திங்கள், 3 ஜூலை, 2017

வாழ்விலே ஒரு நாள்

                         
                                         வாழ்விலே  ஒரு நாள்
                                            ------------------------------------

       ---------------------------------------               
  இன்று ஜூலை மாதம் மூன்றாம் தேதி  என் மனைவியின் பிறந்தநாள் பிறந்த நாள் பரிசாக நான் என்ன கொடுப்பது? என்னையே அர்ப்பணித்துக் கொண்டு இருக்கிறேன்  சில ஆண்டுகளுக்கு முன்  வரை அவளதுபிறந்த  நாளன்று ஏதாவதுஒரு கோவிலில் இருப்போம்  இதை அவளுக்காகவே நான்செய்வது வழக்கம் கடந்த முறை பயணம் சென்றபோது  என் உடல் நலம் கருதி பாதியிலேயே திரும்பி விட்டோம் கோவில் தரிசனங்களில் சமயபுரம் கோவிலும் சிதம்பரம்  கோவிலும்  வைத்தீஸ்வரன் கோவிலும் இடம் பெறும்  கூடவே சௌகரியப்பட்ட மாதிரி மதுரை ராமேஸ்வரம்  போன்ற கோவில்களுக்கும் செல்வதுண்டு  இந்த விஷயத்தில் அவளுக்குப் பிடித்ததைச்செய்ய நான் தயங்குவதில்லை  ஆனால் இந்த பிறந்த நாளுக்கு  என்  பழைய பதிவுகளில் அவளைப்பற்றி  எழுதி இருந்ததை மீண்டும் வாசித்து சில பகுதிகளை மீள்பதிவாக்குகிறேன்
 
                        கைத்தலம்    பற்ற    வா.
                       --------------------------------------
பாவாடை   தாவணியில்   பதினாறு   வயசுப்   பாவை   நீ,
ஓரடி  ஈரடி  சீரடி  வைத்தென்முன் நாலடி  நடந்து  வர,
உன் வலை வீசும்  கண்கள்   கண்டு,
நாலாறு வயசு நிரம்பப்  பெறாத என்
மனசும்  அலைபாயும், மெய்  விதிர்க்கும் ,
வாய்  உலரும் , தட்டுத் தடுமாறும்   நெஞ்சும்.

ஆடிவரும்  தேரினை  யாரும்  காணாதிருக்க
செய்தல்  கூடுமோ ..?
அயலவர்  உன்னை    ஆராதிப்பதை
தடுக்கவும்  இயலுமோ ...?

எங்கும்  நிறைந்தவன் ஈசன்  என்றால்
என்னுள் நிறைந்தவள் நீயேயன்றோ ...?
என்னுள் நிறைந்த உனை என் கண்ணுள் நிறுத்தி
நீ வரும் வழி நோக்கித  தவமிருக்கும்
நானும்  ஒரு   பித்தனன்றோ...?

யாருனைக்  காணினும்   யாதே  நேரினும் ,
நிலம்  நோக்கி  என் முன்னே  மட்டும்
என்கண்  நோக்கி என்னுள் பட்டாம்பூச்சி
பறக்கச்செய்யும்  வித்தை   அறிந்தவளே ...!

உன் விழி  பேசும்  மொழியறிந்து
உனைக் கண்ட   நாள்  முதல்  கணக்கிட்டு  விட்டேன்
எனக்கு  நீ , உனக்கு  நான் , எனவே ,
கைத்தலம்  பற்ற காலமும்  நேரமும்  குறித்து  விட்டேன், .
                              ---------
--------------------------
 என் அன்பிற்குரியவள் என்றும் நீதானே. ஓ...! எத்தனை வருடங்கள் ஓடி விட்டன. இருந்தாலென்ன.? என்றும் என் மனதில் இருப்பது உன் அன்றைய முகம்தான். உனக்கு நினைவிருக்கிறதா? அன்று ஒரு நாள் நீ கேட்டாயே என் மனதில் வேறு யாராவது இருந்தார்களா என்று. அன்று நான் சொன்னதை இன்று நினைத்துப் பார்க்கிறேன். என் மனம் புகைப்படக் கருவியில் பொறுத்தப்பட்ட நெகடிவ் ஃபில்ம் சுருளைப் போன்றது. ஒரு முறைதான் எக்ஸ்போஸ் செய்யமுடியும். உன் உருவம்தான் என் மனதில் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டாயிற்றே.!

நீ அவ்வாறு அமர்ந்த நேரம் கூட எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது.
எனக்கு உன்மேல் காதல் என்று உணர்ந்த சமயம்  அதை இவ்வாறு எழுதி இருந்தேன்

காதல் உணர்ந்தது, கண்வழி புகுந்து கருத்தினில்
கலந்து வித்தை செய்யும் விந்தை கண்டோ.?
அருகில் இருந்தவன் யாரந்த அழகி எனக்
கேட்டதும் கொண்ட கோபம் உணர்ந்தோ.?

உணர்ந்தவன் அப்போது அறிந்திலேன்
ஆடிவரும் தேரை யாரும் காணாதிருக்கச்
செய்தல் கூடுமோ.? அயலவன் உன்னை
ஆராதிருத்தல் தடுக்கவும் இயலுமோ.?

வாலிபத்தில் நினைத்தை  எழுதிய படி அசை போடும்போது கிடைக்கும் இன்பமே அலாதி. காலம் கடந்தும் காதல் மாறவில்லையடி...!.உன் நடை,குரல், அதரங் கண்டும் தோகை மயிலின் களிநடம் குறைந்திலை, கானக் குயிலின் இன்னிசை குறைந்திலை, கொவ்வைக்கனியதன் செம்மையும் குறைதிலை; இருந்தாலென்.? நானும் செறுக்கொழிந்திலேன் என்றல்லவோ இறுமாப்புடன் இருந்தேன்.

வாலிபத்தில் காதல் உணர்வில் உடலின் சூடும் இருந்தது..காலம் கடக்கக் கடக்க நீயோ

பொன்காட்டும் நிறங் காட்டி
மொழி பேசும் விழி காட்டி
மின் காட்டும் இடை காட்டி
முகில் காட்டும் குழல் காட்டி,
இசை காட்டும் மொழிகாட்டி
இணைந்தனை என்னுடன்.

ஆனால் நானோ

ஈன்றெடுத்தவள் முகமேனும் நினைவின்றி
தாரமாய் வந்தவள் உனைத் தாயினும்
மேலாக எண்ணி என் நெஞ்சமெலாம்  நிரப்பி
வாழ் நாளெல்லாம் சேயாய் வாழ்ந்து விட்டேன்

.        
பிள்ளையாய்ப் பிறந்து பாலனாய் வளர்ந்து காளையாய்க் காமுற்று உன் கரம் பிடித்தேன். இளமை ஒழிந்து நரைகூடிக் கிழப்பருவம் எய்தி,  எல்லாம் செத்துக் காலன் வரவை எதிர் நோக்கும் வேளை  எனக்கு நானே அழாதிருக்க என் உள்ளம் திறந்து கொட்டி.எழுதும் இது காதல் கடிதமா, கவிதையா ..... எதுவானாலும் உனக்குப்புரிதால் சரி.

என் தாய் முகம் கூட எனக்கு நினைவில்லை   அந்த நினைவு வரும்போது என்னையே நான் தேற்றிக் கொள்ள

இருக்கின்ற  ஒரு மருந்தை அறியாமல் 
இன்னலுற்றேன்  இடர் படவேண்டும்..?

அருமருந்தே  அன்னை  என்றால் 
அவதி போக்க வந்த  இவளை  என் 
அன்னை எனக் கொளல்  தவறோ. ?

அன்னை அவளைத் தேடி நான் அலைந்தபோது
சுந்தரி  இவளைக் கண்டேன் என் சிந்தையுள்ளே ,
நிறுத்தினேன்  இவளை என் அகத்தினுள்ளே.,
தொலைந்ததே என் துயரங்கள் என்னை விட்டே.

காக்கின்ற  கண்களால்  கருணை வெள்ளம்
கரைபுரள, பூக்கின்ற  புன்னகையால் ,
ஆறாத  மனப் புண்ணின்  அசைவலைகள் 
அடங்கவே  அளித்தருளி அன்னையே,என்னை ஆட் கொண்டது போல்  என்னை அடைந்தவளே

என்று எழுதி இருந்தேன் 

பிறந்த நாள் பரிசாக இந்த நினைவுகளை என் மனைவிக்கு  சமர்ப்பிக்கிறேன்  





               
     
                   



36 கருத்துகள்:

  1. எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது இந்த நேசம். இத்தகைய நேசத்துக்கு வயது ஒரு காரணமாக இருக்குமா?

    த.ம சேர்த்துவிட்டேன், வாக்களித்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக்காதல் அன்று போல் இன்றும் தொடரும் நரைத்திடாக்காதல் வயது ஒரு பொருட்டே அல்ல வருகைக்கு நன்றி

      நீக்கு
  2. இதை விடச் சிறந்த பரிசு உங்கள் மனைவிக்கு வேறேதும் இருக்காது. அவரின் பிறந்தநாளுக்கு எங்கள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா நினைக்கிறீர்கள் ஏதோ என்னால் முடிந்த பரிசு வாழ்த்துகளுக்கு நன்றி மேம்

      நீக்கு
  3. அருமை ஐயா என்றும் நிற்கட்டும் இந்த அன்பு இறையருளால்...

    பதிலளிநீக்கு
  4. அம்மாவுக்கு அன்பான பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துகளுக்கு அவர் சார்பில் நன்றி டிடி

      நீக்கு
  5. அருமையான பரிசு. அவருக்கு எனது வணக்கங்களும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  6. என்றென்றும் நிலைத்த அன்பு பெருகி நிறையட்டும்..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாக்கை நிலையானது அல்ல ஆனால் இந்த அன்பு நிலைக்கும் நன்றி சார்

      நீக்கு
  7. மாறாத பதியின் அன்பை விட சதிக்கு மகிழ்வு வேறேதும் இருக்க முடியாது. உங்கள் துணைவியாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதற்கு ஈடாக சதியின் அன்புமிருக்கிறது ஸ்ரீ வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

      நீக்கு
  8. அருமையான பரிசு.
    வயதாகும் போது தாரம், தாய் ஆவாள் என்பார்கள், முன்பே அன்னையின் அன்பையும், மனைவிடம் பெற்ற நீங்கள் பாக்கியவான்.
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை நான் சொன்னதாக சொல்லிவிடுங்கள் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த பாக்கியம் இரு வழி யானது சொல்லி விட்டேன் மேம்

      நீக்கு
  9. "பிறந்த நாள் பரிசன்று என்னையே அர்ப்பணித்துக்கொண்டிருக்கிறேன்". எங்களுக்கு ஒரு நல்ல பாடத்தைக் கற்றுத் தந்துவிட்டீர்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதற்கு அவள் முற்றிலும் தகுதியானவள் சார் வருகைக்கு நன்றி

      நீக்கு
  10. விலைமதிக்க முடியாத பரிசு !எத்தனை கணவன்மாரால் இப்படிப்பட்ட பரிசைத் தரமுடியும் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒப்புக் கொள்கிறேன் எல்லோராலும் இப்படி எழுத முடியாது வருகைக்கு நன்றி ஜி

      நீக்கு
  11. //வாழ்நாளெல்லாம் சேயாய் வாழ்ந்து விட்டேன்

    touching tribute gmb sir!

    பதிலளிநீக்கு
  12. தங்கள் துணைவியாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்! வாழ்த்துப்பா அருமை. இதைவிட ஒரு பெரிய பரிசை தந்திருக்கமுடியுமா என்ன?

    பதிலளிநீக்கு
  13. காதலுக்கு உண்மையான உள்ளம் ஒன்றே போதும்
    உள்ளங்கள் இரண்டும் உரசினால் காதல் - அதை
    "ஆடிவரும் தேரினை யாரும் காணாதிருக்க
    செய்தல் கூடுமோ ..?
    அயலவர் உன்னை ஆராதிப்பதை
    தடுக்கவும் இயலுமோ...?" என்பதில் காண முடிகிறதே!

    பதிலளிநீக்கு
  14. Iam not able to respond in Tamil as the fonts dont work here Anyway thanks for your comments

    பதிலளிநீக்கு
  15. கண்ணம்மா குறித்த
    பாரதியின் வரிகளை
    நினைவுறுத்துப் போகும்
    அற்புதமான கவிதை

    மனைவி எனும் பெயரில்
    வாழும் தங்கள் தாய்க்கு
    எங்கள் சகோதரிக்கு
    எங்கள் மனம் கனிந்த
    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  16. என் எழுத்து உங்களுக்கு பாரதியின் கண்ணம்மா வரிகளை நினைவு படுத்தியதா மிக்க மகிழ்ச்சி நான் எழுதிய வரிகள் பற்பல நேரங்களில் எழுதியவற்றில் சிலவற்றின் தொகுப்பே பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி சார்

    பதிலளிநீக்கு
  17. கொடுத்து வைத்தவர் நீங்கள் ! இருவரும் பல்லாண்டு பல்லாண்டு நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் . காதல் மனத்தை நிறைத்தமையால் கவிதைமழை பொழிந்திருக்கிறது .

    பதிலளிநீக்கு
  18. வாழ்த்துக்கு நன்றி ஐயா உண்மையைத்தான் கூறி இருக்கிறீர்கள் காதல் மனதை நிறைத்த நேரங்களில் எழுதியதன் தொகுப்பே இது இனிமேல் இதுபோல் எழுத எனக்கே இயலுமா என்பதும் சந்தேகமே

    பதிலளிநீக்கு
  19. வாழ்த்துக்கள். வணக்கங்கள். மனதை நெகிழச் செய்த பதிவு. அன்பும் காதலும் மகிழ்ச்சியும் என்றும் தொடர பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு