ஒரு கதம்பமாலை
------------------------------
கடந்த சில வருடங்களாக
மே மாதத்தில் யாராவதுவீட்டுக்கு வ்ருவதுண்டு அவர்களை சிரம் தாழ்த்தி வரவேற்க என்வீட்டில்
ஒரு எக்சோடிக் பூ உண்டு மே மாதம் மட்டும் தலை காட்டும் பூவின் வாழ்வும் சுமார் பத்துநாட்கள்மட்டுமே இந்த ஆண்டு செடி தலைகாட்டி இருக்கிறது மொத்தம் நான்கு
செடிகளிருக்கும் இதுவரை இருப்பைக்காட்டியது இரண்டுசெடிகளே ஒரு பூவும் ஒரு மொக்கும் படமெடுத்துள்ளேன் இப்பூ பற்றி நான் சிலமுறை
பகிர்ந்ததுண்டு இதன்பெயர் ஃபுட்பால்
லில்லி என்று கீதா மதிவாணன்தான் முதலில் எனக்குத் தெரிவித்தார் பார்ப்போம் இன்னுமெத்தனை
செடிகள் எத்தனைஆண்டுகள் என்று
விரியும் மலரும் அருகே மொட்டும் |
ஒவ்வொரு ஆண்டும் விஷுப்பண்டிகை
வரும் கேரளத்தவருக்கு விசேஷமானது அதிகாலையில் கணி வைப்பார்கள் அதைக் காண்பது ஆண்டுமுழுவதும் நல்லதை காண வைக்கும் என்பார்கள்
கணி வைப்பது அவரவர் திறமையைப்பொறுத்தது அரிசி பருப்பு உப்பு தேங்காய் தங்கநகை பழங்கள் ரூபாய் நோட்டுகள் எல்லாமிடம் பெறும் இது வருஷப்
பிறப்புடன் சேர்ந்து வரும் பெரியவர்கள்சின்னவர்களுக்கு கணி நேட்டம் கொடுப்பது வழக்கம் என் மாமியார் இருந்தவரை எனக்கும் கிடைத்ததுபுதிய நோட்டாகப்பார்த்துக் கொடுப்பார்
என்பேரக்குழந்தைகள என்னிடம் டிமான்ட் செய்து ஆளுக்கு ரூ
நூறுக்குக் குறையாமல் கறந்து விடுவார்கள்
அப்படிக் கொடுப்பதிலும் ஒருமகிழ்ச்சி இருக்கிறது
இந்த ஆண்டு என் மனைவி
கூடுதலாக தங்க முலாம் பூசிய விக்கிரகங்களையும்
வைத்திருந்தாள் ஒரு காலத்தில் தாமரை படத்துடன் வந்து கோண்டிருந்த இருபது பைசா நாணயங்களும் தங்க முலாமில் மினுக்கின அவற்றை நவ ராத்திரியின் போது பூஜைக்கு
உபயோகப் படுத்துவாள் 108 காயின்களிருக்கும்இந்தமுறை
கணியிலும்
அவரவர் பிம்பம் காணப்படுவதில்லை
----------------------------------------------------------------------
விஷுக் கணி தங்கத் தாமரைகளுடன் |
விஷுக் கணி |
அவரவர் பிம்பம் காணப்படுவதில்லை
----------------------------------------------------------------------
என் பெயர் அர்ச்சனா
நானொரு புது அப்பாயிண்ட்மெண்டுக்கு அந்தமருத்துவருக்காகக்காத்துக் கொண்டிருந்தேன் அங்கே அவரது BDS படிப்பைத் தாங்கி அவர் பெயர் கொண்ட
பலகையும் பார்த்தேன் திடீரென என் நினைவலைகளில்
ஒரு உயரமான கம்பீரமான முகம் அதே பெயர் கொண்ட உருவம் தெரிந்தது ஒரு காலத்தில் சுமார் முப்பது வருடங்களுக்கு முன் எனக்கு அவர் பால் ஏற்பட்டிருந்த ஈர்ப்பும்நினைவிலாடியது
அவரைப் பார்த்ததும் அந்த எண்ணம்மறைந்தது இந்த வழுக்கை விழுந்த நரை முடியுடன்
கூடியவர் முகச் சுருக்கமுள்ளவர் என் பழைய நண்பராக இருக்க முடியாது
என் பற்கள் சோதிக்கப்பட்ட
பிறகு “ நீங்கள் செயிண்ட் சேவியரில் படித்தீர்களா
“ என்று கேட்டேன்
“ஆம் “ என்று சந்தோஷத்துடன்கூறினார்
‘ எந்த ஆண்டு “
’1987’’ என்றார்
“அப்படியானால் என்வகுப்பில்
‘ என்றேன்
சிறிது நேரத்துக்குப்பின் அந்த வழுக்கை தலையன் நரைத்த முடி கொண்டவன் முகச் சுருக்கம் கொண்டவன் என்னை தீர்க்கமாகப் பார்த்து
எந்த வகுப்புக்கு பாடமெடுத்துக்
கொண்டிருந்தீர்கள் “ என்று கேட்டானே ஒரு
கேள்வி ……………..!!
பெண்கள்பற்றி சில பதிவுகள் எழுதி
இருந்தேன் ஏன் ஆண்களை பற்றி எழுதக் கூடாதுஎன்று தோன்றியது விளைவு கீழே
ஆண்கள் சங்கட மற்றவர்கள்.
அவர்களது பெயர்கள் மாறுவதில்லை.(திருமணத்துக்கு முன் பின்)
அவர்கள் கர்ப்பம் தரிப்பதில்லை.
வெள்ளைச் சட்டை அணிந்து தோட்டத்துக்கு நீர் பாய்ச்சலாம்.எந்த
சட்டையும் அணியாமலும் நீர் பாய்ச்சலாம்.
பேசும்போது யாரும் அவர்கள் மார்பைப் முறைப்பதில்லை.
தொலை பேசியில் 30 செகண்டுகளில் பேசி முடிப்பார்கள்.
ஐந்து நாள் விடுமுறைக்கு ஒரு சிறு கைப்பெட்டிபோதும்.
எந்த நிகழ்ச்சிக்கு அழைக்காவிட்டாலும் நண்பர்களாகத்
தொடர்வார்கள்.
இரண்டு மூன்று ஜோடி காலணிகளே அவர்களுக்கு அதிகம்.
அவர்கள் அணியும் ஆடையில் சுருக்கம் தெரிவதில்லை.
அவர்களது முகத்தின் நிறம் அசலானது.
ஆண்டு முழுவதும், ஏன் ஆயுள் முழுவதும் ஒரெ ஹேர் ஸ்டைல்.
முகத்திலும் கழுத்திலும் முடி நீக்கினால் போதும்.
கால்கள் எப்படி இருந்தாலும் அரை நிஜாரில் அலையலாம்.
நகம் வெட்ட ஒரு பேனாக்கத்தி போதும்.
பண்டிகைக்கு முதல் நாள் பத்து பேருக்கு அரை மணியில்
உடைகள் வாங்குவார்கள்.
அவர்களது பெயர்கள் மாறுவதில்லை.(திருமணத்துக்கு முன் பின்)
அவர்கள் கர்ப்பம் தரிப்பதில்லை.
வெள்ளைச் சட்டை அணிந்து தோட்டத்துக்கு நீர் பாய்ச்சலாம்.எந்த
சட்டையும் அணியாமலும் நீர் பாய்ச்சலாம்.
பேசும்போது யாரும் அவர்கள் மார்பைப் முறைப்பதில்லை.
தொலை பேசியில் 30 செகண்டுகளில் பேசி முடிப்பார்கள்.
ஐந்து நாள் விடுமுறைக்கு ஒரு சிறு கைப்பெட்டிபோதும்.
எந்த நிகழ்ச்சிக்கு அழைக்காவிட்டாலும் நண்பர்களாகத்
தொடர்வார்கள்.
இரண்டு மூன்று ஜோடி காலணிகளே அவர்களுக்கு அதிகம்.
அவர்கள் அணியும் ஆடையில் சுருக்கம் தெரிவதில்லை.
அவர்களது முகத்தின் நிறம் அசலானது.
ஆண்டு முழுவதும், ஏன் ஆயுள் முழுவதும் ஒரெ ஹேர் ஸ்டைல்.
முகத்திலும் கழுத்திலும் முடி நீக்கினால் போதும்.
கால்கள் எப்படி இருந்தாலும் அரை நிஜாரில் அலையலாம்.
நகம் வெட்ட ஒரு பேனாக்கத்தி போதும்.
பண்டிகைக்கு முதல் நாள் பத்து பேருக்கு அரை மணியில்
உடைகள் வாங்குவார்கள்.
இப்போது ஆண்களும் பெண்களும்.
--------------------------------------------------
ஆண் சிநேகிதர்கள் உரையாடும் போது செல்லப் பெயர்களில்
அழைத்துக் கொள்வார்கள். ( மச்சி, மோட்டு, சோடாபுட்டி )
பெண் சிநேகிதிகளுடன் உரையாடும்போது அவர்களது
பெயர்களிலேயே அழைக்கப் படுவார்கள். (காமினி,ரூபா, சந்தியா )
நான்கு ஆண்கள் வெளியில் சாப்பிடப் போனால் மொத்த பில்
ரூ.200-/ க்கு ஆளுக்கு ரூ.100-/ கொடுத்து பாக்கி பற்றிக் கவலைப்
பட மாட்டார்கள்.
நான்கு பெண்கள் வெளியில் சாப்பிடப்போனால் கால்குலேட்டரில்
கணக்குப் பார்ப் பார்கள்
ஆண் ஒன்றுக்கு இரண்டு விலை கொடுத்தாலும் தேவைப்
பட்டதை மட்டும் வாங்குவான்.
பெண் இரண்டுக்கு ஒன்று கொடுத்து தேவைப் படாததை
தள்ளுபடியில் வாங்குவாள்.
--------------------------------------------------
ஆண் சிநேகிதர்கள் உரையாடும் போது செல்லப் பெயர்களில்
அழைத்துக் கொள்வார்கள். ( மச்சி, மோட்டு, சோடாபுட்டி )
பெண் சிநேகிதிகளுடன் உரையாடும்போது அவர்களது
பெயர்களிலேயே அழைக்கப் படுவார்கள். (காமினி,ரூபா, சந்தியா )
நான்கு ஆண்கள் வெளியில் சாப்பிடப் போனால் மொத்த பில்
ரூ.200-/ க்கு ஆளுக்கு ரூ.100-/ கொடுத்து பாக்கி பற்றிக் கவலைப்
பட மாட்டார்கள்.
நான்கு பெண்கள் வெளியில் சாப்பிடப்போனால் கால்குலேட்டரில்
கணக்குப் பார்ப் பார்கள்
ஆண் ஒன்றுக்கு இரண்டு விலை கொடுத்தாலும் தேவைப்
பட்டதை மட்டும் வாங்குவான்.
பெண் இரண்டுக்கு ஒன்று கொடுத்து தேவைப் படாததை
தள்ளுபடியில் வாங்குவாள்.
ஆண் குளியலறையில் டூத்
ப்ரஷ்,பேஸ்ட், ரேசர், ஷேவிங் க்ரீம்,
சோப், டவல் ஆகியவை இருக்கும்.
பெண் குளியலறையில் நூற்றுக்கும் மேற்பட்ட சாதனங்கள்
இருக்கும். அதில் ஆணுக்கு அநேக பொருளின் பெயர் கூடத்
தெரியாது.
ஒரு வாக்கு வாதத்தில் பெண்ணின் பேச்சே கடைசி. அதன் பின்
ஆண் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் இன்னுமொரு வாக்கு
வாதத்தின் துவக்கம்.
ஆண் திருமணம் ஆகும் வரை எதிர்காலம் பற்றிக் கவலைப்
படுவதில்லை.
பெண் திருமண்ம் ஆகும் வரைதான் எதிர்காலம் பற்றிக்
கவலைப் படுவாள்.
பெண் மாறமாட்டாள் என்று நினைத்து ஆண் மணக்கிறான்.
ஆனால் பெண் மாறிவிடுகிறாள்.
ஆண் மாறுவான் என்று நினைத்து பெண் மணக்கிறாள். ஆனால்
அவன் மாறுவதில்லை.
சோப், டவல் ஆகியவை இருக்கும்.
பெண் குளியலறையில் நூற்றுக்கும் மேற்பட்ட சாதனங்கள்
இருக்கும். அதில் ஆணுக்கு அநேக பொருளின் பெயர் கூடத்
தெரியாது.
ஒரு வாக்கு வாதத்தில் பெண்ணின் பேச்சே கடைசி. அதன் பின்
ஆண் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் இன்னுமொரு வாக்கு
வாதத்தின் துவக்கம்.
ஆண் திருமணம் ஆகும் வரை எதிர்காலம் பற்றிக் கவலைப்
படுவதில்லை.
பெண் திருமண்ம் ஆகும் வரைதான் எதிர்காலம் பற்றிக்
கவலைப் படுவாள்.
பெண் மாறமாட்டாள் என்று நினைத்து ஆண் மணக்கிறான்.
ஆனால் பெண் மாறிவிடுகிறாள்.
ஆண் மாறுவான் என்று நினைத்து பெண் மணக்கிறாள். ஆனால்
அவன் மாறுவதில்லை.
பெண் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் பிரத்தியேக உடை அணிவாள்
ஆண் திருமணம் சாவு இதற்கு மட்டும் பிரத்தியேகமாய்
உடை அணிவான்.
ஆண் தூங்கி எழும்போது அழகாய்த் தெரிவான்.
பெண் தூங்கி எழும்போது அழகைத் தொலைத்திருப்பாள்.
பெண்களுக்கு குழந்தைகள் பற்றி எல்லாமே தெரியும்.
ஆண்களுக்கு குழந்தைகள் வீட்டில் உலவும் சிறு உருவங்கள்.
( ஒரு திருமணமான ஆண் அவனுடைய தவறுகளை மறக்க
வேண்டும். இருவரும் அதை நினைத்திருப்பதில் யாருக்கும்
எந்த பலனும் இல்லை. ).
==========================
கதம்பம் இரசிக்க வைத்தது ஐயா.
பதிலளிநீக்குஉங்கள் நண்பர் கேட்ட கேள்வியில் ஆசிரியராகி விட்டீர்கள்.
நீங்கள் கற்றதுதான் என்ன
நீக்குஅவரவர் பார்வையில் சொல்லி இருக்கீங்க! நல்ல கதம்பம். எங்க வீட்டில் நேர்மாறாக எனக்கு ஷாப்பிங் னாலே பிடிக்காது! இடி இடிக்குது. பின்னர் வரேன்.
பதிலளிநீக்குபொதுவான கருத்துகள் சில அவரவர் குணங்களை பென்ச் மார்க் ஆக்கக் கூடாது
நீக்குகீதாக்கா இடி இடிக்குதுனு இப்படி எங்களுக்கு சென்னை வாசிகளை வானத்தை ஏக்கத்துடன் பார்க்க வைச்சுட்டீங்களே ஹா ஹா ஹா ஹா
நீக்குகீதா
எங்கோ இடிக்கும் இடி உங்களை ஏங்க வைக்கிறதா சென்னையில் ஒரு வெளை நல்லவர்சள் இல்லையோ இன் லைட்டெர் ஹ்யூமர் ...!
நீக்குகதம்பம் ரொம்பவே நன்றாகவே இருந்தது... ரசித்தேன்...
பதிலளிநீக்குவருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி டிடி
நீக்குஎந்த வகுப்புக்கு பாடமெடுத்துக் கொண்டிருந்தீர்கள் “ என்று கே ட்டானே ஒரு கேள்வி ……………..!! --- மிகவும் ரசித்தேன். போஸ்ட் கார்டு சைஸ் கதைபோலவே இருந்தது.
பதிலளிநீக்கு//பேசும்போது யாரும் அவர்கள் மார்பைப் முறைப்பதில்லை.// - இந்த அக்குறும்புதானே வேண்டாம் என்கிறது.
ஆளுக்கு ரூ.100-/ கொடுத்து பாக்கி பற்றிக் கவலைப்
பட மாட்டார்கள். - அப்படி இல்லை சார். இது ஒவ்வொருவரைப் பொறுத்தது. முதன் முதலில் நான் இப்படி ஷேர் செய்தபோது கொஞ்சம் அன் ஈஸியாக உணர்ந்தேன். நான் சாப்பிடுவதற்கு அடுத்தவர்கள் பணம் கொடுப்பது (எவ்வளவு குறைவாக இருந்தாலும்) எனக்குப் பிடிக்காது.
//பெண் தூங்கி எழும்போது அழகைத் தொலைத்திருப்பாள்// - இது கொஞ்சம் பெண்களைத் தாழ்த்துவதாகத் தோன்றுகிறது. எனக்கு ஏற்ப்பு இல்லை.
குழந்தைகளைப் பற்றிச் சொன்னது உண்மை. மனைவிக்குத்தான் பசங்களைப் பற்றி முழுமையாகத் தெரியும். அவர்கள்ட்ட உடல் ரீதியான பாசம் மிகவும் அதிகமாக இருக்கும் (தும்மறதுன்னு சொல்றானே.. இதைச் சாப்பிடச் சொல்லணும், சாப்டானா இதுபோன்று. தந்தை பெரும்பாலும் இதைப் பற்றி ரொம்பவும் வொர்ரி பண்ணிக்க மாட்டார்)
விஷு கனி காணல் - தங்க காயின் (முலாம் பூசியது) ரொம்ப அழகா இருக்கு.
கதம்பத்தை ரசித்தேன். உங்கள் வீட்டு மாமரத்தின் படம் (மாங்காயோடு) போடவில்லையே.
/போஸ்ட் கார்டு சைஸ் கதைபோலவே இருந்தது/ ரசித்தேன் சில பொதுவான கருத்துகள் எல்லோருக்கும் ஏற்புடையதாக இருக்காது என்று தெரியும் .
நீக்குஅருமை
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி சார்
நீக்குகதம்பத்தை ரசித்தேன். " எந்த வகுப்புக்கு பாடமெடுத்துக் கொண்டிருந்தீர்கள் ? " - புன்னகைக்க வைத்தது.
பதிலளிநீக்குஅவரவர் பிம்பம் தெரியாவிட்டால் இப்படி நேரலாம் ரசித்ததற்கு நன்றி ஸ்ரீ
நீக்குஎந்த வகுப்புக்கு பாடமெடுத்துக் கொண்டிருந்தீர்கள் இதுதான் இந்த பதிவில் பலரையும் புன்னகைக்க வைத்தது... நான் இன்னும் சிரித்து கொண்டிருக்கிறேன் குட் ஒன்
பதிலளிநீக்குகருத்துப்பகிர்வுக்கு நன்றி சார்
நீக்குகதம்பத்தை ரசித்தேன் ஐயா
பதிலளிநீக்குவ்ருகையும் ரசிப்பும் மகிழ்ச்சி தருகிறது
நீக்குமச்சி, மோடு, சோடாப்புட்டி....ஐயா இந்த சொற்களை நீங்கள் பயன்படுத்தியபோது எங்களின் கல்லூரிக்காலம் நினைவிற்கு வந்தது.
பதிலளிநீக்குபொதுவாக இருக்கும் கருத்துகள்தானே வருகைக்கு நன்றி சார்
நீக்குகால மாற்றம் ஆணையும் மாற்றிவிட்டதுப்பா. இப்ப ஆண்களுக்கான அழகுசாதனப்பொருட்கள் எத்தனை வந்திருக்கு தெரியுமா?!
பதிலளிநீக்குநீங்க இன்னும் அப்டேட் ஆகனும்ப்பா.
நான் எங்கு எதில் அப்டேட் ஆக வேண்டுமென்று சொல்லி இருந்தால் நானும் தெரிந்துகொண்டிருப்பேன்
நீக்குசற்று முன்தான் வெங்கட் நாகராஜ் பதிவில் ஒரு கதம்பம் படித்தேன். இப்போது உங்களின் கதம்பம். சிலவற்றை முன்பே படித்திருந்தாலும் ஸ்வாரஸ்யம்தான்.
பதிலளிநீக்குபெண்கள் ஆண்கள் பற்றியவைதான் படித்திருக்குக்கூடும் ஆனால் அந்த பதிவுகளில் வந்துபோன சுவடுபதிக்கவில்லை என்று நினைக்கிறேன் எல்லாம்கலந்து கட்டியதுதானே கதம்பம்
நீக்குஎந்த வகுப்புக்கு பாடமெடுத்துக் கொண்டிருந்தீர்கள் “ என்று கேட்டானே ஒரு கேள்வி ……………..!!//
பதிலளிநீக்குஹா ஹா ஹா ஹா ஹா....ரொம்ப ரசித்தேன் சார்...
சார் பெண்களுக்குச் சமமாக ஆண்களுக்கும் உடைகள், அழகு சாதனங்கள், என்று வித விதமாக வந்துவிட்டது. அழகு நிலையமே வந்துவிட்டதே... ஆண்களும் நிறையவே மாறிவிட்டார்கள் சார்.
கீதா
முதலில் வருகைக்கு நன்றி/சார் பெண்களுக்குச் சமமாக ஆண்களுக்கும் உடைகள், அழகு சாதனங்கள், என்று வித விதமாக வந்துவிட்டது. அழகு நிலையமே வந்துவிட்டதே... ஆண்களும் நிறையவே மாறிவிட்டார்கள் சார்./ ஆண்களுக்கு அழகு சாதனங்கள் வரவில்லை என்று சொல்லி இருக்கிறேனா exception as a rule பெண்கள் எடுத்துக் கொள்வது பின்னூட்டங்களில் தெரிகிறதோ
நீக்கு