*************************
இப்போது நான் குறிப்பிடுவது என் பதினாறாம் பிராயத்து நிகழ்வுகள். என் தந்தை fistula எனும் நோயால் பாதிக்கப் பட்டு படுக்கையில் இருந்தார் என் தாயும், ஒரு வேலையாளும் நானும் என் தந்தையைக் கவனித்துக் கொள்ளும் முக்கிய நபர்கள். என் செவிலிப் பணியில் அவரது காயத்துக்கு மருந்திடுவதும் , வேளாவேளைக்கு மருந்து கொடுப்பதும் , வீட்டில் தயார் செய்யக் கூடிய மருந்துகளைத் தயார் செய்வதும் அடங்கும்.ஒவ்வொரு இரவும் அவரது கால்களைப் பிடித்து அமுக்கிக் கொடுப்பதும் வாடிக்கை. அவர் போதுமென்று சொன்னாலோ அவர் உறங்கினாலோ அல்லாமல் தொடர்ந்து செய்வேன். அதில் நான் தவறிய நினைவில்லை. அவருக்குச் செய்ய வேண்டிய சிசுருக்ஷைகளிலும் பள்ளிப் படிப்பிலும் என் நேரம் பங்கிடப் பட்டது.
இந்த காலகட்டத்தில் என் மனைவி கர்ப்பமாய் இருந்தாள்.-ஒரு கால கட்டம் இன்றைக்குத் திரும்பிப் பார்க்கும்போது நான் எப்படிக் கட்டுப்பாடு இல்லாமல் இருந்தேன் என்று தெரியப் படுத்துகிறது..ஒன்று நான் அப்போது இன்னும் மாணவன்தான். இரண்டு என் காமவேகம் என் படிப்பை விடவும் என் பெற்றோருக்கான கடமைகளை விடவும் ஆக்கிரமித்திருந்தது. ஒவ்வொரு இரவும் என் கைகள் தந்தையின் கால்களைப்பிடித்து விட்டுக் கொண்டிருக்கும்போது மனம் ம்ட்டும் படுக்கை அறையைச் சுற்றி வரும்.பொது அறிவும் மருத்துவ தேவையும் மத உபதேசங்களும் அந்த நேரத்தில் உடல் புணர்ச்சிகளில் ஈடுபடுவது தவறு என்று தெரியப் படுத்தியும் என் சேவை முடிவுற்றதும் நேரே படுக்கை அறைக்குள் நுழைவேன்.
இந்த இடைவெளியில் தந்தையார் நிலைமை சீர் குலையத் தொடங்கியது. ஆயுர்வேத மருத்துவர்களும் , ஹக்கீம்களும் பலவித சிகிச்சைகளை மேற்கொண்டனர். ஆங்கில அறுவைச் சிகிச்சை மருத்துவரும் பார்த்தனர். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்தபோது மருத்துவர் அவரது வயதைக் காரணங் காட்டி குறுக்கே நின்றார்,.அறுவைச் சிகிச்சை எண்ணம் கைவிடப் பட்டது. அந்த நேரத்தில் அறுவை சிகிச்சை செய்திருந்தால் அவர் குணமடைந்திருக்கக் கூடும் என்று தோன்றுகிறது.
இறப்பு என்பது உறுதியானபிறகு யார் என்ன செய்திருக்க முடியும்.
அவர் நாளுக்கு நாள் நலிந்து கொண்டு வந்தாலும் வைணவ முறையிலான சுத்தங்களைக் கடைப் பிடிப்பதில் குறியாய் இருந்தார். படுக்கையில் இருந்து எழுந்து வந்து அவர் கடன்களைச் செய்வதைப் பார்க்கும்போது ஆச்சரியமாய் இருக்கும்.என் தந்தையின் சகோதரர் அவரது நிலையைக் கேள்விப்பட்டு ராஜ்கோட்டிலிருந்து வந்திருந்தார்..நாள்முழுவதும் என் தந்தையின் அருகிலேயே அமர்ந்திர்ப்பார்.
