Saturday, April 30, 2022

ஆண் பெண் ஒரு ஒப்பீடு

 


1)  ஒரு ஆணும்  பெண்ணும் சாக்கலேட் பெட்டியிலிருந்து சாக்கலேட் எடுத்து உண்கிறார்கள்.ஒருவர் எடுத்த உடன் அதை மென்று தின்று விடுகிறார். அடுத்தவர் எடுத்துக் கடித்து உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்கிறார்.
கடித்தவர் யார் ?------------------ஆணா     பெண்ணா.?

2.) ஒரு ஆணும் பெண்ணும் ஒரு விருந்துக்குச் செல்கிறார்கள்.. அங்கே ஒருவர் சந்திரனுக்குச் செல்ல அநேகம் பேர் விரும்புவதில்லை என்றார். நம் நண்பர்களில் ஒருவர் கருத்துக் கணிப்பின்படி அது சரியாகத்தான் இருக்கும் என்கிறார். மற்றவர் “அது சரியாக இருக்க வாய்ப்பில்லை. நான் .போக விரும்புகிறேன் “ என்கிறார்.
மற்றவர் கருத்தினை இப்படி கணக்கிடுபவர் யார்.?---------ஆணா    பெண்ணா.?

3) ஒரு கணவனும்  மனைவியும் ஹாலில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறார்கள். மாடியில் சற்று உடல் நலமில்லாத அவர்கள் குழந்தை உறங்கிக் கொண்டிருக்கிறது. “ குழந்தையின் உடல் நலம் குறித்து வருத்தப் பட்டுக் கொண்டிருக்கிறாய் அல்லவா.?கவலைப் படாதே. டாக்டர் எல்லாம் சரியாகி விடும் என்று சொல்லி இருக்கிறார்.
மற்றவரின் உள்ளத்தை முதலில் கண்டு கொண்டு ஆறுதல் கூறுபவர் யார்.? ஆணா  பெண்ணா ?

4) ஒரு கணவனும் மனைவியும் ஒரு ஹோட்டலில் உணவருந்திக் கொண்டிருக்கிறார்கள்.. ஒருவர் சாதாரணமாக உண்ணாத உணவு வகைகளை ஆர்டர் செய்கிறார். மற்றவர் வீட்டில் உண்ணும் உணவு வகைகளையே கேட்கிறார்..உணவில் வெரைட்டி தேடுபவர் யார்.? ------------------- ஆணா     பெண்ணா. ?

5)  அதே ஜோடி ஒரு கடைக்குப் போகிறார்கள்..அங்கே ஒரு பக்கம் வித்தியாசமான புதிய பொருட்களும் இன்னொரு பக்கம் சாதாரணமாக இருக்கும் பொருட்களும் வைக்கப் பட்டிருக்கின்றன. வித்தியாசமான பொருட்களால் கவரப் படுபவர் யார்.? ஆணா     பெண்ணா. ?


உங்கள் பதில் எந்த அளவுக்கு கீழ்கண்ட பதில்களுடன் ஒத்துப் போகிறது. என்று பாருங்களேன்.

1) பெண். ----டாக்டர் ஹெலென் ஹால் ஜென்னிங்ஸ் ப்ரூக்லைன் காலேஜ் பேராசிரியர் கூறுகிறார். ஆண்கள் தேவையற்றுக் குழப்பிக் கொள்ள மாட்டார்கள். பெண்கள் எல்லாவற்றையும் துருவுவார்கள்.

2). பெண். --- மிச்சிகன் ஸ்டேட் யுனிவர்சிடிநடத்திய ஆய்வின்படிபெண் எப்போதும் தான் எண்ணுவதுதான் சரி என்று சப்ஜெக்டிவ் ஆக சிந்திக்கிறாள். ஆண் பரந்த மனதுடன் ஆப்ஜெக்டிவ் ஆக சிந்திக்கிறான். 

3) ஆண். ----பிட்ஸ்பர்க்  வெடெரன்ஸ் அட்மினிஸ்ட்ரேஷன் ஹாஸ்பிடல் சைகாலஜிஸ்ட் அநேக திருமணமான ஜோடிகளிடம் நடத்திய ஆய்வின்படி, ஆச்சரியப்படும்படி ஆண்களுக்கே மற்றவரின் உணர்வுகளை அறிந்து கொள்ள முடிகிறது என்று கண்டறிந்தார்.

4). பெண்.--- மார்க்கெட்டிங் கருத்தாராய்வுப்படி, பெண்களே புது உணவு வகையறாக்களை ருசி பார்க்க ஆர்வம் காட்டுகின்றனராம்.

5)  ஆண். ---புதிய வடிவமைப்பு, பாக்கேஜிங்  போன்ற வற்றால் கவரப் பட்டு தெரிந்து கொள்ள ஆணே ஆர்வம் காட்டுகிறான் என்று இன்ஸ்டிட்யூஷன் ஆஃப் மோடிவேஷனல் ரிசர்ச் தலைவர் டாக்டர் எர்நெஸ்ட் டிக்டர், கூறுகிறார்.

பெண்களைப் பற்றி அதிகம் புரிந்து கொள்ள முடியாமல் அவதிப்படும் நான் புரிந்து கொள்ள படித்ததை பகிர்ந்து கொள்கிறேன்.          .                            

Thursday, April 28, 2022

ராவணனுக்கு எத்தனைதலைகள்

 

ராவணனுக்கு எத்தனை தலைகள் பத்துஎன்பது நாம்கேட்டறிந்தது ஒரு முறை சிதம்பரத்துக்கு  திருமஞ்சனத்துக்கு வந்திருந்தபோது இரவு உற்சவர்களை எல்லாம் வீதி உலா எடுத்துச் செல்வதைக் கண்டேன். அதில் ஒன்று .கைலாச பர்வதம் என்று சொன்னதாக நினைவு. அதில் ராவணன் கைலாயத்தை தூக்க இருப்பதுபோலவும் அதன் மேல் உற்சவரை வீதி உலா கொண்டு சென்றார்கள். ராவணனுக்கு ஒன்பது தலைகளே இருந்தது.. அப்போது அந்த நேரத்தில் சந்தேகம் கேட்கக் கூடாது என்று எண்ணி வாளாயிருந்து விட்டேன். இந்த முறை அது பற்றி எங்கள் தீட்சிதரைக் கேட்டேன். ஒரு வேளை நாந்தான் தவறுதலாக ஒன்பது தலைகள் என்று எண்ணினேனோ என்று கேட்டேன். அவர் ஒன்பது தலைகள் சரியே என்றும் ராவணனின் யாழை பத்தாவது தலையாகக் கருதுவது ஐதீகம் என்றும் சொன்னார்.

