திங்கள், 18 ஏப்ரல், 2022

வித்தி யாசமாய் முயற்சி

ஆரம்பகால  என்எழுத்தின்முயற்சிகள்வித்தியாசமானதாக இருந்தது

                          திருவெழுக்கூற்றிருக்கை...என் பாணியில்
                          ----------------------------------------------------------


திரு  திருவெழுக்கூற்றிருக்கை என்பது ரதபந்தனக் கவி எனப் படும் ஒன்று. கும் கும்பகோணம் அருள்மிகு சாரங்கபாணி கோயிலிலும், கும்பேஸ்வரர்கோ கோயிலிலும் இதுஎஎழுதி இருப்பது கண்டேன்
, .

எனக்எனக்குள் நானுமெழுதினால் என்னஎன்று  தோன்றியது. என் தமிழ் தேர்ச்சிபற்றி த்து எனக்கு உயர்வான எண்ணம் கிடையாது. இருந்தாலும் ஊர்க்குருவியாக வாவது பறக்பறக்க  முடியுமா என்றும் ஒரு ஆசை. கடைசியில் கான மயிலாடக் கண்ட வான்கோழி போல் நானும் ஆட முடிவெடுத்தேன். அந்த முயற்சியே இது.

முதமுதலில் திருவெழுக்கூற்றிருக்கை பற்றி சில குறிப்புகள்.

1 முஒன்று முதல்ல் 7 வரை படிப்படியாகக் கீழிருந்து மேல்,பின்பு மேலிருந்து கீழ் என அடுஅடுக்காகடுக்காக ஒரு தேர்த் தட்டுபோல் மேலே செல்வதும் கீழே செல்வதுமாக அமைஅமைந்திருக்கும் பாடல் பொதுவாக ஆண்டவனைப் போற்றி பாடுவதாகவே இருக்இருக்கிறது. வேறு விதமாகப் பாடக் கூடாதா என்று தெரியவில்லை.நான் முயமுயன்றிருக்கிறேன். இலக்கண விதிகள் குறித்த குறிப்புகள் தெரியவில்லை. ஆகவே இதுஅதுவும் என் பாணியில் அமைந்திருக்கிறது..

ஒவ்ஒவ்வொரு எண் அதிகமாகும்போதும் , மீண்டும் கீழிறங்கி , மேலே வந்து அடுத்த எண்எண்ணைக் கூட்டிச் செல்லும். 121, 12321, 1234321, 123454321, 12345654321, 1234567654321, என ஏழு வரைச் சென்றதும் இது தேரின் மேலடுக்கு போல் ஆகிறது. அதன் பின் ஒரு இடைதட்டு ,பீடம் பின்னர் மீண்டும் முன் சொன்ன வரிசையை அப்படியே திருப்பி தேரின் கீழ் அடுக்காக அமைத்து இறுதியில் தொடங்கிய அதே எண்ணிலேயே முடிவடையும் வகிவகைக்கு திருவெழுக்கூற்றிருக்கை எனப் பெயர். இந்த வகையில் திருஞானசம்பந்தரும் ,அருணகிரியாரும் , திருமங்கை ஆழ்வாரும் பாடி இருக்கிறார்கள்.

இனி இன்அடியேனின் பாடல்    
    ஒஒருவராய்ப் பிறந்து, ஈருடல் சங்கமித்து ஓருயிர் ஈன்றனை.

குல ஒன்று, சாதி இரண்டொழிய வேறில்லையென முக்காலமும் ஓதி, சக்தி சிவம் ஒன்ஒன்றென்றே சாற்றுகின்றீர்.

சொல் ஒன்றே,நன்றெனக் கூறி, எதிர்மறை இரண்டாய் இருத்தல் இயல்பென முத்தமிழிலும் நாற்றிசை ஒலிக்க மும்முறை சொல்லும் இருகுணம் கொண்ட ஒருவனும் நீயோ.

குருதி நிறம் ஒன்று,பிறப்பிறப்பு இரண்டும் உண்டு எனப் படைப்பின் முத்தொழில் புரிவோர் நானிலத்தில் ஐம்புலன்களில் நால்வகை வர்ணங்கள் மூவுலகில் எங்கேனும் இரண்டில் ஒன்றாய்ப் படைத்தனரா.

