சனி, 14 மே, 2016

மலரே மலரே வாசமில்லா மலரே


                                  மலரே மலரே வாசமில்லா மலரே
                                  -----------------------------------------------


சிலரது பதிவுகளில் ஆண்டு தவறாமல் நடக்கும்  திருவிழாக்கள் குறித்து ஆண்டு தவறாமல் பதிவுகள் வெளியாகின்றன.  அதே போல் என் தளத்திலும் ஆண்டு தவறாமல் ஒரு மலர் பற்றி எழுதி வருகிறேன்
ஒரு செடி பூக்கிறது;வருடம் ஒரு முறை; ஒரே ஒரு பூ.!
ஆண்டு முழுதும் செடியே காணாது;
ஏப்ரல் முடிவில் செடி துளிர் காட்டும்.
வளரும் வேகம் நினைப்பில் அடங்காது.
மே மாதம் ஒரு பூ பூக்கும், இரு வாரம் தங்கும்
பின் வாடிச் சுருங்கி விடும்.
யார் சொல்லிக் காலம் அறியும் அச்செடி.?
யார் சொல்லி ஒரே பூ பூக்கும் அச்செடி?
காணக் கொள்ளை அழகு.மே மாதம் பூப்பதால்
மே மலரே என்றழைக்கட்டுமா.?
நான் கவனித்துப்  படமெடுத்த முதல் பூ
ஆனால் அதன் பெயர் Common name: Blood Lily, Football Lily, Powderpuff Lily 
Botanical name: Scadoxus 
என்று தெளிவு படுத்தி பின்னூட்டம் எழுதி இருந்தார் கீதா மதிவாணன்
 ஒரு செடி ஒரு பூவாக இருந்தது அதே இடத்தில் பல செடிகளாக செடிக்கு ஒரு பூவாகப் பூத்தது கண்டு  மிக்க மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன்  நான் இந்தச் செடியின் இருப்பு பற்றியும் பூ பற்றியும் கவனித்து பதிவிட்டது முதலில் 2012-ம் ஆண்டுஅடுத்த ஆண்டு இச்செடிக்காக நான் காத்திருந்தேன் ஏப்ரல் முடிந்தும் செடியின் அறிகுறியே இருக்கவில்லை.  மேமாதம் முதல் வாரத்தில் எங்கிருந்தோ வந்தது போல் நான்கு செடிகள் வந்து நான்கு பூக்கள் கொள்ளை அழகுடன் வெளி வந்தன அதற்கு அடுத்த ஆண்டும் டாக்டர் கந்தசாமி என் வீட்டுக்கு வந்திருந்த சமயம் அவரை வரவேற்கும் விதத்தில் பூத்து இருந்தது செடிகள்
நான்கு செடிகள் நான்கு பூக்கள்

2015-ம் ஆண்டு மூன்று நான்கு செடிகள் தெரிந்தாலும் ஒரே செடியில் மட்டும் பூ இருந்தது
 இது குறித்து எனக்குப் பல சந்தேகங்கள் எழுந்தது அடுத்த ஆண்டு இன்னும் கவனிக்க வேண்டும் என்று நினைத்தேன் இந்த ஆண்டு ஏப்ரல் மாத முடிவிலும் எந்தச் செடியும் வரும் அறிகுறியும் தெரியவில்லை. தினம் செடி வரும் இடத்தையே உற்று உற்று நோக்கிக் கொண்டிருந்தேன்  ஒரு நாள் சிறிதாக செடியின் குருத்து தெரிந்தது ஓரிரு நாட்களில் ஒரு மட்டு மட்டும் தெரிந்தது இன்னும்  இரு நாட்களில்  மொட்டு சற்றே பெரிதாய் தெரிந்தது  பின் ஓரிரு நாட்களில்  பூ விரியத்தொடங்கியது. பின் நன்கு விரிந்தது ஆனால் இந்த ஆண்டு போன ஆண்டுகள் போல் பெரிதாகவோ சிவப்பாகவோ இல்லாமல் சற்றே சவலை போல் தெரிந்தது  ஒரு வாரம் கழிந்து வாடத் துவங்கி விட்டது செடி மட்டும் போக்குடன் இருக்கிறதுஒரு பூ மட்டுமே பூக்கும் செடியில் இன்னொரு பூவை எதிர் நோக்க இயலாது  இனி அடுத்த ஆண்டு ஏப்ரல் மே மாதத்துக்காகக் காத்திருக்க வேண்டும் 
மந்தொட்டியின் கீழ் பாகத்தில் மொட்டு தெரிகிறதா
   

சற்றே பெரிய மொக்கு
விரியும் பூ
விரிந்த பூ
வாடும் பூ
 இந்த ஆண்டு ஒரே செடி வந்து பூத்து வாடியும் விட்டது இருந்தாலும் ஒரு நப்பாசைநான்கு செடிகள் வந்த இடத்தில் ஒன்றே ஒன்றா  மனம் ஆறவில்லை. தினம் அந்த இடத்தை நோக்குவேன் வரும்  வாரம் வருகை தரவிருக்கும் என் வலை நண்பர்களை வரவேற்க ஓரிரு செடிகளின் துளிர் தெரிகிறது நண்பர்கள் வரும் முன்  பூத்து விடும் என்று நம்புகிறேன் 
       

34 கருத்துகள்:

  1. வருடாந்திரப் பதிவு! மலர் அழகாக இருக்கிறது. ஏற்கனவே படித்த நினைவும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. இந்த மலரைப் பார்த்த நினைவு நீங்காமல் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. ஏற்கனவே பதிவில் படித்த ஞாபகம் அதை கவனமாக கவனித்தமைக்கு நன்றி ஐயா அடுத்த வருடமும் இந்த பதிவு தொடரும்
    தங்களது இந்தப்பதிவு எனது டேஷ்போர்டில் வரவில்லை தமிழ் மணம் வழி வந்தேன் ஐயா...

    பதிலளிநீக்கு
  4. பூக்களை கவனிப்பது ஒரு நல்ல விஷயம். இதுவும் ஒரு தியானம்தான்!

    நம்ம வீட்டிலும் Peace Lily செடி ஒன்னு பெருசா தொட்டியில் செழிப்பா வளர்ந்து நிக்குது. வருசம் ஒரு பூ என்ற கணக்குதான். இந்த வருசம் மட்டும் அத்தி பூத்ததுபோல் ரெண்டு பூக்கள்!

    பதிலளிநீக்கு
  5. செடியில் பூத்துக் குலுங்கும் மலர்களைப் பார்த்தால் ஒரு உற்சாகம் வரும். அழகான பூவை உற்று நோக்கியா பதிவும் படமும் அருமை. இப்போதெல்லாம் வீடுகளில் மஞ்சள் பூக்கள் அதிகம் காணப்படுகின்றன. குவளை என்று நினைக்கிறேன்.வாஸ்துப்படி நல்லதாம்

    பதிலளிநீக்கு
  6. வாசமில்லா மலர் எனினும் வனப்புடைய மலராக இருக்கின்றது..

    புதிய தகவல்.. அறிந்து கொண்டேன்..

    பதிலளிநீக்கு
  7. வருடம் ஒருமுறை, உங்களுக்காகவே பூக்கின்ற, உங்கள் கவனத்தை ஈர்க்கின்ற இறைவன் தந்த அதிசய மலர்.

    பதிலளிநீக்கு
  8. எங்கள் வீட்டுத் தோட்டத்து நினைவுகளைக் கிளறிவிட்டது! அங்கேயும் இந்தச் செடி இருந்தது. பின்னர் வேரோடு எடுத்துவிட்டார்கள். :( ஆனாலும் உங்களைப் போல் அது பூக்கும் காலத்தைக் கவனித்ததில்லை.

    பதிலளிநீக்கு

  9. @ ஸ்ரீராம்
    வருடாந்திர மலர் பற்றிய வருடாந்திரப் பதிவு. நான் இம்மலர் பற்றி எழுதுவது ஆச்சரியத்தினால்தான் முகவரியே விட்டுச் செல்லாத செடி எப்படித்தான் ஏப்ரல் இறுதியில் தலைகாட்டி மேமாத முதலில் பூக்கிறதோ பதிவை விட படங்களைப் பார்த்த நினைவாயிருக்கலாம் வருகைக்கு நன்றி ஸ்ரீ

    பதிலளிநீக்கு

  10. @ டாக்டர் கந்தசாமி.
    நீங்கள் வருகைதந்தபோது மலசர்ந்திருந்ததே வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு

  11. @ கில்லர்ஜி
    வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி ஜி

    பதிலளிநீக்கு

  12. @ துளசி கோபால்
    என் வீட்டில் நிறைய பூக்கள் இல்லை இருப்பதோ ரேர் வெரைட்டி வருகைஒக்கு நன்றி மேம்

    பதிலளிநீக்கு
  13. மலர்களிலே பல நிறம் கண்டேன். அருமை ஐயா பதிவும், படங்களும்.

    பதிலளிநீக்கு

  14. @ டி.என் முரளிதரன்
    நான் இந்த வீட்டில் 25 ஆண்டுகளாக இருக்கிறேன் நானாக செடியை நடவில்லை. கவனிக்க ஆரம்பித்தது 2010 ஆம் ஆண்டு வாக்கில்தான் சில அசாதாரணப் பூக்களின் செடிகள் இருக்கின்றன பெயர் தெரியவில்லை வருகைக்கு நன்றி முரளி சார்

    பதிலளிநீக்கு

  15. @ துரை செல்வராஜு
    வனப்புடையது மட்டுமல்ல ஆச்சரியப்படுத்துவதும் கூட வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு

  16. @ தி.தமிழ் இளங்கோ
    என்னை மட்டுமல்ல காண்போரையும் பரவசப்படுத்தும் அதிசய மலர் வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு

  17. @ கீதா சாம்பசிவம்
    எத்தனையோ இடர்களையும் தாண்டி நிற்கிறது இந்தச் செடி. வருடம் ஒரே முறை பூப்பதால் கவனத்தை ஈர்த்திருக்காது/ ஆனால் என் கவனத்தை ஈர்க்கிறதுசெடிலளை அழிக்க மனம் வருவதில்லை. வருகைக்கு நன்றி மேம்

    பதிலளிநீக்கு

  18. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    வருகைதந்து ரசித்ததற்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  19. தங்கள் வீட்டில் இருக்கும் Amaryllidaceae தாவர குடும்பத்தைச் சேர்ந்த, Scadoxus multiflorus என்ற இந்த பூவை கேரளாவில் ஏப்ரல் லில்லி, மே மாச ராணி என்று அழைப்பார்கள். பூ பார்க்க அழகாக இருக்கிறது. மேலும் பூக்கள் பூக்கட்டும்! உங்கள் முகத்தில் மகிழ்ச்சி தவழட்டும்!

    பதிலளிநீக்கு

  20. @ வே நடனசபாபதி
    நாங்கள்; யாருமே நடாத செடி அதுஎன்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் செடி அது ஒரு செடிக்கு ஒரு பூ மட்டுமே ஓராண்டுக்கு ஒரு முறைபூக்கிறது வருகைக்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  21. வாசமல்லா மலரிது. வசந்தத்தைத் தேடுது என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன. வருடம் ஒரு முறை பூத்து உங்கள் வயதை நினைவூட்டுகிறதோ?

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  22. அழகான அதிசய மலர்!
    படங்கள் அழகு.
    இயற்கையின் அதிசயங்கள்.

    பதிலளிநீக்கு

  23. @ ஜேகே 22384
    என்வயது பற்றி நான் நினைப்பதே குறைவுசாதாரணப் பூக்களின் பெயர்களே தெரியாத என்னை இந்த exotic பூ ஆச்சரியப்படுத்துகிறது வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு

  24. @ கோமதி அரசு
    ஆம் அதிசயம்தான் வருகைக்கு நன்றி மேம்

    பதிலளிநீக்கு
  25. வியக்க வைக்கிறது செடியும் பூவும்.அருமையான மலர்.

    பதிலளிநீக்கு

  26. @ ராஜலக்ஷ்மி பரமசிவம்
    வாருங்கள் மேடம் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  27. ஐயாவுக்கு செடிகள் மேல் ஆர்வம் அதிகம்
    இருக்கிறது என்று பதிவு சொல்கிறதே ஐயா...

    பதிலளிநீக்கு
  28. வருடத்திற்கு ஒரு முறை மட்டும் பூக்கும் பூ.... அழகிய மலர். ரசித்தேன் ஐயா.

    பதிலளிநீக்கு

  29. @ அஜய் சுனில்கர் ஜோசப்
    ஒரு உண்மையைச் சொல்லட்டுமா ஜோசப் எனக்கு தாவரங்கள் பற்றிய அறிவே மிகக் குறைவு வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு

  30. @வெங்கட் நாகராஜ்
    வருகைக்கும் ரசனைக்கும் நன்றி சார்

    பதிலளிநீக்கு
  31. லில்லி வகை மலர்கள் எல்லாமே வருடந்தோறும் இப்படியொரு ஆச்சர்யத்தைத் தந்து செல்வது வழக்கம்தான். பூத்து முடிந்த பிறகு மண்ணைத் தோண்டிப் பார்த்து உள்ளே ஒன்றுக்கு மேற்பட்ட கிழங்குகள் இருந்தால் அவற்றைப் பிரித்து வேறு இடத்தில் வைத்துப் பார்க்கலாம். நான் இப்படி முன்பு செய்திருக்கிறேன். ஆனால் முதலுக்கே மோசமாகிவிடவும் வாய்ப்பு உள்ளது. வந்தவரை லாபம் என்று வருடமொரு மலர் பார்த்து ரசிப்பது உத்தமம். :)))

    பதிலளிநீக்கு

  32. @ கீத மஞ்சரி
    நீண்ட இடைவெளிக்குப் பின் வருகைக்கு நன்றி எனக்கும் கிழங்குகளை நோண்டி எடுத்து வேறு இடத்தில் நடுவதில் நாட்டமில்லை. இந்தச் செடி நானாக நட்டதுமில்லை.இன் நும் நிஷாகந்தி எனப்படும் ப்ரம்ம கமலம் எனும் பூவும் ஒரு செடியில்ஒரே பூ பூத்தும் பார்த்திருக்கிறேன் செடிகள் பல இருந்தாலும் இதுவரை எதிலும் பூ காணப்படவில்லை

    பதிலளிநீக்கு
  33. மிகவும் மென்மையான மணம் மிகுந்த எழுத்துக்கள் GMB அய்யா.வாழ்த்துகள்.ஆயிரம் பிறையை நெருங்கிக்கொண்டிருக்கும் உங்கள் எழுத்து பலராலும் வரவேற்கப்படும்.

    பதிலளிநீக்கு

  34. @ கல்னல் கணேசன்
    கனிவான வாழ்த்துக்களுக்கு நன்றி சார் ஆயிரம் பிறை காண இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் இருக்கிறது ஐயா தொடர்ந்து எழுத விருப்பம் வரவேற்போ இல்லையோ வாசகர்கள் கையில்தான் இருக்கிறது

    பதிலளிநீக்கு