வெள்ளி, 1 மே, 2020

புகை பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு



                        புகை பிடித்தல் உடல் நலத்துக்கு கேடு
                        ------------------------------------------------------------------

  
புகை பிடித்தல்  உடலுக்கு கேடு
இது அந்தக் காலத்தில் எனக்குத் தெரியாது புகை பிடிப்பது ஒருவனின் பெருமையைவிளக்குவது அதுவும் ஸ்டைலாக  என்றுதான் நினை த்திருந்தேன் மேலும் நான்  வளர்ந்து விட்டெனே என்று  காண்பிக்கவும் முடியும்தானே   இது 1955ல் நினைத்ததுஒரு ஆச்சரியமான செய்தி  எனக்கு புகை பிடிக்க கற்றுக் கொடுத்தவன்என் இளவல்  அதாவது தம்பி முதலில் புகைத்தது ஸ்டார்  சிகரெட்  ஒரு பாக்கட் இரண்டரை அணா என்று நினைவு  முதல் சிகரெட்டும் குடியும் எப்பவும் அடுத்தவன்சொல்லிக் கொடுத்துவருவதே என்பதைஎங்கோ படித்திருக்கிறேன் அது உண்மையாகவும்  இருக்கலாம்   எனக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது நானும்நண்பனொருவனு பெங்களூரில்  சாலையில்நடந்து கொண்டிருந்தபோது நண்பனுக்கு ஒரு சந்தேகம்   வந்தது” அப்படிஅண்ட சிகரெட்டில் என்னதான்இருக்கிறதோ என்று கேட்டான்  நீயும் புகைத்துப்பாரேன்  என்று ஒரு சிகரெட் அவனுக்கு கொடுத்து  பற்ற வைத்தேன்   அவன்வாயில் வைத்துபுகைத்தான்    அப்படி அல்ல உள்ளுக்குள்  இழுத்து விட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தேன் புகைத்தான் உடனே இருமல் வந்து  ஒருமாதிரியாய் சிகரெஎட்டை விசி எறிந்தான்  நான் இன்னொருவனுக்கு  கற்றுக் கொடுப்பதில் தோல்வி  அடைந்தேன் சிகரெட் என்ற்தும்   இன்னொரு நினைவு என் மனைவுஇக்கு நான்  சிகரெட் புகைப்பது  அறவே பிடிக்காது இருந்தாலும்  பாரடநாரி அல்லவா  சென்னையில் இருந்தபோது மாதாந்திர சாமான்கள் வங்கும்போது  மறாஅக்காமல் ஐந்து பாக்கட் சிகரெட்டும் வாங்கி விடுவாள்
ஒரு சமயம் நான் சிகரெட்புகைப்பதை நிறுத்தி இருய்ந்தேன் என் மமியார் தன்மகள் என்னை புஐப்பதை விட சொல்லி விட்டாள் என்றும் அவ்சளாலேயெ நன்மாறிவிட்டதாகவும் சொல்லி இருந்தடு எனக்கு கேட்டது என்னுள் இருந்த் ஈகோ  விழித்துக் கொண்டதுநான் சிரமப்பட்டுநிறுத்தியதற்கு எனக்குப் பதில் க்ரெடிட் என் மனைவிக்கா என்று தோன்றியது  விளைவு நான்மீண்டு புகைக்கத் தொடங்கினேன் 2010ல்  எனக்கு இருதயத்தில் ஸ்டெண்ட்  பொருத்தும்போது  மருத்துவர்  அது அரைமணி நேர வேலைதான்  என்றார்கள்  ஆனால் ஒன்றரை  மணிஆகியும் பொருத்தல் முடியவில்லை  அதற்கு காரணம்குழாயில் கால்சியம் டெபாசிட்கள்  இருந்ஹ்ததாகவும் அவற்றை  நீக மிகுந்த பிரயாசை என்றும் கூறினார்கள் கொலெஸ்த்ரால் அடைப்புடன்கால்சியம் அடைப்பும்  இருந்ததாம் நன்சிகரெட் பொடிப்பவனா என்று கேட்டார்கள் நான்சிகரெட் புகைப்தை நிறுத்தி 15 ஆண்டுகள் ஆயிருந்தன  சிகரெட் புகைப்பதை கொஞ்சம் கொஞ்சமாய்  நிறுத்துவது கஷ்டம்  நிறுத்த வேண்டுமானால் ஒரேயடியாய் நிறுத்தவேண்டும்
நான் ஜப்பானில் இருந்த் ச்கபோது புகைப்பது அதிகமாயிற்றுசரியான உணவு இல்லாததால் இருக்கலாம்எனதுஜப்பானிய நண்பர் ஒருவர்  சிகரெட் புகைக்க தோன்றும்போது சிகரெட்போன்ற ஒரு வஸ்துவைக் கொடுத்து அதை வாயில் வைத்துக்கொள்ளக்கூறினார் சிஅரெட்டுக்குப் பதிலாம் அது !!!! நான் என்ன குழந்தையா ஏமாற  ! சிகரெட் குடிப்பர்களுக்கு  அநேகமாக எப்போதும் சில்லறை தட்டுப்பபாடு  இருக்கும்  ஒரு முறைநான் கோவாவில் ஒரு ஹோட்டல் லவுன்ஜில் கத்டிருக்கும்போது சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தேன்  அங்கு இருந்த ஒருபெரியவர் நான் சிகரெட் புகைப்பது அவருக்கு சிரமாய் இருப்பதால்  நிறுத்த முடியுமா என்று கேட்டார் 
நான் மன்னிப்பு  கேட்டு  சிகரெட்டை  அணைத்து. விட்டேன் அவர் யாரிடமும் சிகரெட் புகைக்கவேண்டாம்  என்று அறிவுரை  கூறுவது  இல்லை என்றார் . அதற்கு ஒரு கதையும்  சொன்னார் . ஒரு முறை அவர் ரயிலில்  பயணம்  செய்து கொண்டிருந்தபோது  ஒரு வாலிபன்  விடாமல் புகைத்துக்கொண்டிருப்பதை  பார்த்துக்கேட்டாராம் , ஒரு நாளில்  எவ்வளவு சிகரெட்  புகைக்கிறார்  என்று.. அவன் சுமார்   15  முதல்  20 வரை  இருக்கும் என்றானாம் . சிகரெட்டின்  விலையை  கேட்டு  அவர்  ஒரு நாளைக்கு சுமார் ரூ .50/-வரை செலவு செய்பவர் ஒரு மாதத்துக்கு ரூ 1500/- வீதம் வருடத்துக்கு ரூ 1.8000/- என்றும்  பத்து வருடங்களில்  அது சுமார் 1.8 லட்சம்  ஆகுமென்றும்  அதனை  சேர்த்து வைத்தால்  ஒரு வீடு கட்டிக்கொள்ளலாம்  என்றும் அறிவுரை கூறினாராம் . சற்று  நேரம்  ஒன்றுமே  பேசாமல்  இருந்த  அந்த வாலிபன்  பெரியவரிடம்  அவர் எவ்வளவு  வீடு கட்டியிருக்கிறார்  என்று கேட்டானாம் .தினப்படி  காலம் தள்ளுவதே  கடினமாக இருக்கும்போது  வீடு எங்கே  கட்டுவது  என்று பெரியவர்  கூறினாராம் . அதற்கு  அந்த வாலிபன்  தான் மூன்று வீடுகள்  கட்டியிருப்பதாக  சொன்னானாம .
              அதன் பிறகு பெரியவர்  யாரிடமும்  சிகரெட் புகைப்பது பற்றி  அறிவுரை  கூறுவதை  நிறுத்திவிட்டாராம் .
                             

                                 

24 கருத்துகள்:

  1. ஈகோ தங்களை மீண்டும் புகைக்க வைத்ததா ? ஹா.. ஹா..

    புத்தி சொன்னவருக்கு வீடு இல்லை புகைப்பவருக்கு மூன்று வீடுகள் ம்... ம்...

    அவர் பணக்காரர், இவர் ஏழையாக இருந்திருக்கிறார் இதுதான் அடிப்படை உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு இதுவரை இல்லை ஐயா இனிமேல்தான் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. காரணம் குடிக்காதவர்களை, புகைக்காதவர்களை சமூகம் ஏளனமாக நினைக்கிறது.

      நீக்கு
    2. இந்தக்கதை அனாவசியமாக மற்றவர்களின் செயல்களை கூடாது என்பதை கற்றுக் கொடுத்தது

      நீக்கு
    3. கில்ல்சர் ஜி பதிவின் தலைப்பை பார்த்தீர்கள்தானே

      நீக்கு
  2. 41 வருடங்கள் சிகரெட் மற்றும் பீடி பிடித்தவன் நான். வாரத்திற்கு 10 பேக் ஹோல் சேல் கடையில் வாங்குவேன். பிடிக்க ஆரம்பித்தது முதலில் பனாமா. பின்னர் பெர்க்லி பின்னர் சிசர் பில்டர். அது ஒரு காலம். பல தடவை நிறுத்தி தொடங்கியாலும் 2011 முதல் இல்லை. இப்போது நினைக்கும்போது இதற்காகவா ஆசைப்பட்டாய் ஜெயகுமாரா என்று தோன்றுகிறது. ஆனாலும் அதன் காரணமாக ஏற்பட்ட அல்சர் இன்னமும் இருக்கிறது. அதற்கு மருந்தும் சாப்பிடுகிறேன். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் மாமனார் பீடி குடிப்பார் தண்ணிஅடிப்பார் 85 வயதுவரை எந்த நோயும் இல்லாமல் இருந்தார்

      நீக்கு
  3. பெரியவர் சொன்ன சிகரெட் நிறுத்தினால் வரும் லாபம் கதை வெவ்வேறு ரூபங்களில் கேள்விப்பட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. என் மாமா -அக்கா கணவர் - மிக அதிகமாக சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தார். கடந்த சில வருடங்களாக நிறுத்தி விட்டார். 'அதற்குக் காரணம் ஸ்ரீராம் சொன்ன சொல்தான்' என்றார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி என்னதான் சொன்னீர்கள்

      நீக்கு
    2. நினைவில்லை. அந்த நேரத்தில் நான் சொன்ன ஏதோ ஒன்று அவர் மனதில் பலமாக அப்பீல் ஆகி இருக்கிறது. அதுதான் விஷயம்.

      நீக்கு
  5. கல்லூரியில் படிக்கும்போது எனது சீனியர் ஒருவரை மாற்றி உள்ளேன்... அன்பு எதையும் செய்யும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் மனைவிக்கு என்மீது அன்பு இல்லையா எல்லம் எடுத்ட்க்ஹுக் கொள்ளும் விதம்தான்

      நீக்கு
  6. சிகரெட் பிடிக்கும் பழக்கம் என்னிடம் இல்லை அதற்கு பதிலாக சரக்கு பழக்கம் உண்டு ஆனால் அதற்கு அடிக்ட் எல்லாம் கிடையாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறுத்த முடியாத பழக்கம் ஆனால் அடிக்ட் ஆகும் வாய்ப்பு உண்டு

      நீக்கு
  7. புகை பிடிப்பது பற்றி நல்லா எழுதியிருக்கீங்க.

    எந்தப் பழக்கமுமே நம் மனதில் தோன்றினால்தான் ஆரம்பிக்கவோ நிறுத்தவோ முடியும். மற்றவர்கள் சொல்வது ஒரு காரணியாக இருக்கலாமே தவிர, மனதுக்கு, இவரென்ன சொல்வது நாமென்ன செய்வது என்றுதான் பலரிடம் சொல்லும்.

    வெளிப்படையான பதிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதே புரியவில்லை வருகைக்கு நன்றி

      நீக்கு
  8. தங்கள் மாமியார், மாமனார், அவர்கள் பெண், நீங்கள் - என்ற கோணத்தில் இந்த விஷயத்தை தீர்க்கமாக யோசித்தால் நீங்கள் சிகரெட் பிடிப்பதை விட்ட சமயத்து சூழ்நிலைக்கு ஒரு அருமையான கோணம் கிடைக்கும். கதாசிரியர்கள் மனதில் சிறுகதைகளின் தோற்றம் இப்படித் தான் நிகழ்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலாவது ந அந்த ஸ்பர் ஆஃப் தெ மோமெண்ட் தோன்றுவதைத்தான் எழுதுகிறேட்ன் நனென்னை ஒரு கதாசிரியனாகவே நினைப்பதில்லை

      நீக்கு
    2. நான் பல வருடங்களுக்கு முன் புகைபிடிப்பதைப் பற்றி எழுதிப் பிரசுரமான கதை ஒன்று நினைவுக்கு வந்தது. அதனால் சொன்னேன். அது என்னவோ தெரியவில்லை,
      எந்த விஷயத்தையும் ஒரு கதையாக எப்படி ஆக்கலாம் என்ற எண்ணமே என் மனசில் ஓடும்.

      நீக்கு
    3. நீங்கள் ஒருஅனுபவப்பட்ட கதாசிரியர் அல்லவா

      நீக்கு
  9. அறிவுரை சொல்லித் திருத்த முடியாத பழக்கம்.பெரியவர் கதை அருமை.அறிவுறை சொன்னால் இப்படி பல்பு வாங்க வேண்டி இருக்கும்தான், ஆனால் தானாக திடீரென்று பழக்கத்தை விட்டு விடுகிறார்கள்- பெரியவர் சொன்ன கதை அருமை

    பதிலளிநீக்கு