ஞாயிறு, 25 ஜூன், 2017

மனசில் தோன்றியது

வாழ்வின் விளிம்பில் என்னும் நூலில் வந்தவை 
இது      இதுவரை அச்சில் வராதது 
 புஸ்தகா மின்னூல் பதிப்பாக இது வரை நான்கு நூல்கள் வெளியிட்டிருக்கிறேன்  யாராவதுபடிக்கிறார்களோ  இல்லையோ தெரியாது  ஒரு வேளைகணினி பழுது பட்டால் என் எழுத்துக்களாவது சேமிப்பில் இருக்கும் அல்லவா மின்னூலில் இதுஒரு பயன்
1) நினைவில் நீ என்னும்  நாவல்
2) சிறுகதைத் தொகுப்பு
3) கவிதைகள் தொகுப்பு
4) கதை கதையாம்காரணமாம் சிறுகதைகள்

இதில் வந்துள்ள கதைகளும் கவிதைகளும் பதிவில் வந்தவையே  இருந்தாலும்சேர்த்து வைத்துபடிப்பது போல் வருமா  படிக்காதவர் வாசித்து பலன் அடையட்டும்  மற்றவர் அதிர்ஷ்டம்  இல்லாதவரே 














நாவல் 1966ல் எழுதியது 














பல genre களில்  எழுதியது
மின்னூல்களை வெளியிட்டாயிற்று  இனி கொள்வார் உண்டோ எனக் காத்திருக்க வேண்டும்
-------------------------

சில நாட்களுக்கு முன்  தமிழே உலகின்  முதன் மொழி என்னும்  தலைப்புக்கு எழுத திரு யாழ்பாவாணன்  கேட்டிருந்தார்  நானும் தலைப்புக்கு சம்பந்தம் இல்லாமல்    தாய் மொழி  பற்றிய சில கருத்துகள்  என்று எழுதி இருந்தேன் அப்போது இந்தக் காணொளி கிடைத்திருக்கவில்லை  இருந்தாலும்  பெட்டெர் லேட் தான்  நெவெர் 


---------------------------------------------    
                   
  நானும்  சுமார் ஏழு ஆண்டுகளாகப் பதிவுகள் எழுதி வருகிறேன் தமிழ்மண வரிசைப்பட்டியலில்  20 அல்லது 21 ராங்குக்குள் இருக்கிறேன்   இருந்தாலும்   வாசகர் எண்ணிக்கை  இப்போதுதான்  2 லட்சத்தைத் தொட்டு இருக்கிறது  சிலரது பதிவுகளுக்கு வாசகர் எண்ணிக்கை  ஐந்தாறு லட்சத்தைத் தொட்டு விட்டதை அறியும் போது  எங்கோ நான் சரியாகச் செயல் படவில்லை என்று தெரிகிறது நான் தமிழ் மணத்திரட்டியில் மட்டும் தானிணைந்திருக்கிறேன்  மேலோட்டமாகப் பார்க்கும் போது நல்ல ஆதரவு இருப்பது போல்தான்  இருக்கிறது 
-------------------------------------------------


தந்தையர் தினத்தன்று பதிவிட்டிருக்க வேண்டும்   இருந்தால் என்ன  தந்தையர்   பற்றி நினைக்க நாளேதும் இருக்கிறதா ? தாமதமானாலும்  தந்தையர் பற்றிக் கூறலாம்தானே காணொளி பாருங்கள்
--------------------------------------------------------------      


மீண்டும் பதிவிடுவதில் பிரச்சனை  என் தளத்துக்கு என்னால் போக முடியவில்லை சொடுக்கினால் வெயிட்டிங் ஃபர் தமிழ்மணம் என்று வந்து சுற்றிக் கொண்டே இருக்கிறது நான்  கூகிள் க்ரோம்  உபயோகிக்கிறேன் மொஜில்லா மூலம் வந்தால் பதிவு திறக்கிறது ஆனால் மொஜில்லாவில் வந்தால் தமிழில் எழுத முடிவதில்லை வேர்ட் ஃபைலில் எழுதி காப்பி பேஸ்ட் செய்யவேண்டும் எனக்கானால் பின்னூட்டமிட்டவர்களுக்கு மறு மொழி அளிக்க வேண்டும்  அதில் வருகிறது பிரச்சனை இதையும்  வேர்ட் ஃபைலில் எழுதி காப்பி பேஸ்ட் செய்கிறேன்  என்னதான் ப்லாகரோ புரியவில்லை. முன்பு ஒருமுறை இதேபோல் வந்து  சுமார் ஒரு வாரம் கழிந்து அதாகவே சரியாயிற்று, அதுபோல் இப்போதும்  ஆகும் என்று நம்புகிறேன்   பிறர் தளங்களைப் பார்ப்பதில் தொந்தரவு இல்லை. 
 இதை எழுதும்போது மேலே சொன்ன பிரச்சனை காணவில்லை...........!
------------------------------------------------
   

சமூக வலைத்தளங்கள் இங்கே பெங்களூரில் ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக  ஹிந்து பத்திரிக்கையில் படித்தேன் நம்ம மெட்ரோவில் ஹிந்தியில் அறிவிப்புகளும் பதாகைகளும்  இருப்பதைத் தட்டிக்கேட்கிறார்களாம்   வழக்கம்போல ஏதோ சப்பைக்கட்டும் இருப்பதாகவும்  அறிகிறேன் ஹிந்தித் திணிப்பைத் தட்டிக் கேட்காவிட்டால் ஸ்டாலின்  சொன்ன மாதிரி இந்தியா ஹிந்தியாவாக மாற வாய்ப்புண்டு இந்தமாதிரி சுழ்நிலையில் எரிகிற கொள்ளியில் எண்ணெய்  ஊற்றும் வேலையைச் செய்கிறார் வெங்காய நாயுடு  மன்னிக்கவும்  வெங்கையா நாயுடு இவர் சொற்கள் மித வாதிகளையும்   தீவிர எதிர்ப்பாளராக்கும்  ஹிந்தி அத்தியாவசியம்   அது இல்லாமல் முன்னேற்றம் இருக்காது  அது நம் நாஷனல் லாங்குவேஜ் என்கிறார் யாரோ சொன்னால் தனிப்பட்டவரின் கருத்து என்று ஒதுக்கலாம்  ஆனால் இவர் மோடியின்  அடிவருடி மந்திரியாயிற்றே இவர்  
------------------------------------------------------------ 
சென்றவாரப்பதிவில்  டி பி கைலாசத்தின்  கவிதை துரோணாவுக்கு  யாரும்மொழியாக்கம் செய்ய வரவில்லையானால் நான் பின்னூட்டத்தில் எனது மொழியாக்கம் வெளியிடுவேன் என்று எழுதி இருந்தேன் பின்னூட்டங்களை வந்து பார்ப்பவர்களது எண்ணிக்கை மிகவும் குறைவு என்பதால் அதை இந்தப்பதிவில் மிகுந்த தயக்கத்துக்குப் பின்  வெளியிடுகிறேன்  படிக்காதவனின் மொழியாக்கம் சரியா என்னும்  சந்தேகம்  இருக்கிறது ஆங்கில மொழி வல்லுனர்கள் கூறலாமே நன்றி 


அடியேனின் தமிழாக்கம் கீழே.

பிளக்க முடியாது எனக் கருதி
அமைத்த வியூகம்,, நீயே வியக்கும் வண்ணம்,
உன் மாணாக்கன் மகனாம் ஒரு இளங்கன்றால்
உடைக்கப் பட்டதும்,, போர் முறை மீறி,
அவனை வீழ்த்த வேறொரு வியூகம் அமைத்தனை நீ.
அறிந்திலை அப்போது , அதே யுத்த தர்மம் மீறலால்,
பார்த்தனின் புத்திர சோகம் உனக்கும் புரியும் எனவே.

 சென்றபதிவில் துரோணாவை ஆங்கிலத்தில் பார்க்க தயங்குபவர்களுக்கு அவரது கவிதை இங்கே 
      
   டிபி கைலாசத்தின்   DRONA

THY flaunted virgin phalanx cleft a two
By but a stripling, thine own pupil's son
Whose bow abash'd his sire's preceptor! You,
In pain of tortur'd vanity, let run
Thine ire to blind thee to the blackest deed
Besmirch'd the scroll of Aryan Chivalry!
The while thy master's ghoulish hate did feed
And fatten on thy victor's butchery,
 
Thy father's heart had it bore some pity
For Partha in his dire calamity,
Dread Nemesis had spar'd thine aged brain
The searing, killing agony accrued
Of death of thine own son. Thou didst but drain
The bitter gall thy vanity had brewed!
                                                                      


                



   
    
















44 கருத்துகள்:

  1. வழக்கம் போல் நீளமான பதிவு! என்றாலும் எல்லா விஷயங்களையும் தொட்டுச் சென்றிருக்கிறீர்கள். மொழிபெயர்ப்பும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புஸ்தகா மின்னூல்களின் அட்டைப்படங்கள் பதிவு நீளமாக இருப்பதுபோல் கட்டுகிறதோ என்னவோ மொழிபெயர்ப்பு நன்றாக இருக்கிறது என்று சொல்லி இருப்பது மகிழ்ச்சி தருகிறது

      நீக்கு
  2. புஸ்தகா வெளியீடுகளுக்கு வாழ்த்துகள்.

    வாசகர் எண்ணிக்கையைக் குறித்துக் கவலை கொள்ளாமல் எழுதுங்கள். அது தானாய் வரும். தலைப்புகளை கொஞ்சம் 'ஈர்ப்பாய்' வைக்க வேண்டும்!!

    காணொளி எனக்கு கண்ணில் படவில்லை. கில்லர்ஜி பதிவிலும் எனக்கு இப்படித்தான் ஆகும்!

    ஓல்ட் ஹிஸ்டரி அழையுங்கள். இது மாதிரி திறக்காத பிரச்னைகள் தீரலாம்! "லாம்"தான்!

    மொழிபெயர்ப்பை ரசித்தேன்.

    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஓல்ட் ஹிஸ்டரி அழையுங்கள்.// அழிக்கணுமா? அழைக்கணுமா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

      நீக்கு
    2. அழியுங்கள்! கர்ர்ர்ர்ர்ர்ர்...

      நீக்கு
    3. ஸ்ரீராம் சார்... adobe flash player-யை உங்கள் கணினியில் நிறுவுங்கள்...

      நீக்கு
    4. வாசகர்கள் எண்ணிக்கை குறித்த ஒரு தகவல்தான் அது நான் கவலைப்படவில்லை காணொளிகளை இணைக்கவே தயக்க மாக இருக்கிறது ஓல்ட் ஹிஸ்டரி நிறையவே அழுத்து இருக்கிறேன் எனக்கு பிரச்சனை தமிழ்மணம் மூலம் வருவதால் இருக்கலாம் என்று தோன்றுகிறது ரசிப்புக்கு நன்றி ஸ்ரீ

      நீக்கு
  3. உங்கள் தளத்தில் நீங்களே உங்களுக்குத் போட்டுக் கொள்ளக் கூடிய வோட்டை நீங்கள் போடுவதில்லை என்று நினைக்கிறேன். மற்ற தளங்களில் போடுவது போலவே உங்கள் தளத்திலும் நீங்கள் வோட்டுப் போட்டுக் கொள்ளலாமே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு தமிழ்மண ஓட்டுப் போடத் தெரியவில்லை. முன்பே சொல்லி இருக்கிறேன்

      நீக்கு
  4. பல்சுவைப் பதிவு. நல்லாத்தான் இருந்தது. நான் பொதுவா கவிதைகள் படிப்பதில்லை (புரியாது என்ற மன நிலைதான். சந்தத்துல எழுதியிருந்தா ஓசை நயத்துக்காகப் படித்துப்பார்ப்பேன்)

    தேசீயத்துக்கு ஒரு மொழி தேவையா இருக்கலாம். ஆனால் அவர் அவர் தாய்மொழியை, அதுவும் பெருமை வாய்ந்த தமிழ் மொழியை உதாசீனப்படுத்துவது ஒரு வகையில் நல்லதுதான். பாஜகவுக்கு இருக்கற வாக்காளர்கள் குறையும்.

    வாசகர் எண்ணிக்கை, தமிழ்மண ரேங்க் - இதைப்பற்றி ரொம்ப எண்ணக்கூடாது என்பது என் கருத்து. உங்கள் திருப்திக்கு எழுதுகிறீர்கள். படிப்பவர்கள் படிப்பார்கள், கருத்துரையிடுவார்கள். நம் கடன் பணி செய்து கிடப்பதே.

    'தமிழே முதல் மொழி' - அவரவர்களுக்கு அவரவர் அம்மா உசத்திதான். இருந்தாலும், இந்தியாவில், சமஸ்கிருதம், தமிழ் ஆகிய இரண்டும்தான் தொன்மையான மொழிகள். அதில் இன்னும் வாழ்ந்துகொண்டு இருப்பது தமிழ். உங்களுக்குத் தெரியும் என நினைக்கிறேன். ஐ.நா எடுத்த கணிப்பின்படி (after their analysis) நூற்றாண்டுகளில் அழியக்கூடிய மொழிகளில் தமிழ் 5வது (அல்லது 7) இடத்தில் இருக்கிறது.

    காணொளி வரவில்லை. த. ம வாக்கிடுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /தமிழ் மொழியை உதாசீனப்படுத்துவது ஒரு வகையில் நல்லதுதான். பாஜகவுக்கு இருக்கற வாக்காளர்கள் குறையும்/ இது புரியவில்லை நான் எழுதியதை நானே கவிதை என்று நினைப்பதில்லை. வார்த்தைகளை சுருக்கி எழுதுகிறேன் அவ்வளாஅவுதான் காணொளி இடவே தயக்கமாய் இருக்கிறதுபலரும் பார்ப்பதில்லை என்கின்றனர் தமிழ் அழியாவிட்டாலும் அழிக்கும் முயற்சிகள் நடக்கும் என்றே தெரிகிறது வருகைக்கு நன்றி சார்

      நீக்கு
  5. வாழ்த்துக்கள் ஐயா
    காணொளிகளைக் காண இயலவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனி காணொளிகள் பகிரக் கூடாது என்று நினைக்கிறேன் வாழ்த்துகச்ளுக்கு நன்றி சார்

      நீக்கு
  6. ‘புஸ்தகா’ வில் நான் உறுப்பினராகிவிட்டேன்.அவசியம் தங்களது படைப்புகளைப் படித்து அங்கு கருத்திடுவேன்.

    ‘தமிழ் பேசுவோம். தமிழரைப்போற்றுவோம்’ என்று முடியும் இந்த காணொளியை முன்பே பார்த்து இரசித்திருக்கிறேன், திரும்பவும் பார்க்க உதவியமைக்கு நன்றி!

    தமிழ்மண வரிசைப்பட்டியலில் 7 ஆண்டுகள் ஆகியும் தர வரிசை 20-21 லேயே இருப்பதாக கூறியிருக்கிறீர்கள். ஐயா வரிசை எண் முக்கியமல்ல. என்ன எழுதுகிறீர்கள் என்பது தான் முக்கியம். தங்களின் எழுத்து அருமையாய் இருக்கிறது.

    தந்தையர் பற்றிய காணொளி அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிவிடும் பிரச்சினைப் பற்றி நமது வலைச்சித்தர் திண்டுக்கல்லார் அவர்களிடம் சொல்லுங்களேன். தீர்த்து வைப்பார்.

    இந்தி தேசிய மொழி அல்ல. அது ஒரு அலுவலக மொழி (Official Language) என்பது ஒரு மய்ய அரசின் அமைச்சருக்குத் தெரியவில்லை என்பது வெட்கக்கேடு. கன்னட மக்களும் இந்தி மொழி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பது மகிழ்ச்சி. இப்போது கடவு சீட்டிலும் (Passport) இந்தியை திணிக்கப் போகிறார்களாம்! இதுதான் நாட்டிற்கு மிக முக்கியமான பிரச்சினை போலும்.

    தங்களின் மொழியாக்கம் அருமை. ஆங்கில மூலம் சற்று கடினமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆங்கில மூலம் கடுமையாக இருந்ததால்தான் முதலில் வெளியிடத் தயங்கினேன் ஆங்கிலத்தில் முதுகலைப் படித்த பல வாசகர்கள் இருக்கிறார்கள் முதலில் அவர்களது மொழிமாற்றம் காணலாம் என்றிருந்தேன் இந்தி தேசிய மொழி அல்ல என்று நாம் கூறுகிறோம் ஆனால் மைய அரசு அதை நடைமுறைப்படுத்தமாட்டேன் என்கிறதே வருகைக்குநன்றி ஐயா

      நீக்கு
  7. புஸ்தகாவில் இடம் பெற்றமைக்கு வாழ்த்துகள்.

    வெங்கையா நாயுடு பெயரை இப்படி எழுதிட்டீங்களே ஐயா ஹா.. ஹா.. ஹா..

    காணொளியும், தமன்னாவும் பிறகு கணினியில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் வெங்கைய நாயுடு வெங்காய நாயுடுவாகத்
      தெரிந்ததற்கு என் ஆற்றாமையே காரணம் மீள் வருகையை எதிர்நோக்கி நன்றியுடன்

      நீக்கு
  8. கணினி பிரச்சனை தீர்க்க ஆவது உங்களை விரைவில் சந்திக்க வேண்டும் என்று நினைக்கிறேன்...

    வாசகர் எண்ணிக்கை பற்றி சரியாக அறிய நம் தளத்தை https://analytics.google.com/analytics/web/-ல் இணைக்க வேண்டும்... பிறகு வாசகர் எண்ணிக்கையைப் பார்த்தால், நீங்கள் உட்பட அனைத்து வலைப்பதிவர்களும் புலம்புவார்கள்...! ஓரளவு தொழிற்நுட்ப பதிவுகள் எழுதி விட்டேன்... இதைப் பற்றியும் முடிவாக ஒரு தொழிற்நுட்ப பதிவு எழுத வேண்டும் என்றுள்ளேன்... இது மட்டுமல்ல... மற்ற பல Gadget-கள் தரும் விவரங்களும் சரியானது அல்ல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன் இப்போது பிரச்சனை இல்லை. எனக்கு பிரச்சனையே என் பதிவுகள் தமிழ்மணம் மூலம் வருவதாலோ என்று தோன்றுகிறது தமிழ் மணத்தின் வேகம்சரியானால் பதிவு வருகிறது என்றே தோன்றுகிறது என்னவானாலும் உங்களை வரவேற்க நான் எப்போதும் தயார்தான்

      நீக்கு
  9. தங்களுடைய மின்னூல்களைப் பற்றி சொல்லியிருப்பது இனிமை..

    மற்றபடி வருகைப் பட்டியல், தர வரிசை - அந்தப் பக்கமெல்லாம் நான் செல்வதேயில்லை...

    இந்தி தேசிய மொழி அல்ல.. அலுவல் மொழி தான்!..
    சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்கின்றார்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் மின்னூல்களுக்கு நாந்தானே விளம்பரம் செய்ய வேண்டும் நூல்களைப் படிப்பவர்கள் ஏமாறமாட்டார்கள் என்பது உறுதி மற்றபடி மைய அரசின்கொள்கைகள் பலவும் எனக்கு ஏற்புடையதாய் இல்லை யூ கெட் வாட் யூ டிசெர்வ்

      நீக்கு
  10. ஹிந்தி திணிப்பின் மூலம் தன் தலையில் தானே மண்ணைப்போட்டு கொள்கிறது bjp ,அதுவும் நல்லதே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி நாம் சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டும் வருகைக்கு நன்றி ஜி

      நீக்கு
  11. (1)பதிவுகளின் நீளத்தைப் பொறுத்தே வாசகர்கள் எண்ணிக்கை அமையும் என்பது அடிப்படை விதி. ஜோக்குகளுக்கும் 500 சொற்களுக்கு மிகாமல் இருக்கும் சிறிய பதிவுகளுக்கும் வாசகர்கள் அதிகம் இருப்பதை நீங்களே அறிவீர்கள். உங்கள் ஒவ்வொரு வாசகரும், ஜோக் படிக்கும் வாசகரைப் போல் ஐந்து மடங்கு எண்ணிக்கையாக நீங்கள் எடுத்துக்கொள்வதே சரியானது. (2) பரபரப்பான தலைப்புகளைக் கொடுத்தால் அதிக வாசகர்கள் வருவார்கள். ஆனால் அதையே தொழிலாகச் செய்துகொண்டிருந்தால், சரிதான் போடா என்று போய்விடுவார்கள். குமுதத்தில் மாதம் ஒருமுறை மட்டும் ஏ ஜோக் போடுவார்கள் -இந்த அடிப்படையில்தான். (3) வாசகிகளைக் கவர முடிந்தால் அதிக வாசிப்பு கிடைக்கும் என்று தோன்றுகிறது. வசகிகளைக் கவரும் எழுத்து எப்படி இருக்கவேண்டும் என்று தெரிந்தால் எனக்கும் சொல்லுங்கள். (4) மொழிபெயர்ப்பில் ஈடுபடுவதில்லை என்று கொள்கை வைத்திருப்பதால் தாங்கள் விரும்பிய கவிதைகளை நான் மொழிபெயர்க்க விரும்பவில்லை. மன்னிக்கவும். (5) புச்தகாவில் உங்கள் நூல்களைப் படிக்கவேண்டுமானால் பணம் கொடுத்தல்லவா படிக்கவேண்டும்! எவ்வளவுபேர் வருவார்கள் என்று தெரியவில்லை. கொஞ்ச நாள் ஆகலாம். நான் அவர்களுடைய rental plan இல் ரூ.99 செலுத்தி உங்கள் புத்தகங்களைப் படித்திருக்கிறேன். உங்கள் Royalty Report பார்த்தால் தெரியும். நான் படித்த புத்தகங்களுக்கு ஒவ்வொன்றுக்கும் ஐந்து ரூபாய் வீதம் உங்களுக்கு ராயல்டி வந்திருக்கும். சரிபாருங்கள். - இராய செல்லப்பா சென்னையில் இருந்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவில் ஒரு தகவல் பகிர்ந்து கொண்டால் அது வேறொரு அர்த்தத்தில் புரிந்து கொள்ளப்படுகிறது என் எண்ணங்களைக் கடத்தவே நான் எழுதுகிறேன் ஒரு வேளை என் எண்ணங்களுக்கு ஆதரவு குறைவோ என்னவோ. மற்றபடி வாசகர் எண்ணிக்கை குறித என் தகவல் பிறருக்கு ஒப்பீடாக உதவலாம் புஸ்தகா மின்னூலில் வெளியிடுவதால் என் பதிவுகள் சேமிப்பில் இருக்கும் என்பதும் ஒருகாரணம் மேலும் பெயர்பெற்ற எழுத்தாளர்க்சள் நடுவே என் நூல்கள் காணாமல் போக வாய்ப்புகளே அதிகம் ராயல்டி நீங்கள் சொன்னபடி வந்திருக்கிறது அது உங்களால் என்பதில் மகிழ்ச்சி என்பதிவுகளை வலையில் பலரும்படித்திருப்பார்கள் இருந்தாலும் நூலாக வாசிக்கும்போது அதை வீச்சே அதிகம் என்று நினைக்கிறேன் நான் மொழிமாற்றம் கோரி விடுத வேண்டுகோள் கைலாசத்தின் துரோணருக்குத்தான் மெத்தப் படித்தவர்களெப்படி அணுகுகிறார்கள் என்று தெரியுமல்லவா வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி சார்

      நீக்கு
    2. வாசகிகளைக் கவர முடிந்தால் அதிக வாசிப்பு கிடைக்கும் என்று தோன்றுகிறது. வசகிகளைக் கவரும் எழுத்து எப்படி இருக்கவேண்டும் என்று தெரிந்தால் எனக்கும் சொல்லுங்கள்.// ஹஹஹஹஹ்ஹ சிரித்துவிட்டேன் செல்லப்பா சார்...

      கீதா

      நீக்கு
    3. என் பதிவுகளுக்கு வாசகிகள் எண்ணிக்கை சரி பாதிக்கும் மேல் இருக்கும் என்றே நினைக்கிறேன் ஆன்மீகம் பக்தி சமையல் என்று எழுதினால் ஒருவேளை இன்னும் அதிகம் வாசகிகள் வரல்சாமோ என்னவோ

      நீக்கு
  12. புஸ்தகா வெளியீடுகளுக்கு வாழ்த்துகள்.

    தமிழே உலகின் முதன் மொழி காணொளி அருமை.

    அன்புள்ள அப்பா காணொளி அருமை.
    தெய்வம் தோற்றுதான் போகும் அப்பாவின் அன்பின் முன்னே! அருமையான பாடல் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. முதல் காணொளி நல்ல விடயங்களை தந்தது
    இரண்டாவது காணொளியின் தந்தையைக் குறித்த பாடல் அருமை

    தமன்னா 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி முன்பே கிடைத்திருந்தால் யாழ்பாவாணனுக்காக எழுதுய பதிவில் மாற்றங்கள் இருந்திருக்கும் மீள்வருகைக்கு காணொளிகளைக் கண்டு ரசித்ததற்கும் நன்றி ஜி

      நீக்கு
  14. மின்னூல்களுக்கு வாழ்த்துக்கள். Your writing is now safe!

    எத்தனை எழுதுகிறோம், எத்தனை பேர் பார்க்கிறார்கள், எவ்வளவு பின்னூட்டங்கள் என்பதெல்லாம்பற்றி தரமான, அசலான எழுத்து எழுதுபவர்கள் கவலைகொள்ள வேண்டியதில்லை என்று நான் நினைக்கிறேன். For people who matter, it is the quality that counts.They won't go for trash.
    And another thing; people who matter will always be less in number!

    பதிலளிநீக்கு
  15. ஆஹா புஸ்தகாவில் வெளியாகிவிட்டதோ.. அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.. இன்று முடியாது விட்டாலும், புத்தகமாக இருக்கும்போது என்றோ ஒருநாள் எல்லோரும் படிக்கும் வாய்பு வரும்.. அதனால தொடர்ந்து வெளியிடுங்கோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புஸ்தகாவில் மின்னூல் என்றும் படித்து மகிழலாம் வாசகர்கள் படித்தால்தானே எழுத்தாளனுக்கு மகிழ்ச்சி. இதைப் படிப்பவர்களுக்கு ஒரு உத்தரவாதம் ஏமாற மாட்டீர்கள் வருகைக்கு நன்றி அதிரா

      நீக்கு
  16. மின்னூல்களாக அசத்திக்கொண்டிருக்கின்றீர்கள் ஐயா, பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு வைட் ரீடர்ஷிப் கிடைக்குமா என்றுதான் பாராட்டுக்கு நன்றி சார்

      நீக்கு
  17. ஸார் வாழ்த்துகள் முதலில். புஸ்தகாவில் தங்கள் புத்தகம் வெளிவந்தமைக்கு. காணொளிகள் தெரியவில்லையே சார். அடோப் ப்ளேயர் போட வேண்டும் போல்...பார்க்கிறோம்...

    கீதா

    சார் வாசகர்கள் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம் என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகர்கள் பற்றி நான் கவலை கொள்வதில்லை. என் கருத்துகளைப் படிக்காமல் இருப்பது எனக்கு நஷ்டமில்லை. அவர்கள் தான் வித்தியாசமான எண்ணங்கள் தெரியாமல் இருப்பார்கள்

      நீக்கு