சனி, 2 ஜூன், 2018

என் கணவர் என் பார்வையில்







என் கணவர் எனக்கு ஆசானும்கூட
·         தீவிர காந்தியவாதி (சிறு வயதில் காந்தியை நேரில் பார்த்தவன் என்பதுசரியாயிருக்கும் காந்தியின் உண்மை பேசும் குணம் வேண்டும்  என்றுநினைப்பவன்)    பிறரும்  அதுபோலவே இருக்க வேண்டும்   என்று எதிர்பார்ப்பார்( நடக்கக் கூடிய காரியமா அது). எந்த சிரமம் வந்தாலும் சளைததில்லை மனம் வருந்தி பேசியதும் இல்லை எனக்கு ஆச்சரியமாய் இருக்கும் . இப்படியும் இருக்கமுடியுமா என்று உண்பதிலும்  மிகவும் கட்டுப்பாடு தேவைக்கு அதிகமாக எதையும்வைக்க விரும்பமாட்டார் நான் தான்பலவந்தப்  படுத்தி சில விஷயங்களில் அவருடைய கொள்கைகளை மாற்றி விட்டேன்   (அதற்கு இப்போது எனது 71 வதுவயதில் மிகவும் வருந்துகிறேன்)( நல்லதற்குத்தானே தவறில்லை) நான் மிகவும்சாதாரணமானவள் எதையும் அதிகம்சிந்திக்கத்தெரியாது மனதுக்குப் பிடித்தமாதிரி வாழவிரும்புபவள் எனக்கு எந்தவிதக் கொள்கையும்  கிடையாதுநான் இன்னும் நிறைய விஷயங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்(கற்றுக் கொள்ள வயது தடையில்லை) ஆனால் இனிமேல் நடக்காது .காலமில்லை
1964ல் திருமணமானதுஅப்போது அவரிடம் சில கேள்விகள் கேட்டேன் நீங்கள் உங்கள் தாய் (சிற்றன்னை )அவருடைய பிள்ளைகளை விரும்புவது போல்அவர்கள் உங்களிடம் அன்பாக இல்லையே என்பேன் அதற்கு அவர்களுக்கும் எனக்கும்  ரத்த சம்பந்தமில்லை அல்லவா  அதனால்தான் என்பார்(என் சிற்றன்னை எனக்குதெரிந்தவரை அன்புடனேதானிருந்தார்  நம் எதிர்பார்ப்புகள் கூடினால் ஏமாற்றம் வருவது சகஜந்தானே)  பசி என்று இவர் சொல்லி நான் கேட்டதில்லை(அது தெரியாமல் பார்த்துக் கொள்ள இவர் இருக்கிறாரே ) நேரம் அறிந்து கொடுத்தால் உண்பார் அதுவும் ஒரு அளவோடுதான்சாப்பிடுவார்  உடல் நலமில்லையா என்று யாரும்  விசாரிப்பதைவிரும்பமாட்டார் இதெல்லாம் மனிதனாகப் பிறந்தால்  வந்து போகும் இதை பெரிதுபடுத்தி  விசாரிக்க வேண்டாம்  என்பார்( நான் இரு பக்கமும்  சிந்திப்பவன்   அதுவே செய்யாத குற்றம் என்றும் முதுமைஒரு பரிசு என்றும் எழுத வைத்தது)  நான்  அதற்கு எதிர்மாறாக இருப்பேன் யாரும் விசாரிக்க வில்லையே என்று வருந்துவேன் என்னை நன்றாகப் புரிந்துகொண்ட  கணவர் அதற்கு தகுந்தபடி இருப்பார் என்னையும் மாற்றப்பார்ப்பார் எனக்குப் படிக்கும் ஹாபிட் வர அவர்தான்காரணம்(படித்தால் மட்டும் போதாது புரிந்து படிக்க வேண்டும்)   அவர் நிறையப்படிப்பார் எல்லாவிதசப்ஜெக்டுகளையும்  விரும்பி படிப்பார் எழுதுவார் சோர்வாக இருக்க விரும்பமாட்டார் ஆடல் பாடல் பேச்சாற்ற்ல்  விளையாட்டு  என்று எல்ல ப்ரோகிராம்களையும்விரும்பிப் பார்ப்பார் எல்லாவற்றையும் ஆழ்ந்து ரசிப்பார் நிறைய விமரிசிப்பார் அதற்கு நேர் எதிர் என் சுபாவம் எதையும்மேலோட்டமாகத்தான் பார்ப்பேன்   ரசிப்பேன்
 குழந்தைகளை ஒழுக்கமாக வளர்க்க  பெற்றோர்தான்  முயற்சிக்கவேண்டும் என்பார் . இதை மட்டும் இப்போது இவரது பேரக்குழந்தைகளிடம் எதிர்பார்க்கிறார் ஆனால் அது அவர்களுடைய பெற்றோர்களிடம்தான் இருக்கிறது (அதுவும்  இப்போது உள்ள  சிலபல சலுகைகள் பொருட்கள் உபகரணங்கள் உள்ளன கட்டுப்படுத்துவது சிரமம்தான்)  அதனால் அவர்களிடம்  சொல்லி புரிய வைக்க முயற்சிக்கிறார் எதையும்மனதில் நினைப்பதை  உடனே சொல்லி விடுவார் தயங்கமாட்டார் அதற்காகசொன்னதை நினைத்து வருத்தப்படமாட்டார்

மேலே என்மனைவி எழுதியதெல்லாம்  ஒரு பாரத  நாரியின்  எண்ணங்கள்  என்றே தோன்றுகிறது எல்லாம் நல்லவையாகவோ குறையாகவோ இருப்பதுஇல்லை என்னிடம்பல குணங்கள் பலருக்கும் பிடிக்காது அவற்றையும் நேசிக்கக் கற்றுக்கொண்டவள்  என் மனைவி 

நிறங்களில்  உள்ளவை என் கருத்துகள்

20 கருத்துகள்:

  1. தங்களைக் குறித்த விமர்சனம் என்றுகூட சொல்லலாம் ரசிக்க வைத்தது ஐயா.

    பதிலளிநீக்கு
  2. தங்களின் மந்திரச் சொற்களும் அருமை...(!)

    பதிலளிநீக்கு
  3. இருவர் கருத்துக்களும் நன்றாக இருக்கிறது.
    குறையை பெரிது செய்யாமல் நேசிக்க கற்றுக் கொள்வது பெரிய விஷயம். நல்ல குணம் வாழ்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகச் சொன்னீர்கள் குறைகள் இல்லாதவர் யார்

      நீக்கு
  4. நன்றாக இருக்கிறது சார். இருவரின் கருத்துகளும் நன்றாகத்தான் இருக்கிறது புரிதல் இருந்தால் போதுமே.

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரிதல் மட்டும்போதாது அனுசரணையும்வேண்டும்

      நீக்கு
  5. இருவரின் கருத்துக்களும் நல்லாத்தான் இருக்கு. மாற்றின கொள்கைகளைப் பகிர்ந்திருக்கலாம் (பொதுவெளியில் பகிர முடியும் என்றால்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யரும்யாரையும் மாற்ற முயல்வதில்லை வலையில் எழுதுவது என் குணம்

      நீக்கு
  6. தாம்பத்தியத்தின் நிதர்சனம் ....அருமையாக பகிர்ந்து இருக்கிறீர்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 54 ஆண்டுக தாம்பத்தியமினிக்கதானே செய்யும் புரிதலும் கூடும் வருகைக்கு நன்றி மேம்

      நீக்கு
  7. அருமையான பதிவு. உங்களை சிறப்பாக புரிந்து வைத்துள்ளார். மனம் போல வாழ்க்கை கிடைப்பது மிகவும் அரிது. வாழ்த்துகள்.

    சிகரம் வலைத்தளம் சிகரம் செய்தி மடல் - 0015 - சிகரம் பதிவுகள் - 2018 #SIGARAMCO #சிகரம் #NEWSLETTER #SIGARAMNEWS
    #சிகரம்

    பதிலளிநீக்கு
  8. ஆஹா! கணவனின் உயர்ந்த குணங்களை உலகறியச் சொல்லிப் பரவசப்படும் மனைவிமார்களும் இருக்கிறார்களே! வாழ்க அவர்தம் பெருமை! வளரட்டும் அவர்தம் எண்ணிக்கை!

    -இராய செல்லப்பா சென்னை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செல்லப்பா சார் நினைவுக்கு வருவது ”கிட்டாதாயின் வெட்டென மற “

      நீக்கு
  9. ரசித்தேன் ஐயா. அடைப்புக்குறிக்குள் உணர்வுகளைத் தந்து அசத்திவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவில் வரும் பின்னூட்டங்களுக்கு மறு மொழி எழுதிய பழக்கம்தான் சார்

      நீக்கு