Thursday, May 28, 2020

டெல்லி நினைவுகள் சில


                                         டெல்லி நினைவுகள் சில
 

  
                    1979 ம் ஆண்டு  மேமாதம்  என் மச்சினனுக்கு  திருமண்ம் குருவாயூர் அருகே நடப்பதாய்  இருந்தது நாங்கள்  விஜயவாடாவில் இருந்தோம் டெல்லியில்  தலைமை அலுவலகத்துக்கு வருமாறு அழைப்பு இருந்தது நான் அந்த வாய்ப்பில் என் மக்கள்மனைவியோடு டெல்லி பயணப்பட்டேன்   அதுவே எனக்கும்  குடும்பத்தாருக்கும்   முதல் டெல்லி  பயணம் டெல்லியில் எதுவும் தெரியாது என்நண்பனின் மச்சினன் டெல்லியிலிருப்பது  நினைவுக்கு வந்து அவனுக்கு நாங்கள் வருவது குறித்து  தகவல் அனுப்பினோம் ரயில்வே ஸ்டேசனுக்கு வந்து  எஙளை அவனிருப்பிடத்துக்கு கூட்டிப்போனான் ராமகிருஷ்ணாபுரம் என்பது நினைவு  அவனோ ஒரு வீட்டில் சப்டெனண்டாக  இருந்தான்சிறியைடம்நாங்கள் எத்தனை நாளிருப்போம் என்பது தெரியாது அலுவலகப்பணி  சீக்கிரமே முடியலாம்  அங்கிருந்துவிஜயவாடா போய் பின்  கேரளாசெல்லவேண்டும் விஜயவாடா விலிருந்துடிக்கட் எடுத்துஇருந்தோம் எப்படியும் மே 13 ம்  தேது கேரளவில் இருக்க வேண்டும்
டெல்லி புதிய இடமானதால்குடும்பத்தாருட  தலைமை அகத்துக்குப் போனேன்  வேலை முட்ந்ததும் என்னோடு அவர்களும் வரலாம் என்பது திட்டம்லௌஞ்சில் அவர்களை விட்டு நான்  போனேன்   அவர்களை என்நண்பன் ஒருவன் பார்த்து விசாரித்தான் பிறகு அவர்களை அவன் வீட்டுக்கு கூட்டிப்போனான்   பிறகு என்ன்சைப்பார்த்து விஷயம்கேட்டு அவனும் சொன்னான்  என்பணி மதியத்துக்கு உள் முடியவே அவர்களுடன் நாங்கள் ராமகிருஷ்ணபுரதுக்குசென்றோம்அன்றுஇரவு எப்படியோ மேனேஜ்  செய்தோம் மறு நாள் டெல்லி சுற்றிப்பார்க்க ஒரு நாள் பேரூந்து டிக்கட் எடுத்திருந்தான் ஒரு வழியாய் டெல்லியின்  முக்கிய இடங்கள் பார்த்தோம் 
டெல்லியில் மலைக் கோவில் ஒன்று உள்ளதாம்  அதை அங்கே மலாய் மந்திர்  என்கின்றனர்
அந்தமுறை குதுப் மினார்  மேல் ஏறிப்பார்த்தோம்  அங்குஇருக்கும்  துரு ஏறாத இரும்புத்தூண் இருகிறது  அதை சுற்றிக் கட்டிப்பிடிப்பது சிரமமாம் என்மனைவி அவள்கை வரிசையைக்காட்டினாள்இப்போதெல்லாம்  குதுப் மினார் மேல் ஏறவும் அந்த தூணைதொடவும்  அனுமதி இல்லை வழக்கம்போல் புகைப்படங்கள்கதை சொல்லும்


துரு பிடிக்காத  துண்


குதுப் மினார் மேல் நாங்கள் வலது பக்க த்தில்  ருப்பவர் வீட்டில் தங்கினோம் 


ஒரு காட்சி  ஓடும் பஸ்ஸில் இருந்து எடுத்த படம்  
பிறகு பல முறை டெல்லி சென்றிருந்தாலும்  முத்ல் பயணம் ஏதுமறியா டெல்லியில் முதல் முறை குடும்ப்த்துடன் சென்றது நினைவுக்கு வரும் ராமகிருஷ்ணாபுரத்தில் ஒரு தென்னிந்திய ஓட்டலுக்குச்சென்றிருந்தோம் அதன்   உரிமையாளர் பிஎச் இ எல் அதிகாரி ஒருவர் போல் இருந்தார் அவர் தன்    பணி ஆட்களிடம்   கூறியது இன்னும் நினைவில்  நேற்றையவடைகளை இன்று தயிர் வடையாக்கி விடு என்று கூறீ கொண்டிருந்தார்          

 

   

Saturday, May 23, 2020

மா புராணம்


                                             மாபுராணம்
                                              ------------------


உஸ்ஸ்ஸ் அப்பாடா   ஒரு வழியாய் மரத்திலிருந்த மாங்காய்கள்  பழங்கள் கீழே வந்தன இலை மறைவாய் காய் மறைவாய்  என்பதன் அர்த்தம்புரிந்தது இவ்வருடம் நிறையவே காய்கள் பறித்து போட்ட மகானுபாவன் +  சுமார் நான்கு மூட்டைக்ள் காய்களை எடுத்துச்சென்றான் நாங்களூம் கண்டு  கொள்ள வில்லை   எனக்கு ஏனோநெல்லைத் தமிழரின் நினைவு வந்தது எங்கள்வீட்டு மாமரம் பற்றி நிறையவே  விசாரித்து இருந்தார்  அடுத்து இருப்போர் எல்லோருக்கும் கொடுத்தோம்எங்கள் வீட்டு மாம்பழத்தின்  சுவையே தனி  எந்த ஜாதி என்று தெரியாதுமஞ்சள்நிறமே வராது காய்பொல் இருக்கும் ஆனால் தின்னத் தின்ன சுவை நாங்கள்மாம்பழம் வாங்கி சாப்பிட்டது  கிடையாது  வாங்கிய ப்ழங்களின்   சுவை காரண்டி கிடையாது  சில  நேரஙகளில்மலையாளத்தில்  சளுக்கும்  என்பார்கள் அதுபோல் இருக்கும்   ஆனாலெங்கள் வீட்டுப் பழங்க்சள் இனிக்கும் போதும்   எங்கள் வீட்டு மாம் பழங்களின் புராணம்                                                                       


https://www.youtube.com/watch?v=tNnLAyM_azc
பழங்கள்  மஞ்சள் நிறம் வருவதில்லைசூப்பர் சிங்கர்     பாட்டு ஒன்று 
Wednesday, May 20, 2020

