1) ஒரு ஆணும் பெண்ணும் சாக்கலேட் பெட்டியிலிருந்து சாக்கலேட் எடுத்து உண்கிறார்கள்.ஒருவர் எடுத்த உடன் அதை மென்று தின்று விடுகிறார். அடுத்தவர் எடுத்துக் கடித்து உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்கிறார்.
கடித்தவர் யார் ?------------------ஆணா பெண்ணா.?
2.) ஒரு ஆணும் பெண்ணும் ஒரு விருந்துக்குச் செல்கிறார்கள்.. அங்கே ஒருவர் சந்திரனுக்குச் செல்ல அநேகம் பேர் விரும்புவதில்லை என்றார். நம் நண்பர்களில் ஒருவர் கருத்துக் கணிப்பின்படி அது சரியாகத்தான் இருக்கும் என்கிறார். மற்றவர் “அது சரியாக இருக்க வாய்ப்பில்லை. நான் .போக விரும்புகிறேன் “ என்கிறார்.
மற்றவர் கருத்தினை இப்படி கணக்கிடுபவர் யார்.?---------ஆணா பெண்ணா.?
3) ஒரு கணவனும் மனைவியும் ஹாலில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறார்கள். மாடியில் சற்று உடல் நலமில்லாத அவர்கள் குழந்தை உறங்கிக் கொண்டிருக்கிறது. “ குழந்தையின் உடல் நலம் குறித்து வருத்தப் பட்டுக் கொண்டிருக்கிறாய் அல்லவா.?கவலைப் படாதே. டாக்டர் எல்லாம் சரியாகி விடும் என்று சொல்லி இருக்கிறார்.”
மற்றவரின் உள்ளத்தை முதலில் கண்டு கொண்டு ஆறுதல் கூறுபவர் யார்.? ஆணா பெண்ணா ?
4) ஒரு கணவனும் மனைவியும் ஒரு ஹோட்டலில் உணவருந்திக் கொண்டிருக்கிறார்கள்.. ஒருவர் சாதாரணமாக உண்ணாத உணவு வகைகளை ஆர்டர் செய்கிறார். மற்றவர் வீட்டில் உண்ணும் உணவு வகைகளையே கேட்கிறார்..உணவில் வெரைட்டி தேடுபவர் யார்.? ------------------- ஆணா பெண்ணா. ?
5) அதே ஜோடி ஒரு கடைக்குப் போகிறார்கள்..அங்கே ஒரு பக்கம் வித்தியாசமான புதிய பொருட்களும் இன்னொரு பக்கம் சாதாரணமாக இருக்கும் பொருட்களும் வைக்கப் பட்டிருக்கின்றன. வித்தியாசமான பொருட்களால் கவரப் படுபவர் யார்.? ஆணா பெண்ணா. ?
உங்கள் பதில் எந்த அளவுக்கு கீழ்கண்ட பதில்களுடன் ஒத்துப் போகிறது. என்று பாருங்களேன்.
1) பெண். ----டாக்டர் ஹெலென் ஹால் ஜென்னிங்ஸ் ப்ரூக்லைன் காலேஜ் பேராசிரியர் கூறுகிறார். ஆண்கள் தேவையற்றுக் குழப்பிக் கொள்ள மாட்டார்கள். பெண்கள் எல்லாவற்றையும் துருவுவார்கள்.
2). பெண். --- மிச்சிகன் ஸ்டேட் யுனிவர்சிடிநடத்திய ஆய்வின்படிபெண் எப்போதும் தான் எண்ணுவதுதான் சரி என்று சப்ஜெக்டிவ் ஆக சிந்திக்கிறாள். ஆண் பரந்த மனதுடன் ஆப்ஜெக்டிவ் ஆக சிந்திக்கிறான்.
3) ஆண். ----பிட்ஸ்பர்க் வெடெரன்ஸ் அட்மினிஸ்ட்ரேஷன் ஹாஸ்பிடல் சைகாலஜிஸ்ட் அநேக திருமணமான ஜோடிகளிடம் நடத்திய ஆய்வின்படி, ஆச்சரியப்படும்படி ஆண்களுக்கே மற்றவரின் உணர்வுகளை அறிந்து கொள்ள முடிகிறது என்று கண்டறிந்தார்.
4). பெண்.--- மார்க்கெட்டிங் கருத்தாராய்வுப்படி, பெண்களே புது உணவு வகையறாக்களை ருசி பார்க்க ஆர்வம் காட்டுகின்றனராம்.
5) ஆண். ---புதிய வடிவமைப்பு, பாக்கேஜிங் போன்ற வற்றால் கவரப் பட்டு தெரிந்து கொள்ள ஆணே ஆர்வம் காட்டுகிறான் என்று இன்ஸ்டிட்யூஷன் ஆஃப் மோடிவேஷனல் ரிசர்ச் தலைவர் டாக்டர் எர்நெஸ்ட் டிக்டர், கூறுகிறார்.
பெண்களைப் பற்றி அதிகம் புரிந்து கொள்ள முடியாமல் அவதிப்படும் நான் புரிந்து கொள்ள படித்ததை பகிர்ந்து கொள்கிறேன். .
நாம் நம்மை முதலில் புரிந்து கொள்ள வேண்டுமே...!
பதிலளிநீக்குமனத்துக்கண் மாசிலன் ஆதல்...!
ஒருவேளை அறிந்து தெரிந்து புரிந்து கொண்டால் எவ்வித எண்ணங்களும் மகிழ்வே...!
உண்மை
நீக்குசார் ஆய்வின்படி பெண்களைப் புரிந்து கொள்வது என்பது சரியாகப்படவில்லை. அது பொதுவானது. கூடவே இருக்கும் நம் பெண்களை நாம் தானே படிக்க முடியும்?
பதிலளிநீக்குஉதாரணமாக இங்கு 5 விடை ஆண் என்றிருக்கிறது. எனக்கு வித்தியாசமான பொருட்கள் பிடிக்கும்.
1 - பகுத்து ஆய்வது தவறில்லையே. அப்படியே எடுத்துக் கொள்வதை விட இந்தக் கோணத்திலும் பார்க்கலாம் இல்லையா
கீதா
ஆய்வுகள் ஒருபோல் இருக்கவேண்யிய அவசியமில்லை
நீக்கு5வது மாத்திரம் யாராக இருக்கும் என்று தோன்றவில்லை. மற்றவைகளைச் சரியாகக் கணித்தேன். ஹா ஹா
பதிலளிநீக்குபராவாய்ல்லை
நீக்குநல்லதொரு ஆய்வறிக்கை தான்.
பதிலளிநீக்குஎனதல்லவே
நீக்குஅடடே... சரியாகவே கணித்திருக்கிறேன்...
பதிலளிநீக்குபாராட்டுகள்
நீக்குஐயா, பெண்களை விட ஆண்களே மேல் என்பதால்தானே நானும் நீங்களும் ஆண்களாகப் பிறந்திருக்கிறோம்! இதற்கெல்லாம் ஆராய்ச்சி வேறு வேண்டுமா? (ஹி..ஹி..சும்மா ஒரு இதுக்குச் சொன்னேன். அவங்களிடம் சொல்லி விடாதீர்கள்!)
பதிலளிநீக்குநல்லதோர் ஆய்வறிக்கை. எங்கெல்லாம் தேடிப் படிக்கிறீர்கள்.
பதிலளிநீக்கு