டெல்லி நினைவுகள் சில
1979 ம் ஆண்டு மேமாதம் என் மச்சினனுக்கு திருமண்ம் குருவாயூர் அருகே நடப்பதாய் இருந்தது நாங்கள் விஜயவாடாவில் இருந்தோம் டெல்லியில் தலைமை அலுவலகத்துக்கு வருமாறு அழைப்பு இருந்தது
நான் அந்த வாய்ப்பில் என் மக்கள்மனைவியோடு டெல்லி பயணப்பட்டேன் அதுவே எனக்கும் குடும்பத்தாருக்கும் முதல் டெல்லி
பயணம் டெல்லியில் எதுவும் தெரியாது என்நண்பனின் மச்சினன் டெல்லியிலிருப்பது
நினைவுக்கு வந்து அவனுக்கு நாங்கள் வருவது
குறித்து தகவல் அனுப்பினோம் ரயில்வே ஸ்டேசனுக்கு
வந்து எஙளை அவனிருப்பிடத்துக்கு கூட்டிப்போனான்
ராமகிருஷ்ணாபுரம் என்பது நினைவு அவனோ ஒரு வீட்டில்
சப்டெனண்டாக இருந்தான்சிறியைடம்நாங்கள் எத்தனை
நாளிருப்போம் என்பது தெரியாது அலுவலகப்பணி
சீக்கிரமே முடியலாம் அங்கிருந்துவிஜயவாடா
போய் பின் கேரளாசெல்லவேண்டும் விஜயவாடா விலிருந்துடிக்கட்
எடுத்துஇருந்தோம் எப்படியும் மே 13 ம் தேது
கேரளவில் இருக்க வேண்டும்
டெல்லி புதிய இடமானதால்குடும்பத்தாருட
தலைமை அகத்துக்குப் போனேன் வேலை முட்ந்ததும்
என்னோடு அவர்களும் வரலாம் என்பது திட்டம்லௌஞ்சில் அவர்களை விட்டு நான் போனேன்
அவர்களை என்நண்பன் ஒருவன் பார்த்து
விசாரித்தான் பிறகு அவர்களை அவன் வீட்டுக்கு கூட்டிப்போனான் பிறகு என்ன்சைப்பார்த்து விஷயம்கேட்டு அவனும் சொன்னான் என்பணி மதியத்துக்கு உள் முடியவே அவர்களுடன் நாங்கள்
ராமகிருஷ்ணபுரதுக்குசென்றோம்அன்றுஇரவு எப்படியோ மேனேஜ் செய்தோம் மறு நாள் டெல்லி சுற்றிப்பார்க்க ஒரு நாள்
பேரூந்து டிக்கட் எடுத்திருந்தான் ஒரு வழியாய் டெல்லியின் முக்கிய இடங்கள் பார்த்தோம்
டெல்லியில் மலைக் கோவில் ஒன்று உள்ளதாம்
அதை அங்கே மலாய் மந்திர் என்கின்றனர்
அந்தமுறை குதுப் மினார் மேல் ஏறிப்பார்த்தோம் அங்குஇருக்கும் துரு ஏறாத இரும்புத்தூண் இருகிறது அதை சுற்றிக் கட்டிப்பிடிப்பது சிரமமாம் என்மனைவி
அவள்கை வரிசையைக்காட்டினாள்இப்போதெல்லாம் குதுப்
மினார் மேல் ஏறவும் அந்த தூணைதொடவும் அனுமதி
இல்லை வழக்கம்போல் புகைப்படங்கள்கதை சொல்லும்
|
துரு பிடிக்காத துண் |
|
குதுப் மினார் மேல் நாங்கள் |
|
வலது பக்க த்தில் ருப்பவர் வீட்டில் தங்கினோம் |
|
ஒரு காட்சி ஓடும் பஸ்ஸில் இருந்து எடுத்த படம் |
பிறகு பல முறை டெல்லி சென்றிருந்தாலும்
முத்ல் பயணம் ஏதுமறியா டெல்லியில் முதல் முறை குடும்ப்த்துடன் சென்றது நினைவுக்கு
வரும் ராமகிருஷ்ணாபுரத்தில் ஒரு தென்னிந்திய ஓட்டலுக்குச்சென்றிருந்தோம் அதன் உரிமையாளர் பிஎச் இ எல் அதிகாரி ஒருவர் போல் இருந்தார்
அவர் தன் பணி ஆட்களிடம் கூறியது இன்னும் நினைவில் நேற்றையவடைகளை இன்று தயிர் வடையாக்கி விடு என்று
கூறீ கொண்டிருந்தார்
இனிய நினைவுகள் ஐயா...
பதிலளிநீக்குசென்னையில் 'வடகறி' ஆகி விடும்...!
வடகறி பருப்பு வடையில் தான். உளுந்து வடை தான் சாம்பார் வடை, தயிர் வடை ஆகும். Jayakumar
நீக்குபின்னூடங்களொரு தெரியாத செய்தி சொல்கின்றது
நீக்கு//நேற்றைய வடைகளை இன்று தயிர் வடையாக்கி விடு//
பதிலளிநீக்குஹா.. ஹா.. சில வார்த்தைகளை நம்மால் மறக்க இயலாது ஐயா.
உண்மைதான் ஜி
நீக்குவாழ்க்கை தூண் இரும்பு தூணை பிடித்தது. புகைப்படங்கள் AGFA காமிராவில் எடுத்தது போல் உள்ளன. 40 வருடங்கள் ஆகியும் பிரிண்டுகள் அழியாமல் உள்ளன. நன்று.குன்று தோறும் குடியிருக்கும் குமரன் கோவில் தான் மலாய் (மலை) மந்திர்
பதிலளிநீக்குJayakumar
படம் என்னிடம் இருந்தக்லிக் 3 காமிராவில் எடுத்தது
நீக்குமலைக் கோவில் வடக்கத்திகார்களுக்கு மலாய் மந்திர் ஆகி விட்டது
நீக்குநானும் ஒரு Agfa click3 வைத்திருநதேன். விலை 47 ரூபாய்.
நீக்குமிகவும் அருமை ஐயா. நான் டில்லி சென்ற நினைவுகள் வந்து அலைமோதின.
பதிலளிநீக்குநன்றி உங்கள் நினைவுகளை மீட்டெடுத்ததற்கு மகிழ்ச்சி
நீக்குநினைவுகளுக்கு படங்கள் சுவாரஸ்யம் கூட்டுகின்றன. என் அப்பா டெல்லி சென்று வந்தபோது இந்திரா காந்தியைச் சந்தித்து விட்டு வந்தார். ஒரு டெல்லி கட்டில் வாங்கி வந்தார். கஷ்டப்பட்டு தூக்கி வந்த அதை மதுரையிலேயே இன்னும் சகாய விலையில் வாங்கி இருக்கலாம் என்று பின்னர் தெரிந்தது!!!
பதிலளிநீக்குஎன் மனைவி பிஎச் இஎல் மூலம் ஒரு கலா மிலனுக்கு சென்ற போது இந்திரா காந்தியை சந்தித்து இருக்கிறார்
நீக்குநான் இருமுறை டெல்லி சென்று வந்த நினைவுகளை அசைபோடவைத்தது இந்தப் பதிவு..விற்காத வடைக்கான தீர்வு எல்லா இடத்தில் ஒன்றுபோலத்தான் போல..
பதிலளிநீக்குஅப்படித்தான் போல
நீக்கு"நேற்றையவடைகளை இன்று தயிர் வடையாக்கி விடு" ஹஹா ... நேற்றைய வடை அதற்கும் முந்தினநாள் எதுவாக இருந்ததோ தெரியவில்லையே ... கந்தா ! ...கடம்பா !! கதிர்வேலா !!!...
பதிலளிநீக்குவடை மாவாயிருந்துருக்கலாம்
நீக்குஉங்கள் மைத்துனர் திருமணம். உங்கள் நண்பரின் மைத்துனரின் வீட்டு ஒண்டுக் குடித்தனத்தில் தங்கல். பதிவை வாசிக்க ஆரம்பித்த ஆரம்பத்திலேயே இந்த மைத்துன பொருத்தங்கள் என்னைக் கவர்ந்தன.
பதிலளிநீக்குநானும் குதுப்மினாரின் நெருக்கமான உள்படிகளில் ஏறி உச்சி வரை சென்று பார்த்திருக்கிறேன். இருந்தாலும் இந்தப் படங்களை பார்க்கும் பொழுது புதுமையாக இருந்தன. நான் பார்த்ததற்கு ஏதோ மாறியிருப்பது போல.
பளிச் புகைப்படங்கள்.
உங்கள்வரவே அருமை கம்பரசம் பதிவுக்கு பின் இப்போது தானிப்போட்து குதுப் மினார் மீதேற அனுமதி இல்லைநட்கள் கழிந்தபின் எல்லாமே புதுமைதான்போல
நீக்குஇனிய நினைவுகள் ஐயா
பதிலளிநீக்குபடங்கள் அருமை
பல முறை டெல்லி சென்றிருந்தாலும் முதல் முறை நினவுகளே தனி
நீக்குநினைவுத் தடங்கள் அருமை. தில்லி சென்றிருந்தும் குதுப்மினாரைப் பார்த்ததில்லை.
பதிலளிநீக்குதில்லியிலேயே பிறந்து வளர்ந்த என் கஸின் என்னிடம் சொன்னான். அவன் தில்லியில் சமாதிகள் இருந்த இடத்துக்குச் சென்றிருந்தானாம் (பழைய தில்லி?). அங்கிருந்து ஒரு வாளை எடுத்துவந்தானாம். எடுக்கும்போது கனமில்லாத வாள் வீட்டுக்குக் கொண்டுவந்ததும் கனமாக இருந்ததாம். மறுநாள் இன்னும் கனமாக ஆரம்பித்ததும் பயந்து, எடுத்த இடத்திலேயே போட்டுவிட்டு வந்தேன் என்றான் (அப்படிச் செய்தபோது அவனுக்கு பதின்ம வயது).
சமீபத்தில் வாட்சப்பில் வந்திருந்த செய்தி, வரலாற்றில் குதுப்மினார், 1850களில் ஆங்கில குறிப்புகளின்படி ஒரு கோவில் என்றே குறிக்கப்பட்டிருந்ததாம் (ஏதோ பெயர் போட்டிருந்தது, மறந்துவிட்டது)
வாள் எல்லாம்எடுத்துவர முடியுமா
பதிலளிநீக்குசமாதில வீரனோடு புதைத்திருப்பார்களாக இருக்கும். அப்போது விடலைப் பருவம்தானே... எல்லா வம்புகளும் செய்திருப்பார்கள்.
நீக்குஇப்போதுதான் கேள்விபடுகிறேன்
நீக்குநல்ல் நினைவுகள் சார். நான் மூன்று வருடங்களுக்கு முன் தான் முதல் டில்லி பயணம் செய்தேன் குடும்பத்தோடு. தங்கியிருந்தது நொயிடாவில். ஆக்ரா வரை சென்று வந்தோம். குடும்பத்துடன் சென்றதால் வெங்கட்ஜியை சந்திக்க நினைத்து சந்திக்க முடியாமல் போனது. ஏனென்றால் என் பயணம் இறுதி வரை முடிவு செய்வதில் சில சிரமங்கள் இருந்தன.
பதிலளிநீக்குதுளசிதரன்
பலமுறை சென்றிருந்தும் முதல் பயணம் விசேஷமல்லவா
நீக்குஉங்கள் நினைவுகள் அதுவும் ஃபோட்டோக்களுடன் இருப்பதால் அதைப் பார்க்கும் போது உங்களுக்கும் ஒரு சந்தோஷம் கிடைக்கும் தான்.
பதிலளிநீக்குதில்லிக்குப் பல முறை சென்றிருக்கிறேன். தில்லிக்குச் செல்ல எனக்குப் பிடித்த சீசன் குளிர்காலம்.
கீதா
நானும் பலசீசன்களில் சென்றிருக்கிறேன்
நீக்குதலைநகருக்கு முதல் விசிட் நினைவில் இருக்கும்தான். ஃபோட்டோக்கள் துணையிருக்க பயமேன்!
நீக்குகடைசியில் ’மலாய் மந்திர்’ போகவில்லையா? அது நீங்கள் தங்கியிருந்த ராமகிருஷ்ணாபுரத்தில்தானே இருக்கிறது. சிறு குன்றின் மேலே அழகான ‘ஸ்வாமிநாதன்’ கோவிலாயிற்றே.. விட்டுவிட்டீர்களே.
மலைக் கோவில் போகவில்லை நேரமிருக்கவில்லைஅங்கு இருந்த இரண்டு நாட்களில் ஒரு நாள் அவுவலகப் பணி இன்னொரு நாள் டெல்லி டூர்
நீக்குகுதுப்மினார் நாட்கள்முதல் இன்றுவரையில் உடலை ஒரே அளவில் வைத்திருக்கும் தங்கள் திருமதியாருக்கு வாழ்த்துக்கள்! கணவர் நல்லபடியாகச் சமையல்செய்தால் எந்தப் பெண் தான் ஆரோக்கியமாக இருக்கமாட்டார் (என்று சொன்னால் தவறா?)
பதிலளிநீக்குநான் சமைப்பதில்லை அவளதூடல் வாகு அப்படி
நீக்குசெல்லப்பா ... எங்கே இப்போது இருக்கிறீர்கள். ஒரு மாமாங்கத்திற்கு முன்னால் அமெரிக்காவில் இருந்தீர்களே ...
நீக்குகொரோனா தொற்றால் பயணிக்க்ச முடிவதில்லை இல்லை யென்றல் இந்தியா அமேரிக்கா என்றுசுற்றுபவர்
நீக்குநினைவுகளை சுருக்கமாக அழகாக பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குநன்றி
நீக்குமுதல் பயண நினைவுகள் மறக்க முடியாதவை.
பதிலளிநீக்குசரியாகச் சொன்னீர்கள்
நீக்குடில்லி,ரயில் நிலையத்திலிருந்து பயந்து கொண்டே தனியாக வெளியே வந்தேன். முதன் முதல் கண்ணில் பட்டவர் முழு சூட் அணிந்திருந்தார். அவர் என்ன வேலை செய்து கொண்டிருந்தா தெரியுமா? மாட்டுக்கோ குதிரைக்கோ லாடம் அடித்துக் கொண்டிருந்தார். ஆஹா ... தலை நகராச்சே .. இப்படித்தான் இருக்கும் போல் என்று நினைத்துக் கொண்டேன். ஆண்டு 1973
பதிலளிநீக்குரயில் நிலையத்தில்லாடமடித்துக் கொண்டிருந்தாரா
பதிலளிநீக்கு