திங்கள், 28 மே, 2012

மீண்டும் பெண்கள்......!


                                              மீண்டும் பெண்கள்.......!
                                             -------------------------------



பெண்கள் குறித்து பதிவுகள் பல எழுதி இருந்தாலும், முழுவதுமாகப் புரிந்து கொள்ள முடியாத புதிராகத்தான் தெரிகிறார்கள்.நிறைய எழுதியும் எனக்கே அவர்கள் மேல் ஒரு BIASED எண்ணம் வந்துவிடுகிறதோ என்று சந்தேகம் வருகிறது. இருந்தாலும் ஒன்று மட்டும் கூறிக் கொள்ள விரும்புகிறேன். எனக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை. மனதில் படுவதை எழுத்தில் வடிக்கிறேன். உண்மை சுட்டால் நான் என்ன செய்வது.?


 அழுகை என்பது ஒரு இழப்பின் வெளிப்பாடு;
கண்ணீர் என்பது உணர்ச்சிகளின் வெளிப்பாடு.,
ஆனந்தத்திலும் வரலாம், துக்கத்திலும் வரலாம்.
எந்த நேரத்திலும் எப்படியாகிலும் பிரவாகிக்கும்
பிரயோகப்படுத்தப்படும் கண்ணீரின் பொருள்
தெரியாது அல்லல்படும் ஆண்களே பாவப்பட்டவர்கள்.

பெண்களின் கண்ணீருடன் கம்பலையும் சேரும்போது,
ஆண்களுக்குப் போக்கிடம் ஏதுமில்லை.
அறிந்து கொள்ளுங்கள் ,பொதுவாகப் புரிந்து கொள்ளப்
படுவதெல்லாம் உண்மைக்குப் புறம்பானது..
திருமண பந்தத்தில் ஆண் இழப்பது அப்பட்ட சுதந்திரம்..
மீறி நிலை நிறுத்த முயன்றால் முன் வருவது
பெண்களின் கண்ணீர்ப் பிரளயம்.. அதற்காகப்
போக்கிடம் ஏதுமின்றி டாஸ்மாக்கில் தண்ணீரில் மிதக்க வேண்டாம்.
ஆண்களே குனிந்து சென்று விடுங்கள்..வழ்வில்
தேவை நிம்மதி.- சுதந்திரம்,ஆண்மை எல்லாம்
அப்பட்டப் பொய்.. பெண்ணடிமைத்தனம்,ஆணாதிக்கம்
எல்லாம் கானல் தோற்றமே;கருத்துப் பிழையும்
காட்சிப் பிழையுமே..உண்மையில் ஆணே அடிமை
அறியாமல் பெண்ணே ஆதிக்கம் செலுத்துகிறாள்.

ஆணின் சுதந்திரம் திருமணம் வரையில்-அதன்பின்
அவனது பலவீனம் பெண்ணின் பலமாக மாறும்.
கன்னியவள் கண்ணசைவிலே விண்ணையும் சாடுவான்.
அதுவே இன்பம் இன்பம் என்று மாய்ந்து மருளுவான்.
அது தவறு என்று உணரும்பொது காலம் கடந்து விடுகிறது.

உடல் வேட்கை இருபாலருக்கும் பொது.
ஆணுக்கு அது பெரிய பலவீனம்;-ஆனால்
பெண்ணுக்கோ அதுவே பெரும்பலம்.
ஆணின் ஆளுமை எல்லாம் ஆதவன் இருக்கும் வரை;
இரவு துவங்க இருவரும் இணைய இன்பம் பொதுவென்றாலும்
பெண்ணுக்கு அது ஆயுதப் பிரயோகம் செய்யும் நேரம்.
தற்காலப் பெண்களுக்கு கூடுதல் ஆயுதம் அவர்கள்
படிப்பும் பொருளீட்டும் திறனும். அழகென்பது
இன்னுமொரு ஆயுதம். மணவினைச் சிறையில்
எப்போதாவது ஆணுக்குக் கிடைக்கலாம் “ பரோல்.
                                 :      .               .                                  .                                    
            



6 கருத்துகள்:

  1. நீங்கள் சொல்வது ஒரு பார்வை. இருந்தாலும் கண்ணீருக்கு ஆறுதலாக இருப்பதிலும், உடல் வேட்கையில் பெண்ணின் பலத்தை ஆமோதிப்பதிலும்,அவர் தம் கண்ணசைவில் செயர்கரிய செயல் புரிவதிலும் தான் ஆண்மை வெளிப்படுகிறது. நண்பர்களின் பலத்தைப் பார்த்து ஆச்சரியப்படலாம். அச்சப்படக்கூடாது.நட்பில் ஆதிக்கம் என்பது கணத்திற்கு கணம் இடம் மாறுவது. பெண்களுடன், ஆண்களிடம் பழகுவது போல் பழகக் கூடாது.

    தற்காலப் பெண்களின் கூடுதல் அழகு அவர்களின் படிப்பும் பொருளீட்டும் திறனும்.

    பதிலளிநீக்கு
  2. ம்ம் கொஞ்சம் உண்மை சுடுகிறது :) இந்த ஆதிக்கம்லாம் நம்ம ஊரில் தான் .. வெளிநாட்டில் ஆணும் பெண்ணும் சமம் பெண் பின்னால்(பின்னாள் ) வரப்போவதை ஆராய்ந்து சிந்தித்து அதற்கேற்ப நடத்துவாள் ..நம் நாட்டில் அதனால்தான் இந்த சிறை போன்ற மாயத்தோற்றம் இருக்கும்போல
    இதை வாசிக்கும்போது நேற்று ஒரு சம்பவம் ..நேற்று பெண் ஆயர் எங்கள் ஆலயத்துக்கு வந்திருந்தார் ..மதர்ஸ்ட்டே பற்றி பேச்சு வந்தது அவர் சொன்னார் என் கணவர்தான் முழுநேரமும் பிள்ளைகளை கவனிக்கிறார் (மூன்று பெண்கள் ,அதில் இரண்டு டீனேஜ் ஒன்றி 7 வயது ) அதனால் அவருக்குத்தான் மதர்ஸ் டேக்கான எல்லா புகழும் பரிசும் கிடைக்கணும் என்றார் .இதே நம்ம ஊரில் சாத்தியமா .உடனே சட்டி பானை கழுவுறார்ரன்னு சொல்லிடுவாங்க சக ஆண்களே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு நான் கண்டுணர்வதைத்தானே எழுத முடியும் உண்மை சுடுகிறது என்று ஒப்புக் கொள்ளும் உங்களுக்குப் பாராட்டுகள்

      நீக்கு
  3. ஆஹா நான் அங்கு எழுதியதில் பாதியை இங்கே காண்கிறேன்... என் மன நினைவைப் போலவே சொல்லியிருக்கிறீங்க.

    //எந்த நேரத்திலும் எப்படியாகிலும் பிரவாகிக்கும்
    பிரயோகப்படுத்தப்படும் கண்ணீரின் பொருள்
    தெரியாது அல்லல்படும் ஆண்களே பாவப்பட்டவர்கள்.///

    இதிலுள்ள மிகப்பெரிய சோகம் என்னவெனில், நம் பெண்கள் தேவைக்காக அழுது சாதிப்பதால், உண்மையாக மனம் நொந்து ஒரு பெண் அழுவதைக்கூட, நடிப்பு என ஈசியாக்கி விடுகின்றனர்.

    ஆனா சில வீடுகளில் பெண்கள் நடிப்பதற்கு ஆண்களும் காரணமாகி விடுகின்றனர்... அதாவது கூட்டுக் குடும்பமாக வாழும்போது, ஆண்கள் தம் பெற்றோருக்குப் பயந்து பல விசயங்களில் கண்ணை மூடி நடக்கும்போது, அங்கிருக்கும் பெண்கள் நடித்து, அழுதே பல ேலைகளைச் சாதிக்கின்றனரோ என எண்ணத் தோணுது.

    பதிலளிநீக்கு
  4. ///ஆணின் சுதந்திரம் திருமணம் வரையில்-அதன்பின்
    அவனது பலவீனம் பெண்ணின் பலமாக மாறும்.///

    இதை.. இதைத்தான் சொன்னேன் என் பக்கத்தில்... சில பெண்கள் ஓவர் சுகந்திரம் கிடைத்தால், தலைக்கனம் அதிகமாகி, கணவனைக் கூட மதிப்பதில்லை என.

    இதில் ஆணின் பலவீனம் என்பதைவிட, ஆண் தன்னை முழுவதும் மனைவியிடம் ஒப்படைக்கிறார்.. அது நல்ல விசயம்தானே... ஆனா அதை சில பெண்கள் மிஸ் யூஸ் பண்ணி விடுவதனாலேயே.. ஆணின் சுகந்திரம் பறிபோய்விட்டதுபோல பீலிங் வருகுது.

    நமக்கு கணவர் எவ்வளவு சுகந்திரமும், விட்டுக்கொடுப்பும் பண்ணுகிறாரோ.. அதை இருமடங்காக நாம் அவருக்கு திருப்பிக் கொடுத்தால்தான் அக்குடும்பம் ஜொலிக்கும்...

    பதிலளிநீக்கு
  5. ///பெண்ணுக்கு அது ஆயுதப் பிரயோகம் செய்யும் நேரம்.
    தற்காலப் பெண்களுக்கு கூடுதல் ஆயுதம் அவர்கள்
    படிப்பும் பொருளீட்டும் திறனும். //

    இதுக்கு எந்த எதிர்க் கருத்தும் கிடையாது, ஆனா இது பெருமளவில் நம் ஊர்ப் பெண்களுக்கே பொருந்தும். அதிலும் நம் ஆண்கள் மனைவியை விட வேறு பெண்ணை நாட மாட்டார்கள் எனும் தைரியத்திலேயே நம் பெண்கள் இதனை ஆயுதமாக்கி விடுகின்றனர்.. படங்களில், தொடர்களில் எல்லாம் இதைத்தானே காட்டுகின்றனர்.

    பதிலளிநீக்கு