வெள்ளி, 7 ஜூலை, 2017

மீண்டும் பெர்செப்ஷனா


                                 மீண்டும்  பெர்செப்ஷனா
                               ------------------------------------------

நான் ஒரு சராசரி இந்தியன்  செய்திகள் பார்க்கிறேன்  தொலைக்காட்சிகள் பார்க்கிறேன்   நாட்டு நடப்புகளை அறிந்து கொள்கிறேன்  ஆனால் இவை எல்லாம் என்புரிதலை விரிவு படுத்துகிறதா என்றால் இல்லை  என்றே கூற வேண்டும் சராசரி இந்தியனைப் போல் எல்லாம்  தெரிந்ததாக நினைத்து எதையுமே சரியாகப் புரிந்துகொள்ள முடியாத ஒரு பாமரன்  சற்றே சிந்தித்துப் பார்த்தால் உதரணத்துக்கு இந்த டிமானிடைசேஷனை எடுத்துக் கொள் வோம்  என்னை உடனடியாக பாதிக்காதவரை  அது குறித்த என் எண்ணண்ங்கள் எல்லாமே சரியானதா தெரியவில்லை. முதலாவதாக இதன்  காரணமே ஊழல் ஒழிப்பும் கள்ளப் பணம் வெளிக்கொண்ர்வும்  என்றார்கள் இதுகுறித்து இரண்டுவகையான அபிப்பிராயங்கள் இருக்க முடியாது ஆனால் எந்த அளவு இவை நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்னும் புள்ளி விவரங்கள் எனக்குத் தெரியாது  வித விதமாகவிவரிக்கப்பட்டது அவை எல்லாம் அவரவர் சார்ந்த கட்சிக் கொள்கையை ஒட்டியே இருக்கின்றன மீடியாக்கள் சொல்வதெல்லாம் நம்புகிறமாதிரி இல்லை ஒரு விஷயம்  புரியவில்லை. பணமில்லாப் பரிவர்த்தனை என்றார்கள்  ஆனால் சின்னசின்ன விஷயங்களுக்கு  பணமில்லா பரிவர்த்தனை சாத்தியமா எல்லோரும்  மாலிலும்  டிபார்ட்மன்டல் ஸ்டோரிலுமா வாங்குகிறர்கள் அதுசாத்தியமா  ஓரளவு கல்வி கற்று இந்தச் சூழலைப்புரிந்து கொள்ள முடியும்  எனக்கே பலவிஷயங்கள் பிடிபடுவதில்லை சில நாட்களுக்கு முன்  நம் பிரதமர் கூறி இருந்ததாகச் செய்திஒன்றுவாசித்தேன்  அதில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பள்ளி யிறுதி படித்தவரோ + 2 படிதவரோ இருக்கிறார்கள் அவர்களது உதவி கொண்டு இந்த புதிய மாற்றங்களைப் புரிந்து கொண்டுசெயல் படலாம் என்றிருக்கிறார் இது எத்தனை தூரம்  சாத்தியம் என்பதே விளங்காத ஒன்று  இப்போதும்  ஏடிஎம்களில் பணம் எடுப்பது எல்லா நேரத்திலும்  சாத்தியமில்லை  எங்கள் தெருவில் ஐந்தாறு ஏடிஎம் கள் இருக்கின்றன இன்றைக்கும் அவற்றில் காஷ் இல்லை என்னும் போர்ட் தொங்குவதைக் காண்கிறேன்   இந்த ஏடிஎம் மே நாம் வங்கிக்குப் போகாமல் பணம் எடுக்க உதவுவதுதானே
 அடுத்த விஷயத்துக்கு வருவோம்
இப்போது இந்த ஜீஎஸ்டி வரி . இது என்னைப் போன்றவரை உடனடியாக பாதிக்குமா தெரியவில்லை ஆனால் சின்ன மருந்துகடைகளில் மருந்துகள் கிடைப்பதில் சங்கடம்  இருக்கிறது கேட்டால் ஜீஎஸ்டி என்கிறார்கள் இதன்  பாதிப்பு பலருக்கும்  பிடிபடாத  ஒன்று வரி செலுத்துபவர்கள் அதற்கான  வரிகளைச் செலுத்துகிறார்கள் என்று தெரிந்து கொள்ள அவர்கள்விற்பனை செய்யும்  பொருட்களின் ரசீதுகள் மூலம் தெரிந்து கொள்ளலாமாம் வரி செலுத்தும்  வியாபாரிகள் வேண்டுமானால் இதைக் கட்டாயம் கடை பிடித்து  தாங்கள் வரி செலுத்துகிறோமென்று நிரூபிக்கலாம்   ஆனால் மார்ஜினல் வியாபாரிகள் சில்லறைக் கடைகள் எங்கும்  ரசீதுகள் கொடுக்கப்படுகிறதா  அல்லது அவர்களும் கட்டாயம்ரசீதுகள் கொடுக்க வேண்டுமா  அப்படிக் கொடுக்காதவர்களை சந்தேகம் என்னும்பெயரிலும்  விசாரணை என்னும்  பெயரிலும்  இந்த வரி வசூல் செய்யும்  அதிகாரிகள் துன்பப்படுத்தலாம் அல்லவா  அதாவது குட்டி ராஜாக்களின்  தர்பார் நடக்க வழி உண்டுஎன்பது போல் இருக்கிறதே இது பிற்காலத்தில் ஊழலுக்கு வழிவகுக்கும்  என்றே தோன்றுகிறது  எது எப்படி ஆனால் என்ன  உனக்கு பாதிப்பு இல்லாதவரை அரசின் புகழ் பாடிவிட்டுச் செல்வதே மேல் எனக் கூறலாம்தானே இந்த வரிகளிலும்  இவை சரியல்ல என்பதைச் சொல்ல  சில  விஷயங்கள் கண்முன்னே தெரிகிறதே  எல்லாப் பொது மக்களும் உபயோகப்படுத்தும் பீசாவுக்கு 6% வரி/ போகப் பொருளான கடலை மிட்டாய்க்கு 18% வரி ........... !!  கடலை மிட்டாய் விற்பவர்கள் இதுவரை வரி கட்டவில்லை  ஆகவே இது தவறல்ல என்று ஒரு நண்பர் என்னிடம்  கூறினார்  இந்த ஜீஎஸ்டி வரியினால்  உயர சாத்தியமாகும்  பொருட்களின் விலை எல்லாம் பொது மக்கள் தலையில்தானே விடியும்  அப்படி இருக்கையில் வியாபாரிகளின்  எதிர்ப்பும்  விளங்கவில்லை,  ஜவுளி உற்பத்தியாளர்கள் பலரது செயல்களும் முடங்கிப் போவது போல் காட்டப்படுகிறது இந்த வரிமாற்றங்களால்  கிடைக்கப் போகும் லாபம் பொது மக்களுக்குப் போகுமா
நமக்கென்று தெரிந்துகொள்ள முடியாத  பல செய்திகளிலும் நாம் நமது பெர்செப்ஷன் மூலமே செயல் படுகிறோம் அப்படித்தானே நமது பிரதி நிதிகளைத் தேர்ந்தெடுக்கிறோம் பெரும்பான்மை உள்ளவர்கள் சொன்னால் கழுதையும் குதிரை ஆகும் அதே பெர்செப்ஷன் மூலமே கட்சிக்காரர்களும்  செயல் படுகிறார்கள்  கோ ரக்‌ஷக் என்னும்பெயரில் மனிதர்களைக்  கொலை செய்கிறார்கள் தங்களுக்கு ஆதரவான அரசு இருக்கிறதுஎன்னும் தைரியம்தானே  ஆடிக்கு ஒரு முறை அமாவாசைக்கு ஒரு முறை என்று இச்செயல்கள் தவறு என்று மோடி போன்றதலைவர்கள் கூறுகிறார்கள்  அதைக் கூறவும்  சபர்மதி ஆசிரமம்  போன்ற இடங்க;ளைத் தேர்ந்தெடுக்கின்றனர்
அயல் நாட்டுப் பயணங்கள் போது நமது சர்ஜிகல் ஸ்ட்ரைக் பற்றிப் பேசிக் கொள்(ல்) கிறார்கள் இதனால் எல்லைப் பூசல்கள் குறைந்து இருக்கிறதா  நமதுஜவான்களும்  வீரர்களும் முன்பு எப்போதையும் விட அதிக அளவில் காவு கொடுக்கப் படுகிறார்கள் மக்களின் நாடித்துடிப்பை அறிய முயலாதவர்கள் அவர்களது  பெரும்பான்மை பலத்தால்  அவர்களுக்குத் தோன்றியதைச் செய்கிறார்கள்
அண்மையில் இந்த நீட் தேர்வு பற்றியது  உண்மையில் எனக்கு அதுபற்றிய ஞானமே இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் எதிர்ப்புகள் இருக்கிறது என்று தெரிகிறது
தங்களது ஆட்சியின்  மகிமை பற்றிப் பேசாமல் செத்த பாம்புபோல் இருக்கும்  காங்கிரஸ் ஆட்சி பற்றியே குறை சொல்லிப் பேசுகிறார்கள்  காங்கிரஸ்தலைமையில் நடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்களுக்கு இவர்கள் பாத்தியதை கொண்டாடுகிறார்கள் அண்மையில் மதுரைத் தமிழ்னின்  பதிவைப் படித்தேன்  அவர்மாதிரி சொல்லிச் செல்ல  எனக்கு இயலவில்லை  மொத்தத்தில்  என்னை நான்  சாமாதானப்படுத்திக் கொள்வது We get what we deserve  என்று சொல்லித்தான்   இருந்தாலும்  சொல்லமலிருக்க முடியவில்லை
நமது பிரதமர் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன்  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பை சந்தித்தார்  அந்த சந்திப்பால்  பலன் அடைந்தது அமெரிக்காவே ஏரா;ளமான  போர் விமானங்கள் வாங்கப்படும்  அதனால் அமெரிக்கர்கள் நிறையவே  வேலை வாய்ப்பினைப் பெறுவார்கள் இங்கிருக்கும் ஐடி கம்பனிகள்  அமெரிக்கர்களை  வேலைக் கமர்த்தவேண்டும்  வீசாக்கள் கிடைப்பதில் பிரச்சனைகள் தீராது  நிறையவே உள்ளூர் எதிர்ப்புகள் இருந்தாலும்   அமெரிக்க அதிபர் அவர்களின் நலனுக்காக பணி புரிகிறார்/ ஆனால்  அதிக மெஜாரிடியுடன் ஆட்சியில் இருக்கும்  மோடி அங்கிருக்கும்  இந்தியர்களைப்   பார்த்து சர்ஜிகல் ஸ்ட்ரைக் பற்றிப் பீற்றிப் பேசுகிறார் அணு ஒப்பந்தம்  பல ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டு நிறை வேற்றப்பட்டது ஆனால் இதுவரை அமெரிக்கக் கம்பனி யிடமிருந்து எந்த உதவியும் இல்லை. அது நஷ்டத்தில் ஓடுவதால்  சில ஒப்பந்தங்கள் நிலுவையில் இருக்கிறது இதை எல்லாம் நான்  எழுதுவது எனது பெர்செப்ஷ்ன் மூலமே  ஆனால் இந்நாட்டில் பெரும்பான்மையினரின்  ஆதரவால் யாரும்  யாரையும் கொல்ல முடியும்  கேட்கப் போனால் அது தவறு என்று அவர்களும் சொல்வார்கள் ஆனால் தடுப்பு நடவடிக்கை ஏதும் இருக்காது
கடைசியாக தமிழ்நாட்டில் பாஜகவினரின்  பெனாமி ஆட்சி நடை பெறுகிறது என்கிறது எனது பெர்செப்ஷன் 
கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கிறார்களென்பதும் ஒரு அனுமானம்  லாலு பிரசாத் யாதவ் ரயில்வே மந்திரியாய் இருந்தபோது விட்ட டெண்டர்களில் ஊழல் என்று  இப்போது சிபிஐ வழக்கு பதிவு செய்கிறார்கள் லாலு பற்றி எனக்கு ஏதும்    உயர் அபிப்பிராயமில்லை  இருந்தாலும் இத்தனை ஆண்டுகளுக்குப் பின்  சிபிஐ வழக்கு தொடுப்பதுஏதோ உந்துதல் மேல் என்று சந்தேகம்  அவர் ரயில்வே மந்திரியாக இருந்த சமயம் அவரது காலத்தில் ரயில்வே மிக்க சாதனைகள் புரிந்து முன்னேறியது  என்று மீடியாக்கள் வானளாவப் புகழ்ந்தது  நினைவுக்கு வருகிறது நீதி வழக்கு போன்றவை நாள்பட்டால் சரியாக இருக்காது என்பது அனுபவப் புரிதல்   இங்கு நான்  கூறியதை எல்லாம் நேர் எதிர் மறையாக எண்ணுவோருமிருக்கலாம் அது அவர்களது பெர்செப்ஷன் என்றே நினைக்க நேரும்     
                       
     
                   















              .
     
                   















              .






              
                   















              .






         











                          




                          




         











                          

47 கருத்துகள்:

  1. எனக்கும் பரியாத விஷயங்களைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள்.

    பதிவின் கடைசியில் நிறைய வெற்றிடம் இருக்கிறதே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. ​நிறைய விஷயங்கள் புரியவில்லை என்பதை சிம்பாலிக்காக சொல்கிறாரோ!! சும்மா தமாஷ். வேறெங்கோ எழுதி, அதை பிளாக்கரில் எடுத்து பேஸ்ட் செய்யும்போது கீழே உள்ள இடத்தை எடிட் செய்யாமல் டெலிட் செய்யாமல் விடுவதால் வெற்றிடம்!

      நீக்கு
    2. டாக்டர் கந்தசாமிக்கு புரியாத விஷயங்களை பின்னூட்டங்கள் மூலம் புரிந்து கொள்ள முடியுமா என்று பார்த்தேன்

      நீக்கு
    3. வேர்டில் எழுதி காப்பி பேஸ்ட் செய்யும்போது தவறுதலாக இரு முறை பேஸ்ட் செய்து ஒன்றை அழித்ததால் வெற்றிடமிருக்கலாம் எதையுமே சிம்பாலிக்காகச் சொல்லவில்லை. எனக்கு தோன்றியதை எழுதி இருக்கிறேன் பெரும்பாலும் புரிந்து கொள்ள முடியாதது வருகைக்கு நன்றி ஸ்ரீ

      நீக்கு
  2. பதிவு பாதியில் முடிந்து விட்டதோ?

    பதிலளிநீக்கு

  3. சில விஷயங்கள் எல்லாம் கடைசி வரை உண்மை வெளிவரவே வராது. நாம் எதை உண்மை என்று நினைக்கிறோமோ, நாம் அப்படி நினைக்க வைக்கப் படுகிறோம். இஹைப் பார்க்க வேண்டும், இவற்றை வாங்க வேண்டும் என்றும் தீர்மானிப்பது அவர்கள்தான் என்கிறார்கள். அரசியலின், மற்றும் நம் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு அசைவும் யாரோ சிலரால் நிர்ணயிக்கப்படுகின்றன.

    கடலை மிட்டாய் வரி எல்லாம் சும்மா ஜாலிக்காக பரப்பப்படுவது. வருட டர்ன் ஓவர் இருபது லட்சத்தைத் தாண்டினால்தான் ஜி எஸ் டி.


    ​தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதையெல்லாம் கூடவா இல்லுமினாட்டிகள் கண்காணிக்கிறார்கள் கடலை மிட்டாய் விஷயம் யாரும்பரப்பியதல்ல தொலைக்காட்சியில் அவர்கள் எதிர்ப்பைப் பார்த்தேன்/ வருட டர்ன் ஓவர் இருபது லட்சத்தைத் தாண்டினால்தான் ஜி எஸ் டி./ செய்திக்கு நன்றி ஸ்ரீ வருட டர்ன் ஓவர் இருபதுலட்சமா கூடவா குறைவா யார் தீர்மானிப்பது அதன் காரணம் இன்ஸ்பெக்‌ஷன் ராஜ் வர வாய்ப்பு இருக்கிறதா வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி ஸ்ரீ


      நீக்கு
  4. தங்களின் புலனுணர்வு (Perception) பெரும்பான்மையோரின் புலனுணர்வோடு ஒத்து போகும் என எண்ணுகிறேன். தங்களின் கருத்தோடு உடன்படுகின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாதாரண பிரஜைக்குப் புரியாத விஷயங்கள் என்று தோன்றியதால் பகிர்ந்தேன் வருகைக்கு நன்றி ஐயா

      நீக்கு
  5. பலவற்றை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும் தவறாக போய் விடுகிறது...

    பதிலளிநீக்கு
  6. //நான் ஒரு சராசரி இந்தியன் செய்திகள் பார்க்கிறேன் தொலைக்காட்சிகள் பார்க்கிறேன் நாட்டு நடப்புகளை அறிந்து கொள்கிறேன் ஆனால் இவை எல்லாம் என்புரிதலை விரிவு படுத்துகிறதா என்றால் இல்லை என்றே கூற வேண்டும்//

    எனக்கும் புரியாத விஷயங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலருக்கும் புரிவதில்லை என்பதாலேயே பகிர்ந்தேன் மேம்

      நீக்கு
  7. ///தங்களது ஆட்சியின் மகிமை பற்றிப் பேசாமல் செத்த பாம்புபோல் இருக்கும் காங்கிரஸ் ஆட்சி பற்றியே குறை சொல்லிப் பேசுகிறார்கள்///

    சரியாக சொன்னீர்கள் ஐயா

    இன்றைக்கு பழைய ஊழல் வழக்குகள் தோண்டி எடுக்கப்படுவதற்கு காரணம் அவர்களை தங்களது கைப்பாவையாக கொண்டு வரத்தான் என்பது கண்கூடாக தெரிகிறது ஐயா

    த.ம.3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொரு செயலிலும் அரசியல்தான் தெரிகிறது மேலான கருத்துக்கு நன்றி ஜி

      நீக்கு
  8. ஜிஎஸ்டி ஒரு சில அன்றாட அத்தியாவச்யப் பொருட்களுக்கு இல்லை என்றும் ஆடம்பரப் பொருட்களுக்குத்தான் என்றும் சொல்லப்படுகிறது இன்னும் முழுதாகத் தெரிந்து கொள்ள வில்லை சார்..

    - இருவரிங்க் கருத்தும்ம்

    பதிலளிநீக்கு
  9. ஜிஎஸ்டி என்பதை மிகச் சுலபமாக இப்படிப் புரிந்துகொள்ளலாம்: ஜிஎஸ்டி-யை எதிர்ப்பவர்கள் யார்? வியாபாரிகள் தான். ஆகவே அது கன்ஷ்யூமருக்கு நன்மை பயக்கும் ஒரு விஷயம் என்பது தெளிவாகிறது. தங்களுக்கு எவ்வளவு வரிச்சலுகை கிடைத்தாலும் அதில் ஒரு பகுதியையாவது கன்ஷ்யூமருக்கு டிஸ்கவுன்ன்ட்டாகத் தருகிறார்களா வியாபாரிகள்? ஆகவே, அவர்களின் ஒட்டுமொத்தக் கூச்சலுக்கு இரண்டே அர்த்தங்கள் உண்டு: ஒன்று, இதுவரை வரிகட்டாமல் ஏமாற்றியவர்கள் இனி கட்டாயம் வரி கட்டியாகவேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்படப்போகிறது. இரண்டு, மூலப்பொருள்கள கொள்முதலில் தாங்கள் பெற்ற டிஸ்கவுன்ட்டை இதுவரை கணக்கில் காட்டாமல் ஏமாற்றியவர்கள் இனிமேல் காட்டியே தீரவேண்டும். இதுதான் நிலைமை. ஜிஎஸ்டி-யால் பொதுமக்களுக்கு நன்மை ஏற்பட்டுவிடக்கூடாது என்று முனைந்து கட்டிக்கொண்டு செயல்படும் பழைய பெருச்சாளிகளின் கோட்டம் அடக்கப்படவேண்டும். தங்களுக்கு எது நன்மை என்பதை உணராதவர்களாகவே மக்களில் பலர் இருப்பதால் அரசின் எல்லா நல்ல திட்டங்களும் சரியாக பெர்சீவ் ஆவதில்லை என்பதே சரி.

    -இராய செல்லப்பா சென்னையில் இருந்து

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'கோட்டம்' என்பதை 'கொட்டம்' என்று வாசிக்கவும்.

      நீக்கு
    2. ஒவ்வொரு வியாபாரியும் தனக்கான ஜீஎஸ்டி நம்பரைப் பெற வேண்டும் என்று அறிகிறேன் அதன் மூலம் அவர்கள் தங்கள் கணக்குகளுக்கு ஆதாரம் வைத்துக் கொள்ளவேண்டும் என்றும் புரிகிறது இந்த விஷயமே அவர்களை சரியாகக்ல் கணக்குக் காட்ட வைக்கும் ஆனால் அதை உரிய ரசீதுகள் மூலம் நிரூபிக்க வேண்டும் இதை சரியாகச் செய்கிறார்களா இல்லையா என்பத வரி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் அப்படிச் செய்யும் போது அவர்களால் அதிகார துஷ்பிரயோகம் செய்யும் வாய்ப்பு உண்டு. அதை அவர்கள் இன்றைக்கோ அல்லது ஆண்டுகள் கழித்தோ அதிகார வர்க்கத்தின் தூண்டுதல் பேரில் செய்யலாம் லைசென்ஸ் ராஜ் இன்ஸ்பெக்‌ஷன் ராஜ் போன்றவை ஊழ்லுக்கும் அதிகார துஷ்பிரயோகத்துக்கும் வழிவகுக்கலாம் என்று தோன்றியதாலேயே இந்தப் பதிவை எழுதினேன் புரியாதவிஷயங்களைப் புரிந்து கொள்ளவும் சந்தேகங்களுக்குத் தீர்வு கோரியும் இப்பதிவு சில தெளிவுகளுக்கு நன்றி சார்

      நீக்கு
    3. கொட்டம் என்றே வாசித்தேன் சார்

      நீக்கு
  10. எழுத்தில் தெரிவது உண்மையான பெர்செப்ஷன் . காலி இடத்தில் தெரிவது மற்றவர்கள் பெர்செப்ஷன். வழக்கமாக நீண்ட பின்னூட்டம் எழுதுபவர்களும் கூட்டிற்குள் சுருங்கிவிட்டார்கள்.

    ​ஆனால் இவை எனக்கு பெர்செப்ஷன் ஆக தெரியவில்லை. உங்களுடைய கிரிடிஸிசம் ஆகவே புலப்படுகிறது. சங்கை ஊதியாச்சு. கேட்கவேண்டியவர் காதில் விழுந்தால் சரி. ​
    -- ​​
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில விஷயங்கள் பகிரப் படும்போது அவற்றைப் புரிந்துகொள்வதில் தவறு நேர்கிறது பெர்செப்ஷன் கிரிடிசிசமாக தெரிவது அதில் ஒன்று. ஒரு செய்தி யைப் பற்றிக் கூறும்போது அதன் குறைகள் கிரிடிசிசமாகக் காட்சி தருவது என் குறையல்ல செதியின் தாக்கமே நானும் சங்கை ஊதி விட்டேன் ஒலி கேட்டதற்கு நன்றி சார்

      நீக்கு
  11. ம்ம்ம்... பல விஷயங்கள் புரிபடாதவையாகவே இருக்கின்றன. அரசியலும் ஆட்சியாளர்களின் போக்கும் எப்போதுமே புரிந்து கொள்ல முடியாதவை தான். புரியும் ஒரே விஷயம் - அரசியலில் பெரும்பாலானவர்கள் தங்களது சொந்த சொத்து அளவை அதிகரிக்கவே நினைக்கிறார்கள்!

    இப்படி எழுதி மட்டும் நம் மன உளைச்சலைப் பகிர்ந்து கொள்ள முடிகிறது.வேறொன்றும் செய்ய முடிவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன உளைச்சலைப் பகிரமட்டும் அல்ல. சில தெளிவுகள் பெறவுமே எழுதியது நன்றிவெங்கட் ஜி

      நீக்கு
  12. புரிதல்கள் வேறே; புலனுணர்வுகள் (Perception) வேறே.

    பொதுவாக பெர்செப்ஷன் அடிப்படையில் நம் புரிதல்களைக் கொண்டோமானால் ஒற்றை சார்பு நிலையில் நாம் தள்ளப்படுவது தவிர்க்க முடியாகி விடும்.

    நல்லதோ, கெட்டதோ சில காரணங்களுக்காக மீடியாக்களும், செய்தித்தாட்களும் சில விஷயங்களில் ஒற்றைக் கருத்தை உருவாக முயல்கின்றன. எதற்காக எந்த மாதிரியான கருத்து உருவாக்கப்படுகிறது என்பதை தீர்க்கமாக அலசி ஆராய்ந்து ஒரு தீர்மானத்திற்கு வந்து விட்டோமானால் அந்தந்த விஷயங்களில் பெர்செப்ஷனிலிருந்து விடுபட்ட நமக்கான ஒரு புரிதல் ஏற்பட்டு விடும். நீங்கள் எதிர்பார்க்கும் ஒரு நல்ல தெளிவும் பிறந்து விடும்.

    செல்லப்பா சாரின் பின்னூட்டம் அருமை. அது தான் ஜிஎஸ்டி பற்றிய பொதுவான பெர்செப்ஷனில் மாட்டிக் கொள்ளாத அவருக்கான புரிதல்.

    நெடுநாட்கள் கழித்து உங்களைப் பதிவில் பார்த்தலில் மிகவும் மகிழ்ச்சி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெர்செப்ஷன் என்பதை அனுமானமாகவே பார்த்தேன் மீடியாக்கள் ஒற்றைக்கருத்தை உருவாக்குகின்றன என்பதுஆர்க்யூஅபிள் விஷயம் பெரும்பாலும் அனுமானங்களே புரிதலை உண்டாக்கு கின்றன
      /நெடுநாட்கள் கழித்து உங்களைப் பதிவில் பார்த்தலில் மிகவும் மகிழ்ச்சி ஐயா./ பின்னூட்டதில் பார்த்தது எனக்கும் மகிழ்ச்சிதான் சார் நாந்தான் பதிவில் இருக்கிறேனே நீங்கள் தான் வருவதுகுறைந்து அரிதாகி விட்டீர்கள்

      நீக்கு
  13. உளவியல் நோக்கில் நுணுக்கமான கருத்துகளை வெளிப்படுத்தும் பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரியாததை எழுதினதால் ஒரு வேளை அப்படித் தோன்றி இருக்கலாம் வருகைக்கு நன்றி சார்

      நீக்கு
  14. கடலை மிட்டாய்க்கு எப்பவுமே வரி உண்டே? கடலை மிட்டாயின் மேலிருக்கும் குறுக்கும் நெடுக்குமான வரிகளை ஓட்டிப் பிடித்து பிட்டு ஒடித்து வாயில் தொட்டுக் கடிக்க.. ஆகா.. காணி நிலம் வேண்டும் பராசக்தி அது நிறைய கடலை மிட்டாய் வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடலை மிட்டாயிலிருக்கும் ஒவ்வொரு வரிக்கும் ஜீஎஸ்டி வரி ப்போல் இருக்கிறதே

      நீக்கு
  15. //தங்களது ஆட்சியின் மகிமை பற்றிப் பேசாமல் செத்த பாம்புபோல் இருக்கும் காங்கிரஸ் ஆட்சி பற்றியே குறை சொல்லிப் பேசுகிறார்கள்

    சர்ச்சில் பரப்பிய மூன்று கடிதங்கள் கதை நினைவுக்கு வருகிறது. அரசியலில் மட்டும் முதல் கடிதம் நிரந்தரம் போலிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் கதைகளை சுருக்கமாகச் சொல்லி இருக்கலாமோ இன்னும் நன்றாக விளங்கி இருக்கும்

      நீக்கு
    2. அதுக்கென்ன சொல்லிட்டா போச்சு..

      ராபர்ட் பீல் இங்கிலாந்தின் பிரதமரானவுடன் அவரிடம் மூன்று கடிதங்களை 1, 2, 3 என்று இலக்கமிட்டுக் கொடுத்தாராம் அரசின் உயர் நீதிபதி. தீர்க்க முடியாத சிக்கலாக ஏதேனும் வரும் போது மட்டும் கடிதங்களை ஒவ்வொன்றாகப் பிரிக்கச் சொன்னாராம்.

      பீல் பிரதமாராகி ஆறு மாதங்களில் முதல் சிக்கல் வந்ததாம். வேறு வழியில்லாமல் முதல் கடிதத்தைப் பிரித்துப் படித்தாராம். அதில் "உனக்கு முன் இந்தப் பதவியில் இருந்தவர் மேல் பழி போடு" என்று இருந்தது. அதன்படி பீல் சிக்கலுக்கான காரணங்களை அவருக்கு முந்தைய ஆட்சியின் மீதும் பிரதமர் மீதும் போட்டுத் தற்காலிகமாகத் தப்பினார்.

      ஒரு வருடம் விட்டு இரண்டாவது தீர்வு தெரியாத சிக்கல் வர, பீல் இரண்டாவது கடிதத்தைப் பிரித்தார். அதில் "உனக்கு கீழே வேலை செய்வோர் மேல் பழி சுமத்தி அவர்களை மாற்றி விடு" என்றிருந்தது. அப்படியே செய்து இன்னொரு தற்காலிக தப்புதல் கிடைத்தது பீளுக்கு.

      இரண்டு வருடம் விட்டு மூன்றாவது சிக்கல் வர பீல் திகைத்தார். வேறு வழியின்றி மூன்றாவது கடிதத்தைப் பிரித்தார். அதில் "மூன்று கடிதங்கள் எழுதி அடுத்தவரிடம் கொடுக்க உனக்கு நேரம் வந்து விட்டது" என்று எழுதியிருந்தது.

      சர்ச்சில் பரப்பிய ஆளுமைக் கதைகளில் இது ஒன்று.

      நீக்கு
    3. அதை நன்றாகவே செயல் படுத்துகிறது இப்போதைய அரசு மூன்றாவது கடிதம் செயல்படுத்த நேரம்வந்துவிட்டதா உடன் பதிலுக்கு நன்றி சார்

      நீக்கு
  16. //தமிழ்நாட்டில் பாஜகவினரின் பெனாமி ஆட்சி நடை பெறுகிறது

    தமிழ்நாட்டில் ஆட்சி நடைபெறுகிறதா? உங்களுக்கு பெரிய மனது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆட்சி நடைபெறாமல் செய்வதும் ஒரு வித ஆட்சியோ வருகைக்கு நன்றி சார்

      நீக்கு
  17. >>> தங்களது ஆட்சியின் மகிமை பற்றிப் பேசாமல் செத்த பாம்புபோல் இருக்கும் காங்கிரஸ் ஆட்சி பற்றியே குறை சொல்லிப் பேசுகிறார்கள் ..<<<

    முழுப்பதிவிற்கும் ரத்னம் போன்ற வார்த்தைகள்..

    இந்தப் பீற்றலுக்குத் தானே அவர்கள் ஆட்சி பீடத்தில் ஏறியது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாமே ஏதும்செய்ய முடியாததால்தானே மௌனமாகப் பொறுத்டுக் கொள்ளப் பழக வேண்டுமோ வருகைக்கு நன்றி சார்

      நீக்கு
  18. ஜிஎஸ்டி வந்தாச்சு
    என்ன பாடுபடுத்தப் போகுதோ - அதை
    பெர்செப்ஷன் என்று தொட்டுக் காட்டியதாக
    நானும் எண்ணுகின்றேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மைப் போன்றவர்களுக்கு நேரடி பாதிப்பு இருக்குமா தெரியவில்லை. ஆனால் இந்த ஜீஎஸ்டி சரியாகப் புரிய வைத்தபின் வந்திருக்கலாமோ பெர்செப்ஷன் என்பதை நானென் அனுமானமாகவே சொல்கிறேன்

      நீக்கு
  19. இபொழுதெல்லாம் புரிகிற மாதிரி தெரிகிறது
    ஆனால் உண்மையிலேயே புரியாமல்தான் இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதாவது ஒரு பளி மாணவனைப் போலா வகுப்பில் பாடம் நடத்தும்போது புரிகிற மாதிரி இருக்கும் பின் யோசிக்கும் போதுஏதுமே புரியாதமாதிரி இருக்கும் ஆசிரியர் அல்லவா சரியாகவே சொல்கிறீர்கள் வருகைக்கு நன்றி சார்

      நீக்கு
  20. "எல்லாப் பொது மக்களும் உபயோகப்படுத்தும் பீசாவுக்கு 6% வரி/ போகப் பொருளான கடலை மிட்டாய்க்கு 18% வரி ........... !" - இதை மந்திரி CLARIFY பண்ணியுள்ளாரே. அரசை எதிர்ப்பதற்காக சிலர், மீடியாக்கள் மிகவும் அதீதமாகச் சொல்வதுபோல்தான் எனக்குத் தோன்றுகிறது.

    "இத்தனை ஆண்டுகளுக்குப் பின் சிபிஐ வழக்கு தொடுப்பது" - ஆமாம் சார். சிபிஐ நீண்ட நெடிய தூக்கத்திலிருந்து முழித்துக்கொண்டு அரசியலுக்கேற்றவாறு செயல்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதபடிதான் இருக்கிறது. நீங்கள் சொன்னபடி, லாலு அமைச்சராக இருந்தபோது ரயில்வே நன்றாகச் செயல்படுகிறது, ஐ.ஐ.எம் ஆட்களும் லாலுவிடம் மேனேஜ்மென்ட் பற்றி பாடம் கேட்டார்கள் என்றெல்லாம் அப்போது மீடியாவில் வந்திருந்தது.

    எல்லாச் செய்திகளையும் அவரவர் பெர்செப்ஷனுக்கேற்றார்ப்போல்தான் புரிந்துகொள்ள வேண்டும்போல் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த மாதிரி சிபிஐ யும் ஈடி யும் செயல்படுவதே அவர்கள் செயல்களில் நம்பகத் தன்மையைக் குறைத்தும் சந்தேகத்தை எழச்செய்தும் சாதாரண பொது மக்களிடம் ஒரு பெர்செப்ஷனை ஏற்படுத்தி இருக்கிறது ஆண்டுக்கு 20 லட்சம் டர்ன் ஓவெர் உள்ளவரே ஜீஎஸ் டி விதிகளுக்கு உட்படுவார் என்பதும் பின்னூட்டங்களால் தெரிகிறது அப்படி யாகும் டர்ன் ஓவரில் சந்தேகப் பட்டு சாதாரண வியாபாரிகள் வழக்குக்கு இழுக்கப்படலாம் அல்லவா. செய்திகள் பெர்செப்ஷனுக்கு ஏற்றார் போல் புரியப்படுவது சரியா சார் வருகைக்கு நன்றி

      நீக்கு
    2. கடலை மிட்டாய் சமாச்சாரம் கோவில்பட்டி வியாபாரிகளின் பேச்சை தொலைக்காலையில் காண நேர்ந்ததால் எழுதியது

      நீக்கு