பிறந்தநாளும் மெட்ரோ பயணமும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிறந்தநாளும் மெட்ரோ பயணமும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 10 மே, 2016

ஒரு பதிவரின் மனக் குறிப்பும் நம்ம மெட்ரோ பயணமும்


                            ஒரு பதிவரின் மனக் குறிப்பும்  மெட்ரோ பயணமும்
                             -------------------------------------------------------------------------------

ஒவ்வொரு ஆண்டும் மேமாதம் 7-ம் நாள் என்மனம் அந்த நாளை நினைக்காமல் இருக்காது அந்தநாள் 07-05-1968 என் இரண்டாம் மகன் பிறந்த நாள்அந்த நாளின் நினைவுகள் மனதில் மோதி ஒரு introspection-க்கு வழி வகுக்கிறது.என் இரண்டாம் மகன் பிறந்த நாள். நாங்கள் அப்போது BHEL  குடியிருப்பில் இருந்தோம்.அன்று விடியற்காலை சுமார் நான்கு மணி இருக்கும். என் மனைவி எழுந்து குளித்து அறையில் அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தாள். நான் விழித்துக் கொண்டு என்ன ஆயிற்று என்று கேட்டேன். பிரசவ நேரம் நெருங்கி விட்டது போல் தெரிகிறது என்றாள். நானும் என் நண்பனும் ( அவன் அப்போது என்னுடன் தங்கிக் கொண்டிருந்தான்)தயாராகி BHEL மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றோம். அது எங்கள் வீட்டில்இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கும். நான் ஒரு புறமும் அவன் மறுபுறமும் நடந்து வர அவளைக் காலையில் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் சென்றோம். அவளது நிலையைப் பரிசோதித்த டாக்டர் அவளை நேராக லேபர் வார்டில் அட்மிட் செய்தார். அவ்வளவு தூரம் நடந்து வந்தீர்களா என்று ஆச்சரியத்துடன் கேட்டார். அட்மிட் செய்த ஒரு மணி நேரத்தில் என் இரண்டாம் மகனைப் பிரசவித்தாள்.
இப்பொழுதும் ஏதாவது பேச்சின் ஊடே “ என்னைப் பிரசவத்துக்கு நடத்திச் சென்றீர்களே . ஏதாவது ஏடாகூடமாய் நடந்திருந்தால் “ என்று சொல்லிக் காட்டுவாள். என்ன செய்வது. ? சில நேரங்களில் IGNORANCE IS BLISS என்று நினைத்துக் கொள்வேன். அவளை அன்று லேபர் வார்டில் பார்த்தபோது அவள் முகத்தில் தெரிந்த வலியின் வேதனையைக் கண்டு  தீர்மானம் செய்தேன்..இதற்கு மேல் குழந்தைகள் வேண்டாம். இவள் இந்த அவஸ்தைக்கு இனி உள்ளாகக் கூடாது” என்று. இரண்டாவது குழந்தை பெண்ணாக இருக்க விரும்பினாலும் ஆணாகப் பிறந்தாலும் மூன்றாவது குழந்தை என்னும் பேச்சுக்கே இடம் கொடுக்கவில்லை.

என்னவாயிருந்தாலும் அவளுக்கு என் அறியாமையை ( அலட்சியம் என்பாள் அவள் ) சுட்டிக்காட்ட அது ஒரு வாய்ப்பாக இருக்கிறது (இன்றும்) 
இந்த ஆண்டும் என் மகனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல  நானும் என் மனைவியும் அவன் வீட்டுக்குச் சென்றோம்
போகும் போது வெறுங்கையுடன் செல்லலாமா . என் மனைவியே பேக் செய்த கேக்குடன் சென்றோம் (பார்க்க  பூவையின் எண்ணங்கள்அவனின்றிகேக் பேக்கலாம் ) http://kamalabalu294.blogspot.in/2013/12/blog-post_25.html
இத்தனை வயதுக்குப் பின்  பிறந்த நாள் கொண்டாட்டங்கள் எல்லாம் வெகு சம்பிரதாயப்படி பிறந்தநாள்  வாழ்த்துக்களுடன் முடிவடையும் ஒரு சின்ன சந்தோஷத்துக்காக கேக் எடுத்துக் கொண்டு போனோம் ஒரு இனிதான மாலையில்  சிம்பிளாக  பிறந்த நாள் கொண்டாடப் பட்டது
அவனின்றி பேக்கிய கேக் 

 
பிரந்தநாள் குழந்தை


 
HAPPY BIRTHDAY SON 
 
வைக்கிங் தாத்தா ஸ்டார் வார் வாளுடன்  பேரனுடன் 
  
மெட்ரோ பயணம்
பெங்களூரில் அண்டர் கிரௌண்ட்  மெட்ரோ செயல் பட ஆரம்பித்து விட்டதுஎன் வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில்  இருக்கும்  மெட்ரோ லைன் க்ரீன் லைன்  இன்னும் அண்டகிரௌண்ட்ரயிலுக்கு கனெக்ட் ஆகவில்லை  ஆனால் ஊதா லைன்  என்று அழைக்கப்படும் பையப்பனஹள்ளி ரயில் நிலையத்திலிருந்து மைசூர் ரோட் வரை ஊதா லைன்  எனப்படும் இதில் மஹாத்மா காந்தி சாலையிலிருந்து சிடி ரெயில்வே ஸ்டேஷன்  வரை நிலத்துக்கு அடியில் ரயில் இயக்கம் துவங்கி விட்டது. நான் ஜப்பானிலும் புது டெல்லியிலும் மெட்ரோ ரயிலில்  பயணித்திருக்கிறேன் . ஆனால் தென் இந்தியாவில் முதன் முதலாக  பெங்களூரில் இயக்கப் படும் மெட்ரோ ரயிலில் பயணித்ததில்லை. மகன் வீட்டுக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லச் சென்றவன் மெட்ரோ ரயிலில் பயணிக்க விருப்பம் தெரிவித்தேன் நான் எள் என்னும் முன்  எண்ணையாக  நின்றான் என் மகன் என் மகன் வீட்டிலிருந்து  மூன்று  கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பையப்பனஹள்ளி  ரயில் நிலையத்துக்கு நான் என் மனைவி என் மகன்  மற்றும் பேரன் ஆகியோர் காரில் பயணித்து ரயில் நிலையம் அடைந்தோம்

மெட்ரோ ரயில் பயணம் பேரூந்து பயணத்தைவிட  மலிவானது குளிர்சாதன வசதியுடன் பயணிக்கலாம் ஆளுக்கு ரூ 26 -/ டிக்கெட் எடுத்து  பையப்பனஹள்ளியிலிருந்து கெம்பகௌடா எனப்படும் மெஜஸ்டிக் வரை 35 நிமிடங்களுக்குள்  சேர்ந்து விட்டோம் டிக்கட் வாங்கும் இடத்தில் டிக்கட்டுக்குப் பதில் ஒரு டோக்கன்  தருகிறார்கள்அதை நடை மேடைக்குச் செல்லும் வழியில் இருக்கும் விக்கெட் கேட்  மேல் வைத்து எடுக்கவேண்டும் ஒரு கதவு திறந்து வழி விடுகிறது அதே போல் போய்ச் சேர்ந்த நிலையத்தை விட்டு வெளியே வர அந்த டோக்கனை ஒரு ஸ்லாட்டில் போட கதவு திறந்து வழி விடுகிறது
எனக்கு நிலத்தடியில் ரயிலில் பயணிப்பதே குறிக் கோள் ஒவ்வொரு நிலத்தடி ரயில் நிலையமும்  அத்தனை ஆழத்தில் பிரம்மாண்டமாய்  நிறுவப்பட்டிருக்கிறது நடைமேடைகளும்  எஸ்கலேட்டர்களும் லிஃப்டுகளும்  படிகளும்  அது ஒரு வேறு உலகம் இத்தனையும் எல்லா ஸ்டேஷன்களிலும் இருக்கிறதுநிலத்தடி பாதையே நான்கு கிலோமீட்டருக்கும் மேலாக இருக்கிறது அவ்வளவு ஆழத்தில் நிலத்தை குடைந்து ரயில் பாதைகள் போட்டு ரயில் நிலையங்கள் அமைத்து எல்லாமே பிரமிப்பாய் இருக்கிறது சொன்ன நேரத்தில் முடியவில்லை என்னும் கோபம் எல்லாம் பயணிக்கும் போது மறந்து விடுகிறதுஎங்கள் பகுதியில் இருக்கும் க்ரீன் லைனும்  இன்னும் மூன்று மாதத்தில் நிலத்தடி நிலையங்களோடு இணைக்கப்பட்டு விடும்  பிறகு பெங்களூரில் பயணங்க்கள் எளிதாகி விடும் சீப்பாகி விடும் பயண நேரமும் குறைந்து விடும்
பயணத்தின்போது அடுத்துவரும் ரயில் நிலையத்தின் பெயரும் நடை மேடை எந்தப்பக்கம் என்று அறிவிப்புகள் இருக்கிறது ரயில் நிற்கும் போது ஒரு மணிச் சத்தத்துடன் கதவு தானாகத் திறக்கிறது பின் மணிச்சத்ததுடன் கதவு மூடுகிறது  காணொளிகள் 1)பையப்பன ஹள்ளியிலிருந்து மஹாத்மா காந்தி ரோட் 2) மஹாதமாகாந்தி ரோடிலிருந்து நிலத்தடியில் 3)கெம்பகௌடா ( மெஜஸ்டிக் )ரயில் நிலையம் மேலே  



என் ஹாண்டி காமில் வீடியோ எடுத்திருக்கிறேன் இரண்டு காணொளிகளை யூ ட்யூப் இல்  இணைத்துப்பின்  பதிவாக்குகிறேன்  நாங்கள் போனது ஞாயிற்றுக் கிழமை ஆதலால்  கூட்டம் குறைவாகவே இருந்தது சில புகைப்படங்களும் காணொளிகளும் கீழே
வழிகாட்டிகள் 
 
டிக்கெட் வாங்குமிடம் 


பையப்பனஹள்ளி ரயில் நிலையத்துக்கு போகும் வழி 
 
பையப்பனஹள்ளி ரயில் நிலையம் 
   
உள்ளே போகும் வழி 
 
  
டிக்கெட் கௌண்டரில் 

மெஜஸ்டிக் ரயில் நிலையம் மேலே 
  
நடைமேடை வழிகாட்டிகள்