திங்கள், 21 மே, 2018

காதல் நினைவுகள்


                                       காதல் நினைவுகள்
                                     ----------------------------------
எண்ணத்  தறியில்  எழில்  நினைவுப் பின்னிப்
                பிணைந்திழையோட  இழையோட

     கன்னக்குழியில்   வண்ணக்குமிழ்  கொப்பளிக்க 

                பைந்தமிழ்   மொழிபேசி   மொழிபேசி

     மின்னலிடையில்   மனந்திளைத்த  எனைப் 

                 புன்னகை    ஒளிவீசி   ஒளிவீசி

      இன்னலிடை  யின்றவள்   மீட்டாள்

                 காதல்   பண்பாடி  பண்பாடி  |

    
     கொஞ்சும்  விழிகள்  வேல்போல்  தாக்க

      எஞ்சிய  உறுதியும்  காற்றில்  பறக்க

     தஞ்சமேனப்புகு   என  மனமும்  நினைக்க

     மிஞ்சியதென்னில்  அவள்  திருஉருவம் 
|
               அன்ன நடையழகி ஆடிஎன்முன்  நிற்க

                பின்னிய  கருங்குழல்  அவள்   முன்னாட

                என்ன  நினைததனோ  அறியேன்   அறிவேன்

                பின்னர்  நிகழ்ந்தது   அதனைக்  கூறுவன்  கேளீர்  |

      ஈருடல்  ஒன்றாய்    இணைய _அதனால்

      இறுகிப் பதித்த   இதழ்கள்  கரும்பினுமினிக்க

      இன்சுவை  உணர   ஊறி  கிடந்தேன்

      இறுதியில்  உணர்ந்தேன்  கனவெனக்  கண்டது

                  கண்ட  கனவு  நனவாக  இன்று

                   காரிகையே   அழைக்கின்றேன் ; அன்புக்

                  கயிற்றால்   பிணைக்கின்றேன்கண்ணே

                  கட்டும்  பிணைப்பும்  பிரியாது  உறுதி  |          



   

14 கருத்துகள்:

  1. ஆஹா ரசிக்க வைக்கும் ரத்தின வரிகள் அருமை ஐயா.

    அவ்வப்போது இளமைக்காலங்களை நினைவு கூரவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வப்போது மட்டும் அல்ல ஜி எப்போதுமே இளமைக்கால நினைவுகள்தான்

      நீக்கு
  2. நினைத்தாலே இனிக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமக்கு இனிப்பது பிறருக்கு எப்படியோ தெரியவில்லை

      நீக்கு
  3. அருமையான நினைவுகள். நன்றாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெளிப்படுத்துவது எல்லாம் சொற்பமே வருகைக்கு நன்றி மேம்

      நீக்கு
  4. அருமையான நினைவுகள்
    தொடருவோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்து வந்தால் மகிழ்ச்சியே நன்றி சார்

      நீக்கு
  5. பதில்கள்
    1. வருகையும் ரசிப்பும் மகிழ்ச்சி தருகிறதுடிடி

      நீக்கு
  6. சினிமாப் பாடல் எழுதுவதிலும் தாங்கள் வல்லவர் என்பதைக் காட்டிவிட்டீர்கள் ஐயா!

    -இராய செல்லப்பா சென்னை

    பதிலளிநீக்கு
  7. எந்த படத்திலிப் பாடலைக் கேட்டீர்கள்

    பதிலளிநீக்கு