 

இது சரியா. ? யாராவது தெளிவிக்கலாமே

மறைந்த திருகந்தசாமி ஐயா ஒரு விளக்கம்தந்தார்
ராவணனுக்கு வேண்டிய வரங்கள் கொடுத்தது சிவபெருமான்தான். அதனால் ராவணனுக்கு கர்வம் தலைக்கேறி சிவனையே அசைத்துப் பார்க்கத் துணிந்தான். கைலாச பர்வதத்தைத் தன் இரு கைகளினால் தூக்க முயற்சிக்கு கைலாச பர்வதம் ஆடிற்று. பயந்து போன பார்வதி சிவனைக் கட்டிப்பிடித்துக்கொண்டாள்.

சிவன் தன் கால் பெருவிரலால் மலையை அழுத்த ராவணன் கைகளுடன் மலையின் அடியில் சிக்கிக்கொண்டான். சிவன் சாமகானப்பிரியன். ராவணன் கானவல்லுனன். தன் தலைகளில் ஒன்றைப் பிய்த்து தன் கை நரம்புகளைச் சேர்த்து ஒரு யாழ் செய்து அதனுடன் சேர்ந்து இசைக்க, சிவன் அந்த கானத்தில் மயங்கி தன் கால் பெருவிரலை சற்றே தளர்த்த கானத்தில் மயங்கி தன் கால் பெருவிரலை சற்றே தளர்த்த ராவணன் தப்பித்து ஓடி வந்து விட்டான்.

இந்தக்கதை மிகவும் பிரபலமானது.

 

ஒருஎண்ணம்பலவற்றுக்கு இட்டுச் செல்கிறது

கும்பகோணத்திலிருந்து முதலில், வைத்தீஸ்வரன் கோயில் தரிசனம் பூஜை, பிறகு அங்கிருந்து சிதம்பரம். இரண்டு கோயில்களிலும் அவரவர் நட்சத்திரத்தன்று மாதமொரு முறை பூஜை செய்த பிரசாதம் பெறுவது பல ஆண்டுகளாகத் தொடர்ந்தது. நாங்கள் வருவதை எங்களுக்காக பூஜை செய்யும் குருக்களுக்கு முன்பே தொலை பேசியில் தெரிவித்து விடுவோம். இந்த முறை உறவினர்கள் பலரும் அவர்களுக்காக பூஜை செய்து பிரசாதம் கொண்டு வரும்படிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். வைத்தீஸ்வரன் கோயிலில் உப்பு மிளகிடுவதும் நீரில் வெல்லம் கரைப்பதும் வேண்டுவார்கள். இப்போதெல்லாம் குளத்தில் வெல்லம் கரைக்க அனுமதிப்பதில்லை. அதற்கான இடத்தில் வைத்து விட வேண்டும். அன்னை தையல்நாயகி. குழந்தை முத்துக்குமாரசாமி, அங்காரகன் மற்றுமுள்ள தெய்வங்கள். நவகிரக தலத்தில் அங்காரகனுக்கான க்ஷேத்திரம் இது .


அங்கிருந்து சுமார் பதினோரு மணி அளவில் சிதம்பரம் சென்றோம். கோடையின் கடுமை கொஞ்சமும் குறைய வில்லை. சிதம்பரம்  தீட்சிதர் மாலை ஆறரை மணிக்கு மேல் கோயிலுக்கு வரச் சொன்னார். அதற்கு முன் சுற்று பிராகாரத்தில் கால் வைக்க முடியாத அளவு சூடு. மாலை ஐந்து மணிக்கு தில்லை காளி கோயிலுக்குச் சென்று தரிசனம் முடிந்து நிதானமாகக் கோயிலுக்குச் சென்றோம். ஒரு முறை கோயில் பிராகாரத்தை வலம் வந்தால் ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் நடந்திருப்போம். பிரம்மாண்டமான பெரிய கோயில். பரத நாட்டிய சாஸ்திரத்தில் கூறியுள்ள 108 கரண சிற்பங்கள் அங்கே நான்கு கோபுர வாசல்களிலும் காணலாம் கோயிலைப் பற்றி நான் அதிகம் கூறப் போவதில்லை. பலரும் எழுதி இருக்கிறார்கள் வலையில் நிறையவே எழுதப் பட்டிருக்கிறது. இருந்தாலும் ஒன்று விளங்க வில்லை, தெற்கு வாசல் வழியே உள்ளே நுழைந்தால் இடப் புறம் முக்குருணி வினாயகர். ஒரு பெரிய நந்தி சிலை. சிறைபட்டிருப்பதுபோல் காட்சி அளிக்கிறது. அத்ற்கு நேர் சற்று வலப்பக்கம் இருந்த ஒரு வழி  சுவரால் மூடப் பட்டிருக்கிறது. நந்தனார் கோயிலுக்குள் நுழைந்த வழி மூடப் பட்டுள்ளது என்று ஒரு சேதி. மற்றொரு விஷயம். கோயிலின் மதிலை ஒட்டி எல்லாப் பக்கங்களிலும் தூண்கள் நிரம்பிய இடம். ( எனக்கு அது குதிரை லாயத்தை நினைவு படுத்துகிறது. அந்த இடம் புழக்கத்தில் இல்லை. அதேபோல் அன்னை சிவகாம சுந்தரி ஆலயத்தை அடுத்த இடமும் உபயோகத்தில் இல்லாமல் தெரிகிறது. இதையெல்லாம் பராமரிக்காமல் இருப்பதன் காரணம் தெரியவில்லை. எங்கள் பூஜையைச் செய்து வரும் தீட்சிதருக்கும் சரியாகப் பதில் தெரியவில்லை. மேலும் மேலும் துருவிக் கேட்டால் அது விரும்பப் படாதது என்பதால் விட்டு விட்டேன். அங்கேயே சில காலம் தங்கி பலரையும் கேட்டு ஆராய்ந்தால் ஒரு சமயம் தெளிவு கிடைக்கலாம். வாதப் பிரதி வாதங்களுடனான பதிவுகள் வலையில் பல உள்ளன.ஆனால் இதைப் பற்றிய சேதி எனக்குக் கிடைக்கவில்லை.. குழந்தைகள் மணச்சட்டம் தில்லை வாழ் அந்தணர்களிடையே மீறுவதில்தான் இருக்கிறது என்று தோன்றுகிறது. அவர்களின் பெண் குழந்தைகளும் படிக்கத் துவங்கி விட்டார்கள். மணமானவருக்குத்தான் கருவறையில் பூஜை செய்யும் உரிமையும் , அதை ஒட்டிக் கிடைக்கும் சலுகைகளும் என்பதால் அவர்களுக்குள்ளேயே இளவயது மணம் சாதாரணமாகக் கருதப் படுகிறது. ஆனித் திரு மஞ்சன விழாவின் போது சின்னச் சின்னக் குழந்தைகள் திருமணமான
அடையாளமாக மடிசார் புடவை உடுத்தி உலவும் போது மனம் கனக்கத்தான் செய்கிறது. தில்லை வாழ் அந்தணர்கள் விடாப்பிடியாக சில கொள்கைகளை கடைப் பிடிக்கிறார்கள். கோயிலில் இல்லாதிருந்த உண்டிகள் இப்போது காணப் படுகின்றன. கோயில் மூலவரே உற்சவராக வீதி உலா வரும் வழக்கம் முதல் பல பூஜை முறைகளும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் வித்தியாசமாக உள்ளது. இந்து அற நிலையத்துக்கும்  தீட்சிதர்களுக்குமான வழக்கு நிலுவையில் இருக்கிறது. எல்லாம் நல்ல முறையில் முடிய அந்த ஆடல்வல்லானே அருள் புரியட்டும்.


Sunday, April 24, 2022

சில பகிர்வுகள்

 

திருமணம் ஒன்றுக்குச் சென்று வந்தேன். சாதாரணமகவே திருமண விருந்துகளுக்குச் சென்றால் என்னால் பசியாறச் சாப்பிட முடியாது. குறை என்னிடம்தான். நான் உண்பதில் வெகு நிதானம். பந்தியில் ஒரு முறை பரிமாறியதை நான் சுவைக்கத் துவங்கும் முன் அடுத்து பரிமாற வந்து விடுவார்கள். நான் சாம்பார் போட்டு உண்பதற்கு முன் பந்தி முடிந்து எல்லோரும் போகத் துவங்கி விடுவார்கள். நான் மாத்திரம் உட்கார்ந்து உண்டு கொண்டிருப்பது நான் விரும்பாதது மட்டுமல்ல. அநாகரிகமாகவும் தோன்றும். இது குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தபோது, இம்மாதிரியான விழாக்களில் விரயமாகும் உணவு குறித்தும் சிந்தனை சென்றது. நண்பன் ஒருவன் கூறிய செய்தியைப் பகிர்ந்து கொள்வது பலரது  சிந்தனைக்கு விருந்தாகலாம் !

நண்பனுக்கு ஜெர்மனியில் வேலை கிடைத்ததாம்..அதனைக் கொண்டாடும் முகமாக அங்கிருந்த இவருடைய நண்பர் “ ட்ரீட் “வேண்டி ஒரு ஓட்டலுக்கு அழைத்துச் சென்றாராம். இவரையும் சேர்த்து நான்கு நண்பர்கள் கூடியிருந்தனராம். அந்த ஓட்டலில் உணவுக்கு வந்திருந்தவர்கள் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்ததாம். அப்படி உண்பவர் மேசைகளிலும் குறைந்த அளவே தட்டுகள் இருந்ததாம். ஒரு வெகு சாதாரண ஓட்டலுக்கு வந்து விட்டோமோ என்னும் எண்ணம் அவர்களுக்கு எழுந்தது. எப்படி இருந்தால் என்ன.. நாம் நன்றாகச் சாப்பிட்டு அனுபவிப்போம் என்று இவர்கள் விதவிதமான உணவுப் பொருட்களும் அதிக அளவிலும் ஆர்டர் செய்தனர். முடிவில் ஆர்டர் செய்த பல பொருட்கள் உண்ணப் படாமலேயே விரயமாயிற்றாம். பார்ட்டி முடிந்து பில் வந்தபோது பில்லில் அபராதத் தொகை என்று ஒரு கணிசமான தொகையும் இட்டிருந்தார்களாம். அபராதம் எதற்கு என்று கேட்டபோது தேவைக்கு மீறி ஆர்டர் செய்து விரயமாக்கியதற்கு என்று பதில் வந்ததாம். “ எங்கள் பணம். நாங்கள் உண்போம் இல்லை வீணாக்குவோம், அதை நீங்கள் எப்படிக் கேட்கலாம் “என்று இவர்கள் கேட்டதற்கு அவர்கள் “பணம் உங்களுடையதாக இருக்கலாம். பொருட்கள் இங்கிருப்பவர்களின் மூலப் பொருட்களிலிருந்து (RESOURCES) “ வந்தவை. . அதை விரயம் செய்வது குற்றம் என்றனராம். நாம் விரயமாகும் எந்தப் பொருளைப் பற்றியாவது சிந்திக்கிறோமா.?
                           ---------------

இனி சில பறவைகள் பற்றிய தகவல்கள்.

ஹோமா என்னும் பறவையைப் பற்றி வேதத்தில் சொல்லி இருக்கிறதாம் .அது வானத்தில் வெகு உயரத்தில் வசிக்கிறது. பூமிக்கு அது ஒரு போதும் வருவதில்லை. வானத்திலேயே அது முட்டை இடுகிறது. அம்முட்டை நிலத்தை நோக்கி விழும் வேகத்தில் வெப்பம் பெற்றுக் குஞ்சு பொரித்து விடுகிறது. விழும் வேகத்தில் குஞ்சு கண் திறக்கிறது. சிறகு முளைக்கிறது. .பூமி க்கு வந்து விழுந்தால் அது சிதறடைந்து செத்துப் போகும். ஆனால் அதற்கு முன்பே அக்குஞ்சுக்கு தன் தாயுடன் இருக்க வேண்டிய யதாஸ்தானத்தின் ஞாபகம் வருகிறது. அக்கணமே அது மேல் நோக்கிப் பறந்து விடும்.

சாதகப் பறவைமழை நீரை மட்டும் அருந்தும். புண்ணிய நதிகள் அனைத்திலும் ஏராளமாக நீர்ப் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தாலும்பூமியில் படிந்த நீரை அப்பறவை அருந்தாது.

அசுணம் என்றொரு பறவை இருந்ததாம். அதன் செவிகள் நளினமான இதமான ஓசையே  கேட்குமாம். விகாரமான நாராசமான ஓசை கேட்டால் துடிதுடித்து இறந்து போகுமாம்.

பாலிலிருந்து நீரைப் பிரித்து எடுத்துக் குடிக்கும் சக்தி வாய்ந்த அன்னம் எனும் பறவை பற்றி அநேகமாக அனைவரும் கேள்விப் பட்டிருக்கலாம். 

                       ----------------------
இது ஒரு கேட்ட கதை .பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு முறை புத்த பகவான் தன் சீடர்களுடன் சென்று கொண்டிருந்தார். தாகமாயிருக்கவே சீடன் ஒருவனிடம் குடிக்க நீர் கொண்டு வருமாறு பணித்தார். அவன் அருகில் இருந்த குளத்துக்குச் சென்று நீரை எடுத்து வரப் போனான். அவன் குளத்தை அடையும் நேரம் அங்கே சிலர் துணிகளை துவைத்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு மாட்டு வண்டி குளத்தை கடந்து சென்றது. குளத்து நீர் கலங்கி சேறாய்த் தெரிந்தது. சீடன் திரும்பி வந்து நீர் குடிக்கத் தகுதி யில்லாமல் கலங்களாய் இருக்கிறது என்றான்.

ஒரு அரைமணி நேரம் கழிந்து புத்தர் அதே சீடனிடம் நீர் கொண்டு வரச் சொன்னார். இம்முறை குளத்து நீர் தெளிந்து இருக்கவே அவன் புத்தருக்கு நீர் கொண்டு வந்து கொடுத்தான்.

” நீர் தெளிய நீ என்ன செய்தாய். அதை அப்படியே இருக்க விட்டாய். அதுவும் தெளிந்தது. நம் மனமும் அது போல்தான். குழம்பிப் போயிருக்கும்போது அப்படியே விட்டு விட வேண்டும் அதை தெளிவிக்க எந்த முயற்சியும் தேவை இல்லை. தானாகத் தெளியும்.மன நிம்மதி பெற  எந்த முயற்சியும் தேவை
இல்லை. உள்ளம் அமைதியாய் இருந்தால் அது இருக்கும் சூழலையும் அமைதியாக்கும். Wednesday, April 20, 2022

முருகா எனக்குஉன்னை பிடிக்கும்

 


முருகா, எனக்கு உன்னைப் பிடிக்கும்.....

முருகா எனக்கு உன்னைப் பிடிக்கும்....
--------------------------------------------------------

           நாளும் பொழுதும் என் நாவில்
           தவறாது வந்தமரும் முருகா,
           எனக்கு உன்னைப் பிடிக்கும்.

முருகு என்றால் அழகு
அழகு என்றால் முருகன்
என் கண்ணுக்கும் சிந்தைககும்
இந்த அண்டமே அழகாகத் 
தெரியும்போது அது நீயாகத்தானே 
இருக்க வேண்டும், தெரிய வேண்டும். 

            அழகை ஆராதிப்பவன் உன்னை 
            ஆராதிப்பதில் முரண் எங்குள்ளது.?

முருகா எனக்கு உன்னைப் பிடிக்கும் 
உன்னைப் பற்றிய கதைகள் பிடிக்கும் 
ஏன் எனக்குப் பிடிக்கவேண்டும் என்றென்
மூளையைக் கசக்கினால் ,உன்னைக் கூறும் 
கதைகள் மூலம் நமக்குள் இருக்கும் 
சமன்பாடு நன்றாகத் தெரிகிறது. 

            உன் தந்தையின் பெயர் மகாதேவன்.
            உன் தாயின் பெயர் பார்வதி,
            உன் பெயர் பாலசுப்பிரமணியம்.
            என் தந்தையும் மகாதேவன்
            என் தாயும் பார்வதி
            நானும் பாலசுப்பிரமணியம்.
            புரிகிறதா நமக்குள்ள ஒற்றுமை

கந்தா, குமரா எனக்கு உன் கோபம் பிடிக்கும்.
பந்தயத்தில் நீ தோற்க உன் பெற்றோரே
வழி வகுக்க வந்த கோபம் தணிய
பழனிமலை மீதேறி தண்டம் பிடித்த
கதையில் உன் கோபம் பிடிக்கும்
நேர்வழி கொள்ளாது குறுக்கு வழியில்
வென்றால் பின் வாராதா கோபம்.?
எனக்கும் வரும்..

             பிரணவத்தின் பொருள் அறியா
             பிரம்மனின் ஆணவம் அடக்க
             அவனை நீ சிறை வைத்தாய்.
             உனக்குத் தெரியுமா, கற்பிப்பாயா
             என்றுன் அப்பன் உனைக்கேட்க
             பொருளுணர்த்தி நீ தகப்பன் சாமியான
             கதை எனக்குப் பிடிக்கும்.
             அறியாதார் யாரேயாயினும் நானறிந்தால்
             கற்பித்தல் எனக்குப் பிடிக்கும்.

புரமெரித்தவன் நுதல் உதிர்த்த
ஜ்வாலையில் உருவானவன் நீ.
தேவர்களின் அஞ்சுமுகம் தோன்ற
ஆறுமுகம் காட்டி, அவர் நெஞ்சமதில்
அஞ்சேல் என வேல் காட்டி,
சூரபதுமன் உடல் பிளந்து
இரண்டான உடலை மயிலென்றும்,
சேவல் என்றும் ஆட்கொண்ட உன்
அருள் எனக்குப் பிடிக்கும்.
எதிரியை நேசித்தல் எனக்கும் பிடிக்கும்.

              நாவல் பழம் கொண்டு,
             அவ்வைக் கிழவியின் தமிழ்
             ஆழத்தின் மயக்கம் தெளிவித்த
             உன் குறும்பு எனக்குப் பிடிக்கும்.
             தமிழைக் குத்தகை எடுத்து
             கொள்முதல் செயவதாய்க் கருதும்
             சிலரைச் சீண்டுதல் எனக்கும் பிடிக்கும்.

தேவசேனாதிபதி  உனக்குப் பரிசாக
வந்த தெய்வானைக் கரம் பிடித்த
கந்தா உன் கருணை எனக்குப் பிடிக்கும்.
மனமுவந்து செய்த பணிக்கு மணமுடிப்புப்
பரிசானால் எனக்கு அது ஒப்புதலே
ஆக அதுவும் எனக்குப் பிடிக்கும்.

              ஆனைமுகன் அண்ணன் துணை கொண்டு,
               காதல் குறமகள் வள்ளியின் கரம் பிடிக்க,
               நீ நடத்திய நாடகங்கள் எனக்குப் பிடிக்கும்.
               தம்பியின் துணை நாடி கைத்தலம் பற்றிய
               எனக்கு காதலும் பிடிக்கும்.

அசை  சீர் தளையுடன் மரபு மாறா
யாப்பிசை எனக்குத் தெரியவில்லை.
தெரிந்ததை அறிந்தவரை மனசில் பட்டவரை,
எனக்குனை ஏன் பிடிக்கும் என்றே கூறியுள்ளேன்
உனக்கும் என்னைப் பிடிக்கும் என்று நம்புகிறேன்.
=========================================

Tuesday, April 19, 2022

இன்னுமொரு வித்தாசமான சிந்தனை

 


                                  முருகா ....நீ அப்பாவியா.?
                                  --------------------------------ஈசானம், தத்புருஷம், வாமனம்,
அகோரம், சத்யோஜாதம், அதோமுகம்-எனும்
ஈசனின் ஆறுமுக நுதல் கண்களீன்
தீப்பொறிகளாய் வெளியான ஆறுமுகனே
எனை ஆளும் ஐயனே, உனைக் குறித்து
எனக்கொரு ஐயம் எழுகிறது.

அஞ்சு முகம் தோறும், ஆறுமுகம் காட்டி,
அஞ்சாதே என வேலுடன் அபயமளிப்பவனே,
கனி கொணர்ந்த நாரதன் ஈசனே ஞாலம் என ஓத
விரும்ப ,அது உணர்ந்த ஆனைமுகன், அம்மை
அப்பனை வலம் வந்து கனி கொண்டான்.
நீயோ மயிலேறி பூவுலகை வலம் வந்து ,
கனிகிட்டாக் கோபத்தில் மலையேறி நின்றனை.
பரமனுக்கே ப்ரணவப் பொருளுரைத்திய
தகப்பன்சாமி நீயென்ன அப்பாவியா.?

ஈசன் சக்தியல்லால் வேறெதாலும் அழிக்கமுடியாத
சூரன், ஆணவம் மிகக் கொண்டு இந்திராதி தேவர்களுடன்
ஈரேழு உலகையும் கட்டுக்குள் வைக்க, அவனை அடக்கி
தேவர்கள் விடுதலை பெற அத்தனின் சக்திகள் அத்தனையும்
பெற்று , அருள் அன்னையின் சக்தி வேலையும் பெற்று,
போரில் அண்டமும் ஆகாசமாய் ஆர்பரித்து மரமாய் நின்ற
சூரனைசக்திவேலால் இரு பிள வாக்கினை.. அழித்தவனை
சேவலாய் மயிலாய் ஆட்கொண்ட நீயென்ன அப்பாவியா.?

மாயை உபதேசம் கொண்டு ஈசனிடம் வரம் பெற்ற சூரனை
ஆட்கொண்ட சரவணா, பரிசிலாக இந்திரன் தன் மகள்
கரம் பிடித்துக் கொடுக்க, அதனை மனமுவந்து ஏற்ற நீ அப்பாவியா
இல்லை சரவணப் பொய்கையில் உன் கரம் பிடிக்கத் தவம்
செய்த அவள்தான் இவள் என்றுணர்ந்து மணந்த மணவாளா,
ஏதுமறியாப் அப்பாவியாக இருக்கும் என் நாவில் வந்தமர்ந்து
ஆட்டுவிக்கும் நீ நிச்சயமாக அப்பாவி  அல்ல. 

Monday, April 18, 2022

வித்தி யாசமாய் முயற்சி

ஆரம்பகால  என்எழுத்தின்முயற்சிகள்வித்தியாசமானதாக இருந்தது

                          திருவெழுக்கூற்றிருக்கை...என் பாணியில்
                          ----------------------------------------------------------


திரு  திருவெழுக்கூற்றிருக்கை என்பது ரதபந்தனக் கவி எனப் படும் ஒன்று. கும் கும்பகோணம் அருள்மிகு சாரங்கபாணி கோயிலிலும், கும்பேஸ்வரர்கோ கோயிலிலும் இதுஎஎழுதி இருப்பது கண்டேன்
, .

எனக்எனக்குள் நானுமெழுதினால் என்னஎன்று  தோன்றியது. என் தமிழ் தேர்ச்சிபற்றி த்து எனக்கு உயர்வான எண்ணம் கிடையாது. இருந்தாலும் ஊர்க்குருவியாக வாவது பறக்பறக்க  முடியுமா என்றும் ஒரு ஆசை. கடைசியில் கான மயிலாடக் கண்ட வான்கோழி போல் நானும் ஆட முடிவெடுத்தேன். அந்த முயற்சியே இது.