ஒரு ஆருடம்                                      ஒரு ஆருடம்
                                        -------------------இந்த கொரோனா தொற்று வ்ந்தாலும் வந்தது ஆலயங்கள்எல்லாம்  மூடப்பட்டு விட்டன  ஆனால் என்ன பக்த கோடிகளின்   பிரார்தனைக்கு குறைவே இல்லை நம் கையை மீறிப்போய்விட்டால் நடப்பது அவன் சித்தம் நல்லதே நடக்க்  பிரார்த்திபோம்என்று கருதுகிறார்கள்  என் சிந்தனை சற்று  வித்தியாசமானது  அவனுக்கு தெரியாததா ஒன்பது  அவதாrரங்கள் எடுத்து  அவனியை ரட்சித்தவனுக்கு தெரியாதா உலகை அழிய விடமாட்டான்   உலகு அழியும் குறிகள் எல்லாம் காட்டுகிறான்     அனாத  ரட்சகன் அல்லவா  கடைசி நேரத்தில்வருவான் இப்போதுஇருப்போரின்   பிரார்த்தனைக்கு செவி சாய்க்க கடைசியில் இருக்கும் சிலருக்கு உலக அழிவின்  பயத்தை ஏற்றி மீண்டும்  ப்டைப்பு தொழிலை துவங்கி அவதார நோக்கினை நிறை வெற்றுவான்  நம் இன்றைய பிரார்த்தனை நாளைதான்   நிறைவேறலாம்
 அரசு தொற்று பரவாமல் இருக்க எடுக்கும்  நடவடிக்கைகளை எல்லாம் இதழிலோடும்  புன்னகையோடு பார்த்துக் கொண்டிருக்கிறாrர் அரசுக்கு  வேண்டியது செய்வது போல் இருக்கும்செயல்தானே கைகளைக் க்ழுவுவதோ  முகமூடி அணிவதோ  தொற்றை தவிர்க்கும் என்னும் நம்பிக்கை மட்டும் இல்லை கடவுள் மேல் பாரத்தை  நாம் போடுவோம்   நடப்பது நன்றாக நடந்தது இனி நடப்பதும் நன்றாகவே நடக்கும் என்று கீதையில்கண்ணன்  சொல்லாததை எல்லாம்   சொன்னது போல்  பாவிப்போம்  ஆனால் நம்பிக்கை என்னும் வார்த்தையை அடிக்கடி கூறுவோம் நான் சொல்வது ஏதோ ஆருடம்போல் இருக்கும்
 என்மகன்  2020 ம் ஆண்டு  சந்துஷ்டியாக இருக்கும்  என்று சொன்ன     சோதிடனை தேடிக் கொண்டு இருப்பதாக கூறுகிறான் அதிகம் சொல்லி அது நடக்காமல் போனால். என்னையு ம் பலர் தேடலாம்

நான் இதுவரை தொற்றுக்காக  எடுக்கும்  பரிசோதனை மற்றும் கோரண்டைன்   எல்லாம்  இலவசம் என்று நினைத்திருந்தேன்   ஊரடங்கு  தளர்த்தப்ப்ட்டு விட்டதே ஒரு எட்டு வந்து போயென்   என்று மகனிடம்  சொன்னேன்  வந்து போவது எளிதல்ல என்றான் அதற்கு அனுமதி  வாங்க வேண்டும்   நாள் ஒன்றுக்கு ரூ 1800 கட்டி கோரண்டைனில் இருக்க வேண்டும்  என்றான்  இருபது லட்சம் கோடி ரூபாய எப்ப்டிஎல்லாமோ செல்விடும் அரசு  எப்படி எல்லாம்  பணம்  வசூலிக்,கிறர்கள் என்று சொல்வதில்லை  சில நாட்களுக்கு முன்  ரயிலில் புலம் பெயர்ந்தார்கள் இதற்கு ஆட்சேபம் தெரிவித்து போராடினதும்நினைவுக்கு வந்தது 

  நல்லாரைக் காப்பதற்கும் கெட்டவரைக் கரந்தொடுக்குவதற்கும் , தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் யுகந்தோறும் நான் அவதரிக்கிறேன்(8) கீதை அத்தியாயம்  4  சுலோகம் எட்டு
பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம் தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே "எப்பொழுதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலை எடுக்கிறதோ அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட நான் அவதரிப்பேன் யுகம் யுகமாக" அதர்மமேநிலை பெற்று  விட்டதாகத்கோன்றியதால் எழுதியபதிவு   i


           -
      

Monday, May 18, 2020

முட்டம் முருகன்                                            முட்டம்  முருகன்
                                            -----------------------------


  ஊரடங்குநேரத்தில்  எந்த சானலிலும் சினிமாதான். ஜயா சானலில் கடலோரக் கவிதைகள் என்னும் சினிமா இருந்தது  பாரதி ராஜாவின்  படமாயிற்றே  என்றுசிறிது நேரம் பார்த்தேன்   முட்டம் என்னும் இடத்தில் படம் எடுக்கப் பட்டதாம்முட்டமென்னும் பேரைப்படித்தபோதுநான்  அந்த இடத்துக்கு சென்றதுநினைவில் ஆடியது முன்பெல்லாம் ஜூலை முதல் வாரத்தில் ஏதாவது பிரசித்தி பெற்ற கோவிலில் இருப்பது வழக்கம்   2004ம் ஆண்டு என்நண்பரின் விருந்தினராக நாகர் கோவிலுக்கு செனாறோம்அங்கிக்ருந்து கன்னியாகுமரி திருச்செந்தூர்   நெல்லை போன்ற இடங்களுக்கு போய் வந்தொம்   அப்போது நண்பர் நாகர் கோவிலைச் சுற்றி இருந்த இடங்களுக்கு  கூட்டிப்போயிருந்தார் அப்படி போன  இடங்களுள்  ஒன்றுதான்  மண்டக்காடு அங்கிருக்கும் பகவதி கோவில்பிரசித்தம்அப்படிப் போகும் வ்ழியில் ஒரு முருகன் கோவிலும் இருந்தது மிகவும் அழகான முருகன் சிலை இடம்பெயர் நினைவுக்கு வரவில்லை புகைப்படமும் எடுக்கவில்லை எடுத்திருந்தால் நான் இப்படி தடு மாற நேர்ந்திருக்காது                                
போகும் இடமெல்லாம்  கடலோரப்பகுதிகளே அப்போதுமுட்டம் கடற்கரையில் சிறிதுநேரம் இருந்தோம் நாங்கள்படமெடுப்பதைப் பார்த்துஒருவர்  மோர் விற்பவர்  அவரையும் ஒருபடம் எடுக்க வேண்டினார்  வெள்ளந்திமனிதர் படம் எடுத்தாலும் அவருக்கு  கொடுக்க இயலாது என்றோம் பரவாயில்லை என்றார் அவர் பெயரைக் கேட்டு தெரிந்து கொண்டோம்   முருகன்  என்று கூறினார் முருகன் சிலையை ப்டமெடுக்காவிட்டாலும்  முருகன் என்னும்மனிதனைப் ப;டமெடுத்தோம் 


நாகராஜா கோவில்  நாகர் கோவில் 
       
முட்டம்  முருகன்
பழமுதிர் சோலை  முருகன் கோவில் 
 
மண்டைக் காடு  பகவதி கோவில் 


  திரு அருட்பா வரிகள்


கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்உறும் பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே. 

காணொளி நாம் இருவர் படத்திலிருந்து இதை விட நல்ல காணொளி கிடைக்க வில்லை 

--                                                         


Friday, May 15, 2020

இலக்கிய இன்பம்


                                    இலக்கிய இன்பம்  கம்ப ராமாயணம்
                                   ===================================

ராமாயணைத்தை ஒரே வாக்கியத்தில்(சுட்டி) சாதாரணன்  ராமாயணமாக எழுதியஎனக்கு கம்பனில் இருந்து சில பாடல்க்சளைக் குறிப்பிடுவது அசாதாரணமாக இருந்தது  முயற்சி செய்ததில் குகனின்  குணத்தை பிரதிபலிக்கும் சிலபாடல்ளை குறிப்பிடலாம்  என்று  தோன்றியது குகன் சற்றுமுன் கோபியாக  முத்லில் தோன்றினாலும்   கோபமுள்ள இடத்தில்தான் குண்மும் இருக்கும்   என்பதைக் காட்டுகிறான்  

பரதனின்   சேனையை பார்த்ததும் குகன் கோபம்மேலிடுகிறன்

கட்டிய கரிகையன்  கடித்த வாயினன் 
வெட்டிய மொழியினன்   விழிக்கும்  தீயினன்
 கொட்டிய துடியினன் குறிக்கும் கொம்பினன் 
கிட்டியதுஅமர் எனக் கிள்ரும் தோளினான்

எலி எலாம் இப்படை அரவம் யான் என
ஒலி உலாம்  சேனையை  உவந்து கூவினான்
வலி உலாம் உலகினில்  வாழும் வள் உகிர்
புலி  எலாம் ஒரு வழிப் புகுந்த போலவே

அஞ்சன வண்ணன் என்  ஆருயிர் நாயகன் ஆளாமே
 வஞ்சனயால் அரசு எய்திய  மன்னரும்  வந்தாரே
செஞ்சரம்  என்பனதீ உமிழ்கின்ன செல்லாவோ
உஞ்சு இவர் போய் விடின் நாய் குகன்  என்று  எனை ஓதாரோ
 
ஆழ நெடுந்திரை  ஆறு  கடந்து  இவர் போவாரோ
வேழ நெடும்படை  கண்டு விலங்கிடும்   வில்லாளோ
 தோழமை என்று அவர் சொல்லிய  சொல்  ஒருசொல் அன்றோ
ஏழைமை வேடன் இறந்திலன் என்று எனை ஏசாரோ

ஆடு கொடிப்படை  சாடி அறத்தவரே  ஆள
வேடு கொடுத்தது  பார் எனும்  இப்புகழ்  மேவீரோ
நாடு கொடுத்த  என் நாயகனுக்கு இவர்  நாம் ஆளும்
காடு கொடுக்கிலர் ஆகி எடுத்தது  காணீரோ 
 இங்கு இவ்வாறு குகன்கோபம் மேலிடதன் வீரரிடம்  சொல்லிக் கொண்டிருக்கையில் பரதன்    குகனைக்காண வருகிறான்  சுமந்திரன்  குக்ன்   யாரென்று  பரதனுக்கு சொல்கிறான்
கங்கை இரு கரையுடையான் கணக்கிறந்த நாவாயான்
உங்கள்குல தனி  நாதற்கு உயிர் துணைவன்  உயர் தோளான்
வெங்கரியின் எறு  அனையான்  விற்பிடித்த வேலையினான்
கொங்கு அலரும் நறுந் தண் தாற் குகனென்னும் குறி யுடையான்

பரதனின்  நிலை கண்டுகுகன்


வற் கலையின் உடையானை  மாசடைந்தமெய்யானை
நற் கலையில் மதி  என்ன நகை இழந்த முகத்தானை
கல்கனிய  கனிகின்ற் துயரானை கண்ணுற்றான் 
வில் கையினின்று இடை வீழ விம்முற்று நின்று ஒழிந்தான்

நம்பியும்  என்  நாயகனை ஒக்கின்றான்  அயன் நின்றான்
 தம்பியையும்  ஒக்கின்றான் தவ வேடம் தலை நின்றான்
துன்பம் ஒரு முடிவு இல்லை  திசை நோக்கித் தொழுகின்றான்
எம்  பெருமான்  பின் பிறந்தார்  இழைப்பரோ பிழைப்பு என்றான்

குகனின்  மன மாற்றம்   தெரிகிறது இல்லையா கம்ப ராமாயணத்தில் பல இடங்களில் தன்னை நாயுடன் ஒப்பிட்டு  தாழ்த்திக் கொள்கிறார்கள்

Wednesday, May 13, 2020

டிட்ஸ் பிட்ஸ்


                                                                டிட்ஸ்  பிட்ஸ்
                                                               ------------------------

  
ஊரடங்கு விதிகள்தளர்த்தப்பட்டு  இருக்கின்றன என் வீட்டுமுன்  இருக்கும்  சாலை முன்புபோல் இரைச்சலாகி விட்டது பேரூந்துகளுக்ம்  சிற்றூந்துகளும்  இல்லை  இருந்தாலும்பலரது வாழ்வாதாரங்கள்போய்விட்டன அரசு  ஏதோ உதவிகள
செய்து வருகிறது  அரசுடன் தன்னார்வலர்களும் ஏதோ தங்களால் ஆனதை செய்கிறார்கள்  ஒரு வித்தியாசம் தெரிந்தது உதவி நாடுவோர் எல்லாம்  பிச்சைக்காரர்களல்ல என்பதை  தெரிவிக்கும் விதம்  பொருட்களை வினியோகம்செய்யும்போது  கொடுத்து பெறுவதைவிட எடுக்கும் உரிமை இருக்கிறது என்பதைக்காட்ட உதவிப்பொருட்கள்வைக்கப்பட அவற்றை  எடுத்துக்கொள்ளும்படி வினியோகம்நடந்தது (சில இடங்களில் )என்பதும் குறிப்பிட  தக்கதே


   ஆண்டுதோறும் தன்இருப்பை மே மாதம்காட்டும் மலர் ஃபுட்பால் லில்லி  இந்த ஆண்டுமே துவங்கியும்   வராதது மனசை வருத்தியது கவலை வேண்டாம்  என்னும்படி  ஒருசெடி தலை தூக்கி பூத்திருக்கிறது

 உடல் நலம்சரியில்லை என்றால்  உடல்நலம் பேணவும் என்பது வழக்கமான பின்னூட்டம்ஆனால் எப்படி  என்று  சொல்வது இல்லைஒரு பிரபல பதிவர் நம்பழைய அணுகு முறைகளை பின்பற்றுவது இல்லை என்று ஆதங்கப்பட்டிருந்தார் ஆனல்பொதுவாக உடல் நலம் சரியில்லை  என்றால் உடனே மருத்துவரை நாடுகிறோம்  அண்மையில்  செய்தி ஒன்று படித்தேன்   இப்போதெல்லாம்  அவுட் பேஷந்ட் வார்டுகள் வெறிச்சோடிக் கிடக்கிறதாம் அதாவது மருத்துவரை நாடுத்ல்  குறைந்திருக்கிறதாம் அதாவது கை வைத்தியத்துக்கு  மாறி இருக்கலாம் அ அல்லது ம்  என்றதும்  மருத்துவரை நாடல் குறைந்திருக்கிறது மருத்துவரை நாடல் பெரும்பாலும்   பொறுப்பு  துறத்தல் ஆகும்
பொதுவாக உடல் நலம்பேணுவது நம் ஆகாரத்தில் இருக்கிறது நான் என் மக்களுக்குச்சொல்வது  உணவு உண்ணும் போது செய்ய வேண்டிய பயிறசி உணவு பரிமாறும்போது  தலையைஇடது வலமாக அசைப்பது ஆகும்  இரண்டாவதுவயிறு சார்ந்த உபாதை என்றால் லங்கணம்  பரம ஔஷதம்  என்பதே அண்மையில் நான் கடை பிடிப்பது ஆவி பிடிப்பது

ஆறு குறு மிளகு 12 பொட்டுக்கடலைசிறிதுசீரகம் உப்புடன்வாயிலிட்டு நன்கு மென்று சுவைத்து  அனுபவித்து ஒரு நாளில் மூன்று முறை  நிதானமா  சுவைத்து உண்பது நலம் பயக்கும் 
   பல உபாதைகள் இதிலிருந்து சரியாகும்  ஸ்பெஷல்லிஇந்த கொரோன காலத்தில் முக்கியமாக தெரிய வேண்டீயது எதற்கும் அஞ்சாமை  பயமே நோயை அதிகரிக்கும்முக்கியமாக வாட்ஸாப்பில்  ஃபர்வார்ட் செய்யப்படும்  செய்திகள்பலதும் நம்பக் கூடாதது
 காலடி சங்கர மடத்திலொரு பசு கன்று ஈன்றதை காணொலியாக தருகிறேன் கன்றுக்கு சங்கரி என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள் இது ஒரு அசிஸ்டட் டெலிவரிமுன்பு ஒரு யானை பிரசவிப்பதைக் காணொளியாக கொடுத்திருந்தேன்   இன்னுமொரு காணொளி செம க்யூட் குழந்தை  பாருங்களேன்                                                                                                                                                

                             
  

Sunday, May 10, 2020

காலச்சக்கரத்தில் ஒருபயணம்


                                             காலச்சக்கரத்தில் ஒருபயணம்
                                            -------------------------------------------------

காலச்சக்கரத்தில் ஒரு பயணம்

 ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாயிற்று நாங்கள் திருப்பதிக்கு முதலில் சென்று  நினைவுகளை  பசுமையாக்க  வழக்கம்போல் புகைப்படங்கள் உதவினஒவ்வொருபடமும் ஒவ்வொரு நிகழ்வை மனதில் தோற்றுவிக்கின்றது  பலமுறைகள் பிறகு சென்றிருந்தாலும்   முதன் முறை சென்றதுவிசேஷம்தானே நானும்மொட்டை அடித்ததும்  புஷ்கரணியில் நீராடியதும்  நடந்துசென்றதும் பசுமையாய் நினைவுக்கு வருகின்றது  மலை மேல் ஏறும் முன் கீழ் திருப்பதியில் ஒரு அருவிபோல் இருந்ததில் குளித்ததும்நடந்து போனபாதையில் எல்லாம்  நின்று நிதானமாக மலை ஏற்யதும்  படங்கள் நினைவு படுத்துகின்றன  இதையே காலச்சக்கரத்தில் பயணம் என்கிறேன்  ஐம்பது வருஷத்திய நினைவுகள் புகைப்படங்களால் மீட்டெடுக்கப்பட்ட்டன

போகும்பாதை  காலி கோபுரம் etc

படங்கள் ரிபீட் 

என்பெரிய மகன்( பேரனல்ல ) கோபித்து போய் அவனை தேடுவதே பெரிய பாடாகி விட்ட்து
திருப்பதியில் மொட்டைகள்அடிக்கும்போதும் அடித்தபின்னும்

கீழ் திருப்பதியில்குளியல் புஷ்கரணியில் ஜலக்கிரீடை 

புஷ்கரணியில் கூட வந்தோர் 

படங்கள் ரிபீட் 
முதல்படம்  திருப்பதி போகும்  முன்   இரண்டாம்படம்  சென்று வந்தபின்   சென்னையில் 


Wednesday, May 6, 2020

கம்ப ரசம்                                                      கம்ப  ரசம்
பகவத் கீதையில்  சொல்லாதது புழக்கதில் இருப்பதுபோல் கம்பராமாயணத்தில்  இல்லாதது  இருப்பது  போல் நினைக்கப்படுகிறது கம்பரமாயண் பக்தர்கள் இயற்றிய காப்புச் செய்யுள்  கம்பன் பாடியதுபொல் எண்ணப்படுகிறது

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆர் உயிர்  காக்க ஏகி
 அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கை கண்டு அயலார் ஊரில்
    அஞ்சிலே ஒன்றை வைத்தான்  அவன் எம்மை அளித்துக் காப்பான்                                    

                                              --


 பூவிரி  பொலன் கழல் பொரு இல் தானையான்
காவிரி நாடு அன்ன  கழனி நாடு ஒரீஇ
தாவர சங்கமம் என்னும்  தன்மைய
யாவையும் இரங்கிட கங்கை எய்தினான்

அழகு மிக்க  பொன்னாலான  வீரக்கழலையும்  இணைஇல்லாத படையையும்   உள்ள பரதன்   காவிரி வளம் செய்யும் சோழநாடு  போன்ற  வயல் வளம்உடைய கோசல நாட்டை நீங்கி  இயங்காப் பொருள் இயங்கு பொருள் என இருவகையாய் பிரிக்கப்பட்டுள்ள எல்லா உயிரினங்களும் தனது நிலை கண்டு இரங்கி ஏங்க  கங்கையை  அடைந்தான்

திரிசடை பற்றி எழுத விவரம்  தேடியபோது கண்ணில் சிலபாடல்கள் தென்பட்டன  பாடலை விளக்கும்   இடங்களில்  எல்லாம் கம்பன்  தன்  நாட்டுப்பற்றை தனக்கு உதவிய  சடையப்ப வள்ளல் பற்றியும் கூறி இருந்தது  என்மனதில் பதிந்ததுகோசல நாட்டை  தன் சோழநாட்டுடன் ஒப்பிட்ட பாங்கு என்னை கவர்ந்தது


பல நேரங்களில் எடுத்தாளப்படும்மேற்கோள்கள் கொண்ட பாடல்களை தேடியபோது சில பாடல்களைக் கண்டேன்   அந்த மேற்கோள்கள் கம்பனின்  பாடல்களில் பொருள் சார்ந்தே இருக்கின்றன வெர்பாடிம்   இல்லை
  கம்பராமாயணத்தில்  குகனோடு  நம் ஐவரானோம்  என்று எடுத்தாள்ப்படும்  பாட்டைத் தேடிக் கிடைத்தது இது

துன்பு உளது எனின் அன்றோ  சுகம் உளது அது அன்றி  
பின்பு உளது இடை  மன்னும்  பிரிவு உளது என உன்னேல்
முன்பு உளெம் ஒரு நால்வேம்  முடிவு உளது என உன்னா
அன்பு உள இனி நாம்  ஓர் ஐவர்கள்  உளர் ஆனோம்

துன்பமுளதால் தான் சுகமும் உள்ளதாகும் அவ்வாறு  நினைப்பதல்லாமல் பின்னே உளதாகப் போகின்ற இப்போது இணைந்திருப்பதற்கும்வனவாசத்துக்குப் பின்  இணைந்திருக்கப் போவதற்கு   இடைப்பட்டதான பிரிவு என்னும்  துன்பம் உளதே என்று எண்ணாதேஉன்னைக்கண்டு  தோழமைகொள்வதற்கு முன்னே                              உடன்பிற்ந்தவர்களாக நாங்கள் நால்வர் இருந்தோம்   இப்போது முடிவு உளது  என்று  நினைப்பதற்கு முடியாத எல்லையற்ற                                                                                                   அன்பு உடையவராகிய நாம்                                ஐவர் ஆகிவிட்டோம் என்றான்   இராமன்

பிரவசனகர்த்தாக்கள்  கண்டேன்  சீதையை என்று  அனுமன் கூறுவதாகக் கூறுவர்  அந்தப்பாடலில் வருபவை

கண்டனென் கற்பினுக்கு அணியாய் கண்களால்
தெந்திரை அலை கடலிலங்கைதென் நகர்
அண்டர் நாயக  இனி குரட்ட் ஐயமும் 
பண்டு உள துயரும் என்று அனுமன் பன்னுவான்

 ஐயனே உன்னுடைய பெருமைக்கு உரியமனைவி என்னும் உரிமைக்கு உன்னைப் எற்றாஆறாணா  தசரத சக்கர வர்த்தியும்மருமக்ளென்னும் உண்மைக்கும் மதிலையில் அரசனன ஜனகனுடைய மகள் என்னும்  பபுக்கும்  தகுதி சிறப்புகளைப்பெற்று என்னுடஒய சிறந்த தெயமமாக சீதை திகழ்கிறாள் இன்னும் நான் சொல்வதைக் கேளுங்க என்று  கூறினான்  அனுமன்

ராமனும்  சீதையும்  முதன்முதலில் பார்த்துக்கொள்வதை கம்பன் கூறும்போது ஏதோ ரசாயன  மாற்றம் அவர்களுக்குள்  நிக்ழ்ந்ததைக் கம்பன்கூறுகிறான் பாடல் வரிகள் கீழே 
எண்ண அரு நலத்தினாள் இணையள்  நின்றுழி
கண்ணொடு கண் இணை கவ்வி  ஒன்றை ஒன்று
உண்ணவும் நிலை பெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும்  நோக்கினாள்  அவளும்  நோக்கினாள்

கம்பரசம்  மேலும் தொடரும்
                                                                                                                                                                      

Sunday, May 3, 2020

ஒரு கொரொnனா சிறப்பு கட்டுரை


                             ஒரு சிறப்பு கட்டுரை
                              -------------------------------ஒரு சிறப்பு கட்டுரை
எனக்கு வந்ததைஅப்படியே பகிர்கிறேன்   வழக்கம்போல் வரும் வாட்ஸாப் ஃபார்வார்டெட்  செய்தி அல்ல சற்றே நீளமானாலும்படிக்க வேண்டியது கொரோனஸ் தொற்று பற்றியது 

*_சிறப்புக் கட்டுரை:_*

*‘
வெளியில் வராதீர்கள். வீட்டிலேயே இருங்கள். யாரையும் வீட்டுக்குள் விடாதீர்கள்’* -

*
கற்பனையில் கூட இப்படி ஒரு சூழல் வருமென்று நாம் யாரும் நினைத்திருக்க முடியாது.*

*
சார்த்தர் எழுதியமீள முடியுமா?’ என்ற நூலில் ஒரு வரி வருகிறது -*

*‘
நரகம் என்பது - மற்றவர்கள் தான்...*’

*
பொருளாதாரம் வீழ்ந்துவிட்டது. சொந்த நாட்டின் மக்கள் அகதிகள் போல நடந்தே ஊருக்குத் திரும்புகிறார்கள். வழியில் பசியால் நூற்றுக்கு மேற்பட்டோர் இறந்து போகிறார்கள்.*

*
பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு மிகப்பெரிய இடப்பெயர்வு. உலகத்தையே தலைகீழாகக் கவிழ்த்தியது போல மாற்றங்கள் நிகழ்கின்றன.*

*
இன்னும் நாம் கற்பனையே செய்ய முடியாத அரசியல் மாற்றங்கள் உலகில் நிகழப்போகின்றன.*

*
இந்த ஷ்டகாலத்திலும் நிறைய நல்ல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.*

*
நாயக பிம்பங்கள், வேஷங்கள், பொய்கள் எல்லாம் கலைகின்றன.*

*
கங்கை நதி குடிநீராக மாறுகிறது... சூழல் மாசு கட்டுக்குள் வந்திருக்கிறது... மதியம் கிளிகளின் சத்தம் கேட்கிறது... இந்த ஏப்ரல் மாத இரவில் சென்னை லேசாகக் குளிர்கிறது...*

*
தீவிரமான நம்பிக்கைகள் கேள்விக்குள்ளாகின்றன. கடவுள் நம்பிக்கை கொண்ட ஒரு நண்பர்கடவுள் இருக்கிறாரா என்ற சந்தேகம் வருகிறதுஎன்கிறார். ‘நீங்கள் எல்லாருமே திருடர்கள். எனவே யாரும் என்னைப் பார்க்க வராதீர்கள்என்று கடவுளே தன் வழிபாட்டுத்தலங்களைப் பூட்டச் சொல்லிவிட்டார் என்கிறார் ஒரு முதியவர்.*

*
இனத்தின் பெயரால், மதத்தின் பெயரால், நாடுகளின் பெயரால், சாதிகளின் பெயரால் நாம் கொண்டிருந்த பெருமைகள் எதுவும் நம்மைக் காப்பாற்றாது.*

*
விஞ்ஞானத்திலும், மருத்துவத்திலும் நாம் செய்த கண்டுபிடிப்புகளையெல்லாம் பார்த்து இயற்கை புன்னகைக்கிறது.*

*
வல்லரசுகளே தடுமாறுகின்றன. தனித்திருப்பதைத் தவிர தப்பிக்கும் வழிகள் இல்லை.*

*
இந்த வருடம் அமோகமாக இருக்கும் என்ற சோதிடக் கணிப்புகள்தான் இந்த வருடத்தின் சிறந்த நகைச்சுவை.*

