முருகா ....நீ அப்பாவியா.?
--------------------------------
ஈசானம், தத்புருஷம், வாமனம்,
அகோரம், சத்யோஜாதம், அதோமுகம்-எனும்
ஈசனின் ஆறுமுக நுதல் கண்களீன்
தீப்பொறிகளாய் வெளியான ஆறுமுகனே
எனை ஆளும் ஐயனே, உனைக் குறித்து
எனக்கொரு ஐயம் எழுகிறது.
அஞ்சு முகம் தோறும், ஆறுமுகம் காட்டி,
அஞ்சாதே என வேலுடன் அபயமளிப்பவனே,
கனி கொணர்ந்த நாரதன் ஈசனே ஞாலம் என ஓத
விரும்ப ,அது உணர்ந்த ஆனைமுகன், அம்மை
அப்பனை வலம் வந்து கனி கொண்டான்.
நீயோ மயிலேறி பூவுலகை வலம் வந்து ,
கனிகிட்டாக் கோபத்தில் மலையேறி நின்றனை.
பரமனுக்கே ப்ரணவப் பொருளுரைத்திய
தகப்பன்சாமி நீயென்ன அப்பாவியா.?
ஈசன் சக்தியல்லால் வேறெதாலும் அழிக்கமுடியாத
சூரன், ஆணவம் மிகக் கொண்டு இந்திராதி தேவர்களுடன்
ஈரேழு உலகையும் கட்டுக்குள் வைக்க, அவனை அடக்கி
தேவர்கள் விடுதலை பெற அத்தனின் சக்திகள் அத்தனையும்
பெற்று , அருள் அன்னையின் சக்தி வேலையும் பெற்று,
போரில் அண்டமும் ஆகாசமாய் ஆர்பரித்து மரமாய் நின்ற
சூரனைசக்திவேலால் இரு பிள வாக்கினை.. அழித்தவனை
சேவலாய் மயிலாய் ஆட்கொண்ட நீயென்ன அப்பாவியா.?
மாயை உபதேசம் கொண்டு ஈசனிடம் வரம் பெற்ற சூரனை
ஆட்கொண்ட சரவணா, பரிசிலாக இந்திரன் தன் மகள்
கரம் பிடித்துக் கொடுக்க, அதனை மனமுவந்து ஏற்ற நீ அப்பாவியா
இல்லை சரவணப் பொய்கையில் உன் கரம் பிடிக்கத் தவம்
செய்த அவள்தான் இவள் என்றுணர்ந்து மணந்த மணவாளா,
ஏதுமறியாப் அப்பாவியாக இருக்கும் என் நாவில் வந்தமர்ந்து
ஆட்டுவிக்கும் நீ நிச்சயமாக அப்பாவி அல்ல.
அல்ல, அல்ல... அவன் எப்போதும் பக்தர்களை ஆட்கொள்ளும் அருளாளன்.
பதிலளிநீக்குஅதிகம் பறக்காத் மயில் மெல் ஏறி ஞாலம் வரத்துணிந்தவனை கண்டு எழுதியது
நீக்குபுராணங்களில் சில நமக்கு நம்ப முடியாதவையாக இருக்கலாம் ஆனால் அதன் உள் அர்த்தம் வேறு இல்லையா? அப்படிப் பார்க்கும் போது கண்டிப்பாக அப்பாவி அல்லன் தான் அவன் நிறைய பாடங்களைக் கற்பிக்கும் குருவாகவும் கொள்ளலாம்தானே கந்த குரு என்றும் சொல்வ்துண்டே. அப்பாவி என்பதை விட குரு என்று?
பதிலளிநீக்குகீதா
படிக்கும்போது பொருள் புரிய வேண்டும்
பதிலளிநீக்குமுருகனையும் சுப்பிரமணியாக்கி "புரட்டு" கதைகளை நம்புவதே அப்-பாவிகள்...!
பதிலளிநீக்குமுருகா...!
மனிதர்களை விடக் கடவுளர்களிடம் அதிக நெருக்கம் காட்டுவதுபோல் தோன்றுகிறதே!
பதிலளிநீக்கு