Wednesday, May 16, 2012

வாசமில்லா மலரிது...


                                               வாசமில்லா மலரிது...
                                              -------------------------------


முன்பொரு நாள் வெட்டிப் பின் நட்ட
மல்லி, முல்லை, வெள்ளை ரோஜா செடிகள்.
பூக்காதது கண்டு, செடிகளிலும் மலடு உண்டா
என்றே நான் அங்கலாய்த் திருந்தேன்.
ஒரே ஒரு செந்நிற ரோஜா பூத்தது
கண்டு பூரித்தது மனம்.

வீட்டில் இருப்பதோ சொற்ப இட்ம்
தோட்டம் என்றெல்லாம் சொல்ல முடியாது.
அரளி செம்பருத்தியுடன் பெயர் தெரியாச்
செடிகளும் உண்டு.பூக்கும் ஓரிரு பூக்களும்
கொள்ளை போகின்றன. பூப்பதே என்னைப் பறி
என்பதற்காகவா.? பூப்பறித்து செடி அழுவதைவிட
பூக்காமல் இருப்பதே நலம் என்றொரு
பின்னூட்டம் இருந்ததாக நினைவு.
பன்னிரு ஆண்டுகளுக்கொரு முறை பூக்குமாம்
குறிஞ்சி மலர்.செடிவைத்து பூ பூத்துக் கண்டதில்லை.
ஆனால் நான் நடாமலேயே எனக்கேத் தெரியாமல்
ஒரு செடி பூக்கிறது;வருடம் ஒரு முறை; ஒரே ஒரு பூ.!
ஆண்டு முழுதும் செடியே காணாது;
ஏப்ரல் முடிவில் செடி துளிர் காட்டும்.
வளரும் வேகம் நினைப்பில் அடங்காது.
மே மாதம் ஒரு பூ பூக்கும், இரு வாரம் தங்கும்
பின் வாடிச் சுருங்கி விடும்.
யார் சொல்லிக் காலம் அறியும் அச்செடி.?
யார் சொல்லி ஒரே பூ பூக்கும் அச்செடி?
காணக் கொள்ளை அழகு.மே மாதம் பூப்பதால்
மே மலரே என்றழைக்கட்டுமா.?


மதில் ஓரம் வாழை இலையின் தங்கை போல்
சிறு இறகிட்டு வளரும் ஒரு செடிக் கூட்டம்.
பூவின் லட்சணம் இதுதான் என்று யாரால் கூற இயலும்.?
வாசமில்லா மலரது, வெட்ட வெட்ட துளிர் விட்டு
வளர்ந்து பூக்கும் இதன் பெயரும் எனக்குத் தெரிய வில்லை.

அதிகாலை நான்கு மணிக்கு மலரும் பூ ஒன்று கண்டேன்.
பகலில் வாடி நிற்கும் அது விடியலில் நிமிர்ந்து நிற்கும்.
விசாரித்தறிந்தேன் , அதன் பெயர் பிரம்ம கமலமாம். !

பூவையருள் ஒரு தோழி சசிகலா,பூ பற்றி பதிவு எழுதி
இருந்தார்,படங்களுடன் பார்ப்பதற்கும் இனிதாக.
அதில் இல்லாப் பூக்கள் என் பதிவில்.
படம் கண்டு பெயர் சொன்னால் கூடுதலாய்
ஒரு தகவல் அறிந்தவன் ஆவேன். 
----------------------------------------
( மே மலரின் முதல் படம் நன்கு விரிவதற்கு முன் எடுத்தது.) 


7 comments:

 1. மைலாப்பூரில் த்வாரகா காலனியில் 82 - முதல் 90 ஒரு வீட்டில் குடியிருந்தேன் ; தாங்கள் விவரித்திருக்கும் படியே , மற்ற பொழுதில் ஒரு அறிகுறியும் காட்டாமல் , வருடாவருடம் ,
  மே - ஜூன், வாக்கில் சுமார் ஒருவாரம் மட்டும் ஒவ்வொரு பூவை மட்டும் தரித்துக்கொண்டு
  இரண்டு செடிகள், நம்மைக்குதூகலத்தில் ஆழ்த்தி விட்டு, வந்த சுவடு தெரியாமல் மறைந்து
  விடும் .. அந்த வீட்டுக்குரியவர் இந்தப் பூவை " thunder lily " என்று கூறுவார்...தங்கள் பதிவினை
  படித்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன் ...
  மாலி.

  ReplyDelete
 2. மே மாதம் ஒரு பூ பூக்கும், இரு வாரம் தங்கும்
  பின் வாடிச் சுருங்கி விடும்.

  நாங்கள் மூணாறு சுற்றௌலா சென்ற் போது ஒரு வீட்டில் இந்தமலர்களைப்பார்த்து வியந்து நின்றோம்..

  அவர்கள் இது வருடம் ஒருமுறையே பூக்கும்.. மின்னல் மின்னி இடி இடிக்கும்போது மலரும் ..தண்டர் பிளவர்..இடி மலர்..
  வேண்டுமானால் பறித்துக்கொள்ளுங்கள் என்று எங்களின் ஆச்சரியப் பார்வைக்கு அனுமதி வழங்கினார்கள்..

  மற்க்கமுடியாத பூ ...

  ReplyDelete
 3. @ டாக்டர் கந்தசாமி,
  @ இராஜராஜேஸ்வரி,
  @ வி. மாலி
  கருத்துப் பகிர்வுக்கு நன்றி. இராஜராஜேஸ்வரி அம்மாவுக்கு, நான்
  குறிப்பிட்டிருக்கும் இந்தப் பூவுக்கு இடி
  ஏதும் தேவையில்லை.மே மாதம்
  தவறாமல் பூக்கிறது. உங்களுக்கு யாரோ இந்தப் பூவைப் பறித்துக் கொள்ள அனுமதி கொடுத்தது பற்றி முன்பே ஒரு முறை எழுதி இருந்ததாக நினைவு, சரியா.? திரு மாலி அவ்வப்போது வந்து மகிழ்விக்கிறீர்கள். நன்றி.

  ReplyDelete
 4. எந்தப் பூவாக இருந்தாலும் அழகாகவே இருக்கிறது.

  ReplyDelete
 5. பூக்காதா என்று தவமிருக்கச் செய்யும் செடிகளுக்கு மத்தியில் தாமாய்ப் பூத்து மகிழ்விக்கும் செடிகள் வியப்புதான். தாங்கள் வெளியிட்டிருக்கும் புகைப்படங்களைக் கொண்டு இந்தியமலர்கள் இணையதளத்தில் தேடியபோது அவை பற்றிக் கிடைத்த தகவல்களைக் கீழே பகிர்கிறேன்.

  முதல் பூவின் பெயர் : Blood lily or Football lily.

  Common name: Blood Lily, Football Lily, Powderpuff Lily
  Botanical name: Scadoxus

  Blood lily is a beautiful flowering bulb from tropical Africa. The spectacular flowerhead is a huge spherical umbel consisting of up to 100 flowers, held clear of the foliage at the end of a solitary stem. Each plant will produce only one flowerhead in a season. Blood lily is a bulbous plant with leaves on short, speckled stalks. The flower stalk bears a rounded inflorescence, 8-12 cm across. The plant may live for many years and will flower annually indoors. During the growing season the plant needs bright light, if possible direct sunshine for two hours daily. During winter dormancy, light is unimportant but temperature should not drop below 13 degrees centigrade.

  இரண்டாவது பூ: Lobster claw, Hanging heliconia
  Botanical name: Heliconia rostrata

  Of all the Heliconias around you will probably be most familiar with this one. Heliconia rostrata is one of the most recognized and widely grown species, but that doesn't take away from the fact that it is still considered one of the most beautiful. Heliconia rostrata has a pendent inflorescence, the bracts are red with greenish yellow edges. Each bract resembles a lobster's claw, hence the common name.. The mature plant normally starts to flower in the summer. The flowers last a long time and make an excellent cut flower. It is an easy grower in tropical areas but some room is required because the stalks can reach 7 feet in height.

  தகவல் பெற்ற தளம்: http://www.flowersofindia.net/

  ReplyDelete
 6. ப்ளட் லில்லி, லாப்ஸ்டர் க்ளாஸ்.மிக்க நன்றி கீத மஞ்சரி. இதுதான் வித்தியாசம்.இந்த தலைமுறை உங்களுக்கும், சென்ற தலைமுறை எங்களுக்கும். தெடிப் பிடித்து பதில் சொன்னதற்கு மீண்டும் நன்றி.

  அப்பாதுரை ரசனைக்கு நன்றி.

  ReplyDelete