*
முடியாது என்று நினைத்த விஷயங்களில் ஒன்று டாஸ்மாக்கை மூடுவது. இன்னொன்று தொலைக்காட்சித் தொடர்களை நிறுத்துவது. இரண்டுமே நடந்துவிட்டது.*

*
கவனித்துப் பார்த்தால் நம் இயல்புக்குப் பொருந்தாத எல்லாம் விடை பெறுகின்றன.*

*
மண்டபங்கள் வரும் வரை நம் திருமணங்கள் வீட்டில் நடந்தன. இப்போது திருமணங்கள் எந்த புரோகிதமும் இல்லாமல் திரும்பவும் வீட்டுக்கே வந்துவிட்டன. கர்ப்பிணிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அத்தனை டெஸ்ட்டுகள், ஸ்கேன்கள் எடுக்க வேண்டுமென்பது கட்டாயம் என்று வலியுறுத்தும் மருத்துவர்கள் இப்போது அதெல்லாம் தேவையில்லை. வீட்டிலேயே இருங்கள் என்கிறார்கள். தொற்றுக்காகத் தவிர்க்கப்படுகிறது என்றாலும் தவிர்க்கப்படுவதால் ஒன்றும் ஆகாது என்ற உண்மையும் அதில் இருக்கிறது.*

*
கிராமத்திலிருந்து வந்தவர்கள் கிராமத்துக்கே திரும்பிவிட்டார்கள்.*

*‘
மகன் வெளிநாட்டில் இருக்கிறான்என்று ஒருமாதம் முன்புவரை பெருமையாக இருந்த இந்த விஷயம் இப்போது பெருமையாக இல்லை.*

*
மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தீவிரமாகப் பேசிய வாய்கள் அனைத்தையும் மாஸ்க் மூடிவிட்டது. மதம் பற்றிப் பேசியவர்கள் மலேரியா மாத்திரை குறித்தும் கபசுரக் குடிநீர் குறித்தும் பேசுகிறார்கள்.*

*
துறை சார்ந்து அறம் தவறியவர்களாகப் பார்க்கப்பட்ட மருத்துவர்களும் காவலர்களும்தான் உயிரைப்பணயம் வைத்து முன் வரிசையில் நிற்கிறார்கள். அவர்கள் அதிகம் வராத செய்திகளில் இப்போது அவர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.*

*
தேசத்தைக் காப்பதாக எப்போதும் பேசும் அரசியல்வாதிகள் அந்தச் செய்திகளைப் பார்த்துக்கொண்டு வீட்டில் இருக்கிறார்கள்.*

*
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள் சம்பளத்தில் முப்பது சதவிகிதம் கொடுத்தது செய்தியாகிறது.*

*
என்ன சம்பளம் என்று தெரியாத துப்புறவுத் தொழிலாளர்கள் வீடு வீடாகச் சென்று அழைப்பு மணி அடிக்கிறார்கள். வீட்டுக்குள்ளே இருந்து ஒரு குரல் கேட்கிறது. ‘யாரு?’ ‘குப்பை’. சமூக இடைவெளி மட்டும் எப்போதும் போல அப்படியேதான் இருக்கிறது.*

*
ஸ்வீடனில் ஒருவர் தான் சேர்த்துவைத்த பணத்தை எல்லாம் வெளியில் வீசுகிறார். தெரு முழுக்கப் புரளும் பணத்தை எடுப்பதற்கு யாரும் இல்லை.*

*
உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது? உங்களுக்கு எவ்வளவு பெரிய வீடு இருக்கிறது? நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருங்கள். பிரிட்டிஷ் பிரதமராக... ஹாலிவுட் நடிகராக... மருத்துவராகக் கூட இருங்கள். எதுவும் முக்கியம் இல்லை. உங்கள் உடலில் எவ்வளவு எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்பதுதான் முக்கியம்.*

*
மதிப்புகள் அனைத்தும் மாறுகின்றன. பிரான்ஸில் 92 வயது மூதாட்டி நான் நன்றாக வாழ்ந்து விட்டேன்.போதும், அவரை வாழவையுங்கள் என்று தனக்குக் கொடுத்த வெண்டிலேட்டரை முப்பது வயது இளைஞருக்கு கொடுக்கச் சொல்லிவிட்டு நோயுடன் வீடு திரும்புகிறார். கண்கள் கலங்குகின்றன.*

*
வெண்டிலேட்டர் இல்லாத தேசத்தில் சொந்த மக்களைக் காப்பாற்றுவதற்காக எத்தனை அணு ஆயுதங்கள் யுத்த விமானங்கள்.*

*
கைகளைச் சோப்புப் போட்டுக் கை கழுவுங்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம். நைஜீரியாவின் மக்கள் நெருக்கம் மிகுந்த லாகோஸ் நகரில் ஒருமுறை சோப்பு போட்டுக் கைகழுவுவதுகூட ஆடம்பரம் என்கிறது செய்தி.*

*1,400
கிலோமீட்டர் தனியாக இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து ஒரு தாய் நகரத்தில் இருக்கும் தன் மகனை சொந்த ஊருக்கு அழைத்து வருகிறார்.*

*65
வயதுக் கணவர் வலியால் துடிக்கும் தன் மனைவியை சைக்கிளில் வைத்து அழுத்தி கும்பகோணத்திலிருந்து புதுச்சேரிக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்.*

*
ஒரு தாய் நல்லதங்காள் போல தன் ஐந்து குழந்தைகளை கங்கையில் வீசுகிறாள்.*

*
இவையெல்லாம் வெறும் காட்சிகள் அல்ல. வரும் ஆண்டுகளுக்கான குறியீடுகள்....,*

*
பெரும்பாலான நாடுகள் மூத்த குடிமக்களை கைவிட்டு விட்டது. உடல் நலம் சரியில்லை என்றால் எங்களால் ஒன்றும் செய்ய இயலாது என்ற நிலைக்கு அரசுகள் வந்துவிட்டது என்றால் இனி என்ன நடக்கும்.*

*
அழுத்தம் தாளாமல் குக்கர் வெடிப்பது போல பல நாடுகளில் புரட்சி வெடிக்கப்போகிறது என்கிறது ஓர் ஆங்கிலக் கட்டுரை. திருக்குறளின் 56ஆவது அத்தியாயத்தை ஒருமுறை படித்துப் பாருங்கள்.*

*“
உணவுப் பொருட்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களை ஒழுங்காக உரிய நேரத்துக்குள் கையாளாமல் விட்டால் நாட்டில் பெரும் உணவுப்பஞ்சம் ஏற்படும்.*

*
பஞ்சாபில் ஆயிரக்கணக்கான டன் கோதுமை அறுவடை செய்யப்படாமல் இருக்கிறது. அறுவடை செய்ய வேண்டுமெனில் பிகாரில் இருந்து தொழிலாளர்கள் வர வேண்டும். அறுவடை செய்ததை நிரப்ப மேற்கு வங்கத்தில் கோணிப்பை தொழிற்சாலை திறக்கப்பட வேண்டும். கோதுமை மூட்டைகளை நாடு எங்கும் கொண்டு செல்ல டிரக்குகள் வேண்டும். ஒரு டிரக் டிரைவர் நூறு ஊர்களைக் கடந்து செல்ல வேண்டும். எங்கெல்லாம் இறங்குவார்? தொற்று இருந்தால் என்ன நடக்கும்?*

*‘
ஒன்றை ஒன்று வெகுவாகச் சார்ந்திருக்கும் இந்தியப் பொருளாதாரத்தில் உணவுப் பொருட்களைப் பாதுகாப்பாக அனுப்புவதுதான் எங்கள் முன் இருக்கும் மிகப்பெரிய சவால்என்கிறார் இந்தியக் குடிமையியல் அதிகாரி ஒருவர்.*

*‘
உங்கள் வாழ்வில் நித்தியமானது மரணம் ஒன்றுதான். அதற்கு தயாராகாமல் நீங்கள் எதெதற்கோ தயாராகிறீர்களே ஏன்?’ என்று புத்தர் கேட்டதையே நோம் சாம்ஸ்கிபல வருடங்களாக கிருமி இருந்தும் மருந்து கண்டுபிடிக்காமல் அழகு க்ரீம்களைக் கண்டுபிடிப்பதில் ஏன் கவனம் செலுத்தினீர்கள்?’ என்று கேட்கிறார்.*

*
இந்தக் கிருமியின் வளர்ச்சியைப் பற்றி உலகின் நவீன விஞ்ஞானமும், நவீன மருத்துவமும் யோசிக்காததன் காரணம் பல துறைகள் தனியார்வசம் போனதுதான் என்கிறது புள்ளிவிவரம்.*

*
வாழ்வாதாரங்கள் இழந்து எல்லைகளில் நுழைகிற அகதிகளைக் கொன்று கொண்டிருந்தோம். இன்று எல்லைகள் அனைத்தும் கேலிக்குரியவனாகி விட்டன. அமெரிக்காவுக்கு வியட்நாம் மருந்து அனுப்புகிறது.*

*
கதவில் இருக்கலாம். கைப்பிடியில் இருக்கலாம். செய்தித் தாளில் இருக்கலாம். பால் பாக்கெட்டில் இருக்கலாம். தும்மினால் மூன்று மணி நேரம் காற்றில் இருக்கலாம். ஒருமுறை இதன் சுற்று முடிந்தாலும் ஆறு மாதங்களில் இதன் மறு சுற்று ஆரம்பிக்கலாம். வதந்திகளும் செய்திகளும் கிருமியைவிட வேகமாகப் பரவுகின்றன.*

*
தொலைக்காட்சிக்கு நாள் முழுக்க பிரேக்கிங் நியூஸ். திகில் படத்துக்கான இசையுடன் மனிதர்கள் இறந்த செய்திகள்.*

*
நல்ல வேளையாக இது பறவைகள் மூலம் பரவவில்லை. பறவைகள் மூலம் பரவினால் மனித குலம் பிழைத்திருப்பது கடினம் என்கிறார் ஒரு மருத்துவர்.*

*
இப்போது வௌவால் மூலமும் பரவும் என்கிறார்கள். அமேசான் காட்டில் வசிக்கும் யனோமாமி பழங்குடியினருக்கும் தொற்று பரவிவிட்டது என்கிறது ஒரு செய்தி.*

*
மருந்தில்லா கிருமிக்குப் பயந்து ஒட்டுமொத்த மனிதகுலமும் பயத்தில் இருக்கிறது. இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்? வீட்டில் இருக்க வேண்டும்.*

*
சீன அரசு எல்லாமே தந்தது. வீட்டுக்குள் இருந்தார்கள். இங்கு கூட்டம் கூட்டமாக வெளியில் வருகிறார்களே ஏன்? கிருமியை விடவும் பசியும் வேலையின்மையும் கொடுமையானது ....*
*
கட்டுப்பாடுகளைக் கடுமையாகப் பின்பற்றிய சீனாவில் டிசம்பரில் தொடங்கிய ஊரடங்கை ஏப்ரலில் தான் தளர்த்தினார்கள்.*

*
கடைவீதிகளில் கூட்டம் கூட்டமாக மக்கள் அலைமோதும் நம் தேசத்தில் இந்தத் தொற்று கட்டுக்குள் வர எத்தனை மாதங்கள் ஆகும்?*

*
ஒரு நாள்., பிறகு 21., பிறகு 19., பிறகு?*

*
இது தொடரும்...நிலையில் என்னென்ன நூல்கள் படிக்கலாம், என்னென்ன திரைப்படம் பார்க்கலாம் என்று சமூக ஊடகங்களில் வருகிற பொழுதுபோக்குத் திட்டங்கள் எல்லாம் அர்த்தமற்றுப்போகும்.*

*
முதல் வாரத்தில் கணவர்கள் படும் அவஸ்தைகள் குறித்து வந்த மீம்ஸ்கள் இப்போது குறைந்து விட்டன. குடும்ப வன்முறையும், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையும் குறித்த செய்திகள் அதிகம் வரத் தொடங்குகின்றன.*

*
அடுத்த அத்தியாயத்தை இயற்கை எழுதிக் கொண்டிருக்கிறது.*

*‘
ஆட்கள் வேலை செய்கிறார்கள். மாற்றுப் பாதையில் செல்கஎன்ற அறிவிப்பு சாலையில் இருப்பதைப்போலஇயற்கை வேலை செய்கிறது. நாம் மாற்று வழிகளை யோசிக்க வேண்டும்.*

*
பரிணாம விதிகளில் பொருந்திப் பிழைத்திருக்கும் விதமாக வரும் ஆண்டுகளில் எல்லாமே மாறப்போகிறது என்பது மட்டும் சூசகமாகத் தெரிகிறது.*

*
அச்சு ஊடகங்கள் விடை பெறலாம். மக்கள் கூடுகிற வழிபாட்டுத்தலங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் இன்னும் பல மாதங்களுக்கு மூடி இருக்கும் நிலை வரலாம்.*

*
இதெல்லாம் முடிவுக்கு வரும்போது முதல் இரண்டு இடங்களுக்கு மக்கள் ஆர்வமாகத் திரும்புவார்கள்.*

*
ஏனெனில் இந்த இரண்டு இடங்களிலும் மனித இடைவெளி சாத்தியம்.*

*
மூன்றாவதான திரையரங்கு என்னாகும்? யாருமே காப்பாற்ற முடியாது என்ற நிலையில் பயத்துடன் இருந்தவர்களுக்கு அனைவரையும் காப்பாற்றும் நாயகர்களின் படங்கள் என்ன பொருள் தரும்? இணைய தளங்கள் வழியாக இத்தனை வாரங்கள் படங்கள் பார்த்துப் பழகியவர்கள் திரையரங்குக்குத் திரும்புவார்களா?*

*
இரண்டாம் உலகப்போர் பற்றிய திரைப்படங்களைப் பார்க்கும்போதுஅத்தியாவசியமான பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து உடனே வெளியேறுங்கள்என்று ஒரு அறிவிப்பு வரும். அதற்கு இணையான சூழல்தான் இப்போதும்.*

*
முரண் என்னவெனில் அத்தியாவசியத்தோடு வீட்டுக்குள் இருங்கள் என்பதுதான்.*

*
அன்றாட வாழ்க்கைக்கு எது தேவை, எது தேவையில்லை என்பதை இயற்கை முன் மொழிந்துவிட்டது. தொழில்நுட்பம் அதை வழிமொழியப்போகிறது.*

*
சமீப வருடங்களில் நுகர்வுக் கலாச்சாரத்துக்கு எதிராக மினிமலிஸம் என்ற ஒரு கருத்து உலகம் முழுக்கப் பரவி வருகிறது.*

*‘
கடந்த ஒரு வருடத்தில் எதை நீங்கள் பயன்படுத்தவில்லையோ அது உங்களுக்கு எப்போதும் பயன்படாது. எனவே, அதைத் தூக்கி எறியுங்கள். பொருட்களைத் துடைக்க, பொருட்களை ஒழுங்கு செய்ய என்று உங்கள் ஆயுளை பொருட்களிடம் செலவழிக்காதீர்கள்என்பதுதான் அந்தக் கோட்பாடு. ‘சிறுகக் கட்டி பெருக வாழ்என்று தமிழில் சொல்லப்பட்ட விஷயம்தான்.*

*
இந்த மாதத்தில் எங்கள் வீட்டில் ஒரு பிறந்தநாள் வந்தது. நண்பர்களை அழைத்து, கேக் வெட்டி கொண்டாட்டமாக நடத்துவது சாத்தியமில்லை என்பதால் குழந்தைகள் வாழ்த்து அட்டையைக் கைகளால் வரைந்தார்கள். கேக் இல்லை. கூடி அமர்ந்து கைதட்டி வாழ்த்துச் சொன்னோம். முந்தைய பிறந்தநாட்கள் எல்லாம் நிழற்படங்களாக ஹார்டு டிரைவில் இருக்கின்றன. இந்தப் பிறந்தநாள் முழு வாழ்க்கைக்கும் மனத்தில் இருக்கும்.*

*
பிறரைப் பார்த்து பிரதியெடுத்த போலியான கொண்டாட்டங்கள் அனைத்தும் விடை பெறுகின்றன.*

*
குப்பை உணவுகள் போய் வீட்டுச் சமையலில் கீரையும், மிளகு ரசமும் வந்துவிட்டது. நாகரிகம் என்ற பெயரில் நாம் மறந்த மரபுகள் அனைத்தையும் ஒரு கிருமி நமக்குத் திருப்பித் தந்துவிட்டது.*

*
இத்தனை நாளும் பணத்தின் பின்னால், அதிகாரத்தின் பின்னால் பெருமைகளின் பின்னால் நீங்கள் ஓடிக்கொண்டிருந்தால் உங்கள் சக்கரங்களை நிறுத்துங்கள்.*

*
உங்கள் அருகில் ஒரு குடும்பம் இருக்கிறது. அதில் குழந்தைகள் இருக்கிறார்கள். உங்கள் ஓட்டம் இவர்களுக்காகத்தான் எனில் அவர்களின் உண்மையான தேவை என்ன?*

*
எதிர்மறை உணர்வுகளும், பயமும், அவ நம்பிக்கையும் சூழ்ந்த இந்தக் கடினமான நாட்கள் சீக்கிரமே முடிந்துவிடும்.*

*
இது போல பல நூறு தொற்றுக்களைப் பார்த்த மனிதகுலம் ஆரோக்கியமாக மீண்டு எழுந்து வரும்.*

*
இது மாதிரியான தனிமை உங்கள் வாழ் நாளில் திரும்பவரப் போவதில்லை. எனவே தனித்திருங்கள். பல வருடங்கள் கழித்து இதையெல்லாம் நம் சந்ததியினருக்கு ஒரு கதையாகச் சொல்ல முடியும்.*

*
தொற்று தொடங்கிய முதல் வாரத்தில் எதிர்வீட்டில் ஒன்று நடந்தது. ஆண்டன் செகவ் பார்த்திருந்தால்பால் பாக்கெட்என்று ஒரு சிறுகதை எழுதி இருப்பார். பக்கத்து ஃப்ளாட்காரர் முகத்தில் துணியைக் கட்டிக்கொண்டு கதவில் இருக்கும் பால் பாக்கெட்டை கைபடாமல் ஒரு குச்சியின் உதவியால் எடுத்து எப்படி மஞ்சளும் உப்பும் கலந்த வாளியில் போட்டார் என்பதுதான் கதை.*

*
இதுபோல என் மனைவி இரண்டாவது மாடியிலிருந்து தக்காளி வாங்கிய கதையும் இருக்கிறது.*

*‘
கடுமையான நெருக்கடிக்குள்தான் காமெடி இருக்கிறதுஎன்று சாப்ளின் சொல்லுவார்.*

*
நெருக்கடி மிகுந்த இந்த நாட்களை மன அழுத்தமில்லாமல் எளிதாகக் கடந்து வருவோம். இந்தச் சூழலில் நமக்குத்தேவை நம்பிக்கை.*

*
சக மனிதனுக்கு நம்பிக்கையையும் நம்மால் முடிந்ததையும் கொடுப்போம்.*

*
ஸ்பார்டகஸ் நாடகத்தில் ...*
*‘
மண்ணிலிருந்து வந்தேன். மண்ணுக்கே திரும்புகிறேன்’*

*
என்று ஒரு வரிவரும். அதன் வெவ்வேறு அர்த்தங்களை யோசித்துப் பார்க்கிறேன்.*

*‘
நமக்கான உணவை நாமே உருவாக்கும் அளவுக்கு ஒரு தற்சார்புப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடிந்தால் போதும். எத்தகைய வீழ்ச்சியில் இருந்தும் நம்மால் மீண்டு எழுந்துவிட முடியும் என்கிற நம்மாழ்வாரின் இயற்கை விவசாயம் குறித்துப் படித்துக்கொண்டிருந்தேன்.*

*
இந்தப் பேரிடரை முன்வைத்து மரபு சார்ந்த வாழ்வை, விவசாயத்தை, மரபு சார்ந்த மருத்துவத்தை நாம் புதுப்பிக்க வேண்டும். நம் கலாச்சாரம் சார்ந்த எளிமையான வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும்.*

*
தனித்திருப்போம். கைகளைக் கழுவிக்கொண்டே இருப்போம். ஏனெனில் நம் கைகளில் கண்களுக்குத் தெரியாத கிருமிகள் இருக்கிறதோ இல்லையோ பல வருடங்களாக நாம் கொன்ற இயற்கையின் ரத்தம் கறையாக இருக்கிறது.*
🙏🏻🙏🏻🙏🏻