கடின உழைப்பிற்கு மாற்றில்லை...
-----------------------------------------
அவன்
வேலை தேடி மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சென்றான்.அவனை ஆஃபீஸ் பாய் வேலைக்காக சோதித்த
மனிதவள மேலாளர், அவனை அந்த அறையைச் சுத்தம் செய்யச் சொன்னார். அவன் அவருக்குத்
திருப்தியாகச் செய்து முடிக்கவே வேலையில் சேர்த்துக் கொள்வதாகக் கூறி நியமன ஆர்டர்
அனுப்ப அவனது ஈ-மெயில் முகவரி கேட்டார். அவன் தன்னிடம் கணினி இல்லையென்றும் மின்
அஞ்சல் முகவரி இல்லையென்றும் கூறினான்..மின் அஞ்சல் முகவரி இல்லாதவன் இருப்பவனே
அல்ல என்று கூறி அவனுக்கு வேலை இல்லை என்று கூறிவிட்டார்.
அவன்
கையில் இருந்ததோ வெறும் பத்து டாலர். யோசித்துக் கொண்டே சென்றவன் சூப்பர்
மார்க்கெட் போய் ஒரு பெரிய கூடைத் தக்காளி வாங்கினான். அதை வீடு விடாகச்
சென்று இரண்டு மணி நேரத்தில் விற்று முடித்து கையிருப்பைப் பார்த்தபோது அது
இரட்டிப்பாகி இருந்தது கண்டான். மறுமுறையும் சென்று இன்னுமிரு கூடைத் தக்காளி
வாங்கி இன்னும் பல வீடுகளுக்கும் சென்று விற்றான்.கையிருப்பு மும்மடங்காகி
இருந்தது. மறு நாளும் அதற்கு பின் வந்த நாட்களிலும் அதிகாலை சென்று பின் மாலை வரை
தக்காளி வியாபாரம் செய்தான். வெகு சீக்கிரத்தில் ஒரு வண்டியும் , பின் ஒரு வானும்
வாங்கி தக்காளி வாங்கி டெலிவரி செய்தான். ஐந்து வருட காலத்தில் அவன் உழைப்பின்
பலனாக நிறைய டெலிவரி வான்கள் வாங்கி , வியாபாரத்தின் மூலம் கணிசமாக
சம்பாதித்திருந்தான்
அவன்
சம்பாத்தியத்துக்கு காப்பீடு செய்ய வேண்டி ,ஒரு இன்சூரன்ஸ் ப்ரோக்கரை
அணுகினான்..அந்த ஏஜெண்ட் பதிவுப் பத்திரங்களை அனுப்ப அவனது மின் அஞ்சல் முகவரி
கேட்டான்.அவன் தனக்கு மின் அஞ்சல் முகவரி இல்லை என்றான். இதைக் கேட்டதும் அந்த
ஏஜெண்ட் மின் அஞ்சல் முகவரி இல்லாமலேயே இவ்வளவு பணம் சேர்க்க முடிந்ததென்றால் மின் அஞ்சல் இருந்திருந்தால் என்னவாகி
இருக்கும் என்று ஆச்சரியத்தோடு வினாவினான்.
அவன்
சற்று நேரம் சிந்தித்து “ மின் அஞ்சல் முகவரி இருந்திருந்தால் நான் மைக்ரோசாஃப்ட்
நிறுவனத்தில் ஆஃபீஸ் பாயாக இருந்திருப்பேன் “ என்று கூறினான்.
(
எனக்கு மின் அஞ்சலில் வந்திருந்த கதையை தமிழ் படுத்தி பதிவிட்டிருக்கிறேன். THERE IS NO
SUBSTITUTE FOR HARD WORK ! )
------------------------------------------------------- .
இது ஒரு பழைய சர்ச் சேவகரின் பிரபல கதையைத் தழுவி எழுதியது.
பதிலளிநீக்குமுன்பே படித்திருந்தாலும் , சுவையாக இருந்தது. மீண்டும் படிக்க
பதிலளிநீக்குஉறுதியான உழைப்பின் திறன் சொல்லும்
பதிலளிநீக்குஅருமையான கதை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
உழைப்பின் மேன்மையை கூறும் அருமையான கதை.
பதிலளிநீக்குமுயன்றால் முடியாததும் உண்டா!