ஞாயிறு, 24 ஏப்ரல், 2022

சில பகிர்வுகள்

 

திருமணம் ஒன்றுக்குச் சென்று வந்தேன். சாதாரணமகவே திருமண விருந்துகளுக்குச் சென்றால் என்னால் பசியாறச் சாப்பிட முடியாது. குறை என்னிடம்தான். நான் உண்பதில் வெகு நிதானம். பந்தியில் ஒரு முறை பரிமாறியதை நான் சுவைக்கத் துவங்கும் முன் அடுத்து பரிமாற வந்து விடுவார்கள். நான் சாம்பார் போட்டு உண்பதற்கு முன் பந்தி முடிந்து எல்லோரும் போகத் துவங்கி விடுவார்கள். நான் மாத்திரம் உட்கார்ந்து உண்டு கொண்டிருப்பது நான் விரும்பாதது மட்டுமல்ல. அநாகரிகமாகவும் தோன்றும். இது குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தபோது, இம்மாதிரியான விழாக்களில் விரயமாகும் உணவு குறித்தும் சிந்தனை சென்றது. நண்பன் ஒருவன் கூறிய செய்தியைப் பகிர்ந்து கொள்வது பலரது  சிந்தனைக்கு விருந்தாகலாம் !

நண்பனுக்கு ஜெர்மனியில் வேலை கிடைத்ததாம்..அதனைக் கொண்டாடும் முகமாக அங்கிருந்த இவருடைய நண்பர் “ ட்ரீட் “வேண்டி ஒரு ஓட்டலுக்கு அழைத்துச் சென்றாராம். இவரையும் சேர்த்து நான்கு நண்பர்கள் கூடியிருந்தனராம். அந்த ஓட்டலில் உணவுக்கு வந்திருந்தவர்கள் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்ததாம். அப்படி உண்பவர் மேசைகளிலும் குறைந்த அளவே தட்டுகள் இருந்ததாம். ஒரு வெகு சாதாரண ஓட்டலுக்கு வந்து விட்டோமோ என்னும் எண்ணம் அவர்களுக்கு எழுந்தது. எப்படி இருந்தால் என்ன.. நாம் நன்றாகச் சாப்பிட்டு அனுபவிப்போம் என்று இவர்கள் விதவிதமான உணவுப் பொருட்களும் அதிக அளவிலும் ஆர்டர் செய்தனர். முடிவில் ஆர்டர் செய்த பல பொருட்கள் உண்ணப் படாமலேயே விரயமாயிற்றாம். பார்ட்டி முடிந்து பில் வந்தபோது பில்லில் அபராதத் தொகை என்று ஒரு கணிசமான தொகையும் இட்டிருந்தார்களாம். அபராதம் எதற்கு என்று கேட்டபோது தேவைக்கு மீறி ஆர்டர் செய்து விரயமாக்கியதற்கு என்று பதில் வந்ததாம். “ எங்கள் பணம். நாங்கள் உண்போம் இல்லை வீணாக்குவோம், அதை நீங்கள் எப்படிக் கேட்கலாம் “என்று இவர்கள் கேட்டதற்கு அவர்கள் “பணம் உங்களுடையதாக இருக்கலாம். பொருட்கள் இங்கிருப்பவர்களின் மூலப் பொருட்களிலிருந்து (RESOURCES) “ வந்தவை. . அதை விரயம் செய்வது குற்றம் என்றனராம். நாம் விரயமாகும் எந்தப் பொருளைப் பற்றியாவது சிந்திக்கிறோமா.?
                           ---------------

இனி சில பறவைகள் பற்றிய தகவல்கள்.

ஹோமா என்னும் பறவையைப் பற்றி வேதத்தில் சொல்லி இருக்கிறதாம் .அது வானத்தில் வெகு உயரத்தில் வசிக்கிறது. பூமிக்கு அது ஒரு போதும் வருவதில்லை. வானத்திலேயே அது முட்டை இடுகிறது. அம்முட்டை நிலத்தை நோக்கி விழும் வேகத்தில் வெப்பம் பெற்றுக் குஞ்சு பொரித்து விடுகிறது. விழும் வேகத்தில் குஞ்சு கண் திறக்கிறது. சிறகு முளைக்கிறது. .பூமி க்கு வந்து விழுந்தால் அது சிதறடைந்து செத்துப் போகும். ஆனால் அதற்கு முன்பே அக்குஞ்சுக்கு தன் தாயுடன் இருக்க வேண்டிய யதாஸ்தானத்தின் ஞாபகம் வருகிறது. அக்கணமே அது மேல் நோக்கிப் பறந்து விடும்.

சாதகப் பறவைமழை நீரை மட்டும் அருந்தும். புண்ணிய நதிகள் அனைத்திலும் ஏராளமாக நீர்ப் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தாலும்பூமியில் படிந்த நீரை அப்பறவை அருந்தாது.

அசுணம் என்றொரு பறவை இருந்ததாம். அதன் செவிகள் நளினமான இதமான ஓசையே  கேட்குமாம். விகாரமான நாராசமான ஓசை கேட்டால் துடிதுடித்து இறந்து போகுமாம்.

பாலிலிருந்து நீரைப் பிரித்து எடுத்துக் குடிக்கும் சக்தி வாய்ந்த அன்னம் எனும் பறவை பற்றி அநேகமாக அனைவரும் கேள்விப் பட்டிருக்கலாம். 

                       ----------------------
இது ஒரு கேட்ட கதை .பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு முறை புத்த பகவான் தன் சீடர்களுடன் சென்று கொண்டிருந்தார். தாகமாயிருக்கவே சீடன் ஒருவனிடம் குடிக்க நீர் கொண்டு வருமாறு பணித்தார். அவன் அருகில் இருந்த குளத்துக்குச் சென்று நீரை எடுத்து வரப் போனான். அவன் குளத்தை அடையும் நேரம் அங்கே சிலர் துணிகளை துவைத்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு மாட்டு வண்டி குளத்தை கடந்து சென்றது. குளத்து நீர் கலங்கி சேறாய்த் தெரிந்தது. சீடன் திரும்பி வந்து நீர் குடிக்கத் தகுதி யில்லாமல் கலங்களாய் இருக்கிறது என்றான்.

ஒரு அரைமணி நேரம் கழிந்து புத்தர் அதே சீடனிடம் நீர் கொண்டு வரச் சொன்னார். இம்முறை குளத்து நீர் தெளிந்து இருக்கவே அவன் புத்தருக்கு நீர் கொண்டு வந்து கொடுத்தான்.

” நீர் தெளிய நீ என்ன செய்தாய். அதை அப்படியே இருக்க விட்டாய். அதுவும் தெளிந்தது. நம் மனமும் அது போல்தான். குழம்பிப் போயிருக்கும்போது அப்படியே விட்டு விட வேண்டும் அதை தெளிவிக்க எந்த முயற்சியும் தேவை இல்லை. தானாகத் தெளியும்.மன நிம்மதி பெற  எந்த முயற்சியும் தேவை
இல்லை. உள்ளம் அமைதியாய் இருந்தால் அது இருக்கும் சூழலையும் அமைதியாக்கும். 







13 கருத்துகள்:

  1. நீங்கள் இணைத்திருக்கும் படம் மறைந்த ஓவியர் இளையராஜாவினுடையது என்று நினைக்கிறேன்.

    உணவை விரயம் செய்வது என்பது அர்ரகண்ட் அட்டிடியூட். நான் 99 சதவிகிதம் உணவை விரயம் செய்வதில்லை. ரொம்ப வருடமாகவே கான்ஷியஸாக இருக்கிறேன்.

    ஜெர்மெனியின் முறை ஏற்கனவே படித்திருக்கிறேன். பறவைகள் பற்றிய செய்திகளும் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. iஇளைய ராஜா சரியேஎல்ல்ப்ப்ரும் உங்களை போல் இல்லையே

      நீக்கு
  2. சாதகம், அசுணம் ஆகிய பறவைகளின் படங்களையும் வெளியிட்டிருக்கலாமே!

    பதிலளிநீக்கு
  3. பறவைகள் பற்றிய செய்திகள் சுவாரஸ்யம். புத்தர் கதை படித்திருக்கிறேன். உணவு விரயம் நானும் விரும்பாதது, செய்யாதது.

    பதிலளிநீக்கு
  4. முதல் விவரம் ஜெர்மனி பற்றியது ஏற்கனவே அறிந்தது. அப்படி சார்ஜ் செய்தால்தான் யாரும் வீணக்கமாட்டார்கள். நம் வீட்டிலும் உணவை வீணக்குவதில்லை.

    பறவைகள் பற்றிய விஷயங்கள் சுவாரசியம்.

    புத்தர் கதை ஏற்கனவே வாசித்திருக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. அன்னப் பறவை தவிர மற்ற பறவைகள் பற்றித் தெரியாது. சுவாரசியம்.

    ஜெர்மனி பற்றிய தகவலும், புத்தர் கதையும் கூட இப்போதுதான் வாசிக்கிறேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  6. நல்ல தொகுப்பு. புராண பறவைகள் பற்றிய விவரம் சுவை.
    விரயம் செய்யும் உணவிற்கு அபராதம் போடும் ஹோட்டலின் செயல் பாராட்டப்படும் கூடியது. இப்போதெல்லாம் பல உணவகங்களில் மீதமாகும் உணவை பேக் பண்ணி வரச்சொன்னார் பேக் பண்ணி கொடுப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  7. பரவைகள்ற்றி புராணங்களில்உள்ளதா

    பதிலளிநீக்கு
  8. அசுணம் பறவை பற்றி தெரியாது மற்றையவை அறிந்திருக்கிறேன்..

    உணவு விரயம் எனக்கும் பிடிப்பதில்லை.

    பதிலளிநீக்கு