புதன், 28 ஜூன், 2017

மரம் செடி கொடிகள்


                             மரம் செடிகொடிகள்
                             ----------------------------------
 காணிநிலம்  வேண்டும் என்ற பாரதி அதில் எப்படிக் குடியிருக்க வீடும்  தென்னை மரங்களும் வேண்டும் என்னும்  கனவுகள் கண்டான் எனக்கு அந்தக் கனவுகள் எல்லாமிருக்க வில்லை. விஜயவாடா பணியின்  போது என்  மாமியார் மாமனார்  சொல்லி வாங்கிய இடம்பெங்களூரில் அமைந்தது  வீடு
கட்டுவதில் எனக்கு ஆர்வம் இருக்கவில்லை  நாங்கள் திருச்சியில் இருந்தபோது அந்த இடத்தில் யாரோ குடிசை போட்டு இருப்பதாகத் தகவல் தெரிவித்தார் என்  மாமனார் என் நண்பன் ஒருவனும் என்னை வீடு கட்டும் படி தூண்டினான்  பெங்களூர் வந்து  பார்க்கும் போது எங்கள் இடத்துக்குப் பக்கத்து மனையில் வீடு கட்டிக் கொண்டிருந்தார்கள் எங்கள் இடத்தில்  வீடு கட்ட வேண்டிய மணல் செங்கல் போன்றவற்றைப்  போட்டு இருந்தனர் மற்றபடி எந்த ஆக்கிரமிப்பும்  இருக்கவில்லை வந்ததுதான் வந்தோம் வீடு கட்டும்  ஆயத்தவேலைகளில் இறங்க முடிவெடுத்தோம்
வீடு கட்டும்  வரை படம்  தயாரிக்கும் போது இடத்தின்  முன்னும்  பின்னும்  சிறிது இடத்தை விட முடிவு செய்தோம்  அப்போதைய அந்த முடிவே இப்போது என்வீட்டின் முன்னும் பின்னும்  பசை பசேலென்ற இடமாகக் காட்சிதர  அமைந்திருக்கிறது
 சரி தலைப்புக்கு வா என்கிறது என்  மனசு  வீடு கட்டி முடித்து விட்டால அப்போது அங்கு குடிவரும்  நிலையில் இருக்கவில்லை நாங்கள்  ஒரு சுயதொழில் செய்பவருக்கு வாடகைக்கு விட்டோம்  அவருக்கு வாடகைக்கு விடுவது பற்றி அருகில் இருந்தோர் எதிர்ப்பு தெரிவித்தனர் அவர் குடிப்பவர் என்றும் வாடகை ஒழுங்காக வராதென்றும்   கூறி எங்களை சங்கடத்தில் ஆழ்த்தினர்  எனக்கு மனிதர்களை பார்த்து எடை போடுவதில் தவறு இருக்காதென்று ஒரு நம்பிக்கை. அதே போல் அவரிடம் பேசிய போது ஒரு நல்ல ஜெண்டில்மானாகவே தெரிந்தார் அதேபோல் அவரும்  தன்னை நிலைப்படுத்திக் கொண்டார்  என்  வீட்டின் முன்னும்பின்னும் இருந்த இடங்களில் சில மரம்செடிகொடிகளை நட்டு பராமரித்து வந்தார்  ஐந்து ஆண்டுகாலம் எந்தப் பிரச்சனையும்  தராமல் இருந்தார்  அவர் நட்டுச் சென்ற கொய்யாமரம்  மாதுளம்  மரம் பஞ்சு மரம்  கருவேப்பிலை மரம்  தென்னை  ஆகியவை பலன் தந்து  அதை அவர் அனுபவிக்கும் முன்பே நாங்கள் பெங்களூர் வர நேர்ந்தது. எந்தபிரச்சனையும் தராமல் காலி செய்து சொந்த வீடு கட்டிச் சென்றார். இப்போதும் அவர் நல்ல நண்பராகவே இருக்கிறார்
 வீட்டின்  முன்புறம்  இருந்த கொய்யா மரம் காய்க்கும் போது நிறையகல்  அடிபட்டு   தொந்தரவாக இருந்தது மாதுளையும் பஞ்சு மரமும்  கம்பளிப்பூச்சிகளைக் கொண்டு வந்தது மேலும்  கொய்யா மரம் இருந்ததால் அருகில் இருந்த தென்னை வளருவதில் சிரமம் இருந்தது கொய்யா மாதுளை பஞ்சு மரங்களை வெட்டி விட்டோம்   கருவேப்பிலை மரம்  பட்டுப்போயிற்று ஆக அப்போது சின்ன மரமாக இருந்த மாமரமும்  தென்னையும்  நன்கு வளரத் துவங்கியது  வாழைகள் சிலவற்றை வைத்தோம்   சில பெயர் தெரியாத செடிகளையும் ,  (கேட்டால் குரோட்டன்ஸ் என்று மனைவி சொல்லுவாள்) வைத்தோம் முன்னும்  பின்னும் பச்சைப் பசேலென்று இருந்தது காய்கறி வளர்க்கும் முயற்சி பலிக்க வில்லை.  தோட்டவேலை  சரியாகத்தெரியவில்லை  அப்படியும் இப்படியுமாக  இப்போதைய நிலைக்கு வந்திருக்கிறது
என் தோட்டத்தில் ( அப்படிச் சொல்லலாமா) சில எக்ஸோடிக் வகைப் பூச்செடிகள் வளர்ந்தன பெயர் தெரியாதவற்றின் பெயர்களை வலையில் எழுதிக் கேட்டுத்தெரிந்து கொண்டேன்   இப்போது அவற்றின்  சில படங்களைப் பகிர்கிறேன்   முன்பே பகிர்ந்தும் இருக்கிறேன்  என்ற நினைவு 
 பூக்களை செடியில் இருக்கவிடுவதா அல்லது பறித்து எடுப்பதா என்ற சந்தேகம் எழுவதுண்டு  நல்ல ரோஜாப்பூக்களை வீடு ஏறி வந்து  பறித்துச் சென்று விடுகிறார்கள் ஒரு முறை கேரளா சென்றபோது  அங்கிருந்து எடுத்து வந்த  வெற்றிலைச் செடி இப்போது  கொடியாகி மாமரம் பற்றி மேலே  சென்று விட்டது  மாமரம்  நன்கு காய்க்கிறது  இந்த முறை எல்லோருக்கும் கொடுத்து மகிழ்ந்தோம்  தென்னையில் ஒன்றின் மீது இடி விழுந்து  கெட்டு விட்டது இன்னொரு மரம் நன்கு காய்க்கிறது
 என்ன பிரச்சனை என்றால்  காய்களைப் பறிக்க முடிவதில்லை  மரம் ஏறிகள் கிடைப்பதே பாடாக இருக்கிறது தேங்காய்களைப் பறிப்பதே  சிரமமாய்  இருக்கிறது  அப்படியே காய் பறிக்க யாராவது வந்தாலும் மனம்பயத்தால்  உறைகிறது அவர்களுக்கு எந்த பிரச்சனையும்  இல்லாமல் இருக்க வேண்டும் அல்லவா ஒரு முறை மரம் ஏற ரூ. 200 லிருந்து  500 வரை கேட்கிறார்கள்  நிறையக் காய்கள் இருக்கும் போது எடுக்கக் கொடுத்துதானே ஆகவேண்டும்   மட்டைகளில் இருந்து தேங்காய் உரிக்க காய் ஒன்றுக்கு ரூ 2 / கேட்கிறார்கள் மரத்தில் கிடைக்கும்  காய்கள் எங்களுக்கும்  மகனுக்கும்  போக சில உறவினர்களுக்கும்கொடுப்பதுண்டு  மாமரத்திலும்  வெற்றிலைக் கொடிகளிலும்  பெரிய சிவப்பு எறும்புகள் இலைகளை சுருட்டி என்னவோ செய்கின்றன  மரம் ஏற முடிவதில்லை.  விபூதி தெளித்தால்  போய் விடுகின்றன ஆனால் மரத்தின்  மேல் எப்படி விபூதி தெளிப்பது
 இனி சில செடிகளுடைய படங்களைப் பார்ப்போம்   
                   

 
எங்கள் வீட்டுத்தென்னை 

 
லாப்ஸ்டர் பூ --  நண்டுகால் பூ


 
ஃபுட்பால் லில்லி 


 
மாடி ஏறிய முல்லை கொடி 
மாமரம்  பற்றிய வெற்றிலைக் கொடி  ( பார்க்க சிவப்பு எறும்புகள் )
விபூதி தெளித்த வெற்றிலைக் கொடி 
வெற்றிலையில் அது காயா பூவா
மாங்காய் பறிக்க 
தொட்டியில் ரோஜாப்பூ 
குரோட்டன்ஸ் ?
தெச்சிப் பூக்கள் 
வெற்றிலைக் கொடி கீழே 
பிரம்ம கமலம் அல்லது நிஷாகந்தி  பூ வாடிய நிலையில்
ஒரு முறை பூத்துப் பார்த்தது  அதன்  பின்  பூ  பூப்பதைக் காண முடியவில்லை  செடிகள் இருக்கின்றன

பலமுறை நம்பிக்கைகளைப் பற்றி எழுதி சிலரிடம் வாங்கிக்கட்டிக் கொண்டும்  இருக்கிறேன் அந்தமாதிரியான நம்பிக்கை சார்ந்த .ஒருதகவல் நாங்கள் பெங்களூர்  வந்தபோது  வீட்டின்  சுவரருகே ஒரு அத்தி மரம் வேறூன்றி இருந்தது. அதனால் வீட்டின் கட்டிடம்பலவீனப்படலாம் என்று தோன்றியது அதை வேறோடு வெட்ட முடிவு செய்தேன்  பக்கத்தில் இருப்போர் அதை வெட்டக்கூடாது வெட்டினால் அசம்பாவிதம் நிகழுமென்று பயமுறுத்தினர்  என் சேமிப்பு எல்லாவற்றையும் போட்டுக் கட்டிய வீடே எனக்கு முக்கியமாகப் பட்டது  ஒரு நாள் மரத்தை வெட்ட ஒருவரைக் கூட்டி வந்தேன்  அவர் அது அத்தி மரமென்றதும் பின்வாங்கினார் மரத்தை வெட்டி தன்சாவை வரவழைக்க அவர் விரும்பவில்லை.  இருந்தாலும் மரம்  வெட்டுவதால் வரும்  பணம் அவருக்கு வேண்டி இருந்தது மரம் வெட்டும்பாவம்  தனக்குக் கூடாது என்று நினைத்து  மரத்தின் மேல் மூன்று வெட்டுகளை என்னைச் செய்யச் சொன்னார்  எனக்குத்தானே சாவுவரும்  என்பதுஅவர் எண்ணம்  அப்போது எனக்கு 55 வயது நான்  வெட்டுக்கத்தியை வாங்கி மூன்று வெட்டுகள் அவர் கூறியபடி வெட்டினேன்   மீதிவெட்டலை அவர் செய்து பணம்  வாங்கிப் போனார்  இன்று எனக்கு வயது 78  நன்றாகத்தான் இருக்கிறேன்  மரம் வெட்டினால் சாவு என்னும் நம்பிக்கை அறிவு சார்ந்ததா மூட நம்பிக்கையா  வாசகர்களே தீர்மானியுங்கள்     .






         




  

50 கருத்துகள்:

  1. அத்தி மரத்தில் வெட்டினால் பால் (போன்ற ஒரு திரவம்) வரும் என்பதால் அதை வெட்டக்கூடாதுன்னு சொல்வாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் அவர் சொன்ன காரணமே வேறு தனக்கு சாவு வரும் என்றுபயந்தார் அதனால்ர்தான் முதலில் என்னை வெட்டச் சொன்னார்

      நீக்கு
  2. //அவர் அனுபவிக்கும் முன்பே நாங்கள் பெங்களூர் வர நேர்ந்தது. எந்தபிரச்சனையும் தராமல் காலி செய்து சொந்த வீடு கட்டிச் சென்றார். இப்போதும் அவர் நல்ல நண்பராகவே இருக்கிறார்/

    இவர்தான் உயர்ந்த மனிதன் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் மரம் வைத்தாரே....

    எப்பொழுதுமே மரத்தை நட்டவன் அதன் கனியை சுவைப்பதில்லை என்று கில்ஜியானந்தா சுவாமிகள் சும்மாவா ஜொள்ளி வைத்தார் ?

    தேவகோட்டையில் எங்களது தோட்டத்தில் 6 மரம் இருக்கிறது அதை வெட்டி தேங்காய் பறிப்பதற்குள் நான் குறைந்தது 20 நாட்களாவது அவருக்கு போன் செய்து அழைக்கணும் வேறு வழி ? அழைக்கிறேன்

    //இன்று எனக்கு வயது 78 நன்றாகத்தான் இருக்கிறேன் மரம் வெட்டினால் சாவு என்னும் நம்பிக்கை அறிவு சார்ந்ததா மூட நம்பிக்கையா வாசகர்களே தீர்மானியுங்கள்//

    மிகத்தெளிவாக தெரிகிறது ஐயா இது மூடநம்பிக்கை என்று.

    புகைப்படங்கள் அருமை
    த.ம.1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி - எங்கிருந்து த ம போட்டீர்கள்? எனக்கு ஒன்றும் காணவில்லை?

      நீக்கு
    2. நண்பரே ஓட்டு இடவேண்டுமெனில் முதலில் ஓட்டு அளித்து விட்டு பிறகு கருத்துரையை வெளியிட வேண்டும் கருத்துரை முதலில் விட்டால் ஓட்டுப்பெட்டியை காக்கா தூக்கிப் போய்விடும்.

      ஐயாவின் தளத்தில் இப்படி எனது தளத்தில் எப்படியும் செய்யலாம்.

      நீக்கு
    3. நண்டுக்கால் பூ வாத்து மாதிரியே இருக்கிறது ஐயா.

      நீக்கு
    4. என்னால் எனது தளத்துக்கே ஓட்டு போட முடியவில்லை/தெரியவில்லை..

      நீக்கு
  3. அந்தக்காலத்தில் இடம் வாங்கியதால் உங்களுக்கு மரம் செடி கொடிகளை வைப்பதற்கு இடம் இருக்கிறது. படங்கள் பார்க்கவே நன்றாக இருக்கின்றன. வீட்டைச் சுத்தி மரங்கள், செடிகள் இருப்பது நன்றாகத்தான் இருக்கும். நான் 2000ல் எக்காரணத்தைக்கொண்டும் லோன் வாங்கமாட்டேன் என்று சொல்லி சேமிப்பிலிருந்துதான் அரை கிரவுண்டு பெங்களூரில் வாங்கினேன். ஒருவேளை அங்கே காலம் கழிக்கவந்தால், வெற்றிலைக்கொடி போன்றவைகளைமட்டும் வைக்கமுடியும்.

    தென்னையை பெங்களூரில் வெட்ட விரும்பமாட்டார்கள். என் எண்ணம், தென்னைமரம் போன்றவை உபயோகம் இல்லை. ஏறிப் பறிக்க வாய்ப்பும் இல்லை. தேங்காய் முற்றி வீட்டில் விழுந்து வீடு சேதமாகும். அத்தியைப்பற்றி கேள்விப்பட்டதில்லை.

    நம்பிக்கைக்கு PROOF ஏது. அது மனசு சம்பந்தப்பட்ட விஷயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் வாங்கிய இடம் பெரிதல்ல வெறு 60 க்கு 30 அடி அதில் முன்னும் பின்னும் சுமார் 25 அடி விட்டிருக்கிறேன் மீதி இடத்தில்தான் நான் தோட்டம் என்று சொன்னதுநம்பிக்கைகளை பலரும் கேள்வி கேட்பதில்லை அவை பகுத்தறிவுக்கு ஒவ்வாததானாலும்

      நீக்கு
  4. பதில்கள்
    1. வருகைக்கு நன்றி சார் அந்த தென்னை படம்நீங்கள் எடுத்தது

      நீக்கு
  5. உங்களுடைய தோட்டத்தில் உள்ள மரமும் செடிகளும் பார்க்க அழகாய் இருக்கின்றன. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் நண்டுக்கால் பூச்செடியின் தாவரப்பெயர் Heliconia rostrata ஆகும்.

    இதை மலையாளத்தில் பூவாழை/தோட்ட வாழை என அழைப்பார்கள். நான் கோட்டயத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, அதனுடைய கிழங்கை (Rhizome) எடுத்துவந்து என் வீட்டில் நட்டு வைத்தேன். அது பூத்து சடைப்பின்னல் போல் இருந்ததை பார்த்து பலபேர் என்னிடமிருந்து கிழங்குகளை வாங்கிக்கொண்டு போனதுண்டு.

