மழை விட்டும் தூவானம்..............
---------------------------------------------
மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்பார்கள் அது போல் இருக்கிறது எனக்கும் மரம்செடி கொடிகள் என்று எழுதி இருந்தேன் அதில் என் வாழைமரம் விட்டுப்போயிருந்தது வாழை
குலைத்துக் காய்க்க சுமார் ஓராண்டுகாலம் ஆகிறது என் தோட்டத்தில்
மூன்று நான்கு மரங்கள் வைத்திருந்தேன்
வீடு மராமத்து செய்யும் போது பின் புறம்
பாதி இடத்துக்கும் மேல் கான்க்ரீட் பூசி
ஒரு கார் நிறுத்தும் இடமாகச் செய்திருந்தேன் அப்போது பலியானவை வாழைகளே இருந்தாலும்
ஒரு கன்றை இருக்கும் இடத்தில் நட்டேன்
அது இப்போது பூ விட்டிருக்கிறது அந்தக் குலை சாய்ந்து மதில் ஓரம் இருப்பதால் காய்க்கப் போகும் குலை திருட்டுப்
போகலாம் ஒரு நப்பாசையாக அதனை புகைப்படமாக சேமிக்கிறேன் அதுகீழே
இருக்கும் ஒரே வாழை |
வாழ்வில் ஒரு நாள் என்றுமனைவியின்
பிறந்த நாள் குறித்து எழுதி இருந்தேன் பிறந்த நாள் அன்று மாலை என் இரண்டாம் மகன் குடும்பத்துடன்
வந்திருந்தான் வரும்போது ஒருகேக்கும்
வாங்கி வந்தான் நானும் என் ஆசைக்கு ஒருகேக் அவனில்லாமல் பேக்கினேன்
( செய்முறைக்கு பார்க்க என்
பூவையின் எண்ணங்கள் பதிவு.. எனக்கு
மெழுகு வத்தி ஏற்றி அணைத்துக் கொண்டாடுவதில் விருப்பம் இல்லை அதற்குப் பதில் விளக்கேற்றி வாழ்த்து சொல்வது
சிறந்தது என்று எண்ணுகிறேன் அது குறித்து ஒரு பதிவும் முன்பே எழுதி
இருக்கிறேன் பார்க்க (பிறந்த நாள் ) (பிறந்த நாள் )
என் மனைவியின்
பிறந்த நாளன்று எடுத்த புகைப்படங்களும் காணொளியும் பதிவிடுகிறேன்
இடப்பாகம் இருப்பது மகன் வாங்கி வந்த கேக் வலது புறம் அவனில்லாமல் பேக்கிய கேக் |
மனைவியுடனும் பிறந்த நாள் கேக்குடனும் |
இட்மிருந்து வலமாக சின்ன பேரன், மகனின் மச்சினன் மகன், மனைவி, நான், பேத்தி |
மேலே தெரியும் ஆலிலைக்கண்ணன் நான் என் அண்ணாவுக்குக் கொடுத்தது நான் அப்போது புகைப்படம் எடுத்துக் கொள்ளவில்லை தஞ்சாவூர் ஓவியம் |
Good post.
பதிலளிநீக்குThank you sir
நீக்குதிருமதி ஜீஎம்பீ அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஆசிகள்.
பதிலளிநீக்கு'வாழை போலத் தன்னைத் தந்து'.. என்பது கவியரசர் வாக்கு.
மண் தந்த வாழை குலை சாய்ந்து ஒருக்கால் பிறர் கை போய்ச் சேர்ந்தாலும் நாம் தந்ததாக நினைப்பின் அது திருட்டு
என்றாகாது இல்லையா, ஐயா?..
அத்தனை பெரிய மனது எனக்கிருக்கிறதா ஜீவி சார் வாழ்த்துக்கு நன்றி
நீக்குநீங்களே தயார் செய்த கேக் - வாவ்.. நிச்சயம் அவர்கள் மகிழ்ந்திருப்பார்கள்.
பதிலளிநீக்குவாழைப்பூவும் நன்றாக இருக்கு.
நாலாவது படத்தில் மகனைக் காணோமே (ஆனால் நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள்).
இல்லையே நான் மகனின் மச்சினன் மகன் என்றே குறிப்பிட்டு இருக்கிறேன்
நீக்குஆமாம். நான் வாசித்தது மகனின் மச்சினன், மகன் என்று இல்லாத 'கமா'வைச் சேர்த்துவிட்டேன்.
நீக்குமீள் வருகை தந்து கருத்திட்டதற்கு நன்றி சார்
நீக்குசந்தோஷ நேரங்கள். நீங்கள் செய்திருக்கும் கேக் தான் சிறப்பு. கடையில் வாங்குவதைவிட, நாமே
பதிலளிநீக்குசெய்து தருவது சிறப்புதானே?
ஆனால் அதன் மகிமை ஒரு சிலருக்கே தெரிகிறது. எனது கேக் பார்வைக்கு வெகு சுமார்தானே ஐசிங் ஏதும் இல்லாமல்
நீக்குமகிழ்ச்சியயான தருணங்கள் தொடரட்டும். ஐயா
பதிலளிநீக்குஅதைப்பகிர்வதிலும் இன்பமே வருகைக்கு நன்றி ஜி
நீக்குதமி்ழ் மணம் 7
நீக்குமகிழ்வான நிகழ்வுகள் வாழ்விலும் பதிவிலும் தொடர நல்வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவாழ்த்துகளுக்கு நன்றி சார்
நீக்குதாங்களே தயாரித்த கேக்
பதிலளிநீக்குமகிழ்ந்தேன் ஐயா
மகிழ்வான தருணங்கள்
அதன் செய்முறையையும் பகிர்ந்திருக்கிறேனேசார்
நீக்குஉங்கள் கேக்தான் சார் டாப்!! அழகாக இருக்கிறது. குக்கர் கேக்?
பதிலளிநீக்குமகிழ்வான தருணங்கள் நிகழ்வுகள்! ஸார் நீங்களே கேக் பேக் செய்தது இன்னும் சிறப்பு!!
கீதா: அவன் இல்லாமல் பேக்பண்ண முடியும்? பில்ஸ்பெரி ரெடி மிக்ஸ் கேக்கா இல்லை நீங்களே எல்லாம் மிக்ஸ் செய்து செய்தீர்களா சார். உங்கள் ரெசிப்பியையும் பார்க்கிறேன்.
நல்லா வந்திருக்கு சார் கேக். பிலேட்டட் பர்த்டே விஷஸ் டு அம்மா...சந்தோஷமான நிமிடங்கள்!!! இன்னும் இந்த நிமிடங்கள் நாட்கள் தொடர வேண்டும் சார்!
வாழைப் பூ அழகாக இருக்கே சார்...
//அவன் இல்லாமல் பேக்பண்ண முடியும்? //
நீக்குகீதா... அந்த அவன் யார்? ஏன் அவன் இல்லாமல் பேக் பண்ண முடியாது?!!!!
ஹிஹிஹிஹி
எல்லாமே எனது மிக்ஸ்தான் மேம் இனி தொடரும்நாட்களும் மகிழ்ச்சி தங்கும் வாழைப்பூ அழகு.....?பூ காயாகிப் பழமாகும்போது அதன் சுவையும் நன்றே
நீக்குoven தான் தமிழில் அவன் ஆனான் அது என்னிடம் இல்லை நான் குக்கரில் பேக்கினேன் .....!
நீக்குஎல்லோரும் நினைக்கு அவன் அல்ல செய்முறையும் எளிதே
நீக்குஸார் உங்கள் கேக் செய்முறை பார்த்தேன் ஸார். நான் முட்டை சேர்ப்பதில்லை. எக்லெஸ் கேக்தான் செய்வது வழக்கம். அதுவும் நன்றாக வருகிறது ஸார்.
பதிலளிநீக்குகீதா
முட்டை இல்லாமல் செய்தது இல்லை
நீக்கு
பதிலளிநீக்குதம +1
நன்றி ஸ்ரீ
நீக்குதமிழ்மணம் பெட்டி காணவில்லையே! ஓட்டு போட முடியவில்லையே...
பதிலளிநீக்குகீதா
தமிழ் மண ஓட்டுகள் வந்திருக்கிறதே
நீக்குமகிழ்ச்சியான தருணம்.
பதிலளிநீக்குநீங்கள் செய்த கேக் நன்றாக இருக்கிறது.
ஆலிலைக்கண்ணன் அழகு.
பாராட்டுக்கு நன்றி மேம்
நீக்குதாங்கள் செய்த கேக் சிறந்த அன்புப் பரிசு. தங்கள் மனைவிக்கு நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅன்பு பரிசாக நான் எழுதியதைப் (கவிதைக் கோர்வை ?) பதிவிட்டிருக்கிறேனே வாழ்த்துக்கு நன்றி மேம்
நீக்குமகிழ்ச்சி.
பதிலளிநீக்குதிருமதி ஜி.எம்.பி. அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.
வாழை மரங்கள் - நெய்வேலி வாழ்க்கையோடு மரங்களும் போயின!
என் தோட்டத்திலும் வாழை தொடருமா தெரியவில்லை வருகைக்கும் வாழ்த்துக்கும்நன்றி சார்
நீக்குஇனிமேல் எல்லா வலைப்பதிவர்களும் தங்களிடமே கேக் ஆர்டர் செய்யவேண்டும் என்று உத்தரவிடலாமா? - இராய செல்லப்பா சென்னை
பதிலளிநீக்குஅவர்களுக்கு அந்த தண்டனை வேண்டுமா
நீக்குதிருமதி GMB பிறந்த நாள் ஆகையால் 'பூவையின் எண்ணங்கள் 'தளத்தில் இதை பதிவு செய்தது பொருத்தமே :)
பதிலளிநீக்குஇது எந்தளத்தில்தானே பதிவாகி இருக்கிறது பூவையின் எண்ணங்களில் முன்பே கேக்செய்முறை பதிவாகி இருந்தது
நீக்குஎன்றென்றும் நலம் வாழ்க..
பதிலளிநீக்குவாழ்த்துக்கு நன்றி சார்
நீக்குமிகவும் மகிழ்ச்சி...
பதிலளிநீக்குவாழ்த்துகள் ஐயா...
மகிழ்வான வாழ்த்துக்கு நன்றி சார்
நீக்குவீடியோ அட்டகாசம்...நீங்கள் செய்து கொடுத்த கேக்கைவிட மிகப் பெரிய பரிசு ஏதும் இருக்க முடியாது. இன்று போல என்றும் மகிழ்வாக இருக்க வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றி மதுரைத் தமிழனவர்களே
நீக்குஉங்கள் தயாரிப்பான கேக்கும் நன்றாகவே இருக்கிறது. மீண்டும் உங்கள் மனைவிக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். நானும் முட்டை போடாமல் கன்டென்ஸ்ட் மில்க் சேர்த்துக் கேக் செய்வேன். இப்போ அவன் இல்லை! தானம் பண்ணியாச்சு!
பதிலளிநீக்குஅவன் இல்லாவிட்டாலும் கேக் செய்யலாமே
நீக்குவீடியோ திறக்கவே இல்லை! :(
பதிலளிநீக்குஅது என் துரதிர்ஷ்டமே
நீக்குஆலிலைக் கண்ணன் எனக்கும் அனுப்பி இருக்கீங்களே!
பதிலளிநீக்குஉங்களுக்கு அனுப்பின ஆலிலைக் கண்ணன் வேறு இது வேறு
நீக்குநன்றி
பதிலளிநீக்குவாசித்தும் படங்கள் பார்த்தும் மகிழ்ந்தேன் . வாழ்க யாவரும் பல்லாண்டு !
பதிலளிநீக்குதங்க்சளைப் போன்ற பெரியவர்களின் வாழ்த்து மகிழ்ச்சி தருகிறது நன்றி ஐயா
நீக்குதாங்கள் சுட்ட (செய்த) இனியப்பம் (Cake) பார்க்க அருமையாய் இருக்கிறது. சாப்பிட்டவர்கள் பாராட்டியிருப்பார்கள். வாழ்த்துகள்!
பதிலளிநீக்குவீட்டின் பக்க சுவரை இன்னும் சற்று உயரமாக கட்டியிருந்தால் வாழையைப்பற்றி கவலைப்படத் தேவையிராது.
சாப்பிடவும் சுவையாய் இருந்தது ஐயா இப்போது இருக்கும் சுவரே உயரமானதுதான் வாழை உயரே வந்து விட்டது
நீக்குகேக்கை ருசித்தோம், பதிவை ரசித்தோம்.
பதிலளிநீக்குஉங்கள் பின்னூட்டம்ரசிக்கும்படி இருக்கிறது
பதிலளிநீக்குமகிழ்ச்சியான நிகழ்வுகள்
பதிலளிநீக்குஉள்ளம் நிறைவைத் தருமே
வாழ்த்துகள்
உண்மை மன நிறைவு தரும் நிகழ்ச்சிகள் வருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்குகேக் அருமை. உங்கள் அன்பு மனைவிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநான் செய்த கேக் அல்லவா..வருகைக்கு நன்றி மேம்
பதிலளிநீக்கு