திங்கள், 30 மே, 2016

செல்வி ஜெயலலிதாவுக்கு ஒரு திறந்த மடல்


                                 செல்வி ஜெயலலிதாவுக்கு ஒரு திறந்த மடல்
                                    =======================================
வெற்றிக்கனி பறித்த முதல்வர்  செல்வி ஜெயலலிதா 
மதிப்பிற்குரிய முதலமைச்சர் மேடம் ஜெய லலிதாவுக்கு  முதலில் என் பாராட்டுக்களையும்  வாழ்த்துகளையும்  தெரிவித்துக் கொள்கிறேன் ஒரு மாநில முதலமைச்சருக்கு ஒரு nondescript personality   கடிதம் எழுதுவது சரியா என்று  நினைக்க மாட்டீர்கள் என்று தெரியும் மக்களின் மனதில் உங்களுக்கென்று ஒரு இடம் பிடித்துள்ளீர்கள்  என்பது தெரிகிறது. இருந்தாலும் எல்லோர் மனதிலும் அல்ல என்பதும் உங்களுக்குத் தெரியும் பல இடங்களிலும்  வெற்றி பெற்று விட்டீர்கள் என்பது சட்டப்படி உண்மையானாலும்  பெரும்பான்மையினர் மனதில் அந்த இடம் இருக்கிறதா என்று ஆராயாமல் இருந்திருக்க மாட்டீர்கள் என்பதும் தெரியும் வாக்களித்தவர்களில் ஐம்பது சதவீதத்துக்கும் மேல் உங்கள் கட்சிக்கு ஓட்டளித்திருந்தால் பெரும்பான்மையினரின் நிஜமான ஆதரவு இருப்பதாகக் கொள்ளலாம் இதையெல்லாம் நான்  சொல்லித்தான்  உங்களுக்குத் தெரிய வேண்டும் என்றில்லை. பல தேர்தல்களைச் சந்தித்த உங்களுக்கு தேர்தலின்  உண்மை நிலை தெரியாமலா இருக்கும் . இருந்தாலும் உங்கள் மேல் மரியாதை கொண்டவன்  என்ற முறையிலும்  ஒரு மூத்த குடிமகன் என்ற  முறையிலும்  என்  கருத்துக்கள் சிலவற்றை முன்  வைப்பது தவறாகாது என்று தோன்றுவதாலும் இதைப் பதிக்கிறேன்
பொறுப்பு ஏற்றுக் கொண்ட வுடன் நீங்கள் அறிவித்திருக்கும்  500 டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லும் உத்தரவு பாராட்டுக்குரியது இதுவே கூடிய சீக்கிரத்தில் பூரண மது விலக்குக்கு அடிகோலாய் அமைய வேண்டுகிறேன்
உங்கள் ஆட்சி விலையில்லா இலவசங்களுக்குப் பெயர் போனது இத்தனை இலவசங்களுக்கும்  நிதி ஆதாரத்தை  டாஸ்மாக் விற்பனையிலிருந்தே பெற்றீர்கள் என்று ஒரு வலுவான கருத்து இருக்கிறது இல்லை என்றால் இலவசங்களுக்கான நிதி ஆதாரங்கள்   transparent  ஆக இருக்க வேண்டும் மின்சார வினியோகமே தடை இல்லாமல் இல்லை என்னும் நிலையில் இப்போது முதல் நூறு யூனிட்டுகள் மின்சாரம் இலவசம் ( உங்கள் மொழியில் விலையில்லாதது) என்னும் அறிவிப்பும்  இன்னும் நிறையக் கேள்விகளைக் கேட்க வைக்கிறது யாருமே கேள்வி கேட்க முடியாதபடி நிர்வாகம் திறந்த  முறையில் இருக்க வேண்டும் என்பதும்  என்  வேண்டுகோள்
நான் இந்த மடலை எழுதக் காரணமே  உங்கள் ஆட்சியில் இப்போதிருக்கும் ஏற்ற தாழ்வுகள் மறைய வேண்டும் என்னும் விருப்பமும்  அதற்காக என் ஒரு ஆலோசனையும்  தான்  .
உயர்வு தாழ்வுகளுக்குக் காரணம் என்னைப் பொறுத்தவரை இப்போதிருக்கும் நிலையில் நமக்குள் ஊன்றி விட்ட  சமுதாய சித்தாந்தங்களேயேகும்  இவை நம்  இரத்ததில் ஊறி விட்டது சாதிமத வேறுபாடுகள் நம் கலாச்சாரவிளைவுகளே  இதற்கு யாரையும் குறை சொல்லாமல் இவற்றை நீக்குவது எப்படி என்று சிந்தித்தால் இனிவரும்  புதிய தலைமுறையினரால்தான் சாத்தியமாகும் இதற்கான ஏற்பாடுகள் கல்வி சாலைகளிலிருந்தே தொடங்கப் பட வேண்டும் ஆனால் இப்போதெல்லாம் கல்வியுமே ஏற்ற தாழ்வுக்கு வித்தூன்றுவது தெரியும் ஏழைக்கல்வி பணக்காரக் கல்வி என்று தலை விரித்தாடுகிறது  எனக்குத் தெரியும்  நீங்கள் அசாதாதாரணமாகச் சிந்திக்கக் கூடியவர் என்று.-. இரத்தத்தில் ஊட்டிவளர்க்கப்படும்  பிரிவினை எண்ணங்களைப் போக்க கல்விக் கூடமே சிறந்த இடமாகும் இதற்கான தீர்வாக நான்  சிந்தித்ததை முன்  மொழிகிறேன் பள்ளிப்படிப்பு அரசுடைமை ஆக்கப் படவேண்டும்   
பள்ளியிறுதி வரை கல்வி எல்லோருக்கும்  கட்டாயமாக்கப் பட வேண்டும் எந்தப் பாகுபாடும் இல்லாத சமமான கல்வி வழங்க அவை எல்லோருக்கும்  இலவசமாக இருக்க வேண்டும் இதில் பணம் படைத்தவன் இல்லாதவன் என்னும்  வேற்றுமை கூடாது  பள்ளியில் படிக்கும் சிறார்களும் அனைவரும்  சமம் என்று எண்ண  அத்தனை பேருக்கும்  மதிய உணவும் சீருடைகளும்  கட்டாயமாக இலவசமாக இருக்க வேண்டும் பாடப்புத்தகங்களும்  இன்ன பிறவும்  அனைவருக்கும்  இலவசமாக இருக்க வேண்டும்
 இந்நிலை தொடர்ந்தால் சின்னஞ்சிறியவர்கள்  மனதில் உயர்வு தாழ்வு எண்ணம்வராது நாளாவட்டத்தில் சிறார்கள் மனதில் அதாவது ஒரு புதிய தலை முறை வேறுபாடுகள் பற்றி சிந்திக்காமல் வளருவார்கள் இவர்களே நாளை நம் நாட்டின் தலைவிதியை நிர்ணயிப்பவர்கள் ஆவார்கள்
 இதற்கு எதிர்ப்பு இருக்காதா? நிச்சயம்  இருக்கும் ஆனால் இவற்றை சமாளிக்கும் திறன்  உங்களுக்கு இருப்பது தெரிந்ததே பணம் படைத்தவர்களும்  கல்வியை வியாபாரமாகக் கையாள்பவர்களும் கடும் எதிர்ப்பினைத் தெரிவிப்பார்கள் எல்லா செய்கைகளும்  திறந்த மனதோடு செய்தால் நிச்சயம் பலன்  தரும்
மாநில அரசின் பல செயல் பாடுகளில்  எனக்கு கருத்து வேற்றுமை இருந்தாலும் உங்கள் திறமையில் நம்பிக்கை இருக்கிறது இலவசங்கள் எனக்கு ஏற்புடையதல்ல. ஆனால் கல்வியில் இலவசம் நாட்டின் தலைவிதியை மாற்றும் என்று நம்புகிறேன் பசித்திருப்பவனுக்கு மீனைக் கொடுப்பதை விட மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பதே சிறந்தது என்று நினைப்பவன்  நான் தவறுகளுக்கான  ஆதார காரணங்களைக் களைய வேண்டும்  என்று நம்புபவன் அதற்கான மன உறுதியும் தன்னம்பிக்கையும் உங்களிடம் இருப்பது தெரிந்தே இந்த மடலை அனுப்புகிறேன்
உங்களுக்கு இந்த மடலை அனுப்புவதால்  நிர்வாகத்தில் எங்காவது ஒரு புதிய சிந்தனை உதித்தால் அதுவே பலனைப் பெற்றுத்தரும் 
அ இ அதிமுகவில் உங்களுக்குப் பின் இரண்டாம் நிலைத் தலைவர்கள் இல்லை. ஆலமரம் போல் அனைவரையும் உங்கள்  நிழலிலேயே  இருத்தி இருக்கிறீர்கள் அவர்களும் வேர் ஊன்றி வளர வேண்டாமா இதையும்  கருத்தில் கொள்ள வேண்டுகிறேன்


( பம் தவி---- இணையத்துக்கு  நன்றி)                          

45 கருத்துகள்:

  1. ஏற்கெனவே பள்ளி மாணவர்களுக்குப் பாடப் புத்தகங்கள், சைகிள், சீருடை போன்றவை இலவசமாகத் தான் கொடுத்து வருகிறார்கள். ஆகவே இதில் இன்னும் புதுமைனு சொல்ல ஏதும் இல்லை. சென்ற ஐந்து வருடங்களில் மடிக்கணினி கொடுத்தார்கள். அது இப்போதும் தொடரலாம். பொருட்கள் தரமானவையாக இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. நியாயமான கருத்துகள்.. ஆல மரம் போல அவர் வாழ - அந்த நிழலில் ஆயிரம் அல்ல சில செடிகளாவது தழைக்கட்டுமே!.…

    பதிலளிநீக்கு
  3. நியாயமான கருத்துகள்.. ஆல மரம் போல அவர் வாழ - அந்த நிழலில் ஆயிரம் அல்ல சில செடிகளாவது தழைக்கட்டுமே!.…

    பதிலளிநீக்கு

  4. @ கீதா சாம்பசிவம்
    பதிவின் கருத்தை தெரிந்து கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறதுபள்ளி மாணவர்களுக்குச் சில பொருட்களை இலவசமாகக் கொடுப்பது பற்றி அல்ல பதிவு அனைவருக்கும் ஏழை பணக்காரன் என்னும் பேதமில்லாமல் சமகல்வி சம சீருடை சம உணவு கட்டாயமாக இலவசமாகக் கொடுத்தால் வளரும் சிறார்கள் மனதில் பேதங்கள் தோன்றாது என்பதை வலியுறுத்துவதே பதிவின் நோக்கம் இது புதுமை என்று சொல்வது அல்ல எண்ணம் வருகைக்கு நன்றி மேடம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 1. ஆன்மீகவாதி என்கிறார்கள். சிலைத்திருட்டு அதிகம் நடந்தும் ஏன் கண்டு கொள்ளவில்லை.

      2. திமுக தீய சக்தி என்றார். உண்மையாக இருக்கட்டும். பள்ளி கட்டுமான அடிப்படை அமைப்பு இவர் காலத்தில் நடந்துள்ளதா? 90 சதவிகித அரசு பள்ளிகள் கக்கூஸ் கூட இல்லாமல் தான் உள்ளது.

      நீக்கு
  5. School Education is a concurrent subject in the Constitution. Therefore State can do only what they can do like "சமச்சீர் கல்வி " by previous M. K Govt. which eliminated Matriculation schools. But can't prevent CBSE ICSE ISC etc.

    You might have read about the proposal to provide free breakfast also in the Schools.

    Tuition is free, Books are free, Necessary instruments are free, Uniform is free, Bicycle is free for girls studying in higher classes, Laptop is free at +2 stage are some of the benefits available to Students in Tamil Nadu, and all these are given without any discrimination.

    The problem lies with Teachers and their attitude. Most of them just come to School only for salary. They don't put any involvement in bringing up good educated children.

    Language, Minority rights, and other hurdles prevent the dream of providing equal education for all and also deciding on which syllabus to be taught.

    You may know even the Uniform has been marred by additional wear like Hijab and Burkah
    -
    Jayakumar

    பதிலளிநீக்கு
  6. GMB ஐயாவிற்கு முதலில் என் வணக்கம்.
    என் மனதில் தோன்றிய அதே கருத்துக்களைப் பார்த்தது போல் உள்ளது தங்களின் இப்பதிவு. இலவசங்களை நிறுத்தி வேலை வாய்ப்பை அதிகரித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

    அனைவருக்கும் கல்வி அதுவும் இலவசக் கல்வி, இலவசத் தண்ணீர், இலவச மருத்துவம் இவைகளே நான் விரும்பும் இலவசங்கள்!!!

    பதிலளிநீக்கு
  7. அருமையான பொதுநலமான கோரிக்கை ஐயா இது நடந்தால் எதிர்காலத்தில் ஏற்றத்தாழ்வு, ஜாதி மத எண்ணங்கள் குறைய வாய்ப்பு நிச்சயம் உண்டு பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  8. செல்வி. ஜெயலலிதா என்று தொடங்கியமைக்கு ஒரு சபாஷ் ஐயா திருமணம் ஆகாதவரை இப்படி அழைப்பதே மரபு.

    பதிலளிநீக்கு
  9. எப்படி, எந்த முகவரிக்கு அனுப்பினீர்கள் என்று தெரியவில்லை. அல்லது, திறந்த மடல் என்பதால் இங்கு வெளியாவது மட்டும்தானா என்றும் புரியவில்லை. ஆனால் ஆரம்ப வரிகளின் முன் ஜாக்கிரதையான தற்காப்பு வரிகள் அனுப்பி இருப்பீர்களோ என்று எண்ண வைக்கிறது.

    சீருடை போன்ற சமாச்சாரங்கள் ஏற்கெனவே இருப்பதுதானே? ஆதரவு, எதிர்ப்பு சதவிகித கணக்குகள் தோற்ற கட்சிகள் - அது எந்தக் கட்சியாயினும் - வழக்கமாகச் சொல்பவை.

    உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது. நல்ல சிந்தனை.

    பதிலளிநீக்கு

  10. @ jk 22384
    When I started writing the post I don"t know how I missed the constitutional point. Thank you for pointing the same. However even though this letter is addressed to the cm. SHE CAN IF SHE WANTS TRY TO BRING ABOUT A CONSTITUTIONAL AMENDMENT. The basic idea of the post is that a change is required in the mental set up of the people which is nearly impossible to bring about A least the future generation must change and that should begin at the school stage. where the ambience should be conducive. Piecemeal adjustments wont work because the disparities are built in our culture. Thank you for your pointing out the error.

    பதிலளிநீக்கு
  11. @ டாக்டர் கந்தசாமி
    வந்து ரசித்ததற்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு

  12. @ அருள்மொழி வர்மன்
    பள்ளி நிலையில் எல்லோருக்கும் இலவசம் என்பது உயர்வு தாழ்வு எண்ணங்களைப் போக்க உதவும் வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு
  13. இலவச லேப்டாப் பற்றி என்னுடைய கருத்து: இலவசமாக வரும் எந்தப் பொருளுக்கும் அதற்குண்டான மரியாதை இருக்காது. அநேகம் பிள்ளைகள் குறைந்த விலைக்கு அதை விற்றுவிடுகிறார்கள். பலர் அதை வைத்து படங்கள் தான் பார்க்கின்றார்கள் (ஆபாசப்படம் உள்பட). ஒழுங்கான வழியில் அதை பயன் படுத்துபவர்கள் மிகவும் சொற்பமே. அதற்கு பதிலாக அந்தப் பணத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் தனியாக இன்டர்நெட் வசதியுடன் கணினிலேபை (Computer Lab) நிறுவி பள்ளி நேரம் கழித்து ஆசிரியர் ஒருவரின் மேற்பார்வையில் பாடம் படிக்க வைக்கலாம். இது மாணவர்கள் கெட்டுப்போவதைத் தவிர்க்கும். மேற்பார்வை இல்லாமல் பள்ளி மாணவர் கையில் லேப்டாப் போன்ற நவீனக் கருவி கிடைத்தால் தவறான பயன்பாட்டுக்குத்தான் வழிவகுக்கும். இலவச லேப்டாப் பெற்றுக்கொண்ட பல மாணவர்களின் கணினி அறிவினை நான் சோதித்துப்பார்த்தேன். சொந்தத்தில் அவர்கள் கணினி வைத்து இருந்தும் அதன் பயன்பாட்டில் அவர்களுக்கு சரியான புரிதல் இல்லை. இது தான் நிதரிசனமான உண்மை. இதை யாரும் கண்டுகொள்வதாக இல்லை. மேம்போக்காக இலவச லேப்டாப்பைப் புகழுகிறார்கள். அவர்கள் இதை ஆராய்ந்து பார்ப்பதில்லையா அல்லது மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்கின்ற பயத்தில் உண்மையை வெளியே சொல்லுவதில்லையோ தெரியவில்லை!!! இந்த விஷயத்தை அரசு கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும்.

    பதிலளிநீக்கு

  14. @ கில்லர்ஜி
    இந்த உயர்வு தாழ்வு நிலை மனதில் என்னென்னவோ எண்ணங்களைத் தோற்று விக்கிறது இவற்றின் காரணங்களை ஆராய்வதை விட அதை நீக்கும் வழிமுறைகளைப் பகிர்ந்திருக்கிறேன் வருகைக்கு நன்றி ஜி

    பதிலளிநீக்கு

  15. @ கில்லர்ஜி
    மேடம் செல்வி ஜெயலலிதா என்றும் கூறி இருக்கலாம்

    பதிலளிநீக்கு

  16. @ ஸ்ரீராம்
    இந்தப் பதிவு பப்லிக் டொமெயினில் இருப்பதால் தனியாக அவருக்கு அனுப்பவில்லை. இது பற்றி யாராவது அவர் சிந்தனைக்கு எட்டச் செய்தாலும் நல்லது வெற்றி பெற்றவர் தோற்றவர் என்னும் நிலையைத் தாண்டி உண்மை நிலை என்று ஒன்று இருக்கிறதே. அதுபற்றி அவரும் சிந்தித்திருப்பார்
    சொந்த விருப்பு வெறுப்புகளையும் தாண்டி எழுதியது வார்த்தைகளைக் கையாள்வதில் கவனம் தேவை என்றுதான் நினைத்தேன் தற்காப்பு வரிகள் அல்ல வருகைக்கு நன்றி ஸ்ரீ

    பதிலளிநீக்கு
  17. @ செல்வதுரை
    லாப்டாப் பற்றி நான் எதுவுமே எழுதவில்லையே. நிலவும் ஏற்ற தாழ்வுகளைப் போக்க என் அறிவுக்கு எட்டிய தீர்வினைக் கூறி இருக்கிறேன் பள்ளி நிலையிலேயே எல்லோரும் எல்லாவிதத்திலும் சமம் என்பதை உணர்த்தவே கட்டாயமாக எல்லோருக்கும் இலவசகல்வி உடை உணவு என்று எந்த பாகுபாடும் பார்க்காமல் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதே என் கட்சி மற்றபடி இலவசங்கள் எனக்கும் ஏற்புடையதல்ல/ பதிவர் எழுதிய கருத்துக்கள் காணாமல் போவது வருத்தம் அளிக்கிறது வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு
  18. நல்ல பகிர்வு. தனியார் பள்ளிகள் பலவும் அரசியல்வாதிகள்/பெரும்புள்ளிகளின் பள்ளிகள் தான். அதுவும் State Board தனியார் பள்ளிகள் மிகக் குறைவு. பெரும்பாலானவை CBSE/Metriculaation தான். அவை இலவசக் கல்வி தர நிச்சயம் முன்வரா......

    பதிலளிநீக்கு
  19. பயனுள்ள பல அரிய யோசனைகளைக் கூறியுள்ளீர்கள். எது எப்படியாயினும் செயல்படுத்த மனம்+பணம் தேவைப்படுமே?

    பதிலளிநீக்கு
  20. பயனுள்ள கருத்துக்கள் அடங்கிய பதிவுஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
  21. நல்ல கருத்துகள் சார். ஆனால், பள்ளிக் குழந்தைகளுக்கு நீங்கள் சொல்லுவது போல் கல்வி, உணவு, உடை எல்லாம் கொடுத்தால் மட்டும் சமநிலை வந்துவிடாது சார். ஏனென்றால் பணமுள்ளவர்கள், நல்ல கல்வி வேண்டும் என்று நினைப்பவர்கள் இப்போதையச் சூழலில் நிச்சயமாக அரசுப் பள்ளிகளில் சேர்க்கமாட்டார்கள். அப்படியாக உள்ளது பெரும்பான்மையான அரசுப்பள்ளிகள். இவை எல்லாம் கொடுக்கப்படும் என்பதற்கு மயங்குபவர்கள் இல்ல அந்தக் கூட்டத்தார். எனவே முதலில் செய்ய வேண்டியது எல்லா அரசுப் பள்ளிகளிலும் நல்ல கடமை உணர்வுள்ள ஆசிரியர்கள் எல்லா பாடங்களுக்கும் நியமிக்க வேண்டும் உடற்பயிற்சி உட்பட. கல்வியும் நல்ல தரமுள்ளதாக இருந்தால் மட்டுமே அங்கு வசதி உள்ளவர்களும் சேர்வார்கள்.

    உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன்..தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் புகழ் பெற்ற தனியார் கலைக்கல்லூரியில் ஆங்கில இலக்கியம் சேர 1.5 லட்சம் நன் கொடை வாங்குகின்றார்கள். பெற்றோர்களும் அந்தக் கல்லூரிதான் சிறந்த கல்லூரி என்றும் அதில் சேர்ந்து படித்தால்தான் நன்றாகப் படிக்க முடியும் என்றும் வேலை வாய்ப்பு நிச்சயம் என்றும் கொடுக்கவும் தயாராக இருக்கின்றார்கள் மட்டுமல்ல பெருமையாகவும் கருதுகின்றார்கள். நன் கொடை வாங்காத கல்லூரிகள் மட்டமான கல்லூரிகள், பள்ளிகள் என்ற பெயர் இருக்கிறது சார். எனவே அரசு மட்டும் முனைந்தால் போதாது. பெற்றோரும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும். இப்போது பெற்றோரின் மனோபாவம் மிகவும் மாறி உள்ளது...

    இன்னும் சொல்லலாம் ஆனால் இதுவே பெரிது...எனவே இங்கு முடித்துக் கொள்கின்றேன்...முடிந்தால் "பசங்க 2" படம் பாருங்கள்

    கீதா

    பதிலளிநீக்கு
  22. நல்ல கனவுகள். ஆனால் அவை கனவுகள் தான்.

    தாய்மொழிக் கல்வி, இலவசக் கல்வி, அரசே கல்வியளித்தல் --- போன்ற பல கனவுகளைத் தாண்டி இப்போது வேறு மோசமான வழிகளில் நெடுந்தூரம் பயணித்து விட்டோம். இனி நாம் புறப்பட்ட இடத்திற்குத் திரும்பி போய் புதுவழி காண முடியும் என்பதும் ஒரு கனவு தானோ?

    பதிலளிநீக்கு

  23. @ வெங்கட் நாகராஜ்
    என்பதிவின் மையக்கருத்தே கல்வி அரசுடமை ஆக்கப் படவேண்டும் அப்படியானால் பள்ளி இறுதிவரை எல்லாருமே அரசுப்பள்ளிகளில் தான் படிக்க முடியும்கல்வி வியாபாரிகளிடமிருந்து கல்வியை மீட்கவேண்டும் வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு

  24. @ திண்டுக்கல் தனபாலன்
    எல்லோரும் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தால் எப்படி.? வருகைக்கு நன்றி டிடி.

    பதிலளிநீக்கு

  25. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    தேவை இல்லாத இலவசங்களுக்குச் செலவழிக்கும் பணம் கல்விக்காக செலவழிக்கலாமே/ மனம் ....?இம்மாதிரி எண்ணங்கள் மனமாற்றத்தை ஏற்படுத்தலாமேவருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு

  26. @ கரந்தை ஜெயக்குமார்
    கருத்துக்கள் பரவலாகப் பகிரப் படவேண்டும் ஐயா நன்றி.

    பதிலளிநீக்கு

  27. @ துளசிதரன் தில்லையகத்து
    இத்தனை நீண்ட பின்னுட்டமே பதிவைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதைக் காட்டுகிறது. பதிவில் மையக் கருத்தே கல்வி அரசுடைமை ஆக்கப் படவேண்டும் கல்வி தனியார் வசம் இருக்கக் கூடாது என்பதுதானே கல்வியை வியாபாரிகளிடம் இருந்து மீட்க இதுவும் ஒரு வழியாகும்மலையாளத்தில் ஒரு சொல் கேட்டதுண்டு.” அப்பம் தின்னால் ரெண்டுன்ன கொள்ளாம் ஒன்னு வயறு நெரைக்காம் ரெண்டு சுண்டு மினுக்காம்” அது போல் நான் சொல்லும் வழியில் உயர்வுதாழ்வும் குறையும் கல்வியும் தனியாரிடமிருந்து மீட்கப் படும் கேட்டோ ? எனக்குத் தெரிந்த ஒரு தனியார் பள்ளியில் எல் கேஜி சேர்க்க 96000 ரூபாய் வசூலித்தார்கள் அதன் பின் போகவும் நம்மக்கள் இருக்கிறார்களே வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு

  28. @ தருமி
    உதோப்பியன் கனவுகள் என்று சொல்லலாமா முதலில் கனவு காண்போம் அப்துல் கலாம் சொன்னது போல் . வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு
  29. ஆரம்பக்கல்வி முதல் கல்லூரி வரை அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்தான் என்ற சட்டம் வந்தால் நன்றாகத்தான் இருக்கும். கல்வித் தந்தைகள் காணாமல் போவார்கள். ஆனால் அந்த தந்தைகளிடம் கமிஷன் வாங்கும் அரசியல்வாதிகள் இதைச் செய்வார்களா என்பது சந்தேகம்தான். மிக அருமையானதொரு பதிவு! நன்றி!

    பதிலளிநீக்கு


  30. @ தளிர் சுரேஷ்
    பதிவைப் புரிந்துகொண்டு கருத்திட்டதற்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  31. தற்போது பன்னிரண்டாம் வகுப்பு வரை கல்வி இலவசம்தான். பாடப் புத்தகங்களும் நான்கு செட் சீருடைகளும் இலவசமாகவே வழங்கப் படுகின்றன. ஏழைக்கொரு கல்வி பணக்காரருக்கு ஒரு கல்வி என்பது அரசின் கொள்கை அல்ல. அரசு சமச்சீர் கல்வி முறையைத்தான் பின்பற்றுகிறது.பணம் படைத்தவர் தனக்கு தனி கல்வி வேண்டுமென்று நினைக்கிறார்கள் என்பதுதான் உண்மை.அதனால்தான் அரசு பள்ளிகளை நாடாமல் தனியார் பள்ளிகளை விரும்புகிறார்கள். பணம் கொடுத்துப் படிப்பதை கவுரவமாக நினைக்கிறார்கள்.அரசு அளிக்கும் கல்வி ஏழைகளுக்கானது அது நமக்கு தேவை இல்லை. ஏழை மக்களுடன் சேர்ந்து நம் பிள்ளைகள் ஏன் பயில வேண்டும் என்ற எண்ணமும் பெறுகிறார்கள். கலவி முழுமையும் நாட்டுடைமை ஆக்கப் பட்டால் சில வேறுபாடுகளை களையயலாம். ஆனால் அரசே அனைத்து பள்ளிகளையும் நடத்துவது என்பது ஏராளமான நிதிச்சுமையில் தள்ளிவிடும். பணக்காரனுக்கும் இலவசக் கல்வி அளிப்பது தேவையற்றது என்பதைக் கருதியே தனியார் பள்ளிகள் ஊக்குவிக்கப் பட்டன. தனியார் பள்ளிகள்அதை வியாபாரமாக்கி விட்டன.
    பெரும்பாலான பள்ளிகளில் மதிய உணவு உண்போர் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. உண்மையில் மதிய உணவு திட்டத்தால் அதிக பயன் பெறுபவர்கள் அதன் பணியாளர்கள்தான்.தினந்தோறும் மாணவர்களுக்கு முட்டை வழங்கப் படுகிறது. மாணவர்களுக்கே சலித்து விட்டது. தூக்கிப் போட்டு விளையாடுகிறார்கள்.
    இலவசங்கள் தேவையனவருக்கு மட்டும் வழங்கினால் மட்டும் போதுமானது.இப்போது முப்பருவக் கல்விமுறை பின்பற்றப் படுகிறது. இதனால் பெரிய நன்மை ஏதுமில்லை. இதனால் பாதிக்கப் படுபவார்கள் என்னைப் போன்ற அலுவலர்களே.ஒரு ஆண்டில் பெரும்பாலான நாட்கள் இலவசத்திட்டங்களை பெறுவதும் வழங்குவதும் புள்ளி விவரங்கள் தயாரிப்பதிலுமே ஆய்வுக் கூட்டங்களிலும் கழிந்து விடுகிறது. இன்னும் இருப்பது ஏராளம். பலவற்றை என் கல்வி தொடர்பான பதிவுகளில் கூறி இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு

  32. @ முரளிதரன்
    வருகைக்கும் கருத்துப் பொதிந்த பின்னூட்டத்துக்கும் நன்றி ஏழைக் கொரு கல்வி பணக்காரனுக்கு ஒரு கல்வி என்பது அரசின் கொள்கையல்ல இருந்தாலும் அதுதானே நடை முறையில் நடைமுறையில் அவற்றைக் களைய வேண்டியது அரசின் பொறுப்பு. அரசே கல்வியை அரசுடமையாக்கி நான் கூறிய படி நடைமுறைக்குக் கொண்டு வந்தால் மலையாளத்தில் இருக்கும் ஒரு சொல்வழக்கு போல் இருக்கும் “ அப்பம் தின்னால் ரெண்டின்ன கொள்ளாம் வயறு நெறைக்காம் சுண்டு மினுக்காம் “ அதாவது அப்பம் சாப்பிட்டால் இர்ண்டு பலன் ஒன்று வயிறு நிறையும் மற்றது உதடு மினுக்கும் அதுபோல் அரசுடமையாக்கி எல்லோருக்கும் ஒரே கல்வி உணவு உடை என்பது கட்டாயப்படுத்தப் பட்டால் கல்வி வியாபாரிகளிட்மிருந்து மீட்கப் படும் சிறார்களின் மனதில் உயர்வு தாழ்வு மறைந்து எல்லோரும் சமம் என்னும் எண்ணம் வேறூன்றும் காஸ்மெடிக் சிகிச்சைகள் பலன் தராது .அறுவைச் சிகிச்சையே சரி என்பதே என் கருத்து எதையும் செய்யும் முன் எதிர்ப்புகள் இருக்கும் ஜெயலலிதா போன்றவர்களால் அதைக் கடக்கவும் முடியும்அரசு அலுவலில் இருப்பவர்களால் எதையும் ஆதரிக்க முடியாது போல் தெரிகிறது

    பதிலளிநீக்கு
  33. கல்வி பற்றி நியாமானசிந்தனை ஐயா !ஆலமரம் புதியவர்களுக்கும் வழிவிட வேண்டும்

    பதிலளிநீக்கு

  34. @ தனிமரம்
    ஆலமரம் அநேகருக்கு நிழல் தரும். ஆனால் தன் கீழ் எந்த தாவர வகைகளையும் வளர விடாது அ இ அ திமுக தலைமை அப்படித்தான் இருக்கிறது வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு
  35. நல்ல கடிதம். அனைவருக்கும் சமமாய் கல்வி கிடைத்தால் நல்லது.

    பதிலளிநீக்கு

  36. @ கோமதி அரசு

    ஏதோ சங்கை ஊதி இருக்கிறேன் உரியவர் காதுகளில் விழவேண்டுமே வருகைக்கு நன்றி மேம்

    பதிலளிநீக்கு
  37. உங்கள் நல்லெண்ணம், நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். ஆனால், இவற்றை நடைமுறைப்படுத்தும் அளவுக்கு அவர் நல்லெண்ணம் படைத்தவரா? எனக்கு நம்பிக்கையில்லை.

    பதிலளிநீக்கு

  38. @ இ.பு ஞானப்பிரகாசன்
    ஏதோ நம்பிக்கையில்தான் எழுதுகிறோம் வலைப்பதிவில் எழுதி ஒரு சிலரையாவது சிந்திக்கச் செய்ய முயல்கிறேன் அடிக்க அடிக்க அம்மியும் நகரும் . எறும்பு ஊறக் கல்லும் தேயும் வருகைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு
  39. 'சார்' எல்லாம் வேண்டா ஐயா! சிறுவன் நான். நீங்கள் பெயர் சொல்லியே அழையுங்கள்!

    பதிலளிநீக்கு
  40. @ இபு ஞானப்பிரகாசன்
    நேரில் பழக்க மில்லாதவரை மரியாதையுடன் அழைப்பது தானே முறை. இனி உங்கள் விருப்பம் போல் பெயர் சொல்லியே அழைக்கிறேன் பிரகாசன் நன்றி

    பதிலளிநீக்கு