    அத்தி மரத்தை வெட்டினால் ஆகாது என்பது மூடநம்பிக்கைகளுள் ஒன்று.
    //மரத்தின் மேல் மூன்று வெட்டுகளை என்னைச் செய்யச் சொன்னார்//

    என்ற வரிகளைப் படித்தவுடன் சிரித்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது அந்தச்செடியும் பட்டுப் போய் வருகிறது வருகைக்கு நன்றி ஐயா மூன்று வெட்டுகளால் ஏற்படும் பாதிப்பு எனக்குத்தானே அவருக்கு வேண்டிய பணம்பாதிப்பில்லாமல் கிடைத்ததே

      நீக்கு
  6. வெட்டினால் நல்லது என இருந்தால்
    நிறைய மரம் இல்லாமல் போயிருக்கும்
    மூட நம்பிக்கையில் உள்ள நன்மைகளை
    பராமரிப்பதில் தவறில்லைதான் இல்லையா ?

    வீட்டைச் சுற்றிப் பசுமை பார்வைக்கு
    மட்டுமல்ல மனதிற்கும் குளிர்ச்சி

    படங்களுடன் பகிர்ந்த விஷயம்
    எங்களுள்ளும் குளிர்ச்சி உண்டாக்கிப்
    போகிறது

    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரத்தால் பாதிப்பு என்பதால்தானே வெட்டச்சொன்னேன் மூட நம்பிக்கைகளுக்கு இப்படியும் வக்காலத்து வாங்கலாமா வருகைக்கு நன்றி சார்

      நீக்கு
  7. பெங்களூரில் தோட்டத்துடன் கூடிய அழகிய வீடு...இப்பொழுது பலரின் நிறைவேறாத கனவு...

    அதனால் அடுக்கு மாடி வீட்டில் சில பல தொட்டிகளை வைத்து மகிழ்கின்றனர்..நானும் தான்..

    ஆன உங்க வீட்டு தோட்டம் அழகா பசுமையாய் இருக்கு..அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதில் இருக்கும் அசெடிகொடிகளை விட சுற்றி இருக்கும் இடம்பசுமையாய் இருக்கிறதே வருகைக்கு நன்றி மேம்

      நீக்கு
  8. அத்தி மரம் மஹாவிஷ்ணு சொரூபம் என்பார்கள்! :) வில்வமரம் மஹாலக்ஷ்மி மற்றும் சிவ சொரூபம்! வேப்ப மரம் அம்பிகை! அரசும் வேம்பும் இருந்தால் அவற்றையும் வெட்ட மாட்டார்கள்! பொதுவாக மரங்களை வெட்டக் கூடாது என்பதற்காகவே இம்மாதிரியான நம்பிக்கைகளை இணைத்திருக்கலாமோ என்னமோ! எங்க வீட்டிலும் ஓர் அத்தி மரம் இருந்தது. அது பக்கத்து வீட்டிற்கு இடைஞ்சலாக இருந்ததால் வெட்டும்படி தான் ஆயிற்று! :) நான்கு தென்னை மரங்கள் மட்டுமே இப்போது இருக்கின்றன! குடித்தனம் வைத்திருப்பதால் யாரும் சரியாகப் பராமரிப்பதில்லை! காய்கள் கீழே விழுந்து பல தென்னை மரங்கள் முளைத்திருக்கின்றன. அதிகம் இருப்பதை அக்கம்பக்கம் இருப்பவர்கள் எடுத்துச் செல்கிறார்கள். நாங்கள் போயிருந்தப்போ ஒரு தேங்காய் கூட எடுத்து வர முடியவில்லை! :) சென்னையில் எப்படினு தெரியலை. அம்பத்தூரில் ஒரு மரத்துக்கு 100 ரூபாய் வரை கேட்கிறதாகச் சொன்னார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரங்களில் கடவுளைக்காண்பவர்கள் சக மனிதர்களைக் கொலை செய்கிறார்களே அதுவும் விலங்குகள்பெயர் சொல்லி

      நீக்கு
  9. முல்லை, மல்லிகை, விருட்சிப் பூ, தங்க அரளி, அரளி, சந்தன முல்லை போன்றவை இருந்தன! மாமரங்களும் இருந்தன. அக்கம்பக்கம் குடியிருப்புக் கட்டுகையில் சிமென்டும், சுண்ணாம்பும் மணலும் விழுந்து மரங்கள் பட்டுப் போய்விட்டன! வாழையும் ஏலக்கி என்னும் வகை இருந்தது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செடிகள் மலரும்போது மகிழ்ச்சிதருகிறது பூக்களின் வாசம் மன நிறைவைத்தருகிறது என் இடத்தைஇதனிலும் நன்றாகப் பராமரிக்க வேண்டும் ஆனால் முடிவதில்லையே

      நீக்கு
    2. தோட்டம் அமைப்பதற்கும் ரசனை, பொறுமை இரண்டும் வேண்டும். அழகான புகைப்படங்கள் .

      நீக்கு
    3. RASANAIYUM PORUMAIYUM IRUKKIrATHU AANAL UTALIL VALIMAI KURAINTHU VITTATHU VARUKAIKKU NANrI SIR MOZHIMATRAM PATHIVIL KAANAVILLAIYAE

      நீக்கு
  10. வீட்டைச் சுற்றிலும் மரங்கள் மனதிற்க மகிழ்வை வழங்கும்

    பதிலளிநீக்கு
  11. மலர்ந்த நிஷாகந்திப் பூ அழகாய் இருக்கும் ,நீங்கள்கூட ஒருமுறை மலர்ந்ததை என் தளத்தில் சொல்லியிருந்தீர்கள் !

    இப்படியும் ஒரு மூட நம்பிக்கையா ?அத்திப் பழக் கன்னத்திலே கிள்ளிவிடவா பாடல் நினைவுக்கு வருகிறது ,கிள்ளலாம் ,வெட்டத்தான் கூடாதோ :)

    பதிலளிநீக்கு
  12. நேற்று தொலைக்காட்சியில் ப்ரம்மகமலம் பூ பற்றி காட்டின்னார்கள். எனக்கு உங்கள் நினைவு வந்தது. தோட்டம் ஜோர். மாவடு புதுசாகப் பறித்து ஊறுகாய் போட்டிருக்கலாமே..! அத்தி மரத்துக்கும் அப்படிச் சொல்வார்களா? எங்கள் வீட்டு ஸோலார் பண்ணலை மறைக்கும் அரச மரத்தின் கிளைகளை வெட்ட நான் படும் பாடும் இத்தகையதே!

    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. maraththil aeri parippathu thaanae pirchanai manikkavum meentum pathivu thira pathil pirachanai thamiz ezutha mutiyavillai nanri sri

      நீக்கு
  13. உங்கள் வீட்டு அனுபவம், தோட்டம் வந்த விவரம் எல்லாம் அருமை.
    தென்னைமரம் ஏற ஆட்கள் வருவது இல்லை, வந்தாலும் காசு அதிகம் கேட்கிறார்கள். உயரம் அதிகமாகி விட்டதால் அவர்களை சொல்லியும் குற்றமில்லை.

    தோட்டம் நிறைய தொட்டிகளில் வைத்து இருந்தேன் அவற்றை மாயவரத்தில் விட்டு வந்து விட்டேன். இங்கு சின்ன தொட்டியில் துளசி, திருநீற்றுபச்சிலை, கற்றாழை மணிபிளான்ட் செடி மற்றும் வைத்து இருக்கிறேன். மாடி குடியிருப்பில் அவ்வளவுதான் வைத்து பராமரிக்க முடியும். மொட்டை மாடி கிடையாது உபயோகத்திற்கு.

    பதிலளிநீக்கு
  14. அழகான பூந்தோட்டம் சார். நிஷாகந்தி கூட இருக்கே ஆமா வருஷத்துல பூக்கும். அதாவது பிரம்ம முகூர்த்தநேரம் என்று சொல்லப்படும் நேரத்தில் பூக்கும். அப்புறம் வாடிவிடும்.

    அப்போதே வாங்கிக் கட்டியதால் இப்படி உங்களால் அழகான தோட்டத்துடன் இப்போது பங்களூரில் கால் வைக்கக் கூட இடமில்லாமல் பெருத்துவிட்டதே...முன்பு அவுட்டர் என்று சொல்லப்பட்டவை எல்லாம் இப்போது அங்கிருந்த மரங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு வீடுகள் லேஅவுட் நகர்களாக மாறி வருகின்றனவே. நாங்கள் சென்ற முறை அங்கு வந்திருந்த போது அறிய முடிந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
  15. படங்கள் அழகா இருக்கு சார்!!! பூக்களும்..

    கீதா

    பதிலளிநீக்கு
  16. மரங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தினால் தான் அவற்றுக்கு மஹாவிஷ்ணு லக்ஷ்மி சிவன் அம்பாள் என்ற காரணம் கற்பித்து வைத்தார்கள்..

    மரங்கள் அனைத்தும் காற்றைப் புதுப்பித்துக் கொண்டிருக்கின்றன என்பது அறிவியல்..

    உயிர்வளியை வழங்குவதால் உயர் தகுதி..

    மரத்தை வெட்டுதற்கு வந்தவர் சொன்ன விஷயம் அவரவர் நம்பிக்கை.. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு மாதிரி..

    பதிலளிநீக்கு
  17. இயற்கையோடு இணைந்த பதிவு. ஆம். புகைப்படங்களைச் செறிவாக இணைத்துள்ள விதம் அருமை. தங்களின் ரசனையை அவற்றில் உணரமுடிந்தது.

    பதிலளிநீக்கு
  18. உங்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியது பல... ஆனாலும்...

    சில நம்பிக்கைகள் பலருக்கும் மூட நம்பிக்கைகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. pakuththarivu aerka mutiyaathathaiththaan solkiraen varukaikku nanri dd valaikkus selvathilum thamizh ezuththuru kontu varuvathilum meendum pirachanai

      நீக்கு
  19. நன்றாக அமைந்திருக்கிறது வீடும் தோட்டமும். முதலில் வாடகைக்கு வந்தவர் கனிவான மனமுடையவர் எனத் தோன்றுகிறது. தான் அஞுபவிக்கமோட்டோம் எனத் தெரிந்தும் கொய்யா, கருவேப்பிலை, மா என நட்டுவிட்டு, உங்களுக்காக விட்டுவிட்டுச் சென்றார். வாழ்க நல்மனங்கள் எங்கிருந்தாலும்.

    தோட்டமென்று வந்துவிட்டால் பூச்சிகள், எறும்புகளும் வரத்தான் செய்யும். ஊரத்தான் செய்யும். அவர்களின் வாழ்விடமும் அதுவே!

    பதிலளிநீக்கு
  20. மரம் செடி கொடிகள் வைப்போர் அவர்களால் உபயோகிக்க முடியாது என்று நினைப்பதில்லை சில நேரங்களில் அப்படி அமைகிறது என் வீட்டின் முதல் குடித்தனக்காரர் நல்ல நண்பரே இன்றும் பூச்சிகளும் எறும்புகளும் ஊரத்தா செய்யும் நாமும் அவற்றை ஒழிக்க முயற்சிதான் செய்வோம் அவற்றின் வாழ்விடம் என்று வாளா இருப்பதில்லை. எனக்கு எம் ஆர் ராதாவின் ரத்தக்கண்ணீரில் ஒரு வசனம் நினைவுக்கு வருகிறது ஜீவகாருண்ய சங்கத்தைச் சேர்ந்தவர் இரவு மூட்டைப்பூச்சி கடித்தால் சும்மா இருப்பதில்லை. நசுக்கிக் கொன்று விடுவார்

    பதிலளிநீக்கு
  21. மரம் செடி கொடிகள், அதன் படங்கள் மற்றும் பகிர்வு அனைத்துமே அருமை.

    பதிலளிநீக்கு
  22. தேனம்மைக்கு வணக்கம் நம்பிக்கை அவரவர் மனம் சார்ந்த விஷயம்புரிகிறார்போல் இருக்கிறது ஆனால் பகுத்தறிவுக்கு ஒவ்வாத மூட நம்பிக்கைகளையும் அதில் சேர்க்க வேண்டுமா தெரியலையே

    பதிலளிநீக்கு
  23. மரங்களின் செழுமையும் பூக்களின் வாசம் நிறைந்த பதிவு. சமீபத்தில் தான் என்னுடைய சிறு செடிகளைப்பற்றி பகிர்ந்திருந்தேன். வலைப்பூவில் என் முதல் பதிவே பூக்களைப் பற்றி. நகர்புறங்களின் இப்பசுமை குறைந்துவிட்டது நாம் செய்யும் மிகப்பெரிய தவறு என்பது என் எண்ணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நகரமயமாக்கலின் முதல் பலியே இந்தப் பசுமை அழிவுதான் வருகைக்கு நன்றிமேம்

      நீக்கு