மணவினை சிறைவாசம்..?
----------------------------------------
கண் கலங்கி நிற்கும் கணவனிடம் கைப் பிடித்த மனைவி
”என்னால் உன் மன அமைதி குலைந்த தென்றால்,
நீ விரும்பும் பெண்ணோடு, உனை விரும்பும் அவளோடு,
ஒரு நாளோ ஒரு வாரமோ தாராளமாய் இருந்து வா”என்றாள்.
கேட்டவன் தன் காதுகளை நம்ப வில்லை.-தன்னையே
ஒரு முறை கிள்ளிப் பார்த்தான்..மனைவியின் அனுமதி
கிடைத்தாயிற்று. நான் விரும்பி ,எனை விரும்பும்
பெண்ணின் கணவர் இதற்கு உடன்படுவாரா.?
எண்ணித் துணிக கருமம் என்றனர் ஆன்றோர்.
செயல்பட வேண்டியதுதானே.துணிந்து சென்றங்கு
அனுமதி கேட்டால் செருமுனைபோலாகுமோ-பயந்தான்.
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே எனத் துணிந்தான்.
வந்தவனைக் கண்டதும் வாவென்று வரவேற்றார்.
அமர வைத்து ஆசுவாசப் படுத்திய பின் கேட்டார்
வரவின் நோக்கம்தான் என்னவென்று.- தயங்கித்
தயங்கிக் கேட்டான் அவர் தாரத்தை தன்னுடன் அனுப்பச் சொல்லி.
தயக்கம் எதற்கு.? அவள் விரும்பி வருவதானால்
தாராளமாய் அழைத்துப் போ,அனுமதி எதற்கு.?
நீயாயிற்று அவளாயிற்று, நடுவில் நானெதற்கு
அன்பு நாடி நீ வர மனம் வாடச் செய்வேனா என்றார்.
அனுமதிக்குப் பங்கம் இல்லை என்றறிந்தவளும்
கண்ணசைவில் கருத்தறிந்து உடன் செல்லத் துணிந்தாள்.
நாளொரு
இடமாய் பொழுதொரு விதமாய்
சின்னச்சின்ன
ஆசைகள் சிறப்பாக நிறைவேற
நடப்பதெல்லாம்
நன்மைக்கே என்று நம்பி
மனம்
எல்லாம் றெக்கை கட்டிப் பற்ந்தவன்
ஒருவாரம் கழிந்தபின் தரையில் காலூன்ற
அன்று
போல் என்றும் ஏன் இல்லை எனக்
கேள்வி
கேட்டுப் பதில் நாட ,
தாயுடன் தான் கழித்ததெல்லாம் மணவினைச்
சிறையில்
மனைவி ஜெயிலர் தந்த பரோலே
என்றுணர்ந்தவன்
துள்ளிக் குதித்தான் கண்டது
கனவென்று
அறிந்து நொந்தான் (தெளிந்தான். )
வித்தியாசமான கற்பனை தான்.
பதிலளிநீக்குவித்தியாசமான அருமையான கற்பனை
பதிலளிநீக்குமிகவும் ரசித்தேன்
மனம் கவர்ந்த பதிவு
@ ரிஷபன்,
பதிலளிநீக்கு@ ரமணி,
வித்தியாசமாக சிந்திக்கும் கற்பனை
எழுத்துக்கள் வரவேற்கப் படுவதில்லை
என்று தெரிகிறது.உங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்துக்கும் நன்றி,
ஹ்ம்ம்ம்.. oedipus விவகாரமா இருக்குமா?
பதிலளிநீக்கு@அப்பாதுரை.
பதிலளிநீக்குOedepos was a king of Thebes who unwittingly killed his father and married his mother. The attachment of a son to his mother with unconscious rivalry towards his father is called oedepos complex. தாயைப் போல் ஒரு பெண் கிடைக்காததால் வினாயகர் திருமணமே செய்து கொள்ள வில்லையாம். தாயின் மீதிருந்த அதீத அன்பை இடிபஸ் காம்ப்ளெக்ஸ் என்று கூறக் கேட்டிருக்கிறேன். என் பதிவு ஒரு மனைவியின் ஆதிக்கம் ஏதும் செய்ய இயலாத கணவன் இவர் குறித்த ஒரு கற்பனையே. வரவுக்கு நன்றி. இன்றுதான் வந்தேன். இனி பழையபடி எழுதத் துவங்க வேண்டும்.
வித்தியாசமான கற்பனை தான். :))) தாயுடன் பொழுதைக் கழிக்கக் கூட மனைவியின் அநுமதி வேண்டுமா? :))))))
பதிலளிநீக்குஜி எம் பி சார்!
பதிலளிநீக்குஉங்க கதையை படிச்சேன்.
மணவினை சிறைவாசம்தான். ஆனால் ஜெயிலரை, ரசிக்க, மதிக்கக் கற்றுக்கொண்டால், ஜெயிலரும் அன்பாக இருப்பார்.. சிறைவாசமும் இன்பகரமாக அமையும்.
நான் சிறைவாசத்தை எப்படி இன்பகரமான நாட்களாக ஆக்குவதென்று எளிதாக டைப் அடிச்சுட்டேன், இருந்தாலும் அதை செயல்படுத்துவது கஷ்டம்தான். :)
பதிலளிநீக்கு@ வருண்
பெண்களைப் பற்றிய ஒரு கருத்தோட்டமே இது. வருகைக்கு நன்றி.
திருமணத்தைச் சிறைவாசம் என்ற முன்முடிவோடு இருப்பதால் இதற்கு எவ்விதக் கருத்துச் சொன்னாலும் சரியாக இருக்காது. ஏற்கெனவே கருத்துச் சொல்லி இருக்கேன். இன்று உங்கள் பெண்கள் பற்றிய கண்ணோட்டம் பதிவில் கொடுத்த சுட்டி மூலம் மீண்டும் படித்தேன். அப்போது தோன்றிய எண்ணம் இது. :)))))
பதிலளிநீக்குஇரசித்தேன் ஐயா
பதிலளிநீக்குவித்தியாசமான சிந்தனை. சில இடங்களில் இப்படியும் இருக்க வாய்ப்பிருக்கிறது.
பதிலளிநீக்குமனைவி என்பவரை கையாளக் கற்றுக் கொள்வது என்பது ஒரு கலை. கற்றவர்கள் வாழ்வில் (பொருளாதாரம் நினைத்த அளவிற்கு இல்லாத போதும்) வென்றவர்கள்.
பதிலளிநீக்கு