கோவில்களும் சில நம்பிக்கைகளும்
--------------------------------------------------------
என் அண்மைய பதிவு ஒன்றுக்குப் பின்னூட்டமிட்ட நண்பர் ஒருவர் என் பீ எச் இ எல் அனுபவனகளைப் பற்றி எழுதலாமே என்றிருந்தார் அலுவலக அனுபவங்களை விட நாங்கள் இருந்த குடியிருப்பின் சில செய்திகளைப் பகிரலாமென்று தோன்றுகிறது
இந்த மனிதர்களின் அறியாமை மற்றும் மூட
நம்பிக்கை குறித்து கவலைப் படுவதே எனக்கு வாடிக்கையாகி விட்டது. நான்
நடைபயிலும் பூங்காவில் ஒரு சிறிய
மண்மேட்டுக்கு பலரும் வந்து பூவிட்டு. பொட்டு வைத்து தூப தீபங்காட்டி வழிபடுவதை
கண்டு மனம் வருந்தியதுண்டு. அவர்களிடம் அவர்களது அறியாமை பற்றிக் கூற வேண்டும் என்னும்
ஆவலை மிகவும் பிரயாசையுடன் அடக்கி வருகிறேன். நான் மூடப் பழக்கம் என்பது அவர்களது
நம்பிக்கை. அதில் தலையிட எனக்கு உரிமை இல்லை. அதுவே அவர்களுக்கு நிம்மதி என்றால்
எனக்கென்ன.?
எனக்கு இந்த நம்பிக்கைகள் பழக்கங்கள் பற்றி யெல்லாம் எழுதத்
தூண்டுவது எனது சில அனுபவங்களே நாட்டில் பல கோவில்களின் கதைகளைக் கேட்கும் போதுஅவை
யாவும் சுயம்பு மூர்த்திகள் என்றும் அவை யாருடைய கனவிலாவது வந்து அவைகளுக்குக்
கோவில் எழுப்ப கட்டளை இட்டிருக்கும்
நான் இங்கு நடை பயிலும் பூங்காவில் சில நாகர்களின் சிலைகள்
பிரடிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது காண்கிறேன்
அதற்கு சிலர் பால் அபிஷேகம் செய்வதையும் பார்த்திருக்கிறேன் அந்தச் சிலைகளின் மேல் அங்கிருக்கும் சில நாய்கள் உச்சா பொழிவதை கண்டிருக்கிறேன் நாய்களுக்குத் தெரியுமா
நம் நம்பிக்கை எது என்று?
திருச்சியில் குடியிருப்பு வளாகத்தில் எழுப்பப் பட்டிருக்கும் சில கோவில்கள் பற்றி நான் அறிந்ததைப்
பகிர்கிறேன் 1966 வருட வாக்கில்
குடியிருப்பில் கோவில் கிடையாது ஆனால்
கோவில் இல்லா ஊரில் குடியிருக்கலாமா ? சில சத் சங்க நண்பர்கள் ஒரு மரத்தடியில்
இருந்த பிள்ளையாரைப் பிரதிஷ்டை செய்து கோவில் கட்டினார்கள் பாலகணபதி என்றும்
அழைக்கத் துவங்கினார்கள் ஒரு சில
ஆண்டுகளுக்கு முன் அந்தவளாகத்துக்குச்
சென்றபோது அங்கே வேப்பமரமும் அரசமரமும்
இணைந்திருக்கும் இடத்தில் ஒருபிள்ளையாரைக் கண்டேன் ஆனால் அதுதான் அந்த
இடத்தில் இருந்தஒரிஜினல் பிள்ளையாரா என்று தெரியவில்லை.
நமக்குத்தான் ஒருகடவுள் போதாதே ஆண்டவனை பல ரூபங்களில் வணங்க வேண்டும் அதே வளாகத்தில் ஒரு ஐயப்பன் கோவில் உள்ளது
மலையாளிகளுக்கு ஐயப்பன் இல்லாமால்
இருக்க முடியாதேஇது மட்டும் போதுமா மருவத்தூர் ஆதி பராசக்தி பக்தர்கள் ஒரு சக்தி
கோவிலைக் கட்டி மருவத்தூர் பாணியிலேயே வழிபாடும்
நடக்கிறது முருகனுக்கு கோவில் இல்லாமல் இருக்கலாமா. அருள் நெறித்
திருக்கூட்டத்தார் ஒரு கோவிலை முருகனுக்கு எழுப்பினார்கள் அந்தக் கோவில்
வளாகத்தில் இன்னொரு கோவில் எழுப்ப இடமிருக்கவில்லை. விஷ்ணுபக்தர்கள் பெரும்பாலான
ஐயங்கார்கள்குடியிருப்பின் ஒரு கோடியில் விஷ்ணுவுக்குக் கோவில் எழுப்பி
இருக்கிறார்கள் இதிலெல்லாம் ஒரு
redeeming feature என்னவென்றால் எல்லாக் கோயில்களுக்கும் எல்லோரும் செல்வார்கள். ஆனால் இவையெல்லாம்
மேற்கூறப்பட்டவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.. எங்கும் நீக்கமற
நிறைந்திருப்பதாய் கருதப் படும் ஆண்டவனுக்கு இருக்கும் போஷகர்கள் சாதாரண பக்தர்கள்
அல்ல.இதுதான் UNITY IN DIVERSITY யோ. சர்ச்சும் மசூதியும் கோருமளவுக்கு அவர்கள் எண்ணிக்கை இல்லை என்றே
நினைக்கிறேன்.
இந்த விஷயங்களை சிந்தித்து எழுதிக் கொண்டிருந்த எனக்கு
இன்னொரு சம்பவம்
நினைவுக்கு வருகிறது.தொழிற்சாலையில் பணி செய்து கொண்டிருந்த ஒருவர் வீட்டில் ஒரு
எறும்புப் புற்று இருக்க . ஒரு நாள் அவர் மனைவியின் கனவில் அது ஏதோ அம்மனின்
இருப்பிடம் என்றும் முறையாக வழிபாடு செய்ய வேண்டும் என்றும் கட்டளை வந்ததாம். அது
அரசல் புரசலாகத் தெரிய வர ஒரு சில நாட்களில் அந்த வீட்டுக்கு பக்தர்களின்
எண்ணிக்கை வருகை கூடிக்கொண்டே போயிற்று. ஏறத்தாழ அந்த வீட்டுக்கு ஒரு கோயிலின் அந்தஸ்து வந்துவிட ஏராளமாகக் கூட்டம் மொய்க்க ஆரம்பித்து. கட்டுப் படுத்த செக்யூரிடி தேவைப் பட்டது. இதற்குள் அந்த வீட்டு அம்மாவுக்கு அம்மனின் அருள் வந்து பல்லைக் காட்டி நாக்கைத் துருத்தி பயங்கரமாகக் காட்சி அளிக்கத் தொடங்கினார். வேப்பிலையை கடித்து உமிழ்ந்து அதை சிலர் பிரசாதமாகப் பெறுவதும் தொடங்கியது. சமயபுரம் கோயிலுக்குக் காணிக்கை செலுத்துவோர் இங்கு வந்தால் போதும் என்ற நிலை உருவாகி விட்டது. என் மனைவி ஒரு முறை அங்கு சென்று வந்தவர், அதையெல்லாம் கண்டு பயந்தது தெரிந்து அங்கு போகத் தடை விதித்தேன். இதற்கு மத்தியில் அந்த எறும்புப் புற்றை செக்யூரிடி துறையினர் அகற்ற நினைத்த முயற்சிகளுக்கு எதிர்ப்பும் இருந்தது. ஒரு கட்டத்தில் அந்தப் புற்றை அகற்றி அங்கு வருவதற்குத் தடை விதித்தனர்.. நாளாவட்டத்தில் அவர்கள் அந்த வீட்டைக் காலிசெய்து வேறெங்கோ சென்று விட்டனர். எல்லா நம்பிக்கைகளும் அவநம்பிக்கைகளும் அவரவர்க்குள் இருப்பதே நல்லது என்று தோன்றுகிறது.
எண்ணிக்கை வருகை கூடிக்கொண்டே போயிற்று. ஏறத்தாழ அந்த வீட்டுக்கு ஒரு கோயிலின் அந்தஸ்து வந்துவிட ஏராளமாகக் கூட்டம் மொய்க்க ஆரம்பித்து. கட்டுப் படுத்த செக்யூரிடி தேவைப் பட்டது. இதற்குள் அந்த வீட்டு அம்மாவுக்கு அம்மனின் அருள் வந்து பல்லைக் காட்டி நாக்கைத் துருத்தி பயங்கரமாகக் காட்சி அளிக்கத் தொடங்கினார். வேப்பிலையை கடித்து உமிழ்ந்து அதை சிலர் பிரசாதமாகப் பெறுவதும் தொடங்கியது. சமயபுரம் கோயிலுக்குக் காணிக்கை செலுத்துவோர் இங்கு வந்தால் போதும் என்ற நிலை உருவாகி விட்டது. என் மனைவி ஒரு முறை அங்கு சென்று வந்தவர், அதையெல்லாம் கண்டு பயந்தது தெரிந்து அங்கு போகத் தடை விதித்தேன். இதற்கு மத்தியில் அந்த எறும்புப் புற்றை செக்யூரிடி துறையினர் அகற்ற நினைத்த முயற்சிகளுக்கு எதிர்ப்பும் இருந்தது. ஒரு கட்டத்தில் அந்தப் புற்றை அகற்றி அங்கு வருவதற்குத் தடை விதித்தனர்.. நாளாவட்டத்தில் அவர்கள் அந்த வீட்டைக் காலிசெய்து வேறெங்கோ சென்று விட்டனர். எல்லா நம்பிக்கைகளும் அவநம்பிக்கைகளும் அவரவர்க்குள் இருப்பதே நல்லது என்று தோன்றுகிறது.
என்
எழுத்துகளைப் படிப்போர் சிலருக்கு இந்தச் செய்திகள் எல்லாம் பொருட்டாகவே தெரியாதுநான் முன்பே எழுதி இருக்கும்
படி எனக்கென்ன அவரவர் நம்பிக்கை
அவரவருக்கு இருந்தாலும் நிகழ்வுகள் சில்
அவர்களையும் சிந்திக்கத் தூண்டாதா என்னும்
நப்பாசையுமிருக்கிறதே
.
இவ்வகையான மூட நம்பிக்கைகள் முற்றிலும் ஒழிவதற்கு இன்னும் மூன்று தலைமுறைகள் கடக்க வேண்டும் ஐயா
பதிலளிநீக்குஅந்த எறும்புபுற்றை அகற்றினால் என்ன... மற்றொரு இடத்தில் ஈசல்புற்றை ஒருவர் உருவாக்குவார்.
தமன்னா 3
நீக்குநான் மூடநம்பிக்கைகள் என்று கருதுவதைப் பலரும் உணர்ந்திருக்கிறார்கள் இருந்தாலும் அவற்றை விட முடியாமால் ஏதோ தடுக்கிறது
நீக்குதமிழ்மண வாக்குக்கு நன்றி ஜி
நீக்குபாமர மக்களின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு இம்மாதிரிக் கோயில்கள் உருவாகின்றன. இப்போது குறைந்து வருகிறதோ எனத் தோன்றுகிறது! ஆனால் இம்மாதிரி சாமி ஆடுவதில் மெத்தப்படித்தவர்களே ஈடுபடுவதையும் கண்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குநான் குடியிருந்த வளாகத்தில் இருந்தோரை பாமர மக்களென்று கூற முடியாது சாமி ஆடுவது ஏதோ உளவியல் சம்பந்தப்பட்ட நோய் என்றே நினைக்கிறேன்
நீக்குஎன்னுடைய தனிப்பட்ட கருத்து - நாட்டில் ஏகப்பட்ட புராதான, நிறையபேர் போகாத, சிதிலமடைந்த பழைய கோவில்கள் இருக்கின்றன. அவைகளுக்கு உழவாரப்பணியோ அல்லது மற்ற உதவிகளோ செய்வது மிகவும் நல்லது, புதிய கோவில்களை எழுப்புவதைவிட.
பதிலளிநீக்குஇன்னொன்று, பொதுவாகவே, மதம் என்பது அரசியல் கலந்தது (எந்த மதமானாலும் சரி). அதனால்தான் தனித் தனிக் குழுக்களும், தனித்தனி நம்பிக்கைகளும் காண்கிறோம். ஒரு கட்டத்தில், நம்பிக்கையைவிட, கட்சி சேர்ப்பது அதிகமாகிவிடுகிறது (அரசியல் கட்சி போல).
அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு. நரி வலம் போனால் என்ன, இடம் போனால் என்ன.. நம்மைக் கடிக்காமல் போனால் போதாதா?
நன் குறிப்பிட்டிருக்கும் இடத்தில் கோவில்கள் இல்லாததனாலும் வழிபாட்டுக்கு வேண்டியும் கோவில்கள் உருவாக்கப் பட்டன ஆனால் அவை பல்கிப் பெருகி சிலசாரார்களிந்தேவையைப் பூர்த்தி செய்ததுதான் சிந்திக்கவைக்கிறது நம்பிக்கைகளைப் பற்றி எழுதாமல் இருக்கமுடியவில்லை . பதிவின் கடஒசியில் கூறி இருப்பது போல் ஒரு நப்பாசைதான் சிஅராவது சிந்தித்து செயல்பட மாட்டார்களா என்று வருகைக்கு நன்றி சார்
நீக்கு//எல்லா நம்பிக்கைகளும் அவநம்பிக்கைகளும் அவரவர்க்குள் இருப்பதே நல்லது என்று தோன்றுகிறது.//
பதிலளிநீக்குநீங்களே சொல்லிவிட்டீர்கள் நம்பிக்கைகளைப் பற்றி.
நம்பிக்கைகள் வெவ்வேறாக இருக்கிறது ஒருவரின் நம்பிக்கை இன்னொருவருக்கு மூடந்ம்பிக்கையாக இருக்கலாம்.
முன்பு கோவில்கள் அரசனின் மாளிகையை விட பெரிதாக இருக்கும், மழை, புயல், வெள்ளம் காலங்களில் மக்கள் கோவிலில் தஞ்சம் புகுந்தனர். தனியாக நடைபயிற்சி செய்ய வேண்டியது இல்லை கோவிலை தினம் வலம் வந்தாலே போதும்
இப்போது உள்ள கோவில்கள் தனியார் கோவில்கள் செல்வத்தின் செழிப்பை பறை சாற்றகட்டப்பட்டதோ என்ற எண்ணம் வருகிறது.
கவனமாய் நடக்க வேண்டும்.
இப்படி வணங்கினால் இது கிடைக்கும் அப்படி வணங்கினால் அது கிடைக்கும் மக்களின் ந்ம்பிக்கைகளை வைத்து ஏமாற்றி பிழைக்க கூடாது.
/இப்படி வணங்கினால் இது கிடைக்கும் அப்படி வணங்கினால் அது கிடைக்கும் மக்களின் ந்ம்பிக்கைகளை வைத்து ஏமாற்றி பிழைக்க கூடாது./ஆனால் அதுதானே நடந்து கொண்டிருக்கிறது கோவில்கள் கலாச்சாரத்தின் வெளிப்பாடுகளாக இருந்தது ஒரு காலத்தில்
நீக்குமுன்பெல்லாம் கோவில்கள் ஊரின் மத்தியிலோ அல்லது கடைக்கோடியிலோ தான் இருக்கும். ஆனால் இப்போது நடைபாதையிலும் தெரு முக்கிலும் அவரவர் விருப்பப்படி கட்டி, பின்னர் அந்த கோவிலை பணம் தரும் இடங்களாக மாற்றிவிட்டது தான் கொடுமையிலும் கொடுமை. இதை நான் பக்தி என்றோ நம்பிக்கை என்றோ சொல்லமாட்டேன். சம்பாதிக்கும் வழி என்றே சொல்லுவேன்.
பதிலளிநீக்குநான் குறிப்பிட்டிருக்கும் கோவில்கள் சம்பாதிக்கும் நோக்கத்தில் எழுப்பப்பட்டவை அல்ல அங்கே பல ஆண்டுகள் இருந்தவன் என்னும் முறையில் நான் அறிந்தது
நீக்குஒவ்வொருவருக்கு ஒவ்வொன்றில் நம்பிக்கை. அதனால் அவர்களுக்கு ஆறுதலோ, நிம்மதியோ கிடைக்குமாயின் அதைத் தடை செய்ய நாம் யார்? சென்னை கே கே நகர் காசி திரை அரங்கம் அருகே ஒரு சிறு - சின்னஞ்சிறு - தெருவோரக் கோவில் ஒன்று இருந்ததை முன்னர் கண்டிருக்கிறேன். இன்று அந்தப் பக்கம் சென்றபோது அதை பெரிதாகக் கட்டி, உள்ளே சங்கிலி வழி எல்லாம் ஏற்படுத்தி இருந்தார்கள். ஏதில் மக்களுக்கு ஆர்வம் இருக்கிறதோ அதில்தான் வியாபாரம் செய்ய முடியும். எப்படி ஒருவருடைய உணவுப் பழக்கத்தில் நாம் தலையிட முடியாதோ, அதேபோல் இது போன்ற நம்பிக்கைகளிலும் தலையிட முடியாது.
பதிலளிநீக்குநம் தலையீடு விரும்பப்படுவதும் இல்லை இருந்தாலும் சொல்லிச் செல்வது தார்மீகக் கடமை என்றே தோன்றுகிறது
நீக்குதம +1
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீ
நீக்குசார் நம்பிக்கை என்பது அவரவர் மனம் சம்பந்தப்பட்டது ..மனசுக்கு சந்தோசம் தரும்னா நிம்மதியை தரும்னா அதை செய்வதில் தவறில்லை ..ரோட்டோரம் வழிபாட்டு ஸ்தலமாக்குவதால் பாருங்க பைரவர் அவசரக்கடன் கழிக்கும் இடமாகிப்போகிறது :( இது கடவுளை அவமதிக்கிறமாதிரி இருக்கில்லையா ..அதைவிட ஆண்டுக்கொருமுறை செலவழித்தேனும் நெல்லைத்தமிழன் சொன்னது போல எத்தனையோ புராதன ஆலயங்கள் இருக்குமிடத்துக்கு சென்று தரிசிக்கலாம் ,எங்கும் இருக்கும் இறைவன் என்பதை தவறாக புரிந்துகொண்ட மக்கள் தான் எறும்பு புற்ற கூட சாமியாக்கறாங்க ... எங்கள் கிறிஸ்தவத்திலும் எத்தனை பிரிவுகள் மூச்சடைக்குது ..அவரவர் நம்பிக்கை அப்படின்னு கடந்து போயிடணும் அவ்வளவே
பதிலளிநீக்குஉருவம் இல்லாத கடவுளுக்கு உருவம் கொடுத்து வழிபடுவதை ஒரு விதத்தில் நம்பிக்கை என்றுசொல்ல முடிகிறது பல இடங்களிலு ம் புராதன ஆலயங்களும் செப்பனிடப்படுகின்றனவே நம்பிக்கை என்பது நம்பக்கூடியதாகவும் இருக்கவேண்டும் அல்லவா வருகைக்கு நன்றி ஏஞ்செல்
நீக்குபதிவில் கொஞ்சம் இடைவெளி விட்டு பத்தி பிரித்துப் போட்டால் படிப்போருக்கு படிக்க சௌகர்யமாக இருக்கும். இது என் வேண்டுகோள்.
பதிலளிநீக்குநன் கவனிக்காமல் விட்டு விட்டேன் போல. இனி முயற்சிப்பேன் நன்றி ஸ்ரீ
நீக்குஇருபது ஆண்டுகளுக்கு முன் -
பதிலளிநீக்குபிள்ளையாரையும் ஆஞ்சநேயரையும் இணைத்து பாதிப் பாதியாக இணைத்து - புதிய தோற்றத்தை உண்டாக்கிக் கொடுத்தார்கள்..
இப்போது சில நாட்களுக்கு முன் பத்து அவதாரங்களின் மூர்த்தி என எல்லா வடிவங்களையும் சேர்த்து சிலை ஒன்றினைச் செய்திருக்கின்றார்கள்..
இந்த தோற்றம் சில வருடங்களுக்கு முன் ஓவியமாக வெளியாகி இருந்தது...
அறக்கட்டளை தியான பீடம் என்றெல்லாம் பெயர்களை வைத்துக் கொண்டு கல்லா கட்டுகின்றார்கள்..
ஸ்ரீநிவாச கல்யாணத்தைக் கூட ஊருக்கு ஊர் நடத்திக் காட்டுகின்றார்கள்..
ஏதோ நடக்கின்றது..
பதிவில் எழுதுபவன் என்னும் முறையில் அப்படிக்ம் கடந்துபோக முடியவில்லை ஐயா இங்கு பெங்களூரில் வயாலிக்காவில் இருக்கும் கோவிலில் ஸ்ரீநிவாச கல்யாணம் நடந்தது பற்றி எழுதி இருக்கிறேன் கடவுளுக்கு தினம் தினம் திருக்கல்யாணம் நாமே நடத்துகிறோம் அதில் ஏதோ திருப்தி
நீக்குஒவ்வொருவருக்கு ஒவ்வொரு நம்பிக்கை
பதிலளிநீக்குநம்ப கூடியவையே நம்பிக்கையாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்
நீக்குகோவில்களை ஆரம்பித்து வருமானம் பார்க்கும் தொழிலை ஆந்திர்ர்களும் கன்னடர்களும் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். அங்கு அரணு அதிகம் தலையிடுவதில்லை. ஆனால் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட அளவுக்கு ஆண்டு வருமானம் உடைய கோவில்களை அரசாங்கம் மேற்கொண்டுவிடுகிறது.உடனே ஆளும்கட்சிக்கார்ர்கள் அதில்நுழைந்துவிடுகிறார்கள். அங்கு ஏற்கெனவே வருமானம் பார்த்தவர்கள் ஓடிப்போய் புதிய கோவிலைத் தொடங்கிவிடுகிறார்கள். இது இந்துமத்த்தில் மட்டுமல்ல, கிறித்தவ மத்த்திலும் வெகுவாக நடந்துவருகிறது. அரசின்மீது நம்பிக்கை குறையும்போது 'அவன்' மீது நம்பிக்கை வந்துவிடுகிறது.
பதிலளிநீக்குஆனால், இறைநம்பிக்கை இல்லாதவர்கள் இதுபற்றி கவலைப்படவேண்டியதில்லை. பொய்யான வழிபாட்டுத்தலங்கள் வராமல் தடுப்பது பற்றி மெய்யான பக்தர்கள் கவலைப்பட்டால் போதும்.
- இராய செல்லப்பா சென்னை
கோவில் வருமானத்தால் அதை வேண்டி பலரும் நுழைகிறார்கள் என்னும்கருத்து பதிவில் சொல்லப் படவில்லை இறை நம்பிக்கை இருக்கிறதோஇல்லையோ எப்படி வேண்டுமானாலும் இருந்து போகட்டும் என்று நினைக்க முடியவில்லை எங்காவது ஒரு ஒளிக்கீற்று தென்படாதா என்னும் நப்பாசையும் இருக்கிறதே
நீக்குWriting in Tamil thru mobile creates peculiar spelling variations.Sorry.
பதிலளிநீக்குWriting in Tamil thru mobile creates peculiar spelling variations.Sorry.
பதிலளிநீக்குகோவில்களை ஆரம்பித்து வருமானம் பார்க்கும் தொழிலை ஆந்திர்ர்களும் கன்னடர்களும் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். அங்கு அரணு அதிகம் தலையிடுவதில்லை. ஆனால் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட அளவுக்கு ஆண்டு வருமானம் உடைய கோவில்களை அரசாங்கம் மேற்கொண்டுவிடுகிறது.உடனே ஆளும்கட்சிக்கார்ர்கள் அதில்நுழைந்துவிடுகிறார்கள். அங்கு ஏற்கெனவே வருமானம் பார்த்தவர்கள் ஓடிப்போய் புதிய கோவிலைத் தொடங்கிவிடுகிறார்கள். இது இந்துமத்த்தில் மட்டுமல்ல, கிறித்தவ மத்த்திலும் வெகுவாக நடந்துவருகிறது. அரசின்மீது நம்பிக்கை குறையும்போது 'அவன்' மீது நம்பிக்கை வந்துவிடுகிறது.
பதிலளிநீக்குஆனால், இறைநம்பிக்கை இல்லாதவர்கள் இதுபற்றி கவலைப்படவேண்டியதில்லை. பொய்யான வழிபாட்டுத்தலங்கள் வராமல் தடுப்பது பற்றி மெய்யான பக்தர்கள் கவலைப்பட்டால் போதும்.
- இராய செல்லப்பா சென்னை
மனதில் ஏதும் கஸ்டமிருக்கும்போது, அந்நேரம் அவர்கள் எதைக்கண்டாலும் வணங்குவார்கள்.. யார் எதை சொன்னாலும் அதை ந்ம்பி ஓடுவார்கள்.. அப்படி நம்மவர்க்கு கஸ்டம் அதிகம் இருக்கும்போது நம்பிக்கைகளும் அதிகமாகுது, ஆனா அதுக்காக பழம் பிள்ளையார்போல இருக்கு வாழைப்பொத்தியில் பிள்ளையார் எனச் சொல்லி பால் ஊற்றுவோரை என்ன சொல்வதெனத் தெரியவில்லை.
பதிலளிநீக்குகுறையும் சொல்ல முடிவதில்லை... எல்லோரும் ஆறறிவு படைத்தோர்தானே.. அவரவருக்கென புத்தி இருக்குதுதானே சிந்திக்க.. அப்போ தெரிந்துதானே செய்கிறார்கள்.
தெரிந்தும் சிந்தித்து செயல்படாதவர்களே வருகைக்கு நன்றி மேம்
நீக்குநம்பிக்கை மூன்று வகைப்படும்
பதிலளிநீக்குகடவுள் நம்பிக்கை
தன்னம்பிக்கை
பிறர்மீதான நம்பிக்கை
இதில்
ஆளுக்காள் கொண்டிருக்கும் நம்பிக்கை வேறுபடலாம். நம்பிக்கை வைக்குமுன் தன் (சுய) மதிப்பீடு முக்கியம்.
சுய மதிப்பீடு செய்ய இப்பதிவு உதவலாம் இல்லையா சார்
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குநீங்கள் சொன்னதில் எழுதியதில் தப்பே இல்லை. இப்போது பக்தி என்பது வியாபாரமாகவே இருக்கிறது. எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால் இதுபோல தெருவுக்கு தெரு. நடைமேடையில் கோயில் என்ப்தில் உடன்பாடு இல்லை.
நீக்குஎன் பதிவு பக்தி வியாபாரமாவது பற்றியா சொல்கிறது ஆனால் பல்கிப் பெருகிவரும் கோவில்கள் எங்கோ ஏதோ சரியில்லை என்றே காட்டுகிறது
நீக்குஇப்பக் கோவில்கள் எல்லாம் காசுக்கு வழி செஞ்சுக்கத்தான். தனியார்க் கோவில்களுடன் போட்டி போட முடியாது. அவர்களின் விதிகளே தனி! :-(
பதிலளிநீக்குகாசுக்கு வழி செய்யும் கோவில்களை பற்றியா சொல்லி இருக்கிறேன்மேடம் தவறான புரிதல் போலத் தோன்று கிறது
நீக்கு@செல்லப்பா
பதிலளிநீக்குநம்மில் ஒருவராக இருந்தோரையே கடவுள் உருவமாகப் பார்க்கும் gullible மாந்தர்களை அவர்களது நம்பிக்கையை அடிப்படையாக வைத்து ஏமாற்றிப் பணம் பறிப்பதை நான் கண்டிருக்கிறேன் ஷீர்டி சாய் பாபா கோவில் வளாகமே ஒரு பிசினெஸ் செண்டராகி இருக்கிறது
ஆன்மீகம் வியாபாரமாகிவிட்டது. ஒருபூனையாய் இருந்தாலே மணி கட்டமுடியாது இப்போதோ ஏகப்பட்ட பூனைகள் ருத்ராட்சதப்பூனைகள்:) அறிவே தெய்வம் என்றார் பாரதி. கொஞ்சம் அறிவை உபயோகித்தால்போதும் அசலுக்கும் போலிக்கும் வித்தியாசம் தெரிந்துவிடும்.ஆனாலும் அறிவாளிகளும் ஏமாறுவது விந்தைதான்!
பதிலளிநீக்குஅதைத் தெரிந்து கொண்டால் தப்பிக்கலாம்தானே வெகுநாட்களுக்குப் பின் வருகைக்கு நன்றி மேம்
பதிலளிநீக்குமூட நம்பிக்கைகள் வளர்ந்து கொண்டேதான் இருக்கின்றன ஐயா
பதிலளிநீக்குமெத்தப் படித்தவர்கள் அநேகர், மூட நம்பிக்கைகளை நம்புவதுதான் வேதனை.
கோயில் இல்லாத இடத்தில் குடியிருக்க வேண்டாம் என்பதற்குப் பொருள் வேறு என்பர்.
கோ என்றால் அரசர், இல் என்றால் இல்லம், அதாவது கோயில் என்றால் அரசர் குடியிருக்கும் இல்லம், அரண்மனை என்பர். அதாவது அரசர் குடியிருக்கும் ஊரில் வசிப்பது பாதுகாப்பானது, அரசர் இல்லாத ஊரில் வசிப்பது பாதுகாப்பற்றது என்று அன்றைய மக்கள் நினைத்தனர் என்பர்.
கோயிலுக்கு புதிதான விளக்கம் எனக்கு படிப்புக்கும் நம்பிக்கைகளுக்கும் சம்பந்தம் இல்லை மூட நம்பிக்கைகள் ஊட்டி வளர்க்கப் படுபவை கேள்வி கேட்கும் தைரியம் இல்லாததால் வருவது
பதிலளிநீக்குநம்பிக்கை என்பது அவரவர்
பதிலளிநீக்குசம்பந்தப்பட்டது
நம்பிக்கையின்மையும் கூட..
அது அடுத்தவருக்கு
இடைஞ்சல் தராத வரையில்...
அவரவர் நிலைக்குத் தக்கதுபோல்
அவரவர்கள் ஒரு ஏற்பாட்டைச்
செய்து கொள்கிறார்கள்
ஒருவர் தன் நிலையிலிருந்து
மற்றொன்றைப் பார்க்க அது
கேலிக் கூத்தாகவேப் படும்
நம்பிக்கை நம்பிக்கையின்மை என்பது வேறு மூட நம்பிக்கைகள் என்பது வேறு ரமணிசாருக்குப் புரியாததல்ல வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி சார்
பதிலளிநீக்குகடந்த 10 நாள்களுக்கும் மேலாக சொந்த மற்றும் ஆய்வுப்பணியாக வெளியூர் சென்றிருந்தேன். தற்போதுதான் வலைப்பக்கம் வரமுடிந்தது. தொடர்ந்து பதிவுகள் மூலமாகச் சந்திப்போம். /// மூட நம்பிக்கைகளை கண்மூடி ஏற்றுக்கொண்டு மற்றவர்களையும் அவ்வாறு இழுப்பது என்பது பெரும்பாலானோர் செய்துவருவது ஐயா.
பதிலளிநீக்குசரியாகச் சொன்னீர் வருகைக்கு நன்றி சார்
நீக்குமூட மற்றும் நம்பிக்கை இவற்றின்
பதிலளிநீக்குபாகுபாடு கூட
அவரவர் நிலைபொருத்தே
என்பது என் அபிப்பிராயம்...
மன மற்றும் அறிவு முரண் குறித்து
விரிவாக பிறிதொரு நாளில்
எழுதும் உத்தேசம் இருக்கிறது
வாழ்த்துக்களுடன்...
இதையே நான் பெர்செப்ஷன் என்று எடுத்துக் கொள்ளலாமா மீள்வருகைக்கு நன்றி சார்
நீக்குநிச்சயம் கொள்ளலாம்..
பதிலளிநீக்குநன்றி சார்
நீக்குமூட நம்பிக்கைகளுக்கு எல்லையில்லை . புதிது புதிதாய்த் தோன்றுகின்றன . சிந்தித்துச் செயல்படுவது நல்லது .
பதிலளிநீக்குஎத்தனையோ முறை பதிவுகள் மூலம் தெரிவித்து வருகிறேன் பலருக்கும் இவை எல்லாம் சகஜமாகவே போய்விட்டது வருகைக்கு நன்றி ஐயா
நீக்கு