நாட்டு நடப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாட்டு நடப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 7 ஜூலை, 2017

மீண்டும் பெர்செப்ஷனா


                                 மீண்டும்  பெர்செப்ஷனா
                               ------------------------------------------

நான் ஒரு சராசரி இந்தியன்  செய்திகள் பார்க்கிறேன்  தொலைக்காட்சிகள் பார்க்கிறேன்   நாட்டு நடப்புகளை அறிந்து கொள்கிறேன்  ஆனால் இவை எல்லாம் என்புரிதலை விரிவு படுத்துகிறதா என்றால் இல்லை  என்றே கூற வேண்டும் சராசரி இந்தியனைப் போல் எல்லாம்  தெரிந்ததாக நினைத்து எதையுமே சரியாகப் புரிந்துகொள்ள முடியாத ஒரு பாமரன்  சற்றே சிந்தித்துப் பார்த்தால் உதரணத்துக்கு இந்த டிமானிடைசேஷனை எடுத்துக் கொள் வோம்  என்னை உடனடியாக பாதிக்காதவரை  அது குறித்த என் எண்ணண்ங்கள் எல்லாமே சரியானதா தெரியவில்லை. முதலாவதாக இதன்  காரணமே ஊழல் ஒழிப்பும் கள்ளப் பணம் வெளிக்கொண்ர்வும்  என்றார்கள் இதுகுறித்து இரண்டுவகையான அபிப்பிராயங்கள் இருக்க முடியாது ஆனால் எந்த அளவு இவை நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்னும் புள்ளி விவரங்கள் எனக்குத் தெரியாது  வித விதமாகவிவரிக்கப்பட்டது அவை எல்லாம் அவரவர் சார்ந்த கட்சிக் கொள்கையை ஒட்டியே இருக்கின்றன மீடியாக்கள் சொல்வதெல்லாம் நம்புகிறமாதிரி இல்லை ஒரு விஷயம்  புரியவில்லை. பணமில்லாப் பரிவர்த்தனை என்றார்கள்  ஆனால் சின்னசின்ன விஷயங்களுக்கு  பணமில்லா பரிவர்த்தனை சாத்தியமா எல்லோரும்  மாலிலும்  டிபார்ட்மன்டல் ஸ்டோரிலுமா வாங்குகிறர்கள் அதுசாத்தியமா  ஓரளவு கல்வி கற்று இந்தச் சூழலைப்புரிந்து கொள்ள முடியும்  எனக்கே பலவிஷயங்கள் பிடிபடுவதில்லை சில நாட்களுக்கு முன்  நம் பிரதமர் கூறி இருந்ததாகச் செய்திஒன்றுவாசித்தேன்  அதில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பள்ளி யிறுதி படித்தவரோ + 2 படிதவரோ இருக்கிறார்கள் அவர்களது உதவி கொண்டு இந்த புதிய மாற்றங்களைப் புரிந்து கொண்டுசெயல் படலாம் என்றிருக்கிறார் இது எத்தனை தூரம்  சாத்தியம் என்பதே விளங்காத ஒன்று  இப்போதும்  ஏடிஎம்களில் பணம் எடுப்பது எல்லா நேரத்திலும்  சாத்தியமில்லை  எங்கள் தெருவில் ஐந்தாறு ஏடிஎம் கள் இருக்கின்றன இன்றைக்கும் அவற்றில் காஷ் இல்லை என்னும் போர்ட் தொங்குவதைக் காண்கிறேன்   இந்த ஏடிஎம் மே நாம் வங்கிக்குப் போகாமல் பணம் எடுக்க உதவுவதுதானே
 அடுத்த விஷயத்துக்கு வருவோம்
இப்போது இந்த ஜீஎஸ்டி வரி . இது என்னைப் போன்றவரை உடனடியாக பாதிக்குமா தெரியவில்லை ஆனால் சின்ன மருந்துகடைகளில் மருந்துகள் கிடைப்பதில் சங்கடம்  இருக்கிறது கேட்டால் ஜீஎஸ்டி என்கிறார்கள் இதன்  பாதிப்பு பலருக்கும்  பிடிபடாத  ஒன்று வரி செலுத்துபவர்கள் அதற்கான  வரிகளைச் செலுத்துகிறார்கள் என்று தெரிந்து கொள்ள அவர்கள்விற்பனை செய்யும்  பொருட்களின் ரசீதுகள் மூலம் தெரிந்து கொள்ளலாமாம் வரி செலுத்தும்  வியாபாரிகள் வேண்டுமானால் இதைக் கட்டாயம் கடை பிடித்து  தாங்கள் வரி செலுத்துகிறோமென்று நிரூபிக்கலாம்   ஆனால் மார்ஜினல் வியாபாரிகள் சில்லறைக் கடைகள் எங்கும்  ரசீதுகள் கொடுக்கப்படுகிறதா  அல்லது அவர்களும் கட்டாயம்ரசீதுகள் கொடுக்க வேண்டுமா  அப்படிக் கொடுக்காதவர்களை சந்தேகம் என்னும்பெயரிலும்  விசாரணை என்னும்  பெயரிலும்  இந்த வரி வசூல் செய்யும்  அதிகாரிகள் துன்பப்படுத்தலாம் அல்லவா  அதாவது குட்டி ராஜாக்களின்  தர்பார் நடக்க வழி உண்டுஎன்பது போல் இருக்கிறதே இது பிற்காலத்தில் ஊழலுக்கு வழிவகுக்கும்  என்றே தோன்றுகிறது  எது எப்படி ஆனால் என்ன  உனக்கு பாதிப்பு இல்லாதவரை அரசின் புகழ் பாடிவிட்டுச் செல்வதே மேல் எனக் கூறலாம்தானே இந்த வரிகளிலும்  இவை சரியல்ல என்பதைச் சொல்ல  சில  விஷயங்கள் கண்முன்னே தெரிகிறதே  எல்லாப் பொது மக்களும் உபயோகப்படுத்தும் பீசாவுக்கு 6% வரி/ போகப் பொருளான கடலை மிட்டாய்க்கு 18% வரி ........... !!  கடலை மிட்டாய் விற்பவர்கள் இதுவரை வரி கட்டவில்லை  ஆகவே இது தவறல்ல என்று ஒரு நண்பர் என்னிடம்  கூறினார்  இந்த ஜீஎஸ்டி வரியினால்  உயர சாத்தியமாகும்  பொருட்களின் விலை எல்லாம் பொது மக்கள் தலையில்தானே விடியும்  அப்படி இருக்கையில் வியாபாரிகளின்  எதிர்ப்பும்  விளங்கவில்லை,  ஜவுளி உற்பத்தியாளர்கள் பலரது செயல்களும் முடங்கிப் போவது போல் காட்டப்படுகிறது இந்த வரிமாற்றங்களால்  கிடைக்கப் போகும் லாபம் பொது மக்களுக்குப் போகுமா
நமக்கென்று தெரிந்துகொள்ள முடியாத  பல செய்திகளிலும் நாம் நமது பெர்செப்ஷன் மூலமே செயல் படுகிறோம் அப்படித்தானே நமது பிரதி நிதிகளைத் தேர்ந்தெடுக்கிறோம் பெரும்பான்மை உள்ளவர்கள் சொன்னால் கழுதையும் குதிரை ஆகும் அதே பெர்செப்ஷன் மூலமே கட்சிக்காரர்களும்  செயல் படுகிறார்கள்  கோ ரக்‌ஷக் என்னும்பெயரில் மனிதர்களைக்  கொலை செய்கிறார்கள் தங்களுக்கு ஆதரவான அரசு இருக்கிறதுஎன்னும் தைரியம்தானே  ஆடிக்கு ஒரு முறை அமாவாசைக்கு ஒரு முறை என்று இச்செயல்கள் தவறு என்று மோடி போன்றதலைவர்கள் கூறுகிறார்கள்  அதைக் கூறவும்  சபர்மதி ஆசிரமம்  போன்ற இடங்க;ளைத் தேர்ந்தெடுக்கின்றனர்
அயல் நாட்டுப் பயணங்கள் போது நமது சர்ஜிகல் ஸ்ட்ரைக் பற்றிப் பேசிக் கொள்(ல்) கிறார்கள் இதனால் எல்லைப் பூசல்கள் குறைந்து இருக்கிறதா  நமதுஜவான்களும்  வீரர்களும் முன்பு எப்போதையும் விட அதிக அளவில் காவு கொடுக்கப் படுகிறார்கள் மக்களின் நாடித்துடிப்பை அறிய முயலாதவர்கள் அவர்களது  பெரும்பான்மை பலத்தால்  அவர்களுக்குத் தோன்றியதைச் செய்கிறார்கள்
அண்மையில் இந்த நீட் தேர்வு பற்றியது  உண்மையில் எனக்கு அதுபற்றிய ஞானமே இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் எதிர்ப்புகள் இருக்கிறது என்று தெரிகிறது
தங்களது ஆட்சியின்  மகிமை பற்றிப் பேசாமல் செத்த பாம்புபோல் இருக்கும்  காங்கிரஸ் ஆட்சி பற்றியே குறை சொல்லிப் பேசுகிறார்கள்  காங்கிரஸ்தலைமையில் நடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்களுக்கு இவர்கள் பாத்தியதை கொண்டாடுகிறார்கள் அண்மையில் மதுரைத் தமிழ்னின்  பதிவைப் படித்தேன்  அவர்மாதிரி சொல்லிச் செல்ல  எனக்கு இயலவில்லை  மொத்தத்தில்  என்னை நான்  சாமாதானப்படுத்திக் கொள்வது We get what we deserve  என்று சொல்லித்தான்   இருந்தாலும்  சொல்லமலிருக்க முடியவில்லை
நமது பிரதமர் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன்  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பை சந்தித்தார்  அந்த சந்திப்பால்  பலன் அடைந்தது அமெரிக்காவே ஏரா;ளமான  போர் விமானங்கள் வாங்கப்படும்  அதனால் அமெரிக்கர்கள் நிறையவே  வேலை வாய்ப்பினைப் பெறுவார்கள் இங்கிருக்கும் ஐடி கம்பனிகள்  அமெரிக்கர்களை  வேலைக் கமர்த்தவேண்டும்  வீசாக்கள் கிடைப்பதில் பிரச்சனைகள் தீராது  நிறையவே உள்ளூர் எதிர்ப்புகள் இருந்தாலும்   அமெரிக்க அதிபர் அவர்களின் நலனுக்காக பணி புரிகிறார்/ ஆனால்  அதிக மெஜாரிடியுடன் ஆட்சியில் இருக்கும்  மோடி அங்கிருக்கும்  இந்தியர்களைப்   பார்த்து சர்ஜிகல் ஸ்ட்ரைக் பற்றிப் பீற்றிப் பேசுகிறார் அணு ஒப்பந்தம்  பல ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டு நிறை வேற்றப்பட்டது ஆனால் இதுவரை அமெரிக்கக் கம்பனி யிடமிருந்து எந்த உதவியும் இல்லை. அது நஷ்டத்தில் ஓடுவதால்  சில ஒப்பந்தங்கள் நிலுவையில் இருக்கிறது இதை எல்லாம் நான்  எழுதுவது எனது பெர்செப்ஷ்ன் மூலமே  ஆனால் இந்நாட்டில் பெரும்பான்மையினரின்  ஆதரவால் யாரும்  யாரையும் கொல்ல முடியும்  கேட்கப் போனால் அது தவறு என்று அவர்களும் சொல்வார்கள் ஆனால் தடுப்பு நடவடிக்கை ஏதும் இருக்காது
கடைசியாக தமிழ்நாட்டில் பாஜகவினரின்  பெனாமி ஆட்சி நடை பெறுகிறது என்கிறது எனது பெர்செப்ஷன் 
கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கிறார்களென்பதும் ஒரு அனுமானம்  லாலு பிரசாத் யாதவ் ரயில்வே மந்திரியாய் இருந்தபோது விட்ட டெண்டர்களில் ஊழல் என்று  இப்போது சிபிஐ வழக்கு பதிவு செய்கிறார்கள் லாலு பற்றி எனக்கு ஏதும்    உயர் அபிப்பிராயமில்லை  இருந்தாலும் இத்தனை ஆண்டுகளுக்குப் பின்  சிபிஐ வழக்கு தொடுப்பதுஏதோ உந்துதல் மேல் என்று சந்தேகம்  அவர் ரயில்வே மந்திரியாக இருந்த சமயம் அவரது காலத்தில் ரயில்வே மிக்க சாதனைகள் புரிந்து முன்னேறியது  என்று மீடியாக்கள் வானளாவப் புகழ்ந்தது  நினைவுக்கு வருகிறது நீதி வழக்கு போன்றவை நாள்பட்டால் சரியாக இருக்காது என்பது அனுபவப் புரிதல்   இங்கு நான்  கூறியதை எல்லாம் நேர் எதிர் மறையாக எண்ணுவோருமிருக்கலாம் அது அவர்களது பெர்செப்ஷன் என்றே நினைக்க நேரும்     
                       
     
                   















              .
     
                   















              .






              
                   















              .