Wednesday, May 6, 2020

கம்ப ரசம்                                                      கம்ப  ரசம்
பகவத் கீதையில்  சொல்லாதது புழக்கதில் இருப்பதுபோல் கம்பராமாயணத்தில்  இல்லாதது  இருப்பது  போல் நினைக்கப்படுகிறது கம்பரமாயண் பக்தர்கள் இயற்றிய காப்புச் செய்யுள்  கம்பன் பாடியதுபொல் எண்ணப்படுகிறது

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆர் உயிர்  காக்க ஏகி
 அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கை கண்டு அயலார் ஊரில்
    அஞ்சிலே ஒன்றை வைத்தான்  அவன் எம்மை அளித்துக் காப்பான்                                    

                                              --


 பூவிரி  பொலன் கழல் பொரு இல் தானையான்
காவிரி நாடு அன்ன  கழனி நாடு ஒரீஇ
தாவர சங்கமம் என்னும்  தன்மைய
யாவையும் இரங்கிட கங்கை எய்தினான்

அழகு மிக்க  பொன்னாலான  வீரக்கழலையும்  இணைஇல்லாத படையையும்   உள்ள பரதன்   காவிரி வளம் செய்யும் சோழநாடு  போன்ற  வயல் வளம்உடைய கோசல நாட்டை நீங்கி  இயங்காப் பொருள் இயங்கு பொருள் என இருவகையாய் பிரிக்கப்பட்டுள்ள எல்லா உயிரினங்களும் தனது நிலை கண்டு இரங்கி ஏங்க  கங்கையை  அடைந்தான்

திரிசடை பற்றி எழுத விவரம்  தேடியபோது கண்ணில் சிலபாடல்கள் தென்பட்டன  பாடலை விளக்கும்   இடங்களில்  எல்லாம் கம்பன்  தன்  நாட்டுப்பற்றை தனக்கு உதவிய  சடையப்ப வள்ளல் பற்றியும் கூறி இருந்தது  என்மனதில் பதிந்ததுகோசல நாட்டை  தன் சோழநாட்டுடன் ஒப்பிட்ட பாங்கு என்னை கவர்ந்தது


பல நேரங்களில் எடுத்தாளப்படும்மேற்கோள்கள் கொண்ட பாடல்களை தேடியபோது சில பாடல்களைக் கண்டேன்   அந்த மேற்கோள்கள் கம்பனின்  பாடல்களில் பொருள் சார்ந்தே இருக்கின்றன வெர்பாடிம்   இல்லை
  கம்பராமாயணத்தில்  குகனோடு  நம் ஐவரானோம்  என்று எடுத்தாள்ப்படும்  பாட்டைத் தேடிக் கிடைத்தது இது

துன்பு உளது எனின் அன்றோ  சுகம் உளது அது அன்றி  
பின்பு உளது இடை  மன்னும்  பிரிவு உளது என உன்னேல்
முன்பு உளெம் ஒரு நால்வேம்  முடிவு உளது என உன்னா
அன்பு உள இனி நாம்  ஓர் ஐவர்கள்  உளர் ஆனோம்

துன்பமுளதால் தான் சுகமும் உள்ளதாகும் அவ்வாறு  நினைப்பதல்லாமல் பின்னே உளதாகப் போகின்ற இப்போது இணைந்திருப்பதற்கும்வனவாசத்துக்குப் பின்  இணைந்திருக்கப் போவதற்கு   இடைப்பட்டதான பிரிவு என்னும்  துன்பம் உளதே என்று எண்ணாதேஉன்னைக்கண்டு  தோழமைகொள்வதற்கு முன்னே                              உடன்பிற்ந்தவர்களாக நாங்கள் நால்வர் இருந்தோம்   இப்போது முடிவு உளது  என்று  நினைப்பதற்கு முடியாத எல்லையற்ற                                                                                                   அன்பு உடையவராகிய நாம்                                ஐவர் ஆகிவிட்டோம் என்றான்   இராமன்

பிரவசனகர்த்தாக்கள்  கண்டேன்  சீதையை என்று  அனுமன் கூறுவதாகக் கூறுவர்  அந்தப்பாடலில் வருபவை

கண்டனென் கற்பினுக்கு அணியாய் கண்களால்
தெந்திரை அலை கடலிலங்கைதென் நகர்
அண்டர் நாயக  இனி குரட்ட் ஐயமும் 
பண்டு உள துயரும் என்று அனுமன் பன்னுவான்

 ஐயனே உன்னுடைய பெருமைக்கு உரியமனைவி என்னும் உரிமைக்கு உன்னைப் எற்றாஆறாணா  தசரத சக்கர வர்த்தியும்மருமக்ளென்னும் உண்மைக்கும் மதிலையில் அரசனன ஜனகனுடைய மகள் என்னும்  பபுக்கும்  தகுதி சிறப்புகளைப்பெற்று என்னுடஒய சிறந்த தெயமமாக சீதை திகழ்கிறாள் இன்னும் நான் சொல்வதைக் கேளுங்க என்று  கூறினான்  அனுமன்

ராமனும்  சீதையும்  முதன்முதலில் பார்த்துக்கொள்வதை கம்பன் கூறும்போது ஏதோ ரசாயன  மாற்றம் அவர்களுக்குள்  நிக்ழ்ந்ததைக் கம்பன்கூறுகிறான் பாடல் வரிகள் கீழே 
எண்ண அரு நலத்தினாள் இணையள்  நின்றுழி
கண்ணொடு கண் இணை கவ்வி  ஒன்றை ஒன்று
உண்ணவும் நிலை பெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும்  நோக்கினாள்  அவளும்  நோக்கினாள்

கம்பரசம்  மேலும் தொடரும்
                                                                                                                                                                      

25 comments:

 1. எமக்கு முதன்முறை ஐயா தொடர்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. பலரும் கம்பராமாயணம் வாசித்திருக்கலாம் என்பாணியே தனி தெரிந்திருக்கும்

   Delete
 2. Replies
  1. ஒரு சில பாடல்களையே காட்டி இருக்கிறேன் அது ஒரு க்ரிடிகல் அனாலைசிஸ்

   Delete
 3. Replies
  1. வருகைக்கு நன்றி சார்

   Delete
 4. பிரமாதம், ஐயா.

  ReplyDelete
  Replies
  1. எடை ரசித்தீர்கள் என்று சொலி இருந்தால் எனக்கு உதவியாய் இருந்திருக்கும் வருகைக்கும் பாரட்டுக்கு நன்றி

   Delete
 5. ரசித்திருக்கிறேன். மீண்டும் படிக்க மகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. கம்பராமாயணம் ஒரு கடல் அதில் சிலபாடல்களில் முத்தெடுக்க முயன்றி ருக்க்கிறேன்

   Delete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. தலைப்பைப் பார்த்து வேறுமாதிரி நினைத்தேன். ஏமாந்தேன். உங்கள் தமிழார்வம் மெச்சத்தக்கது.

  ReplyDelete
  Replies
  1. தலைப்பு என்ன நினைக்க வைத்தது

   Delete
  2. செல்லப்பா ஸார் சொல்லி இருப்பதுதான்! இணையத்தில. PDF ஆகக் கூடக் கிடைக்கிறது!

   Delete
  3. எனக்குத் தெரியாதது

   Delete
 8. கம்பரசம் என்றதும் அந்த நாளில் திராவிடக் கட்சித் தலைவர் எழுதிய 'கம்பரசம்' தானோ என்று மயங்கிவிட்டேன். பரவாயில்லை. கம்பனை எந்த இடத்தில் படித்தாலும் ரசமாகத்தான் இருக்கும். தொடர்ந்து எழுதுங்கள். ஏதோ உங்கள் தயவில் மீண்டும் கம்பனின் தமிழ்ச்சுவையை நினைவுபடுத்திக் கொண்டதாகும்.

  ReplyDelete
  Replies
  1. ஆரார் எண்ணப்படி நினைத்தால் நான்பொறுப்பல்ல தலைப்பைபார்த்து உள்ளிருப்பை கணக்கிடக் கூடாதுடு

   Delete
 9. பழைய கம்ப ரசத்தைத் தான் தாங்கள் மீண்டும் சூடுபடுத்துகிறீர்களோ என்று எண்ணினேன்...

  தொடர்கிறேன்...

  ReplyDelete
 10. க்ம்பரசத்தில் பழையதுபுதியது உண்டா

  ReplyDelete
 11. மிகவும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் டெம்ப்லேட் கமெண்டுக்கும் நன்றி

   Delete
 12. கம்பன் எப்பொழுதுமே ரசிக்க முடியும்.
  அளவில்லாத ஆனந்தம். முக்கியப் பாடல்களாகக்
  கொடுத்திருப்பது இன்னும் வரப்போகும்
  படலங்கள் ,பாடல்கள் எல்லாவற்றையும் எதிர் நோக்க வைக்கிறது.
  மிக நன்றி சார்.

  ReplyDelete
  Replies
  1. கம்பனில் எனக்குப் பிடித்த சிலபாடல்களும் தொடரும் மேலும் சிலபடல்களை மேற்கோள் காட்டுவதால் எழுந்த பதிவு இது உங்கள் வ்ருகை மகிழ்ச்சி தருகிறது

   Delete
 13. கம்பரசம் இனிமை
  இன்னொரு பாடலும் உண்டு.
  “குகனோடும் ஐவரானோம் முன்பு குன்று சூழ்வான்
  மகனொடும் அறுவரானோம் எம்முழை அன்பின் வந்த
  அகனமர் காதல் ஐய நின்னொடும் எழுவர் ஆனோம்
  புகலரும் கானம் தந்த புதல்வரால் பொழிந்தான் உந்தை”

  ReplyDelete
 14. அதிகம் மெற்கோள் காட்டப்படும்பாடல் என்பதால் பகிர்ந்தேன் பார்ப்பவரை எல்லாம் தன் சோதரராய் ராமன் நினைப்பார்

  ReplyDelete