Wednesday, May 30, 2018

கண்டவனெல்லாம்                                  கண்டவனெல்லாம்
                                 --------------------------------

             பஸ்சுக்கு  காத்திருந்து  காத்திருந்து   வாழ்க்கையே  வெறுத்துவிட்டது  ஹரிக்கு ."போக்குவரத்து  துறைஎன்றால்  தமிழ்நாடுதான்  ஹேமா . விடியற்காலைமுதல் நள்ளிரவு   வரை  பஸ்கள்  கிடைக்கும் . ஐந்து  நிமிடத்துக்கு  மேல்  காக்க  வேண்டாம்சே | இந்த  பெங்களூரில்  இது  மிகவும்  மோசம் " ஹரிக்கு  அலுப்பு
. "தவிர்க்க  முடியாததை          அனுபவிக்கத்தானே  வேண்டும்  .இல்லையென்றால்  ஆட்டோவுக்கு  செலவு செய்ய  உங்களுக்கு  மனசு  வராதே " ஹேமா  ஹரியின் வீக்   பாயின்டைசற்றே  குத்தினாள்
        "அப்பாடா  அதோ  பஸ்  வருகிறது . சாமர்த்தியமாக  ஏறி இடம்  பிடித்துக்கொள்லேடிஸ்  சீட்  காலியாகவே  இருக்கும் " ஹேமாவை  முன்னுக்கு  அனுப்பி  ஹரி  அடித்து  பிடித்து  பஸ்ஸில்  ஏறி , முண்டியடித்து  முன்னுக்குப் போனால் , அங்கே  லேடீஸ்  சீட்டில் , ஹேமாவுக்குப் பக்கத்தில்  ஒரு  அழகான  வாலிபன்  ஸ்டைலாக  உட்க்கார்ந்து  இருந்தான் . ஹரிக்குப் பொறுக்கவில்லை . ஆத்திரம்  ஆத்திரமாக  வந்தது .  "சே | என்ன அக்க்ரமம் .தடிமாடு  மாதிரி  ஒருத்தன்  அவள்  பக்கத்தில்  உட்கார்ந்து  இருக்கிறான் . அதுவும்  லேடீஸ்  சீட்டில்அவன்தான்  அப்படியென்றால்  இவளுக்கு  எங்கே  போச்சு  விவஸ்தை ? நாக்கைப்  பிடுங்கற  மாதிரி  நாலு வார்த்தை  கேட்க்க  கூடாது ? இதே மாதிரி   எவ்வளவு  நேரம்  பொறுத்துக்கொள்வது ? இதுக்கு  ஒரு  முடிவு  கட்டித்தான்  தீரவேண்டும் "                                

 இதற்குள்  பஸ்  அடுத்த ஸ்டாப்பில்  நிற்க . "ஹேமா. வா  இங்கேயே  இறங்கிக்கொள்ளலாம் " ஹேமா என்ன ஏது  என்று  கேட்பதற்குள்  ஹரி  பஸ்ஸை  விட்டிறங்கி , போய்க்கொண்டிருந்த  ஆட்டோவைக்கூப்பிட்டார்
 .
 " இன்றைக்கு  மழைதான்  வரப்போகிறது . ஆட்டோவுக்கு செலவு  செய்ய  மனசு  எப்படி  வந்தது ?"

 கண்டவனெல்லாம்  என் பெண்டாட்டி  பக்கத்தில்  உட்க்காருவது  எனக்குப் பிடிக்கலை .நீயும்  பேசாமல்  இருந்தது  அதைவிடப்  பிடிக்கலை "

 "உங்களுக்கு  என்ன ஆச்சு ? நம்ம பேரன் வயசு  அவனுக்கு .அவன் மேல் பொறாமையா ?"

 ஹேமாப்பாட்டி  தன  புருஷனை  அன்புடன்  கடிந்து  கொண்டாள்


34 comments:

 1. ஹா.. ஹா.. ஹா... கடைசியில் ஹேமா பாட்டியா ?

  ReplyDelete
  Replies
  1. ஒரு சின்ன ட்விஸ்ட் ரசித்த்கீர்கள் இல்லையா

   Delete
 2. உண்மைதான், சில பாட்டிகளை நம்பக்கூடாதுதான்! (Wait, சும்மா ஒரு 'இது'க்காகச் சொன்னேன்!) நான் எப்பவுமே ஆண்கள் கட்சி!

  -இராய் செல்லப்பா சென்னை

  ReplyDelete
  Replies
  1. தாத்தாக்களை நம்பலாமா சும்ம ஒரு இதுக்காக

   Delete
 3. ஹா... ஹா... ஹா... எங்கள் தளத்தில் இதே போல ராமன் ஒரு சின்னஞ்சிறு கதை எழுதி இருந்தார்.

  ReplyDelete
  Replies
  1. சுட்டி கொடுத்திருக்கலாமோ

   Delete
 4. ஹா ஹா ஹா ஹா ஹா...

  சார் இது உங்கள் "வாழ்வின் விளிம்பில்" கதைத் தொகுப்பில் இருக்கிறது. இல்லையா. ரசித்த கதை...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. பரவாயில்லையே நல்ல நினைவு நன்றி

   Delete
 5. எந்த வயதிலும் பொசசிவ் இருக்கும்போல!

  ReplyDelete
  Replies
  1. இரு பாலோருக்கும் இருக்கும்தானே அதைக் கதை பண்ணினேன்

   Delete
 6. நல்ல ஒரு பக்கக் கதை சார்! :)

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்

   Delete
 7. நல்ல முடிவு... தாத்தாவுக்கு இன்னமும் பாட்டியில் சந்தேகம் ஹா ஹா ஹா.

  ReplyDelete
  Replies
  1. சந்தேகம் என்பதைவிட பாட்டியின் மேல் அளவு கடந்த உரிமஒ எனலாமா

   Delete
 8. நல்லா இருந்தது. நான், பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் பார்வையற்றவர் என்று முடிப்பீர்கள் என நினைத்தேன்.

  ReplyDelete
  Replies
  1. நான் எப்போதுமே பிறரது முடிவு பற்றி யூகிக்கமாட்டேன் வருகைக்கு நன்றி சார்

   Delete
 9. படிச்சாப்போல் இருக்கேனு நினைச்சேன். தி/கீதா சொன்னப்புறமாப் புரிஞ்சது!

  ReplyDelete
  Replies
  1. படிச்சாப்போல் இருந்தாலும் கருத்து சொல்ல தடையில்லையே

   Delete
 10. சுருக்கமாக. அதுவும் உங்கள் பாணியில் நச்சென்று. ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. எனக்கென்று பாணியா நன்றி சார்

   Delete
 11. நன்றாக இருக்கிறது முடிவு.

  ReplyDelete
 12. பாராட்டுக்கு நன்றி மேம்

  ReplyDelete
 13. ஒருபக்கக் கதையில் எதிர்பாராத முடிவு. பண்பாடா? பொஸஸிவ்நெஸ்ஸா? வாசகரகளே யூகித்துக் கொள்ளலாம்!

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாக பண்பாட்டை நினைது எழுத வில்லை பொஸெஸிவ்னெஸ் இருக்கலாம் மாறு பட்ட கோண கருத்துக்கு நன்றி சார்

   Delete
 14. நறுக் கென சொல்ல வேண்டியதைச் சொல்லிப் போனவிதமும் முடித்த விதமும் அருமை வாழ்த்துக்களுடன்

  ReplyDelete
  Replies
  1. வெகு நாட்களுக்குப் பின் ரமணி சார் மிக்க நன்றி வருகைக்கு

   Delete
 15. அருமை அருமை
  தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி தொடர்ந்து வாருங்கள்

   Delete
 16. நல்ல ட்விஸ்ட்! ரசித்தேன்.

  ReplyDelete
 17. வருகைக்கு நன்றி

  ReplyDelete
 18. எதிர்ப்பாராத ரசிக்கத் தக்க முடிவு. பாராட்டுகள்.

  ReplyDelete
 19. கணவர்களின் ஆளுமையைக் கொண்டு வந்தேன் வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete