்து மஹாத்மா காந்தி ரோட் 2) மஹாதமாகாந்தி ரோடிலிருந்து நிலத்தடியில் 3)கெம்பகௌடா ( மெஜஸ்டிக் )ரயில் நிலையம் மேலே
என் ஹாண்டி காமில் வீடியோ
எடுத்திருக்கிறேன் இரண்டு காணொளிகளை யூ ட்யூப் இல் இணைத்துப்பின்
பதிவாக்குகிறேன் நாங்கள் போனது
ஞாயிற்றுக் கிழமை ஆதலால் கூட்டம் குறைவாகவே
இருந்தது சில புகைப்படங்களும் காணொளிகளும் கீழே
வழிகாட்டிகள் |
டிக்கெட் வாங்குமிடம் |
பையப்பனஹள்ளி ரயில் நிலையத்துக்கு போகும் வழி |
அனைத்திற்கும் வாழ்த்துகள் அய்யா...
பதிலளிநீக்குஉங்கள் மகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். மெட்ரோ ரயில் பயணம் எளிமையாகவும், இனிமையாகவும் அமைந்ததுக்கும் வாழ்த்துகள். செய்வன திருந்தச் செய் என்னும்படி செய்திருக்கின்றனர்.
பதிலளிநீக்குGood.
பதிலளிநீக்குஉங்கள் மகனுக்கு எங்கள் வாழ்த்துகள். மெட்ரோ பயணம் இனிமையாக இருந்திருக்கும், ரசித்தீர்கள் என்று தெரிகிறது.
பதிலளிநீக்குதங்கள் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஇனிமையான நிகழ்வுகள். இவை என்றென்றும் தொடர வேண்டும். உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எனது உளங்கனிந்த வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குமெட்ரோ ரயில் பயணம் நல்ல அனுபவம் தான். படங்கள் அஅழகானவர். உங்கள் மகனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சார்!
பதிலளிநீக்குஇனிமையான பயண அனுபவம். நானும் எம்.ஜி. ரோட்டிலிருந்து பைய்ப்பனஹள்ளி வரை மெட்ரோவில் பயணித்திருக்கிறேன். போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் விரைவில் சென்று சேர இந்த ரயில் மிகவும் உதவியாக இருக்கிறது. படமும் காணொளி காட்சியும் அருமை.
பதிலளிநீக்குமனம் கனிவான பிறந்தநாள் வாழ்த்துகள்!
மகனுக்கு காலம் தாழ்த்திய வாழ்த்துக்கள் படங்கள் அருமை நானும் சென்னைமெட்டோவில்போய்வந்த பின் பதிவு போடுவேன் ஸார் விரைவில்)))
பதிலளிநீக்குதங்களின்அன்பு மகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா
பதிலளிநீக்குஐயாவின் மகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ திண்டுக்கல் தனபாலன்
வாழ்த்துக்களுக்கு நன்றி டிடி
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மேம் முழுமையடைந்த பின்னர் மெட்ரோ பெங்களூர் சாலைகளின் நெரிசலைக் குறைக்கும் என்று நம்பப்படுகிறது
பதிலளிநீக்கு@ டாக்டர் கந்தசாமி
வருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஸ்ரீ
பதிலளிநீக்கு@ புலவர் இராமாநுசம்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா
பதிலளிநீக்கு@ தி தமிழ் இளங்கோ
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்
பதிலளிநீக்கு@ மோகன் ஜி
முடிவடைந்தபின் மெட்ரோ பெங்களூருக்கு ஒரு வரமாக இருக்கும் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஜி
பதிலளிநீக்கு@ எஸ்பி செந்தில் குமார்
நிலத்தடி பயணமும் ரயில் நிலையங்களும் காண வேண்டியவை வருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@ தனிமரம்
நானும் சென்னை மெட்ரோவில் போய் வந்தபின் பதிவு போடுவேன் / இப்போது எங்கிருக்கிறீர்கள் ? வருகைக்கும் வாழ்த்ட்க்ஹுக்கும் நன்றி சார்
பதிலளிநீக்கு@ கரந்தை ஜெயக் குமார்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா
பதிலளிநீக்கு@ அஜய் சுனில்கர் ஜோசப்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்
தங்கள் மகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். உங்கள் பதிவுகள் மூலமாக எங்களையும் உங்களுடன் அழைத்துச்செல்கின்றீர்கள். உங்களுடன் நாங்களும் வருவது போல உள்ளது. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்கு@ டாக்டர் ஜம்புலிங்கம்
பதிலளிநீக்குயாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் வருகைக்கு நன்றி ஐயா
நாங்களும் மூன்று மாதம்முன்பு பெங்களூர் மெட்ரோவில் அல்சூரிலிருந்து பயணித்தோம்.
பதிலளிநீக்குஉங்கள் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
படங்கள், காணொளி அருமை.
எமது வாழ்த்துகளும் ஐயா விரிவான ரயில் கட்டுரை அருமையாக சொன்னீர்கள் நானும் பூமிக்குள் செல்லும் ரயிலில் பயணித்து வியந்து இருக்கின்றேன் இதுவும் பெரிய சாதனைதான் ஆனால் நமது நாட்டில் தாமதமே...
பதிலளிநீக்குகாணொளிகள் கண்டேன் ஐயா
அல்சுருலிருந்து இந்திரா நகர் போனோம்.
பதிலளிநீக்குஉங்கள் மகனுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நம்ம மெட்ரோ பயணத்தை படங்களுடன் வின்னும் வரித்திருக்கிறீர்கள். பெங்களூரில் இன்னும் பயணிக்கவில்லை. டெல்லியில் பயணித்திருக்கிறேன். உங்கள் படங்கள் மிகவும் அருமை.
பதிலளிநீக்குv
பதிலளிநீக்கு@ கோமதி அரசு அண்டர் க்ரௌண்ட் ரயில் இயங்கத் துவஙி இரு வாரங்களே ஆகின்றன வருகைக்கு வாழ்த்துக்கும் நன்றி மேம்
பதிலளிநீக்கு@ கில்லர் ஜி
தாமதமானாலும் சாதனைதான் வருகைக்கு நன்றி ஜி
பதிலளிநீக்கு@ கோமதி அரசு அல்சூரிலிருந்து இந்திராநகர் வரை மிகவும் குறுகிய தூரம் வருகைக்கு நன்றி மேம்
பதிலளிநீக்கு@ ராஜலக்ஷ்மி பரமசிவம்
மெட்ரொ ரயிலில் டெல்லியில் நானும் பயணித்திருக்கிறேன் டெல்லியில் பூமிக்கடியில் மெட்ரோ இயக்கம் இருக்கிறதா தெரியவில்லை. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மேம்
உங்கள் மகனுக்கு வாழ்த்துகள் - தாமதமாக.....
பதிலளிநீக்குதில்லி மெட்ரோ போலவே இருக்கிறது. கூடுதல் தகவல். தில்லி மெட்ரோ பூமிக்கடியிலும் உண்டு. சாந்த்னி சௌக் நிலையம் தரையிலிருந்து வெகு ஆழத்தில் இருக்கிறது. ஒரே லைன் - தரைக்கடியிலும் தரைக்கு மேலும் செல்லும் விதமாகக் கூட இருக்கிறது......
முதலில் உங்கள் மகனுக்கு எங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
பதிலளிநீக்குமெட்ரோ ரயிலும் நிலையங்களும் அட்டகாசமாக இருக்கிறது. சென்னையிலொரு நாள் மெட்ரோவில் போக நினைத்து.......... அதற்கு சந்தர்ப்பம் அமையாமல் போய்விட்டது.
சில அயல்நாடுகளில் மெட்ரோவில் பயணித்துள்ளோம்.
பதிலளிநீக்கு@வெங்கட் நாகராஜ்
வருகைக்கும் வாழ்த்துக்கும் கூடுதல் தகவலுக்கும் நன்றி சார்
பதிலளிநீக்கு@ துளசி கோபால்
தென் இந்தியாவின் முதல் நிலத்தடி ரயில் என்பதே நான் முனைந்து பயணிக்கக் காரணி வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மேம்
ஆண்கள் பெரும்பாலும் பெண்களின் மனதில் உள்ளதை புரிந்துகொள்ளாமல் அறியாமைத் தனத்துடன் தான் உள்ளோம் போலும் ஐயா!
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ தளிர் சுரேஷ்
வாருங்கள் சிறிது இடைவெளியாயிற்றே. ஆண்களின் அறியாமையைத்தான் நான் blessed are those that are ignorant என்கிறேன்
வைக்கிங் தாத்தா புகைப்படம் அருமை...
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ அருள்மொழிவர்மன்
புகைப்படத்தைப் பாராட்டியதற்கும் வருகைக்கும் நன்றி சார்
இப்போது பாரிசில்தான் வாசம் வரும் ஆண்டு தைக்கு சபரிமலைக்கு வரும் போது சந்தர்ப்பம் அமைந்தால் சென்னை மெட்ரோவிலும் பயணித்துப்பார்க்கும் ஆசைஇருக்கு ஸார்! என் தள வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் ஐயா.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ தனிமரம்
வருகைக்கும் உங்கள் தளத்தில் கேட்ட கேள்விக்கு பதிலுக்கும் நன்றி ஐயா தைமாதம் வரும்போது பெங்களூருவுக்கும் வர வேண்டுகிறேன்
டெல்லியில் மெட்ரோ ரயிலில் பயணித்த அனுபவம் உண்டு . சென்னையில் இதுவரை சென்றதில்லை.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ டிஎன் முரளிதரன்
தெம் இந்தியாவிலேயே முதல் நிலத்தடி மெட்ரோ பெங்களூரில்தான் அந்த அனுபவமே வேறு வருகைக்கு நன்றி சார்
தங்கள் மகனுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! காணொளியை பார்த்தபோது நானும் பயணிப்பது போன்ற உணர்வு. சென்னையிலும் மெட்ரோ ரயில் பயணம் சுகமாய் இருக்கிறது ஐயா. தற்போது மேலே ஓடும் ரயில் இன்னும் ஓரிரு மாதங்களில் நிலத்தடியிலும் ஓட இருக்கிறது.
பதிலளிநீக்கு@ வே நடன சபாபதி
பதிலளிநீக்குஒரு இடைவெளிக்குப் பின் உங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது இன்னூம் சில மாதங்களில் பெங்களூரில் எந்த இடத்துக்கும் மெட்ரோவில் பயணிக்கலாம் என்றாகி விடும்வருகைக்கு நன்றி ஐயா