முதமுதலில் திருவெழுக்கூற்றிருக்கை பற்றி சில குறிப்புகள்.

1 முஒன்று முதல்ல் 7 வரை படிப்படியாகக் கீழிருந்து மேல்,பின்பு மேலிருந்து கீழ் என அடுஅடுக்காகடுக்காக ஒரு தேர்த் தட்டுபோல் மேலே செல்வதும் கீழே செல்வதுமாக அமைஅமைந்திருக்கும் பாடல் பொதுவாக ஆண்டவனைப் போற்றி பாடுவதாகவே இருக்இருக்கிறது. வேறு விதமாகப் பாடக் கூடாதா என்று தெரியவில்லை.நான் முயமுயன்றிருக்கிறேன். இலக்கண விதிகள் குறித்த குறிப்புகள் தெரியவில்லை. ஆகவே இதுஅதுவும் என் பாணியில் அமைந்திருக்கிறது..

ஒவ்ஒவ்வொரு எண் அதிகமாகும்போதும் , மீண்டும் கீழிறங்கி , மேலே வந்து அடுத்த எண்எண்ணைக் கூட்டிச் செல்லும். 121, 12321, 1234321, 123454321, 12345654321, 1234567654321, என ஏழு வரைச் சென்றதும் இது தேரின் மேலடுக்கு போல் ஆகிறது. அதன் பின் ஒரு இடைதட்டு ,பீடம் பின்னர் மீண்டும் முன் சொன்ன வரிசையை அப்படியே திருப்பி தேரின் கீழ் அடுக்காக அமைத்து இறுதியில் தொடங்கிய அதே எண்ணிலேயே முடிவடையும் வகிவகைக்கு திருவெழுக்கூற்றிருக்கை எனப் பெயர். இந்த வகையில் திருஞானசம்பந்தரும் ,அருணகிரியாரும் , திருமங்கை ஆழ்வாரும் பாடி இருக்கிறார்கள்.

இனி இன்அடியேனின் பாடல்    
    ஒஒருவராய்ப் பிறந்து, ஈருடல் சங்கமித்து ஓருயிர் ஈன்றனை.

குல ஒன்று, சாதி இரண்டொழிய வேறில்லையென முக்காலமும் ஓதி, சக்தி சிவம் ஒன்ஒன்றென்றே சாற்றுகின்றீர்.

சொல் ஒன்றே,நன்றெனக் கூறி, எதிர்மறை இரண்டாய் இருத்தல் இயல்பென முத்தமிழிலும் நாற்றிசை ஒலிக்க மும்முறை சொல்லும் இருகுணம் கொண்ட ஒருவனும் நீயோ.

குருதி நிறம் ஒன்று,பிறப்பிறப்பு இரண்டும் உண்டு எனப் படைப்பின் முத்தொழில் புரிவோர் நானிலத்தில் ஐம்புலன்களில் நால்வகை வர்ணங்கள் மூவுலகில் எங்கேனும் இரண்டில் ஒன்றாய்ப் படைத்தனரா.

ஓருயிர் பெற்று, இரு பிறப்பெடுத்து, முத்தீ வளர்த்து,நான்மறை பயின்று, ஐவகை வேள்வி மூட்டி, அறுதொழில் செய்து ஐம்புலன் செறுத்து, நான்குடனடக்கி, முக்குணத்தில் இரண்டை அகற்றி ஒன்றுடன் ஒன்றுவோர் இன்றும் உண்டோ.

ஒன்று இரண்டாகி மூன்றுக்கு வழி வகுக்கும் இந்நானிலத்தில் ஐம்புலம் ஆளும் அருகதை ஆறறிவு படைத்த அனைவருக்கும் பொதுவன்றோ. ஏழு ஸ்வரங்களில் பேதம் கொணர்வது இகவாழ்வில் சரியோ. அறுசுவையுடன் அவலச் சுவையும் வேண்டுமோ.. வாய்ப்பென்று வரும்போது கையின் ஐ விரலும் சமம் என்றே உணராது வர்ணபேதம் முக்காலமும் மேடு பள்ளமென இரண்டுக்கும் காரணம் என்ற ஒன்றாவது சரியோ.

எண்எண் ணும் எழுத்தும் கண்ணெனத்தகும் ...என்றோ ஓதியது.எண்ணத்தில் ஓடியது. எண்ஆஆனால் எழுத்தால் இறை புகழ் பாட என்னால் இயலவில்லை. கண்முன்னே விரியும் அவலங்கள் அவனும் அறிவான்தானே.சம நீதி கிடைக்க இன்னும் அவன் அவதரிக்காதது என்ன நீதி.?


சக மனிதனிடம் கேள்வி கேட்பது போல் எழுத முயன்றிருக்கிறேன். சில அரும்பதங்கள்  பொருள் கூற வேண்டும் எனத் தோன்றியது . அவை.

முத்தீ = கார்ஹபத்தியம் , ஆஹவநீயம் ,தக்ஷிணாக்கினி போன்ற மூன்று வகை அக்னிகள்.
இரு பிறப்பு = முப்புரி நூல் இடுவதற்கு முன்னும் பின்னுமானது.
நான்மறை  = ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள்.
ஐவகை வேள்வி = தேவ யக்ஞம், பித்ருயக்ஞம், பூத யக்ஞம், மனுஷ்ய யக்ஞம், ப்ரஹ்ம்மயக்ஞம்
அறுதொழில், = யஜனம் ( யாகம் இயற்றுதல் ), யாஜுகம் ( மற்றவர்களை யாகம் செய்வித்தல் ) அத்யயனம் ( வேதம் ஓதுதல் ), அத்யாபக்ஞம் ( மற்றவர்களை வேதம் ஓதுவித்தல் ) தானம் ( மற்றவர்களுக்கு அளித்தல் )ப்ரதிக்ரஹம் ( மற்றவர்களிடமிருந்து பெறுதல்)
ஐம்புலன் செறுத்து = கண் முதலான ஐந்து புலன்களையும் அவற்றின் விஷயங்களில் செலுத்தாமல் நிறுத்தி
நான்குடனடக்கி = மனம் ,புத்தி, சித்தம் அஹங்காரம் ஆகிய நான்கையும் அடக்கி,
                 அல்லது ஆகாரம் , உறக்கம் ,பயம் உடலுறவு ஆகியவற்றை அடக்கி                    என்றும் கொள்ளலாம்
முக்குணத்தில் இரண்டை அகற்றி, = ரஜஸ் மற்றும் தாமஸ குணங்களை அகற்றி
ஒன்றுடன் ஒன்றுவோர் = மீதமுள்ள ஒன்றான ஸத்வ குணத்தில் நிலை நின்று.நான் இதுபறியாரிடம் கற்றெனோ அவர்துபின்னூட்டம்                                                                                                     
சீரியநல்லதொரு முயற்சி! முடிந்தவரையில் நன்றாகவே செய்செய்திருக்கின்றீர்கள், ஐயா!

முதமுதல் வரியில் மட்டும் இன்னும் சற்று கவனம் தேவை என எண்எண்ணுகிறேன்.

1 முஒன்று முதல் 7 வரை படிப்படியாகக் கீழிருந்து மேல், பின்பு மேலிருந்து கீழ் என அடுக்கடுக்காக ஒரு தேர்த்தட்டு போல மேலே செல்வதும், கீழே செல்இற்ங்குவதுமாக அமைந்த இந்தப் பாடல் சுவாமிமலை குருநாதனைப் போபற்றிப் பாடும் அற்புதப் பாடல்.
ஒவ்ஒவ்வொரு எண் அதிகமாகும் போதும், மீண்டும் கீழிறங்கி, மேலேவந்து அடுஅந்த எண்ணைக் கூட்டிச் செல்லும்.

1, 121, 12321, 1234321, 123454321, 12345654321, 1234567654321
என 7 வரை சென்றதும் இது ஒரு தேரின் மேலடுக்கு போல் ஆகிறது.
அதஅதன்பின், இறைவனை அமரச் செய்ய ஒரு இடைத் தட்டு, பீடம்!
பின்பின்னர் மீண்டும் முன் சொன்ன வரிசையை அப்படியே திருப்பி தேரின் கீழ் அடுக்காக அமைத்து, இறுதியில் தொடங்கிய அதே 1 என்னும் எண்ணிலேயே முடிவடையும் வகைக்கு திரு எழு கூற்று இருக்கை எனப் பெயபெயர்.

ஒன்ஒன்று என முதலில் தொடங்கியபின், மீண்டும் ஒன்று, இரண்டு, ஒன்று என வந்திருக்க வேண்டும். அதாவது ,..

ஒருஒருவராய்ப் பிறந்து, ஈருடல் சங்கமித்து ஓருயிர் ஈன்றனை. என்னும் வரியில்,

ஒருஒருவராய்ப் பிறந்து ஒருவரை மணந்து ஈருடல் சங்கமித்து ஓருயிர் ஈன்றனை என வந்திருந்தால் இன்னும் சிறக்கும்.

இஇஇதையொட்டி, மற்ற வரிகளையும் கவனியுங்கள். அடுத்த முயற்சி இன்இன்னும் சிறப்பாக அமையும்.

அஅஅதேபோல, ஒருசில வார்த்தைகளிலேயே ஒரு எண்ணுக்கான பொபொருளை விவரிக்க முயன்றால், இன்னும் அழகு கூடும்.
வாஆவாழ்த்துகள்.

 

 

               


 

Thursday, April 14, 2022

தூசு தட்டி

 

வலை நண்பர் ஏகாந்தன்  என் வீட்டுக்கு வந்திருந்தபோது அவர் என் பதிவுகள் சிலவற்றை பார்த்து அவற்றின் வீச்சு   தற்போதைய பதிவுக்ளில் காணோம்என் றார்   அது இன்று மேலு ம் வலுக்கவே சில பழைய பதிவுகளை தூ சு தட்டி இடுகிரேன்


                                 OLD IS GOLD.......தூசி தட்டி.....
                                 --------------------------------------(நான் பதிவுலகில் தவழத் தொடங்கிய பொழுது எழுதியவை யார் கண்ணிலும் படாமல் போனது.இப்போது தூசி தட்டி மீண்டும், பதிவிடுகிறேன்),
                நானும் நீயும்
                -------------
 எந்தன்    உயிருக்குயிர்     நீயே
  
நாடும்    அன்பு     நானோ
  
என்   கண்ணின்  மணி   நீயே --உந்தன்
  க
ருத்தின்  ஒளியும்  நானோ
   
நற்பண்ணின்    சுவை    நீயே ---உன்
   
பாவின்   நயமும்   நானோ
   
என்    எண்ணின்   பொருள்   நீயே
   
உன்    எண்ணம்    சொல்லாதது   ஏனோ !


     எண்ணத் தறியில்
     -----------------

எண்ணத்  தறியில்  எழில்  நினைவுப் பின்னிப்
பிணைந்திழையோட  இழையோட
கன்னக்குழியில்   வண்ணக்குமிழ்  கொப்பளிக்க
பைந்தமிழ்   மொழிபேசி   மொழிபேசி
மின்னலிடையில்   மனந்திளைத்த  எனைப்
புன்னகை    ஒளிவீசி   ஒளிவீசி   
இன்னலிடை  யின்றவள்   மீட்டாள்
காதல்   பண்பாடி  பண்பாடி  |
   
  
     கொஞ்சும்  விழிகள்  வேல்போல்  தாக்க
     
   எஞ்சிய  உறுதியும்  காற்றில்  பறக்க
   
    தஞ்சமேனப்புகு   என  மனமும்  நினைக்க
    
   மிஞ்சியதென்னில்  அவள்  திருஉருவம்  |

 
அன்ன நடையழகி ஆடிஎன்முன்  நிற்க
  
பின்னிய  கருங்குழல்  அவள்   முன்னாட
  
என்ன  நினைததனோ  அறியேன்   அறிவேன்
  
பின்னர்  நிகழ்ந்தது   அதனைக்  கூறுவன்  கேளீர்  |

   
     இருமன   மொன்றாய்  இணைய _அதனால்
  
      இறுகிப் பதித்த   இதழ்கள்  கரும்பினுமினிக்க
 
       இன்சுவை  உணர   ஊறி  கிடந்தேன்
        இறுதியில்  உணர்ந்தேன்  கனவெனக்  கண்டது

    கண்ட  கனவு  நனவாக  இன்று
    
காரிகையே   அழைக்கின்றேன் அன்புக்
    
கயிற்றால்   பிணைக்கின்றேன்;  கண்ணே
  
கட்டும்  பிணைப்பும்  பிரியாது  உறுதி  |   
               நம்பிக்கைகள்
                                 --------------------

 நிலந்திருத்தி  விதைக்கும் விதை கிளர்ந்தெழு  மரமாகி  கனி கொடுக்கும்  என்பது  நம்பிக்கை.---மெய்   சோர்ந்து  உழைத்து  உறங்கி  எழும் புலரியில்  உயிர்த்து  எழுவோம்  என்பது  நம்பிக்கை ---- பயண  சீட்டெடுத்து  பஸ்ஸோ ரயிலோ  ஏறி சேருமிடம்  சேதமின்றி  சேருவோம்  என்பது நம்பிக்கை --- பாலூட்டி சீராட்டிப  பெற்றெடுத்த  பிள்ளை  பிற்காலத்தில்  நம்மைப்  பேணுவான்  என்பது நம்பிக்கை ---- நோயுற்ற  உடல்  நலம் பேண நாடும்  மருத்துவர் பிணி  தீர்ப்பார்  என்பது நம்பிக்கை ----- நல்ல படிப்பும்  கடின உழைப்பும்  வாழ்க்கையில்  வெற்றி  பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை ---வாழ்வின்  ஆதாரமே நம்பிக்கை.  நம்பிக்கைகள் பல விதம் . இருப்பினும் ,--- தாய் சொல்லி  தந்தை  என்றறியப்படுவதே  தலையாய  நம்பிக்கை. 
---------------------------------------------------------இயலாமை
-----------------
பிறப்பொக்கும்   உயிர்க்கு,  வாய்  கிழியக்  கூறுகிறோம்
ஏனிந்த   ஏற்றத்தாழ்வு   என்றறிவோமா..?
என்ன   பிழை  செய்தான்   ஏழையாய்ப்   பிறந்தவன் ,
ஏனில்லை   வாழ்வுவாய்ப்பு , உரிமையில்  சமத்துவம் .?
இருப்பவன்   வளமுடன்  உயர்கிறான் ,
அற்றவன்   என்றும்  அடியில்  தேய்கிறான் .
மேலே  செல்வது  கீழே  வரும்,  புவி  ஈர்ப்பின்  நியதி.
கீழே  உள்ளது  மேலே  செல்ல  யாரென்ன  செய்ய.?
காலச்  சக்கரச்  சுழற்சியில்  தானே  நடக்கும் . --நம்புவோமா ..!


நான்  ஏன்  பிறந்தேன் .?
------------------------
கலாநேசன்   பதிவில்   அழைப்பொன்று ,
கவிதைப் போட்டி  காட்டுங்கள்  திறனென்று,
நான்  ஏன்  பிறந்தேன்,
மூன்று  வார்த்தைகள்  மூன்று வரிகளில்
வருதல்  வேண்டும்அதுவே  விதி.

      
சிறுவயது  முதலே  என்  தேடலின்  வரிகள்;
      
நானும்   எழுதினேன்
     "
நான்  நானாக   இருக்கையில்
      
நீ   மட்டும்  வேறாக
      
பிறந்தேன் (பிறந்து  ஏன் ) பழி தீர்க்கிறாய் "

"
நான்" நானாகவும் "நீ" என் மனமாகவும்
நான் படும்  பாட்டை  பகிரவே
வந்து விழுந்த  வரிகள்
நாமெங்கு  பிறந்தோம் நம் வரவே
ஒரு விபத்தின்  விளைவன்றோ ?
(
பார்க்க  என் பிறிதொரு  பதிவை)

       
நிலையிலா  வாழ்வில்  நான்  எங்குள்ளேன்.?
       
என்  எண்ணில் "நான்" போனால்
       
நலம்  பல விளையலாம்.

நன்கு  பழகிய  நண்பரொருவர்
நலமெலாம்  விசாரித்து  பிரிய  மனமின்றி
பிரியா  விடை  பெற்றுச்  சென்றார்.
மறுநாள்  காலை  வந்தது  சேதி ,
தூங்கச்  சென்றவர்  துயிலெழ வில்லை
நேற்றிருந்தவர்   இன்றில்லை
நிலையிலா   வாழ்வில்  என்றுமவர்   இனி
வெறும்  நினைவாகவே  திகழ்வார்.
பெயர் ஒன்று  கொண்டு  புவியில்   திரிந்தவர்
போகையிலே  வெறும்   பிணமே  வெறும் சவமே
கையில்  கடிகாரம்  கட்டினால்
காலத்தை  வென்றவர்  ஆவோமா ?
பிறப்பும்  இறப்பும்  நம் கையில்  இல்லை
இன்றிப்போது  காண்பதே  இறுதிக்  காட்சியாகலாம் .
இருக்கையில்  வேண்டுமா  காழ்ப்பும்  கசப்பும்.?

       
ஏனென்று  கேள்வி  கேள்
       
உன்னை  நீ அறியலாம்,
       
உரைத்தவன்  சாக்ரடீஸ்

       
உண்மை  உணர்வதே
       
வாழ்வின்  நோக்கம்,
       
கூறினான்  காந்தி.

      
அயலவனை  நேசி
      
உன்னிலும்  மேலாக
      
என்றவன்  ஏசு.

உண்மையும்  நேசமும்  ஒன்றாக  இணைந்தால்
பிறந்த  காரணம்  புரியலாம்  ஒருவேளை .