அன்று இரவு பத்தரை பதினொன்று மணி இருக்கும். தந்தையின் கால்களைப் பிடித்து விட்டுக் கொண்டிருந்தேன். அப்பாவின் சகோதரர் என்னை விடுவித்தார். நான் நேராகப் படுக்கை அறைக்குள் நுழைந்தேன். என் மனைவி உறங்கிக் கொண்டிருந்தாள் . நான் அருகில் இருக்கும்போது அவள் எப்படித் தூங்க முடியும்? அவளை எழுப்பினேன். ஐந்தாறு நிமிடங்களில் கதவு தட்டப் பட்டது. பணியாள் நின்றிருந்தார். நான் பயத்துடன் பார்த்தேன். அப்பா உடல் நிலை மோசம் என்றார்.எனக்கு அது தெரிந்ததுதானே ”என்ன விஷயம் சீக்கிரம் சொல் “ என்றேன்.”அப்பா போய்விட்டார்” என்றான்
#######################
(காந்தியின் சுய சரிtதையிலிருந்து)
முழுவதும் படித்ததில்லை. இந்தப் பகுதி படித்திருக்கிறேன்!
பதிலளிநீக்குகாந்தி ப்ற்றி நிறைய நெகடிவ்அபிப்பிராயங்கள்யும் படித்திருக்கிறேன்
நீக்குஇதைப் படித்தபிறகு, சமீபத்தில் காந்தி இல்லத்துக்குச் சென்று வந்திருந்ததனால், எந்த அறையில் அப்பா படுத்திருப்பார், எது காந்தியின் அறை என்று குறுகலான மாடிப்படிகளை உடைய அந்த வீட்டைப் பற்றி நினைத்துப்பார்க்கிறேன்.
பதிலளிநீக்குநான்கந்தியின் இல்லம்கண்டதில்லை
நீக்குசத்திய சோதனை...!
பதிலளிநீக்குஎதையும் மறைக்காமல் சொல்வதற்கு தனி ஆற்றலே வேண்டும்...!
சரி குறளுக்கு வருவோம்... கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவுடைமை போன்ற அதிகாரங்களில் அறிவுப் பொருள் பற்றிப் பலப்படப் பாடிய தாத்தா, அறியாமையை குறிப்பிடுவது எங்கே என்றால் :-
அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு
அதிகாரம்:புணர்ச்சியின் மகிழ்தல்
வள்ளுவர்பற்றி எதிலும் கருத்து இருக்கும் டிடியிடம்
நீக்குகுற்றத்தை பொதுவெளியில் சொல்வதற்கு மனப்பக்குவம் வேண்டும் அது அவரிடம் இருந்து இருக்கிறது.
பதிலளிநீக்குகுற்ற்ம் என்று அவர் நினைத்ததாக தெரியைல்லை
நீக்குதன்னைப் பற்றி எழுதுவதிலும் தன் குறைகளை வெளியில் சொல்வது எளிதான காரியமல்ல.
பதிலளிநீக்குதுளசிதரன்
தன் குறைகள்பற்றிய எண்ண்ங்கள் அவரிட்ம் இருந்தது
நீக்குகொஞ்சம் கொஞ்சம் ஆங்காங்கே வாசித்திருக்கிறேன் இப்பகுதி உட்பட. இப்படிச் சொல்லியதுதான் அவரை உயர்த்தியது. உண்மையைச் சொல்வது என்பது மிகப் பெரிய சவால் அதுவும் புகழ்பெற்று இருந்தவர், உலகம் முழுவதும் அறியப்படும் ஒருவர்!
பதிலளிநீக்குகீதா
தவறு செய்யாமல் இருக்க் உதவலாம்
நீக்குமுதன்முதலில் சத்திய சோதனையில் இதனைப்படித்தபோது நான் வியப்பில் ஆழ்ந்தேன். மகாத்மா என்பதற்கு முற்றிலும் பொருத்தமானவர். இந்த வரிகளைப் படித்தபின் அவர்மீதான மரியாதை இன்னும் உயர்ந்தது.
பதிலளிநீக்கு