Saturday, June 10, 2017

இவரைத் தெரியுமா ...4......5


                                இவரைத் தெரியுமா....4.....5
                                --------------------------------------------
இவரைத் தெரியுமா  ----4


 யார்யாரைக் கண்டோ இத்தொடரை எழுதினேன்   என்னைக் கண்டு யார் என்ன என்ன எழுதுவார்களோ இருந்தால் என்ன ? என்னை ஒரு கம்யூனிஸ்டாகப் பார்த்தவர்

 “அப்பா, உங்களைப் பார்க்க விரும்புவதாகஒருவர் இவரிடம்
   சொல்லியிருக்கிறார்.தயாராக இருங்கள். காதில் ரத்தம் வரும்
   
அளவுக்குப் பேசியே அறுத்திடுவார்”, என் மருமகள் என்னை
   
ஏற்கெனவே தயார்படுத்தி இருந்தாள்.நானும் அறுபடக் காத்து
   
இருந்தேன். வந்தவருக்கு சுமார் அறுபது வயதிருக்கும். என் மகன்
   
என்னைப் பற்றி அவரிடம் பல தடவைப் பேசியிருக்க வேண்டும்.
   
அவரும் என்னைப் பார்க்க விருப்பம் தெரிவித்து வந்திருந்தார்.
   
நன்கு படித்த மனிதர்;நல்ல வசதி உள்ளவர். தொழிற்சாலையில்
   
பணி புரிந்து தன் வாழ்க்கையையே அதற்காக அர்ப்பணித்துக்
   
கொண்டவர் என்றும், அவர் இல்லையென்றால் அத்தொழிற்
   
சாலையே விலாசம் இல்லாமல் போயிருக்கும் என்றும், தன்னால்
   
பல குடும்பங்கள் வாழ்வதாகவும், அதிலிருந்து தனக்கு எதுவும்
   
பலனாகக் கிடைக்கவில்லை என்றும் சொல்லிப் போனார்.
   
இப்போது ஏதோ சில லட்சங்கள் வருமானம் இருப்பதாகவும்,
   
இரண்டு மூன்று பங்களாக்கள் தனக்கு இருப்பதாகவும் அவர்
   
சொல்லக் கேட்டுக் கொண்டேன். அவர் ஒரு ஆசாரமான குடும்
     
பத்தில் இருந்து வருவதாகவும், வாழ்வில் எல்லாம் இருந்தும்
     
நிம்மதி இல்லையென்றும் புலம்பித் தீர்த்தார். அவருக்கு அவரது
     
சஞ்சலங்களைக் கொட்டித் தீர்க்க நான் ஒரு WAILING WALL-ஆக
     
என்னை எண்ணிக் கொண்டேன். எல்லாவற்றையும் கேட்டுக்
     
கொண்ட நான்,தெரியாத்தனமாக அவர் குடும்பம் பற்றிக் கேட்டு
     
விட்டேன்.

 “
நான் இப்போது தனியாகத்தான் இருக்கிறேன்”- என்றார்.

நான்:-” பெற்றோர், மனைவி மக்கள் என்று.......

அவர்:-”வயதான அம்மா இருக்கிறாள்;மனைவி இருக்கிறாள்; ஒரு
               
மகன் இருக்கிறான்.

நான்:- ” இவ்வளவு பேர் இருந்தும் தனியாக இருக்கிறேன்
               
என்கிறீர்களே.

அவர் :-”என் அம்மா என்னுடன் இருக்கிறாள். என் மகன் அவன்
               
அம்மாவுடன் இருக்கிறான்.
நான்:- “புரியவில்லை.

அவர்:-” நான் செய்த ஒரே தவறு,கொஞ்சம் வயசு வித்தியாசத்தில்
               
வேற்று மதப் பெண்ணைக் காதலித்துக் கலியாணம்
               
செய்து கொண்டதுதான். மகன் பிறந்ததும் ,அவளுக்கு
               
நான் என் அம்மாவை விட்டு அவளுடனேயே இருக்க
               
வேண்டும் என்று விருப்பம்.அதற்காக அம்மாவை விட்டுக்
               
கொடுக்க முடியுமா.? நீ வேண்டுமானால் உன் மகனுடன்
               
இருந்துகொள் என்று கூறிவிட்டேன்

நான்:- ”பேசித் தீர்க்க வேண்டிய விஷயம். அவசரப்பட்டு முடிவு
               
எடுத்து விட்டீர்களோ.?

அவர்:-”அவளுக்கு நான் எப்படியும் அவளுடன் வருவேன் என்று
               
நம்பிக்கை. எனக்கு என் அம்மா முக்கியம். விட்டுக்
               
கொடுக்க முடியாது.  அப்படி இப்படி என்று பதினெட்டு
               
வருடங்கள் ஓடிவிட்டது.

நான்:  ”பலத்தைக் காட்டி பயமுறுத்தும் நாடுகளே பரஸ்பரம்
             
பேசித் தீர்த்துக் கொள்ள முயற்சிக்கும்போது ,பேசாமலே
             
பிரச்சனை தீரும் என்று எப்படி எண்ணுகிறீர்கள்.?

அவர்:-”நான் எப்பேர்ப்பட்ட மனிதன். எப்படி விட்டுக் கொடுப்பது..
               
ஒரு சின்ன சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கி, எந்த
               
பலனையும் எதிர்பாராமல்,எத்தனை பேரை வாழ
               
வைத்திருக்கிறேன்.

நான்:- ”பலனில்லாமலா இருந்த இடத்திலிருந்து லட்சங்களுக்கு
               
மேல் வரும்படியும், சொத்துக்களுக்கு சொந்தக்காரராய்
               
இருப்பதும்? உங்கள் நிலைக்கு எத்தனையோ பேரின்
               
உழைப்பும் ஒரு முக்கிய காரணம் அல்லவா,?

அவர்:- “என்ன.. நீங்கள் ஒரு கம்யூனிஸ்ட் போலப் பேசுகிறீர்கள் ?

நான்:- “உள்ளதைச் சொன்னேன். நான் எனது என்று நாம் அதிகம்
               
நினைக்கும்போது, புரிதல் குறைகிறது. EGO வளர்கிறது.
               
பிரச்சனைகள் முடிவு பெறுவதில்லை. உங்கள் மகனிடம்
               
பேசினீர்களா.?

அவர்:-“அவன் அம்மாவைவிட மோசம் சொன்ன பேச்சைக் கேட்க
               
மாட்டான். ஊதாரித்தனமாக செலவு செய்வான். எல்லாம்
            
அவள் கொடுக்கும் இடம்.
நான்:-”உங்கள் மனைவி என்ன செய்கிறார்கள் ?

அவர்:-”அவள் ஒரு டாக்டர். எல்லோருடைய பிணிக்கும் மருந்து
               
கொடுப்பவள்.அவளுக்குள்ள வியாதியே தெரியாதவள்.

பேசப் பேச மனிதர் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் வசம் இழந்து
கொண்டிருந்தார். இந்தப் பேச்சு முற்றுப் பெற வாய்ப்பில்லை
என்று தோன்றியபோதுஎல்லாம் நல்ல படியாக முடியும் மனசை
தளர விடாதீர்கள். தைரியமாக இருங்கள் “,என்று ஒருவாறு
தேற்றி அனுப்பினேன்.
                                         ========================
இவரைத் தெரியுமா….5

தான் சொல்வதை எல்லாம் பிறர் நம்பிவிடுவார்கள் என்னும்  ஒரு மமதை  இவருக்கு

நான் போனவாரம் FRANKFURT-ல் இருந்து LONDON-க்கு FLIGHT-ல்
வரும்போது டாக்டர் கிருஸ்டியன் பார்னார்ட் அவர்களை
சந்தித்தேன்.

யாரு..? உலகிலேயே முதன் முதலில் இருதய மாற்றுச் சிகிச்சை
செய்தாரே அவரா.?

ஆம் .அவரேதான். நான் BHEL-ல் வால்வ் டிவிஷனில் முதன்மைப்
பொறுப்பில் பதவியிலிருக்கிறேன் என்று சொன்ன போது
அவருக்கு இருதய சிகிச்சைக்கு வால்வ் தயாரித்துக் கொடுக்க
முடியுமா என்று கேட்டார். நானும் இப்போது BUSY SCHEDULE-ல்
இருப்பதால் கொஞ்சம் அவகாசம் கேட்டிருக்கிறேன்
                                          ============================           


36 comments:

 1. நீங்கள் பட்ட அவஸ்தை தங்களது எழுத்தில் புரிகிறது ஐயா.

  //நான் தனியாகத்தான் இருக்கிறேன்//

  //என் அம்மா என்னுடன் இருக்கிறார்//

  ReplyDelete
  Replies
  1. ஒரு வயதுக்கப்புறம் அம்மா என்பது சும்மா ஆகிறதுஅவஸ்தை ஏதுமில்லைஜி/ அனுபவங்களே

   Delete
  2. ஹா ஹா ஹா கில்லர்ஜி கரெக்ட்டாப் பிடிச்சிட்டார்ர்:).

   Delete
 2. நீங்கள் சந்தித்த இருவருமே வெவ்வேறு வகையான மனிதர்கள். முதலாமவர் தான்தான் எல்லாம் என்று நினைப்பவர். இவரைத் திருத்த இயலாது. ஆனாலும் நீங்கள் அவரை சரியான நேரத்தில் ‘அறுத்து’ விட்டிருக்கிறீர்கள்.

  இரண்டாமவரோ தனக்கு எதிரே இருப்பவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்ற மன நிலையில் உள்ளவர். இது போன்ற வேடிக்கையான ஆசாமிகளை நானும் சந்தித்திருக்கிறேன். இவர்கள் அண்டப் புளுகு ஆகாசப் புளுகு சொல்லக்கூடியவர்கள். சிலசமயம் நமது பொழுதைப் போக்க இவர்கள் உதவுவார்கள்!
  பதிவை இரசித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. எழுதப்பட்ட மனிதர்களை நான் சந்தித்து இருக்கிறேன் குணாதிசயங்களைத்தான் பகிர்ந்திருக்கிறேன் அண்டப் புளுகு ஆகாசப் புளுகு சொல்பவரைப் பற்றிய செய்தி சற்றே மிகைப்படுத்தி கூறப்பட்டிருக்கிறது வருகைக்கு நன்றி ஐயா

   Delete
 3. ஒவ்வொரு மனிதனும் ஒரு தீவு என்பார்கள். இவர் தீர்வு காணா தீவாக இருக்கிறாரே...

  ReplyDelete
  Replies
  1. சில சுவாரசியமான தீவுகள் தம வாக்குக்கு நன்றி ஸ்ரீ

   Delete
 4. உங்கள் BHEL அனுபவங்களை விடாமல் எழுதுங்கள். சுவையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. பலருக்குப் பாடமாகவும் இருக்கும்.

  -இராய செல்லப்பா சென்னை

  ReplyDelete
  Replies
  1. நிறையவே எழுதிவிட்டேன் இப்போது வாசகர்கள் பலருக்கும்
   என்னைப்பற்றி என்னைவிட அவர்களுக்கே அதிகம் தெரிந்திருக்கும் நன்றி சார்

   Delete
 5. சில நொடிகளாவது
  பிறரது பார்வையிலும் பார்க்கத் தவறினால்
  இது போன்ற இழப்பினைச் சந்திப்பது
  தவிர்க்க இயலாது நிச்சயம் ஆகிவிடும்
  ஆயினும் தான் இழந்ததையே அறியாதிருப்போரை
  என்னவென்று சொல்வது?

  ReplyDelete
  Replies
  1. அவரவர் பற்றிச் சிந்திக்கவே இயலாதவர்களை என்னவென்று சொல்வது வருகைக்கு நன்றி சார்

   Delete
 6. எத்தனை எத்தனை பார்வைகள்!..
  எத்தனை எத்தனை கோணங்கள்!..

  தப்பித்துச் செல்லும் வழியே தெரியவில்லை..

  ReplyDelete
  Replies
  1. தப்பித்து ஏன் செல்லவேண்டும்கற்றுக்கொள்ளலாம் இல்லையா வருகைக்கு நன்றி சார்

   Delete
 7. பறவைகள் பலவிதமாக இருக்கையில் மனிதரில் எத்தனை விதம் வேண்டுமானாலும் இருக்கலாமே!

  ReplyDelete
  Replies
  1. வெளிச்சம் போட்டுக்காட்டவே இப்பதிவுகள் நன்றி மேம்

   Delete
 8. உங்கள் அனுபவங்கள் வித்தியாசமானவை... தங்களின் எழுத்தைப் (எண்ணங்களைப்) போலவே...

  ReplyDelete
  Replies
  1. எண்ணங்களின் தொடக்கமே அனுபவத்தில் இருந்துதானே டிடி

   Delete
 9. அவர் அவர் கொண்ட கொள்கைகள் சரி என்று நினைக்கும் போது என்ன செய்வது?மாற்றம் அவர்களிடம் வர வேண்டும்.
  தன்னை உணர்ந்தவர்கள் அடுத்தவர்களை குறைத்து மதிப்பிட மாட்டார்கள்.

  அனுபவ பதிவு நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. மாற்றம் வருகிறதோ இல்லையோ நமக்கு அனுபவப்படிப்பினை வருகைக்கு நன்றி மேம்

   Delete
 10. மயில் தோகைவிரித்தாடும் காணொளி அருமை.

  ReplyDelete
 11. வாசிப்பவரை வரவேற்கிற மாதிரி ஒரு காணொளி வந்து ரசித்ததற்கு நன்றி மேம்

  ReplyDelete
 12. காணொளி கண்டேன் ஸூப்பர் ஐயா
  த.ம.3

  ReplyDelete
  Replies
  1. காணொளி மட்டும்தான் சூப்பரா ஜி

   Delete
 13. உங்கள் ஒவ்வொருவருடனான சந்திப்பும் ஒவ்வொரு சரித்திரத்தைச் சொல்வதுபோல இருக்கிறது.. பூனைக்கு விளையாட்டு எலிக்குச் சீவன் போகிறதாம் என்பதுபோல.. படிக்கும் நமக்கோ மிக சுவாரஷ்யமாக இருக்கிறது.. அவர்களுக்கு...:(.

  ReplyDelete
  Replies
  1. சரித்திரம் அல்ல மேடம் வெறு ம் நிகழ்வுகளே எந்தப் பூனைக்கு விளையாட்டு எந்த எலியின் ஜீவன் மேடம்

   Delete
 14. முதலாமவர் ...தொழிலில் ஜெயித்து வாழ்க்கையில் தோற்றுவிட்டார் . குறை சொல்வதிலிருந்து தெரிகிறது இவரில் நிறைய மாற்றம் தேவை .இரண்டாமவர் எத்தைசொன்னாலும் நம்ப ஆட்கள் இருக்கின்றனர் என்ற நினைப்பில் இருப்பவர் ..
  எத்தனை மனிதர்கள் அவனியில் !!

  ReplyDelete
  Replies
  1. ஒவ்வொரு மனிதனும் ஒரு தீவு என்கிறார் ஸ்ரீராம் வருகைக்கு நன்றி மேம்

   Delete
  2. //ஒவ்வொரு மனிதனும் ஒரு தீவு என்கிறார் ஸ்ரீராம்//

   அது நான் சொன்னதில்லை ஸார். சொன்னது ஜெயகாந்தன் என்று ஞாபகம். படித்ததிலிருந்து எடுத்து விட்டது!

   Delete
  3. எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு

   Delete
 15. இப்படியும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள்
  ஆனாலும் தங்களுக்குப் பொறுமை அதிகம்தான் ஐயா

  ReplyDelete
  Replies
  1. அதை நான் சற்றெ மாற்றி என்னை ஒரு வெயிலிங் வாலாக
   நினைத்துக்கொண்டு ஆறுதல் கொள்வேன் வருகைக்கு நன்றி சார்

   Delete
 16. yar solvathaiyum yarum ketpathillai. anubhavamey padam. hmm

  ReplyDelete
  Replies
  1. நெருப்பைத்தொட்டுத்தான் சூடு அறிய வேண்டுமா மேம்

   Delete
 17. வேடிக்கை மனிதர்கள் நிறைய. ஐந்தாம் நபரை (அவர் போன்றவரை) நானும் சந்தித்திருக்கிறேன். நான்காம் நபருக்கு அவர் எதையெல்லாம் இழந்திருக்கிறார் என்று புரியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. பதிவில் இடம் பெறுபவர்கள் நாம் சந்திப்பவர்களே வருகைக்கு நன்றி மேம்

   Delete