வாழ்விலே ஒரு நாள்
------------------------------------
---------------------------------------
இன்று ஜூலை மாதம்
மூன்றாம் தேதி என் மனைவியின் பிறந்தநாள்
பிறந்த நாள் பரிசாக நான் என்ன கொடுப்பது? என்னையே அர்ப்பணித்துக் கொண்டு
இருக்கிறேன் சில ஆண்டுகளுக்கு முன் வரை அவளதுபிறந்த நாளன்று ஏதாவதுஒரு கோவிலில் இருப்போம் இதை அவளுக்காகவே நான்செய்வது வழக்கம் கடந்த
முறை பயணம் சென்றபோது என் உடல் நலம் கருதி
பாதியிலேயே திரும்பி விட்டோம் கோவில் தரிசனங்களில் சமயபுரம் கோவிலும்
சிதம்பரம் கோவிலும் வைத்தீஸ்வரன் கோவிலும் இடம் பெறும் கூடவே சௌகரியப்பட்ட மாதிரி மதுரை
ராமேஸ்வரம் போன்ற கோவில்களுக்கும்
செல்வதுண்டு இந்த விஷயத்தில் அவளுக்குப்
பிடித்ததைச்செய்ய நான் தயங்குவதில்லை
ஆனால் இந்த பிறந்த நாளுக்கு என் பழைய பதிவுகளில் அவளைப்பற்றி எழுதி இருந்ததை மீண்டும் வாசித்து சில பகுதிகளை
மீள்பதிவாக்குகிறேன்
கைத்தலம் பற்ற வா.
--------------------------------------
பாவாடை தாவணியில் பதினாறு வயசுப் பாவை நீ,
ஓரடி ஈரடி சீரடி வைத்தென்முன் நாலடி நடந்து வர,
உன் வலை
வீசும் கண்கள் கண்டு,
நாலாறு வயசு நிரம்பப் பெறாத என்
மனசும் அலைபாயும், மெய் விதிர்க்கும் ,
வாய் உலரும் , தட்டுத் தடுமாறும் நெஞ்சும்.
ஆடிவரும் தேரினை யாரும் காணாதிருக்க
செய்தல் கூடுமோ ..?
அயலவர் உன்னை ஆராதிப்பதை
தடுக்கவும் இயலுமோ ...?
எங்கும் நிறைந்தவன் ஈசன் என்றால்
என்னுள் நிறைந்தவள் நீயேயன்றோ ...?
என்னுள் நிறைந்த உனை என்
கண்ணுள் நிறுத்தி
நீ வரும் வழி நோக்கித தவமிருக்கும்
நானும் ஒரு பித்தனன்றோ...?
யாருனைக் காணினும் யாதே நேரினும் ,
நிலம் நோக்கி என் முன்னே மட்டும்
என்கண் நோக்கி என்னுள் பட்டாம்பூச்சி
பறக்கச்செய்யும் வித்தை அறிந்தவளே ...!
உன் விழி பேசும் மொழியறிந்து
உனைக் கண்ட நாள் முதல் கணக்கிட்டு விட்டேன்
எனக்கு நீ , உனக்கு நான் , எனவே ,
கைத்தலம் பற்ற காலமும் நேரமும் குறித்து விட்டேன், .
-----------------------------------
என் அன்பிற்குரியவள் என்றும் நீதானே. ஓ...!
எத்தனை வருடங்கள் ஓடி விட்டன. இருந்தாலென்ன.? என்றும் என் மனதில் இருப்பது உன்
அன்றைய முகம்தான். உனக்கு நினைவிருக்கிறதா? அன்று ஒரு நாள் நீ கேட்டாயே என் மனதில்
வேறு யாராவது இருந்தார்களா என்று. அன்று நான் சொன்னதை இன்று நினைத்துப்
பார்க்கிறேன். என் மனம் புகைப்படக் கருவியில் பொறுத்தப்பட்ட நெகடிவ் ஃபில்ம்
சுருளைப் போன்றது. ஒரு முறைதான் எக்ஸ்போஸ் செய்யமுடியும். உன் உருவம்தான் என்
மனதில் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டாயிற்றே.!
நீ
அவ்வாறு அமர்ந்த நேரம் கூட எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது.
எனக்கு
உன்மேல் காதல் என்று உணர்ந்த சமயம் அதை
இவ்வாறு எழுதி இருந்தேன்
காதல்
உணர்ந்தது, கண்வழி புகுந்து கருத்தினில்
கலந்து
வித்தை செய்யும் விந்தை கண்டோ.?
அருகில்
இருந்தவன் யாரந்த அழகி எனக்
கேட்டதும்
கொண்ட கோபம் உணர்ந்தோ.?
உணர்ந்தவன்
அப்போது அறிந்திலேன்
ஆடிவரும்
தேரை யாரும் காணாதிருக்கச்
செய்தல்
கூடுமோ.? அயலவன் உன்னை
ஆராதிருத்தல்
தடுக்கவும் இயலுமோ.?
வாலிபத்தில்
நினைத்தை எழுதிய படி அசை போடும்போது கிடைக்கும் இன்பமே அலாதி. காலம்
கடந்தும் காதல் மாறவில்லையடி...!.உன் நடை,குரல், அதரங் கண்டும் தோகை மயிலின்
களிநடம் குறைந்திலை, கானக் குயிலின் இன்னிசை குறைந்திலை, கொவ்வைக்கனியதன்
செம்மையும் குறைதிலை; இருந்தாலென்.? நானும் செறுக்கொழிந்திலேன் என்றல்லவோ
இறுமாப்புடன் இருந்தேன்.
வாலிபத்தில்
காதல் உணர்வில் உடலின் சூடும் இருந்தது..காலம் கடக்கக் கடக்க நீயோ
பொன்காட்டும்
நிறங் காட்டி
மொழி
பேசும் விழி காட்டி
மின்
காட்டும் இடை காட்டி
முகில்
காட்டும் குழல் காட்டி,
இசை
காட்டும் மொழிகாட்டி
இணைந்தனை
என்னுடன்.
ஆனால்
நானோ
ஈன்றெடுத்தவள்
முகமேனும் நினைவின்றி
தாரமாய்
வந்தவள் உனைத் தாயினும்
மேலாக
எண்ணி என் நெஞ்சமெலாம் நிரப்பி
வாழ்
நாளெல்லாம் சேயாய் வாழ்ந்து விட்டேன்
.
பிள்ளையாய்ப்
பிறந்து பாலனாய் வளர்ந்து காளையாய்க் காமுற்று உன் கரம் பிடித்தேன். இளமை ஒழிந்து
நரைகூடிக் கிழப்பருவம் எய்தி, எல்லாம் செத்துக் காலன் வரவை எதிர் நோக்கும் வேளை எனக்கு நானே
அழாதிருக்க என் உள்ளம் திறந்து கொட்டி.எழுதும் இது காதல் கடிதமா, கவிதையா .....
எதுவானாலும் உனக்குப்புரிதால் சரி.
என்
தாய் முகம் கூட எனக்கு நினைவில்லை அந்த
நினைவு வரும்போது என்னையே நான் தேற்றிக் கொள்ள
இருக்கின்ற ஒரு மருந்தை அறியாமல்
இன்னலுற்றேன் இடர் படவேண்டும்..?
அருமருந்தே அன்னை என்றால்
அவதி போக்க வந்த இவளை என்
அன்னை எனக் கொளல் தவறோ. ?
அன்னை அவளைத் தேடி நான் அலைந்தபோது,
சுந்தரி இவளைக் கண்டேன் என் சிந்தையுள்ளே ,
நிறுத்தினேன் இவளை என் அகத்தினுள்ளே.,
தொலைந்ததே என் துயரங்கள் என்னை விட்டே.
காக்கின்ற கண்களால் கருணை வெள்ளம்
கரைபுரள, பூக்கின்ற புன்னகையால் ,
ஆறாத மனப் புண்ணின் அசைவலைகள்
அடங்கவே அளித்தருளி அன்னையே,என்னை ஆட் கொண்டது போல் என்னை அடைந்தவளே
என்று எழுதி இருந்தேன்
பிறந்த நாள் பரிசாக இந்த நினைவுகளை என் மனைவிக்கு சமர்ப்பிக்கிறேன்