ஓருயிர் பெற்று, இரு பிறப்பெடுத்து, முத்தீ வளர்த்து,நான்மறை பயின்று, ஐவகை வேள்வி மூட்டி, அறுதொழில் செய்து ஐம்புலன் செறுத்து, நான்குடனடக்கி, முக்குணத்தில் இரண்டை அகற்றி ஒன்றுடன் ஒன்றுவோர் இன்றும் உண்டோ.

ஒன்று இரண்டாகி மூன்றுக்கு வழி வகுக்கும் இந்நானிலத்தில் ஐம்புலம் ஆளும் அருகதை ஆறறிவு படைத்த அனைவருக்கும் பொதுவன்றோ. ஏழு ஸ்வரங்களில் பேதம் கொணர்வது இகவாழ்வில் சரியோ. அறுசுவையுடன் அவலச் சுவையும் வேண்டுமோ.. வாய்ப்பென்று வரும்போது கையின் ஐ விரலும் சமம் என்றே உணராது வர்ணபேதம் முக்காலமும் மேடு பள்ளமென இரண்டுக்கும் காரணம் என்ற ஒன்றாவது சரியோ.

எண்எண் ணும் எழுத்தும் கண்ணெனத்தகும் ...என்றோ ஓதியது.எண்ணத்தில் ஓடியது. எண்ஆஆனால் எழுத்தால் இறை புகழ் பாட என்னால் இயலவில்லை. கண்முன்னே விரியும் அவலங்கள் அவனும் அறிவான்தானே.சம நீதி கிடைக்க இன்னும் அவன் அவதரிக்காதது என்ன நீதி.?


சக மனிதனிடம் கேள்வி கேட்பது போல் எழுத முயன்றிருக்கிறேன். சில அரும்பதங்கள்  பொருள் கூற வேண்டும் எனத் தோன்றியது . அவை.

முத்தீ = கார்ஹபத்தியம் , ஆஹவநீயம் ,தக்ஷிணாக்கினி போன்ற மூன்று வகை அக்னிகள்.
இரு பிறப்பு = முப்புரி நூல் இடுவதற்கு முன்னும் பின்னுமானது.
நான்மறை  = ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள்.
ஐவகை வேள்வி = தேவ யக்ஞம், பித்ருயக்ஞம், பூத யக்ஞம், மனுஷ்ய யக்ஞம், ப்ரஹ்ம்மயக்ஞம்
அறுதொழில், = யஜனம் ( யாகம் இயற்றுதல் ), யாஜுகம் ( மற்றவர்களை யாகம் செய்வித்தல் ) அத்யயனம் ( வேதம் ஓதுதல் ), அத்யாபக்ஞம் ( மற்றவர்களை வேதம் ஓதுவித்தல் ) தானம் ( மற்றவர்களுக்கு அளித்தல் )ப்ரதிக்ரஹம் ( மற்றவர்களிடமிருந்து பெறுதல்)
ஐம்புலன் செறுத்து = கண் முதலான ஐந்து புலன்களையும் அவற்றின் விஷயங்களில் செலுத்தாமல் நிறுத்தி
நான்குடனடக்கி = மனம் ,புத்தி, சித்தம் அஹங்காரம் ஆகிய நான்கையும் அடக்கி,
                 அல்லது ஆகாரம் , உறக்கம் ,பயம் உடலுறவு ஆகியவற்றை அடக்கி                    என்றும் கொள்ளலாம்
முக்குணத்தில் இரண்டை அகற்றி, = ரஜஸ் மற்றும் தாமஸ குணங்களை அகற்றி
ஒன்றுடன் ஒன்றுவோர் = மீதமுள்ள ஒன்றான ஸத்வ குணத்தில் நிலை நின்று.நான் இதுபறியாரிடம் கற்றெனோ அவர்துபின்னூட்டம்                                                                                                     
சீரியநல்லதொரு முயற்சி! முடிந்தவரையில் நன்றாகவே செய்செய்திருக்கின்றீர்கள், ஐயா!

முதமுதல் வரியில் மட்டும் இன்னும் சற்று கவனம் தேவை என எண்எண்ணுகிறேன்.

1 முஒன்று முதல் 7 வரை படிப்படியாகக் கீழிருந்து மேல், பின்பு மேலிருந்து கீழ் என அடுக்கடுக்காக ஒரு தேர்த்தட்டு போல மேலே செல்வதும், கீழே செல்இற்ங்குவதுமாக அமைந்த இந்தப் பாடல் சுவாமிமலை குருநாதனைப் போபற்றிப் பாடும் அற்புதப் பாடல்.
ஒவ்ஒவ்வொரு எண் அதிகமாகும் போதும், மீண்டும் கீழிறங்கி, மேலேவந்து அடுஅந்த எண்ணைக் கூட்டிச் செல்லும்.

1, 121, 12321, 1234321, 123454321, 12345654321, 1234567654321
என 7 வரை சென்றதும் இது ஒரு தேரின் மேலடுக்கு போல் ஆகிறது.
அதஅதன்பின், இறைவனை அமரச் செய்ய ஒரு இடைத் தட்டு, பீடம்!
பின்பின்னர் மீண்டும் முன் சொன்ன வரிசையை அப்படியே திருப்பி தேரின் கீழ் அடுக்காக அமைத்து, இறுதியில் தொடங்கிய அதே 1 என்னும் எண்ணிலேயே முடிவடையும் வகைக்கு திரு எழு கூற்று இருக்கை எனப் பெயபெயர்.

ஒன்ஒன்று என முதலில் தொடங்கியபின், மீண்டும் ஒன்று, இரண்டு, ஒன்று என வந்திருக்க வேண்டும். அதாவது ,..

ஒருஒருவராய்ப் பிறந்து, ஈருடல் சங்கமித்து ஓருயிர் ஈன்றனை. என்னும் வரியில்,

ஒருஒருவராய்ப் பிறந்து ஒருவரை மணந்து ஈருடல் சங்கமித்து ஓருயிர் ஈன்றனை என வந்திருந்தால் இன்னும் சிறக்கும்.

இஇஇதையொட்டி, மற்ற வரிகளையும் கவனியுங்கள். அடுத்த முயற்சி இன்இன்னும் சிறப்பாக அமையும்.

அஅஅதேபோல, ஒருசில வார்த்தைகளிலேயே ஒரு எண்ணுக்கான பொபொருளை விவரிக்க முயன்றால், இன்னும் அழகு கூடும்.
வாஆவாழ்த்துகள்.

 





 





               


 

12 கருத்துகள்:

  1. மிக அருமையான முயற்சி... (திருமங்கையாழ்வாரின் பாசுர வார்த்தைகளும் வந்திருக்கின்றன)

    பதிலளிநீக்கு
  2. மிகவும் வித்தியாசமான முயற்சி சார். வரிகள் நன்று.

    ஆனால் எனக்கு இது எங்கு 7 ல் முடிகிறது மீண்டும் கீழே இறங்குகிறது என்பது புரியவில்லை சார். வரிகளாகத்தான் தெரிகிறது. தேர் போன்று என்பது எப்படி என்றுவிளங்கவில்லை

    கீதா

    பதிலளிநீக்கு
  3. ஓ ஒவ்வொரு வரியிலும் வருகிறாது இல்லையா...மீண்டும் வாசித்த போது புரிகிறது.

    ஒன்று என்று தொடங்கி முதலில் இரண்டு அதன்பின்....முக்குணம்...நாற்றிசை ஐவகை வேள்வி, ஆறு தொழில், ஏழு ஸ்வரங்கள் ....என்று வந்து அடுத்து அறுசுவை, ஐவிரல், முக்காலம், ...புரிந்தது சார்.

    விளக்கங்களுடன் வாசிக்க, புரிகிறது சார். நன்றாக இருக்கிறது. உங்கள் கற்றலுக்கும் முயற்சிக்கும் பாராட்டுகள். எனக்கு இதெல்லாம் எட்டாக்கனி!

    கீதா

    பதிலளிநீக்கு
  4. திருவெழுக்கூற்றிருக்கை என்பது ரதபந்தனக் கவி எனப் படும் ஒன்று.//

    இது பற்றிய விவரங்கள் எல்லாம் இப்போதுதான் தெரிந்துகொள்கிறேன் சார். இதன் அடிப்படையின் நீங்கள் கற்றுக் கொண்டு எழுத முயற்சி செய்திருப்பது மிக மிக அருமை. என் அறிவில், இதை முயற்சி என்று கூடச் சொல்லமாட்டேன். மிகத் திறமையாக எழுதியிருக்கிறீர்கள் என்பேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு