ஞாயிறு, 2 ஜூலை, 2017

எனக்கும் சமையல் செய்யத் தெரியுமே மம்மி .!


                    எனக்கும்  சமையல் செய்யத் தெரியுமே மம்மி......!                   ------------------------------------------------------------------                 
2014 ஆம் ஆண்டு ஜூன்  மாதம் ஒரு பதிவு எழுதி இருந்தேன் ஒரு நாள் பொழுது என்னைவிட்டு என்  மனைவி கோவிலுக்குப் போய் இருந்தாள் முதலில் ஒரு திரைப்படத்தில் ஜனக ராஜ் கூறியது போல் :தங்கமணி ஊருக்குப் போயிட்டா என்று நினைத்து மகிழச் செய்தாலும் தனிமை என்னை வாட்டுவதை எழுதி இருந்தேன் அதைத் தவிர்க்கும்படி சில ஆலோசனைகளை பின்னூட்டத்தில் ஜீவி எழுதிய நினைவு
இந்த முறை என்னை விட்டு என் மனைவி ஒரு வாரகாலம் அவளது உடன் பிறப்புகளுடன் ஒரு நிலரெஜிஸ்ட்ரேஷன்  விஷயமாகக் கேரளம்  சென்றிருந்தாள்  எனக்கும்  ஒரு பாகேஜ் மாதிரி கூடப் போக விருப்பமிருக்கவில்லை.  நான் தனியே இருந்து கொண்டு மேனேஜ் செய்து கொள்கிறேன்   என்று சொல்லி அனுப்பி விட்டேன் அவளும்  அவளது உடன்பிறப்புகளும்  சேர்ந்து மகிழ்ச்சியாய் இருக்க நான் தடையாய் இருக்கக் கூடாதல்லவா  நான் தனியே இருக்கக் கூடாதாம்  மகன்களிடம் போயிருக்கச் சொன்னாள்  எனக்கு அதில் உடன்பாடு இருக்கவில்லை என் பேரன் சென்னையில் இருந்து வந்திருந்தான்   என் கூட இருக்க,   இரண்டு மூன்று நாட்களுக்கு  என் இளைய மகன்  வந்திருந்து கூடத்தங்கினான் மொத்தத்தில் தனியே நான் விடப்படவே இல்லை  என்ன எதுவாயிருந்தாலும் மனைவி அருகாமையில் இல்லாதது வெறுமை உணர்ச்சியையே தந்தது  என் மனைவிக்கு நேரத்துக்கு நேரம்  அவள் செய்து தருவது போலாகாது என்னும் எண்ணம்  ஒரு கவலைஉணர்வைத் தந்திருக்கும் ஆனால் எனக்கோ நான்  ஃபியர்ஸ்லி இண்டிபெண்டெண்ட் என்னும்  எண்ணமே. மேலும் என் தீரடிகல்  குக்கிங் எக்ஸ்பெர்டைசை  வெளிக்கொண்ர இது ஒரு வாய்ப்பு என்றும் நினைத்தேன்   என்மேல் எனக்கு அளவுகடந்த நம்பிக்கை உண்டு ஆனால் இந்தப் பாழாய்ப் போன உடல் ஒத்துழைக்குமா என்றும்  சந்தேகமெழுந்தது
என் மனைவி ஊருக்குப் போய் இருந்தநேரம்  என்நண்பனின் மனைவி  அமெரிக்காவில் இருந்து வந்திருந்தாள் மைசூரில் ஏதோ பூஜை என்று வந்தவள் இரண்டு நாட்கள் இருந்துமைசூர் போனாள்  பிறகு என் மனைவி வந்தபின்பே வந்து  சில நாட்கள் தங்கினாள்
ஊருக்குப் போகும் முன்  மகராசி இட்லி தோசைக்கு மாவு அரைத்து வைத்திருந்தாள் அடுக்களையில் எனக்குப் பணி செய்ய எந்தப் பொருள் எங்கிருக்கிறது என்று தெரியாதது சிரமம்கொடுத்தது எந்த வேலையிலும் ஒரு ஒழுங்கு இருக்க வேண்டும்  என்று நினைப்பவன் நான் அந்தந்த பொருளுக்குஅந்தந்த இடமென்று இருக்க வேண்டும் இதில் எனக்கும்  என்  மனைவிக்கும்  நிறையவே வித்தியாசங்கள் இருக்கும்  என்பதாலேயே கிச்சனுக்குள் நான் போவதை அவளும்  விரும்புவதில்லை எனக்கும் ஒத்து வராது. ஆனால் இப்போது வேறு வழி இருக்கவில்லை  காலையில் எழும்போதே இன்றைக்கு இன்னின்ன  வேலை என்று திட்டமிட்டுக் கொள்வேன் முதல் நாள்காலையில்  காப்பிக்கு பெர்கொலேட்டரில் எவ்வளவு தண்ணீர்  எவ்வளவு காஃபிப் பொடி என்பதிலேயே சந்தேகம் தொடங்கியது இருந்தாலும் எல்லாம் ஒரு உத்தேசமாக செய்யத் தொடங்கினேன்  சும்மா சொல்லக் கூடாது காப்பி அருமையாக வந்தது என்பேரனும்  மகனும்  அமெரிக்க நண்பியும்  செர்டிஃபிகேட் கொடுத்தனர் பிறகென்ன இட்லியும் மிளகாய்ப்பொடியும் தக்காளி கொத்சும்  என அமளி துமளிஆயிற்று. ஒரு நாள் பொங்கல். ஒருநாள் உப்புமா எனக் காலை உணவும்  வெண்டைக்காய் சாம்பார் முருங்கைக்காய் சாம்பார் தால் உருளைக்கிழங்கு ஃப்ரை பீட்ரூட் பொறியல் காரட் பொறியல்  என்று நாள் தோறும் வித்தியாசமாய் சமைத்துப் பார்த்தேன் சும்மா சொல்லக் கூடாது எல்லாமே நன்றாய் வந்தது ஆனால் பதிவுலகில் சமையல் ஜாம்பவான்களுக்கு இது பெரிதாகத் தெரியாது
சின்ன வயதில் கேட்ட பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது
(ஒருவன் )   ABCD படிக்கிறேன்   EFGH எழுதறேன்  ஒரு ஆஃபிசர் போல நடிக்கிறேன்   என்  ஹஸ்பண்ட் சொன்னது போலச் செய்யறேன்
(மற்றவன் ) ஏன் இந்த படிப்பு நமக்கு  அதனால் என்னபலன்  இருக்கு ஆம்பளை பொம்பளைப் பேச்சைக் கேட்பதால் அவமானமாக இருக்கு
என்னும் ரீதியில் போகும்  அந்தப்பாட்டு அது ஏன் இப்போதுநினைவுக்குவரவேண்டும்?
     இன்ன வேலைக்கு இவ்வளவு நேரம்  என்பதே தெரியவில்லை. சமையல் செய்வது சொப்பு வைத்து விளையாடுவது போல் என  மனைவியைக் கேலி செய்திருக்கிறேன் சமையல் வேலை எல்லாம் முடிந்து வெளியே வர ஒன்றரை மணிநேரம்  ஆகிறது,  வாஷிங் மெஷினில் துணி போட்டு எடுத்துக் காயப்போடல் மேலே தண்ணீர் தொட்டியில் நீர் ஏற்றி  நிரைத்தல்  என
நேரம்போனதே தெரியவில்லை  எல்லா வேலைசெய்வதிலும் ஒரு திருப்தி இருந்தது ஆனால் இதேகதியில் ஏழு நாட்கள் என்பதும் மலைப்பாய் இருந்ததுதொலைக்காட்சி சீரியல் என்கணினி வேலைகள் என்று பொழுது போவதே தெரியவில்லை. அப்போதே என் தளத்துக்கு ஒரு பதிவு என்னும் எண்ணமும்  வந்தது ஒவ்வொரு நாளும்  ஒவ்வொரு மெனு என்று திட்டத்துடன்  செயல்பட்டேன்   என் அமெரிக்க நண்பிக்கு ஒரே ஆதங்கம் அவரை சமையலறையில் நான் விடவில்லை. என் மகன் எனக்கு உதவுகிறேன்  பேர்வழிஎன்று எடுத்தபொருட்களை இடம் மாற்றி வைத்துவிடுவான் 23 ம் தேதி போன மனைவி 29ம்தேதி திரும்பினாள்  அவளோடு தொலைபேசியில் உரையாட முடியாதபடி அங்கு சிக்னல் ப்ராப்ளம் 28ம் நாள் நான்  வைத்திருந்த  சாம்பார் பொறியலில்  சிறிது எடுத்து வைத்திருந்தேன்  மறு நாள் வந்ததும்  சுவை பார்க்கட்டுமே என்றுதான்   நன்றாக இருக்கிறது  என்று சொன்னாள் ஆனால் இதையெல்லாம் டாப் செய்வதுபோல் இருந்தது அடுத்த நாள்  நான் எவ்வளவு புளி உபயோகிக்கிறேன்  பருப்பு போடுகிறேன்  என்றெல்லாம் கேட்க ஆரம்பித்தது நான் செய்து வைத்திருந்த சாம்பாரும் பொறியலும்  நன்றாக இருந்ததே காரணம்
இதையெல்லாம் ஒரு மாற்றுக்குச் செய்யலாம்  ஆனால் இதுவே வாழ்க்கை என்று இருக்கும்  மனைவியிடம்  என் மதிப்பும் அன்பும் கூடுகிறது என் மனைவிக்கு நான்  எந்த வேலையும்  செய்யக் கூடாது என்னும் எண்ணம் தீவிரமானது  அப்படிப்பட்டவள் நான்  தனியே ஒரு வாரகாலம்மானேஜ்  செய்ததை சிலாகித்துப்பேசி இருக்கிறாள்
 அதெல்லாம்போகட்டும்   இதில் நான் கற்றுக்கொண்டதுஎன்ன? ஒரு வேளை god forbid  நான் தனியே இருக்கும்  நிலை வந்தால் சமாளித்து விடுவேன்  என்று எனக்குப்   புரிந்திருக்கும்  என்றும் என் மனைவிக்குத் தெரிந்திருக்கும்   என்றும்  தோன்றுகிறது                
     
                   



25 கருத்துகள்:

  1. சமையல் சமைக்கத் தெரியுமே என்ற எண்ணமே நமக்கு பலம் கொடுக்கும். கொஞ்சம் கவலையைக் குறைக்கும். எனக்கும் சமையலறையில் ஒரு பொருளை இடம் மாற்றி வைப்பதும் பிடிக்காது. நானும் என் பசங்கள்ட கொஞ்சம் 'பெருமையா' சொல்லிப்பேன். கண்ணை மூடிக்கிட்டு நான் இருக்கும் இடத்தில் என்ன என்ன எங்கே இருக்குன்னு சொல்லமுடியும், போய் எடுக்கமுடியும், அது சமையலறையானாலும் சரி ன்னு.

    உங்கள் அனுபவமும் ஆர்வமும் வியக்கவைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வயதாகும்போது மறதி வருவது இயற்கை அதை ஓரளவு சமாளிக்க அந்தந்த பொருளுக்கு அந்தந்த இடம் என்று நிர்ணயித்து அதன்படி செயல் ப டல் அவசியம் என்று கருதுகிறேன் இது சமையலறைப் பொருட்களுக்கு மட்டுமல்ல. ஒரு நியதியாகக் கடைப்பிடிக்க வேண்டும் வருகைக்கு நன்றி சார் தீரடிகலாக தெரிந்ததை ப்ராக்டிகலாக்கி செய்திருக்கிறேன்

      நீக்கு
  2. நானும் ஒருமுறை சாம்பார் வைத்து அல்லோலப்பட்டது நினைவு வந்தது ஐயா.
    எல்லா அனுபவங்களும் வாழ்க்கை பாடமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் அல்லோலகல்லோலப்படவில்லை ஜி வருகைக்கு நன்றி அனுபவங்கள் பாடமே சரியாகச்சொன்னீர்

      நீக்கு
  3. நீந்தும் நேரம் வந்தால் நீச்சல் தானே வரும் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறையத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் சரி சரிதானே ஜி

      நீக்கு
  4. நல்ல முயற்சி! உங்கள் ஊக்கம் பாராட்டுக்கு உரியது! பொதுவாக சாம்பார் ரசத்துக்குப் புளியை முன் கூட்டியே ஊற வைப்பதிலும், பருப்பையும் ஊற வைத்துப் பின்னர் வேக வைத்தாலும் சமையல் விரைவில் ஆகி விடும். பழகி விட்டால் தானே வந்துவிடும். என்றாலும் உங்கள் மனைவி கையாலேயே நீங்கள் சாப்பிடும்படி ஆண்டவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன். :)

    பதிலளிநீக்கு
  5. சமையல் செய்வது சிலர் நினைத்துக்கொண்டு இருப்பது போல் அவ்வளவு எளிதல்ல. பொறுமையும் நிதானமும் திட்டமிடுதலும் அவசியம் தேவை. ’சித்திரமும் கைப்பழக்கம்’ என்பது போல் சமையல் செய்ய பழகிவிட்டால் அப்புறம் அது ஒரு குழந்தை விளையாட்டு போலத்தான். தாங்கள் அதில் கைதேர்ந்துவிட்டீர்கள் என எண்ணுகிறேன். மிக்க மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமையல் செய்து பார்க்க எனக்குக் கிடைத்த ஒரு சந்தர்ப்பம் இது. வருகைக்கு நன்றி ஐயா

      நீக்கு
  6. தற்காலிகப் பிரிவுதான் பிரியத்தை அதிகப் படுத்தும் என்பார்கள். எனக்கும் சில சம்பவங்கள் உண்டு. வெளியில் எழுத முடியாது.

    விதம் விதமாகச் சமைத்திருக்கிறீர்கள். நாம் புதிதாக, தற்காலிகமாக எல்லாம் செய்யும்போது உற்சாகமாக இருக்கும். ஆனால் அவர்கள் அதை வாழ்நாள் முழுவதும் செய்கிறார்கள் என்பது எவ்வளவு பெரிய உண்மை - அலுப்பு சலிப்பு இல்லாமல்.



    //நான் தனியே ஒரு வாரகாலம்மானேஜ் செய்ததை சிலாகித்துப்பேசி இருக்கிறாள் //

    இதுவும் அவர்கள் ப்ளஸ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரியத்தை அதிகப்படுத்த பிரிவு தேவை இல்லை என்றே நினைக்கிறேன் அவளிடம் இருக்கும் ப்ளஸை கண்டு கொண்டதற்கு நன்றி ஸ்ரீ

      நீக்கு
  7. அனுபவம் எல்லாமும் புதுமை தான்..
    மனம் உண்டானால் மங்கலம் உண்டாக்கும் என்பார்கள்..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் செய்யும்போது புதுமைதான் ஆனால் வாழ்நாள் முழுவதும் செய்யும் அவர்களைப் போற்ற வேண்டும் வருகைக்கு நன்றி சார்

      நீக்கு
  8. சமையல் செய்வது இரசித்துச் செய்ய
    எளிதுதான்.ஆனால தன் தொடர்ச்சியாய்
    முன் பின்னால் வரும் வேலைகள்தான்
    கொஞ்சம் மலைப்புத் தரும்
    அதில் நான் எக்ஸ்பர்ட்

    பொதுவாக பெண்கள் ஆண்கள்
    சமையலில் கெட்டிக்காரராக இருக்க
    விரும்புவதில்லை

    காரணம் அதன் காரணமாக நிறையக்
    கோளாறு சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்
    என்பதுவும் ஒன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண்களை விட ஆண்கள் சமையலில் கெட்டிக்காரர்களாக இருக்க முடியும் என்படை அவகள் ஒப்புக்கொள்ள விரும்பமாட்டார்கள் ஆனால் என் மனைவி விதி விலக்கு வருகைக்கு நன்றி சார்

      நீக்கு
  9. இப்பதான் எங்க வீட்டுலே ட்ரெய்னிங் நடக்குது. அநேகமா இன்னும் ஒரு வருசத்தில் தேறிடுவார்னு நினைக்கிறேன் :-)

    காரணம் நீங்க கடைசியாச் சொன்னதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ட்ரெயினிங் கொடுக்கிறேன் என்று அவரை அதிகம் வேலை வாங்காதீர்கள் மேம் பேசிக்ஸ் தெரிந்தால் ஒப்பேற்றி விடலாம் வருகைக்கு நன்றி

      நீக்கு
  10. சார் நானும் பாலக்காட்டில் பல வருடங்களாகத் தனியாக இருக்கும் போது சமைத்துத்தான் சாப்பிடுகிறேன் என்றாலும் விதம் விதமாக என்று சொல்ல முடியாது என்றாலும் பேசிக் சமைத்துவிடுவேன்...நீங்கள் இந்த வயதிலும் அசத்துகிறீர்கள்!!!

    கீதா: சார் அசத்திட்டீங்க போங்க!!! எனக்கும் கிச்சனில் சாமான்களை மாற்றி வைப்பது பிடிக்காது. சீ த்ரூ கன்டெய்னர் கிடையாது. பொதுவான சாமான் எல்லாம் எவரிசில்வர் டப்பாக்களில்தான் இருக்கும். என்றாலும் யார் கேட்டாலும் எதில் எது இருக்கிறது என்று சொல்லிவிட முடியும். வரிசையாகவும் வைத்திருப்பேன் ஒரு ஆர்டரில். ஒரு சில மட்டும் பாட்டில்கள். பீங்கான். சமையல் என்பது ஆர்ட்!! பொறுமையும், ஈடுபாடும் திட்டமிடலும் இருந்தால் சமையலை எஞ்ஜாய் செய்யலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெசசிடி இஸ் த மொதர் ஆஃப் இம்ப்லிமெண்டேஷன் . எனக்கு தீரடிகலாக பேசிக்ஸ் தெரிந்ததால் சமாளித்து விட்டேன் திட்டமிட்டிச் செய்வது என் உடலில் ஊறிய ஒன்று சமையலை எஞாய் செய்வது கொஞ்சம் கடினம்தான் வருகைக்கு நன்றி துளசி / கீதா

      நீக்கு
  11. எனக்கும் தெரியும்!அது ஒரு காலம்!

    பதிலளிநீக்கு
  12. birds of the same feather வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு
  13. அருமையான பதிவு.
    அவர்கள் வீட்டில் இருந்தால் ஒரு வேலையும் செய்ய விட மாட்டார்கள்.
    அவர்கள் ஊரில் சொந்தங்களுடம் சந்தோஷமாய் இருக்கட்டும் என்று அவர்களுடன் போகாமல் நீங்களே சந்தோஷமாய் எல்லாம் செய்து சமாளித்துக் கொண்டது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு