Thursday, June 1, 2017

இவரைத் தெரியுமா


                          இவரைத் தெரியுமா
                         ---------------------------------

     ” காலையில் எங்கேபோய் வருகிறீர்கள் ?”-எதிரில் வந்த

நண்பரிடம் தெரியாமல் கேட்டு விட்டேன்.

      நான் மார்க்கெட்டுக்குப் போய் காய்கறி வாங்கிவருகிறேன்--

இதை சொல்ல வரும் நண்பர்,"இன்று காலையில் எழும்போதே

ஒரு மாதிரியாக இருந்தது.நம்க்கு நேரம் சரியில்லையோ

என்று நினைத்துக்கொண்டே எழுந்தேன். கும்பகர்ணன் மாதிரி

தூங்கிக் கொண்டிருந்தால் போதுமா?எல்லா வேலையும் நானே

செய்ய வேண்டி இருக்கிறது. வீட்டில் சமைக்க ஏதாவது காய்

கறிகள் வாங்கி வரக் கூடாதாஎன்று மனைவி கத்தத் துவங்கி

விட்டாள் சரி என்று பையை எடுத்துக்கொண்டு கிளம்பினென்.

கொஞ்ச தூரம் போனதும் பர்ஸை எடுக்க மறந்தது தெரிந்தது.

மறுபடியும் மனைவியின் வாயில் விழ வேண்டுமெ என்று

பயந்துகொண்டே,திரும்பி வந்து பர்ஸை எடுத்துக்கொண்டு

மார்க்கெட்டுக்குப் போனேனா....எந்தக் காய்கறி நன்றாக

இருக்கிறது, விலை மலிவு என்று தெரிந்துகொள்ளபல கடைகள்

ஏறி இறங்கினேன் வெண்டைக்காய் பிஞ்சாய் இருக்கா என்று

தெரிய உடைத்துத்தானே பார்க்க வேண்டும்.?அந்தக்கடையில்

உடைத்துப் பார்க்கக் கூடாது என்று தடுத்து விட்டார்கள்.

அப்போது மூன்றாம் வீட்டு முத்துச்சாமி எதிரே வந்தார். அவரது

மகளுக்குக் கல்யாணம் நிச்சயமாகி இருக்கிறதாம். சென்னையில்.

வரும் மாதம் முதல் வாரத்திலாம். அவசியம் வர வேண்டும்

என்று கேட்டுக்கொண்டார். நாம் இருக்கும் இருப்புக்கு சென்னை

போய் கலியாணம் எல்லாம் பார்க்க முடியுமா.?அப்படியே

போனாலும் வெறுங் கையோடு போக முடியுமா.?என்ன செய்ய.?

முயற்சி செய்கிறேன் என்று சொல்லிவிட்டுத் தப்பித்தேன்.

கொஞ்சம் வெண்டைக்காய் வாங்கினேன். முருங்கைக்காய்

எனக்குப் பிடிக்கும்.ஆனால் ஒரு காய் நாலு ரூபாய் சொல்கிறான்

கட்டுப்படியாகுமா.?ஏதோ கொஞ்சம் கீரை தக்காளிவாங்கிக்

கொண்டு இப்போதுதான் வருகிறேன். நடுவில் உம்மைப் பார்த்து

விட்டேன். நேரமாகிவிட்டது. வீட்டுக்குப் போனால் ஏன் லேட்

என்று மனைவியிடம் அர்ச்சனை வாங்க வேண்டும் ...”...ஏதோ

தாமதத்துக்கு நான் தான்  காரணம் போல    பேசிக்கொண்டே  போனார்.


 ஏமாறாதே

-----------------------
YOU may get verification call of your aadhar card  any time  on your mobile numberYou will be asked to for your aadhar card number then  you will be told  as per government norms your aadhar card number should be linked  to your idea, airtel Vodafone mobile numbers as the case may be and it will be informed that the call is to link your aadhar number with your mobile connection
 You will be aked to press 1 if you have valid aadhar card number, Then you will be asked to enter your aadhar number.
 All most all  bank accounts are linked  with aadhar card number nowYou will be asked to press some more number buttons
  Then you will be asked to enter the one time password received  in your mobie  number As soon as you enter the one time password  your balance in your bank account  will turn zero
Please do not entertain  any call or message  Fraudsters are waiting 
  என் மொபைல் எண்ணுக்கு  ஒரு செய்தி வந்தது  அதை நான் முற்றிலும்  புறக்கணித்தேன்   என்மகனிடமும்  சொன்னேன்  அதன் பின்  அவன்  எனக்கு அனுப்பிய செய்தி இது.  ஏமாற வேண்டாம்  ஜாக்கிரதை

 

              .


47 comments:

 1. இப்படிப்பட்ட ஆசாமிகள் எங்கும் இருப்பர். தனது பிழைகளுக்கு பிறரைப் பொறுப்பாக்கி, தான் மட்டும். ஜென்நிலையில் இருப்பார்கள். அப்படிப் பட்டவர்கள் தெரிந்தவர்கள் ஆனால் தவிர்த்து விடலாம் . அவர் பெண்டு பிள்ளைகள் தான் பாவம்!

  ReplyDelete
  Replies
  1. விதம் விதமான மனிதர்களைப் பற்றி ஒரு தொடரில் இது முதலாவது எங்கும் நிறைந்தவர்கள் நாம் சமாளிக்க வேண்டிய்வர்கள் பெண்டுகளும் சமாளித்துதானே ஆகவேண்டும்

   Delete
 2. இப்படி நிறைய பேரை எனக்குத் தெரியும். ஒரு வார்த்தை நாம் முகமனுக்காகக் கேட்டால் போதும். ஒரு மணி நேரம் பிடித்துக் கொள்வார்கள். இப்படிப்பட்டவர்களிடமிருந்து தப்பிப்பதே பெரும்பாடு. இதில் கூடுதல் சிரமம் என்னவென்றால், மிக நெருங்கிய சிலரே இப்படி இருப்பதுதான். என்ன செய்ய? இப்படிப்பட்டவர்களுடனும் இணைந்துதான் வாழ்க்கை எனும் பயணத்தை நடத்த வேண்டியிருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தெரிந்த சில பிரகிருதிகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறேன் இன்னும் தொடரும்

   Delete
 3. இவர்கள் எப்பொழுதுமே தனது தவறை ஒத்துக் கொள்ளாதவர்களாகவே இருப்பார்கள் ஐயா.

  ReplyDelete
  Replies
  1. அது அவர்கள் குணம் தெரிந்தா செய்கிறார்கள் ஜி

   Delete
 4. இப்படியாவது அவருடைய மனச்சுமைகள் கொஞ்சம் குறையட்டுமே!..

  தஞ்சையில் இருந்தபோது ஒரு சம்பவம்..

  அருகில் தான் பெரிய காய்கறிச் சந்தை.. அங்கு நண்பர் ஒருவரைக் கண்டதும் நலம் கேட்டு விட்டு சென்று விட்டேன்..

  சில நாட்களில் வேறொரு இடத்தில் மீண்டும் சந்தித்தபோது -

  தங்களோடு பேசுவதே எனக்கு ஆறுதல்.... ஆனால், அன்றைக்கு சரியாக பேசாமல் சென்று விட்டீர்களே.. என்ன கோபம் என் மீது?..

  - என்று மிகவும் வருத்தப்பட்டார்..

  ReplyDelete
  Replies
  1. மனச் சுமைகளைப் பகிர்கிறார்கள் என்றா நினைக்கிறீர்கள்

   Delete
 5. எல்லா விதமான மனிதர்களுடனும் பழகத்தான் வேண்டியிருக்கிறது.

  ReplyDelete
 6. எல்லா விதமான மனிதர்களுடனும் பழகத்தான் வேண்டியிருக்கிறது.

  ReplyDelete

 7. அனாவசியமாக ஒருவரிடம் பேசுவது கூட தவறு என்பதை தெரிவிக்கும் இது ஒரு பாடம். என எண்ணுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. பேசுவதைத் தவிர்த்தால் தலைக்கனம் என்பார்கள்

   Delete
 8. முதல் செய்தியில் உள்ள பிரச்சனைகள் இங்கு வர வாய்ப்பில்லை......அப்படியே வந்தாலும் ஹாய் என்று சொல்லிவிட்டு அவர் பதில் சொல்லும் முன் நாம் போய்கிட்டே இருக்கலாம்

  ReplyDelete
  Replies
  1. அதை எங்கும் செய்யலாமே

   Delete
 9. மனிதரில் பலவிதம் ..நான் வாக்கிங் செல்லும்போது பல ரிட்டையர்ட் பெனிஷனர்ஸ்களை சந்திப்பேன் அவர்கள் சில நேரம் சொன்னதையே சொல்வாங்கர் ஆனாலும் முதல்முறையா கேட்கிற மாதிரி கேட்பேன் .இங்கே யாரும் யாருக்கும் பயப்பட மாட்டாங்க நம்மூர் மாதிரி :)

  ReplyDelete
  Replies
  1. யாரும்யாருக்கும் பயந்து கேட்பதில்லை. ஒரு மரியாதை நிமித்தமே சகித்துக் கொள்கிறார்கள்

   Delete
 10. ஒவ்வொருவரும் ஒரு கேரக்டர். இவரால் ஒரு சௌகர்யம். எழுத ஒரு பதிவு கிடைத்தது! மொபைல் செய்தி எச்சரிக்கைக்கு நன்றி.

  தம +1

  ReplyDelete
  Replies
  1. இன்னும் சில பிரகிருதிகள் பற்றியும் எழுதுவேன் நீங்கள் ஒருவர்தான் மொபைல் செய்தி பற்றிகூறி இருக்கிறீர்கள்

   Delete
 11. "மனிதர்கள் பலவிதம் ஒவ்வொருவரும் ஒருவிதம்" - இருந்தாலும், 60+ ஆனால், கொஞ்சம் அதிகமாக பேசுவார்கள். சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்களானால், வயோதிகத்தில் இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளலாம்.

  எங்க ஆபீசில் ஒரு நெடுநாள் ஊழியர் (இப்போ பெரிய பொசிஷனில் இருக்கிறார்). அவர் பேச ஆரம்பித்தால் 'சின்ன விஷயத்துக்கு' ரொம்ப நேரம் எடுத்துக்கொள்வார். முதல் வாக்கியம் சொல்லும்போதே பிரச்சனையைப் புரிந்துகொண்டு நாம் பதில் சொல்ல முயன்றால் அவருக்கு ரொம்ப கோவம் வந்துவிடும். 'இன்னைக்கு நமக்கு நேரம் சரியில்லை' என்று நினைத்துக்கொண்டே ரொம்ப ஆர்வமாகக் கேட்பதுமாதிரி முகத்தை வைத்துக்கொள்ளவேண்டியதுதான்.

  இருந்தாலும், வீட்டில் வயதானவர்களுடன் நாம் பொறுமையாகப் பேசுவது மிகவும் குறைவு. அது பெரும்பாலானவர்களின் தவறுதான். அதனால்தான் நண்பர்களைப் பார்த்தால், அவர்கள் விடுவதில்லை. பேசிக்கொண்டே இருப்பார்கள்.

  ReplyDelete
  Replies
  1. இதெல்லாம் வயதாவதால் வருகிறது என்கிறீர்களா

   Delete
 12. சுய பச்சாதாபம் கொண்ட மனிதர்கள்
  எனக் கொள்ளலாமே
  இரக்கத்தோடு தொடரப்படவேண்டியவர்கள்
  என்பதே என் கருத்து
  எச்சரிக்கைப் பதிவுக்கு மிக்க நன்றி
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
  Replies
  1. அதை அவர்கள் ஒப்புக்கொள்வார்களாவாழ்வில் பலதரப்பட்ட மனிதர்கள் அனுசரித்துப் போகவேண்டும் வாழ்த்துகளுக்கு நன்றி சார்

   Delete
 13. மொபைலில் வரும் இம்மாதிரி பொய் விசாரிப்புகளை சற்றே கவன்த்துடன் தான் கையாளவேண்டும். வேறு யாருடனாவது கலந்தாலோசித்த பிறகே பதிலளிக்க வேண்டும். (2) அவசர வேலையாக நாம் செல்லும்போது, வீதியில் நம்மைப்பார்த்துப் பேசப் பிடித்துக்கொண்டு தாலி அறுக்கும் நண்பர்களை கவனிக்காதமாதிரி போய்விடவேண்டும். அடுத்தமுறை நம்மை சற்றே அசிங்கமாகப் பேசுவார்கள். அவ்வளவுதானே! அதே சமயம், நம்மிடம் கடன்வாங்கியவராக இருந்தால் இந்த உத்தி பயன்படாது. - இராய செல்லப்பா (இப்போது) சென்னை

  ReplyDelete
  Replies
  1. மரியதை நிமித்தம்விசாரித்தலே தவறு போல் தெரிகிறதுவருகைக்கு நன்றி சார்

   Delete
 14. இப்படியும் உங்களுக்கு ஒரு சோதனையா...?

  (!)

  ReplyDelete
  Replies
  1. என்னை முன்னிறுத்தி எழுதியது அவ்வளவே

   Delete
 15. இதுவும் கடந்து போக வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. கடந்து போகத்தான் வேண்டும்

   Delete
 16. டேக் இட் ஈசி பாலிசி எடுங்கள் :)

  ReplyDelete
  Replies
  1. வாழ்க்கையில் எல்லாவற்றையும் டேக் இட் ஈசி யாக எடுத்துக் கொள்வது முடியுமா

   Delete
 17. இப்படியும் சில மனிதர்கள் என்ன செய்வது கடந்து போவோம் ஐயா!

  ReplyDelete
  Replies
  1. இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதைச்சொல்லவே பதிவு நன்றி சார்

   Delete
 18. Replies
  1. என்னை முன்னிலைப் படுத்ட்க்ஹி எழுதியது அவ்வளவே

   Delete
 19. இப்படிப்பட்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் ஐயா

  ReplyDelete
  Replies
  1. புரிந்து கொள்ள ஒரு பதிவு

   Delete
 20. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை
  ஏமாற்றுபவர்கள் இருக்கும் நிலை தொடருமே!
  எச்சரிக்கையாக இருப்போம்!

  ReplyDelete
  Replies
  1. எச்சரிக்கைக்காகவே எழுதிய பதிவு நன்றி

   Delete
 21. சுவாரஸ்யமான பதிவு!👍

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் ரசித்ததற்கும் நன்றி மேம்

   Delete
 22. மொபைலில் வரும் செய்திகளை உறுதி செய்து கொள்ள வேண்டி இருக்கிறது. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மாதிரி ஆசாமிகள் இருக்கத் தான் செய்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. மொபைலில் எனக்கு செய்தி வந்தது என் மகன் எனக்கு எச்சரிக்கை அனுப்பினான் நான் பகிர்ந்துகொண்டேன் நான் குறிப்பிட்டிருக்கும் மாதிரி ஆட்கள் இருப்பதாலேயே பகிர்வு வருகைக்கு நன்றி மேம்

   Delete
 23. அதிகமாகப் பேசுவதில் தப்பே இல்லை, ஆனா இந்த வயதில் போய் வரிக்குவரி மனைவிக்குப் பயம் எனப் பேசுவது தப்பாகவும், அவ்ளோ தூரம் நொந்துபோயிருப்பவராகவும் தெரிகிறது பாவம் அவர்.

  ReplyDelete
 24. பெரும்பாலான ஆண்கள் மனைவிக்குப் பயந்துதான் இருக்கிறார்கள் சிலர் சொல்கிறார்கள் சிலருக்குச் சொல்லக் கூட மனைவியின் அனுமதி வேண்டும் ஆற்றாமையை எங்காவது கொட்ட வேண்டும் அல்லவா

  ReplyDelete
 25. கேட்கும் செவி இருந்தால் பேச விஷ்யம் இருக்கும்.
  மனிதர்கள் பலவிதம்.

  ReplyDelete
 26. ஹஹ இப்படிப் பட்டவர்கள் தான் இப்பொழுது பேசத்தெரிந்தவர்கள் என்று பெயர் எடுத்து விடுகிறார்கள்.

  ReplyDelete