வியாழன், 28 ஏப்ரல், 2022

ராவணனுக்கு எத்தனைதலைகள்

 

ராவணனுக்கு எத்தனை தலைகள் பத்துஎன்பது நாம்கேட்டறிந்தது ஒரு முறை சிதம்பரத்துக்கு  திருமஞ்சனத்துக்கு வந்திருந்தபோது இரவு உற்சவர்களை எல்லாம் வீதி உலா எடுத்துச் செல்வதைக் கண்டேன். அதில் ஒன்று .கைலாச பர்வதம் என்று சொன்னதாக நினைவு. அதில் ராவணன் கைலாயத்தை தூக்க இருப்பதுபோலவும் அதன் மேல் உற்சவரை வீதி உலா கொண்டு சென்றார்கள். ராவணனுக்கு ஒன்பது தலைகளே இருந்தது.. அப்போது அந்த நேரத்தில் சந்தேகம் கேட்கக் கூடாது என்று எண்ணி வாளாயிருந்து விட்டேன். இந்த முறை அது பற்றி எங்கள் தீட்சிதரைக் கேட்டேன். ஒரு வேளை நாந்தான் தவறுதலாக ஒன்பது தலைகள் என்று எண்ணினேனோ என்று கேட்டேன். அவர் ஒன்பது தலைகள் சரியே என்றும் ராவணனின் யாழை பத்தாவது தலையாகக் கருதுவது ஐதீகம் என்றும் சொன்னார்.

 

இது சரியா. ? யாராவது தெளிவிக்கலாமே

மறைந்த திருகந்தசாமி ஐயா ஒரு விளக்கம்தந்தார்
ராவணனுக்கு வேண்டிய வரங்கள் கொடுத்தது சிவபெருமான்தான். அதனால் ராவணனுக்கு கர்வம் தலைக்கேறி சிவனையே அசைத்துப் பார்க்கத் துணிந்தான். கைலாச பர்வதத்தைத் தன் இரு கைகளினால் தூக்க முயற்சிக்கு கைலாச பர்வதம் ஆடிற்று. பயந்து போன பார்வதி சிவனைக் கட்டிப்பிடித்துக்கொண்டாள்.

சிவன் தன் கால் பெருவிரலால் மலையை அழுத்த ராவணன் கைகளுடன் மலையின் அடியில் சிக்கிக்கொண்டான். சிவன் சாமகானப்பிரியன். ராவணன் கானவல்லுனன். தன் தலைகளில் ஒன்றைப் பிய்த்து தன் கை நரம்புகளைச் சேர்த்து ஒரு யாழ் செய்து அதனுடன் சேர்ந்து இசைக்க, சிவன் அந்த கானத்தில் மயங்கி தன் கால் பெருவிரலை சற்றே தளர்த்த கானத்தில் மயங்கி தன் கால் பெருவிரலை சற்றே தளர்த்த ராவணன் தப்பித்து ஓடி வந்து விட்டான்.

இந்தக்கதை மிகவும் பிரபலமானது.

 

ஒருஎண்ணம்பலவற்றுக்கு இட்டுச் செல்கிறது

கும்பகோணத்திலிருந்து முதலில், வைத்தீஸ்வரன் கோயில் தரிசனம் பூஜை, பிறகு அங்கிருந்து சிதம்பரம். இரண்டு கோயில்களிலும் அவரவர் நட்சத்திரத்தன்று மாதமொரு முறை பூஜை செய்த பிரசாதம் பெறுவது பல ஆண்டுகளாகத் தொடர்ந்தது. நாங்கள் வருவதை எங்களுக்காக பூஜை செய்யும் குருக்களுக்கு முன்பே தொலை பேசியில் தெரிவித்து விடுவோம். இந்த முறை உறவினர்கள் பலரும் அவர்களுக்காக பூஜை செய்து பிரசாதம் கொண்டு வரும்படிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். வைத்தீஸ்வரன் கோயிலில் உப்பு மிளகிடுவதும் நீரில் வெல்லம் கரைப்பதும் வேண்டுவார்கள். இப்போதெல்லாம் குளத்தில் வெல்லம் கரைக்க அனுமதிப்பதில்லை. அதற்கான இடத்தில் வைத்து விட வேண்டும். அன்னை தையல்நாயகி. குழந்தை முத்துக்குமாரசாமி, அங்காரகன் மற்றுமுள்ள தெய்வங்கள். நவகிரக தலத்தில் அங்காரகனுக்கான க்ஷேத்திரம் இது .


அங்கிருந்து சுமார் பதினோரு மணி அளவில் சிதம்பரம் சென்றோம். கோடையின் கடுமை கொஞ்சமும் குறைய வில்லை. சிதம்பரம்  தீட்சிதர் மாலை ஆறரை மணிக்கு மேல் கோயிலுக்கு வரச் சொன்னார். அதற்கு முன் சுற்று பிராகாரத்தில் கால் வைக்க முடியாத அளவு சூடு. மாலை ஐந்து மணிக்கு தில்லை காளி கோயிலுக்குச் சென்று தரிசனம் முடிந்து நிதானமாகக் கோயிலுக்குச் சென்றோம். ஒரு முறை கோயில் பிராகாரத்தை வலம் வந்தால் ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் நடந்திருப்போம். பிரம்மாண்டமான பெரிய கோயில். பரத நாட்டிய சாஸ்திரத்தில் கூறியுள்ள 108 கரண சிற்பங்கள் அங்கே நான்கு கோபுர வாசல்களிலும் காணலாம் கோயிலைப் பற்றி நான் அதிகம் கூறப் போவதில்லை. பலரும் எழுதி இருக்கிறார்கள் வலையில் நிறையவே எழுதப் பட்டிருக்கிறது. இருந்தாலும் ஒன்று விளங்க வில்லை, தெற்கு வாசல் வழியே உள்ளே நுழைந்தால் இடப் புறம் முக்குருணி வினாயகர். ஒரு பெரிய நந்தி சிலை. சிறைபட்டிருப்பதுபோல் காட்சி அளிக்கிறது. அத்ற்கு நேர் சற்று வலப்பக்கம் இருந்த ஒரு வழி  சுவரால் மூடப் பட்டிருக்கிறது. நந்தனார் கோயிலுக்குள் நுழைந்த வழி மூடப் பட்டுள்ளது என்று ஒரு சேதி. மற்றொரு விஷயம். கோயிலின் மதிலை ஒட்டி எல்லாப் பக்கங்களிலும் தூண்கள் நிரம்பிய இடம். ( எனக்கு அது குதிரை லாயத்தை நினைவு படுத்துகிறது. அந்த இடம் புழக்கத்தில் இல்லை. அதேபோல் அன்னை சிவகாம சுந்தரி ஆலயத்தை அடுத்த இடமும் உபயோகத்தில் இல்லாமல் தெரிகிறது. இதையெல்லாம் பராமரிக்காமல் இருப்பதன் காரணம் தெரியவில்லை. எங்கள் பூஜையைச் செய்து வரும் தீட்சிதருக்கும் சரியாகப் பதில் தெரியவில்லை. மேலும் மேலும் துருவிக் கேட்டால் அது விரும்பப் படாதது என்பதால் விட்டு விட்டேன். அங்கேயே சில காலம் தங்கி பலரையும் கேட்டு ஆராய்ந்தால் ஒரு சமயம் தெளிவு கிடைக்கலாம். வாதப் பிரதி வாதங்களுடனான பதிவுகள் வலையில் பல உள்ளன.ஆனால் இதைப் பற்றிய சேதி எனக்குக் கிடைக்கவில்லை.. குழந்தைகள் மணச்சட்டம் தில்லை வாழ் அந்தணர்களிடையே மீறுவதில்தான் இருக்கிறது என்று தோன்றுகிறது. அவர்களின் பெண் குழந்தைகளும் படிக்கத் துவங்கி விட்டார்கள். மணமானவருக்குத்தான் கருவறையில் பூஜை செய்யும் உரிமையும் , அதை ஒட்டிக் கிடைக்கும் சலுகைகளும் என்பதால் அவர்களுக்குள்ளேயே இளவயது மணம் சாதாரணமாகக் கருதப் படுகிறது. ஆனித் திரு மஞ்சன விழாவின் போது சின்னச் சின்னக் குழந்தைகள் திருமணமான
அடையாளமாக மடிசார் புடவை உடுத்தி உலவும் போது மனம் கனக்கத்தான் செய்கிறது. தில்லை வாழ் அந்தணர்கள் விடாப்பிடியாக சில கொள்கைகளை கடைப் பிடிக்கிறார்கள். கோயிலில் இல்லாதிருந்த உண்டிகள் இப்போது காணப் படுகின்றன. கோயில் மூலவரே உற்சவராக வீதி உலா வரும் வழக்கம் முதல் பல பூஜை முறைகளும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் வித்தியாசமாக உள்ளது. இந்து அற நிலையத்துக்கும்  தீட்சிதர்களுக்குமான வழக்கு நிலுவையில் இருக்கிறது. எல்லாம் நல்ல முறையில் முடிய அந்த ஆடல்வல்லானே அருள் புரியட்டும்.


13 கருத்துகள்:

  1. ராவணன் கதை சுவாரஸ்யம்.  ராவணனின் பத்து தலை பற்றி ப்ரபஞ்சனோ யாரோ சொல்லி இருந்ததை நானும் பகிர்ந்திருந்தேன்.  அது நினைவுக்கு வரவில்லை.

    பதிலளிநீக்கு
  2. சிதம்பரம் கோவிலுக்கு என்று தனி விதிகள் உள்ளன.  அதை அவர்கள் பின்பற்றுகிறார்கள்.  அவர்களுக்குள் புகுந்து நீ இதைச் செய்யக்கூடாது, உன் வழக்கத்தை மாற்றிக்கொள்ள என்று சொல்வது என்ன ஆசையோ...

    பதிலளிநீக்கு
  3. நல்ல பதிவு. அனைத்தையும் ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  4. சார் நான் கோயில் சென்றிருக்கிறேன். வைத்தீஸ்வரன் கோயில் சிதம்பரம் கோயில் எல்லாமே. ஆனால் சிதம்பரம் கோயில் பற்றிய விஷயங்கள் இப்போதுதான் அறிகிறேன். சார். அதனால் எனக்கு இதைப் பற்றிச் சொல்லத் தெரியவில்லை. இங்கு பால்யவிவாகம் பற்றி எல்லாம்.

    பால்யவிவாகம் என்பது வேறு இடங்களிலும் நடக்கிறதே சார். கர்நாடகாவின் வடக்குப் பகுதியில் அதாவது ராய்ச்சூர் பகுதிகளில் வடநாட்டில் எல்லாம் மிகவும் சகஜமாச்சே.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. நீங்கள் எழுதியிருப்பது போல மடிசார் கட்டிக்கொண்டு வரும் சிறு பெண்களைப் பார்க்கும் பொழுது மனம் கணக்கும்

    பதிலளிநீக்கு
  6. சிதம்பரம் கோவில் சென்றதில்லை. பால்ய விவாகம் தடுக்கப்பட வேண்டியதுதான் . சில சமூகங்களில் இவை நடந்து கொண்டுதான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு