ஞாயிறு, 6 மே, 2018

தேர்தல் சிந்தனைகள்


                                              தேர்தல் சிந்தனைகள்                         
                                               ---------------------------------
      சில எண்ணங்கள் கட்டுக்குள் இல்லை
கர்நாடகா தேர்தல் ஜுரத்தில் இருக்கிறது வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததொ என்னும்  வண்ணம் பேசுகிறார்கள் எப்படி இருந்தாலும்  சாமானியன்  வாக்களிக்க வேண்டும் அல்லவா  வாக்களிக்கும் போது  வேட்பாளருக்கா இல்லை கட்சிக்கா என்னும் சந்தேகம் எழுகிறது வேட்பாளர் பற்றி பெரும்பாலோருக்கு தெரியாது அவர் நல்லவர் ஆனாலும்   ஒரு கட்சியின்  கட்டுப்பாட்டுக்குள்  இருக்க வேண்டியவர்  கட்சி இல்லாமல் சுயேட்சையாக இருந்தால் எதுவும் செய்ய இயலாதவர்  ஒரு வேளை பலம்  குறைந்த கட்சிக்கு பலம் சேர்க்க விலை போகலாம்  ஆகவே வேட்பாளர் என்பதை விட கட்சி என்பதே முதல் இடம் பெற  வேண்டும் என்று தோன்று கிறது என்னை கேட்டால்கட்சி தாவியவர் யாராயிருந்தாலும்   நிராகரிக்கப் படவேண்டும்  இவர்களை நம்ப முடியாது சரியான பச்சோந்திகள் ஒரு கட்சி ஆட்சியின் போது அதன் பலனை அனுபவிப்பவர்களுக்கு  தேர்ந்தெடுக்க கஷ்டம் இல்லை  மற்ற படி கட்சியின் கொள்கைகள் பிடித்திருந்தால் அவர்களுக்கு வாக்களிக்கலாம் சில நாட்கள் முன்  படித்த நினைவு வழக்கு உள்ளாவர்களது  வழக்குகள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரணைக்கு வந்து முடிவெடுக்கப்படும்  என்பதே  யார் மீதெல்லாம் வழக்கு இருக்கிறது என்பதே மறக்கும் அளவுக்கு  மாற்றங்கள் வந்து நல்லவர்கள்போல் நடமாடுபவர்களே அதிகம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாதுஎன்று ஒருமத்திய  மந்திரி அன்றே சொன்ன நினைவு (கட்காரியோ ) அது போல்தானே நடக்கிறது  பூனழிக்கும்காவல் பாலுக்கும் காவல் என்றே செயல் படும் மத்திய அரசின்  செயல் பாடுகள்  நம்பத்தக்கதல்ல என்றே எனக்குத் தோன்றுகிறது
 ஜன் லோக்பால் என்ற முழக்கம் இருந்ததே நினைவுக்கு  வருகிறதா  அதை நீர்க்கச் செய்து ஏதோ ஒரு லோக்பால்  நிறுவுவதாகக் கூறி  ஹசாரேயின்  உண்ணாவிரதப் போராட்டத்துக்கு  முற்றுப் புள்ளி  இடப்பட்டது ஊழல் வழக்குகளை விசாரிக்கும்  முறையில் ஒரு  கான்ஸ்டி ட்யூஷனல் அந்தஸ்து பெற்றஒரு அமைப்பு ஊழல் வழ்க்குகளை விசாரிக்கும் என்றுபடித்த நினைவு  பலசெய்திகள் மறந்து போய் விடுகின்றனா  அதுவே கட்சிகளுக்கு வர மாகிறது இப்போதுஅரசாங்கக் கட்டுப்பாட்டில் இருக்கும் அமைப்புகள் அவர்களுக்குத் தோன்றியபடி(அல்லது அவர்களுக்குவரும் கட்டளைப்படி ) நினைத்த நேரத்தில்  வழக்குகளை  ஆராய்வார்கள் தோன்றியபடி நிறுத்துவார்கள் என்ன வழக்கு என்றே மறந்துபோன நிலையில் விசாரணைக்கு வந்து  தீர்ப்பு வரும்  குற்றம் புரிந்தவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் இதை எல்லாம்  நோக்கும் போதுஏதோ சக்திக்மறை முகமாக இயங்குவது தெரியும்   இல்லை தெரிகிறதா
கர்நாடகா தேர்தலில்  வலைத்தள  வாசகர்கள்பங்கு மிகவும் குறைவாகவே இருக்கும் இருந்தாலும்  ஊதுகிற சங்கை ஊதி என்  கருத்துகளை கூறி இருக்கிறேன்
வாக்களிக்கும்  போது  தனி வேட்பாளர் முக்கியமல்ல  க்ட்சியே முதன்மை இடம் பெற வேண்டும்  ஒரு செய்தியுடன் முடிக்கிறேன்    We will  get  what we deserve    




                                         

46 கருத்துகள்:

  1. உங்கள் மனம்போல் வரும் ஆட்சி நல்லாட்சியாக மலரட்டும்.

    பதிலளிநீக்கு
  2. //கட்சி தாவியவர் யாராக இருந்தாலும் நிராகரிக்கப்பட வேண்டும்//

    ஸூப்பர் ஐயா எனது கருத்தும் இதுவே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதவிக்காக கட்சி தாவுகிறவர்கள் எல்லாக் கட்சியிலும் உள்ளனர்

      நீக்கு
  3. >>> கட்சி தாவிகள் நிராகரிக்கப்பட வேண்டும்..<<<

    அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதோ காரணத்துக்காக அல்ல பதவி வேண்டி தாவல் அதிகம் உன் எதிரி என் நண்பன ஆகின்றனரோ

      நீக்கு
  4. என்னைப் பொருத்தவரையில் மத வெறியை தூண்டாதவர்களாக பார்த்து தேர்ந்தெடுக்கப்படவேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதவெறி தூண்டப்பட்டால் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கும் என்று நம்புகிறார்கள் மத்தியில் ஆளும் கட்சியின் கொள்கையே அதுதானே

      நீக்கு
  5. //யார் மீதெல்லாம் வழக்கு இருக்கிறது என்பதே மறக்கும் அளவுக்கு மாற்றங்கள் வந்து நல்லவர்கள்போல் நடமாடுபவர்களே அதிகம்..//

    இதற்குத் தான் முந்தைய ஆட்சியில் வழக்கும் வேண்டாம் தீர்ப்பும் வேண்டாம் என்ற நிலை எடுத்தார்களோ, தெரியவில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள் மீது தொடர்ந்து வழக்கு முடிவுக்கு கொண்டுவரப்படும் என்றார்கள் உச்ச நீதி மன்றத்தின் சொல் இது ஆனால் மறதியே வரமாகிப்போய் விட்டது வழக்கை எடுத்துக் கொண்டு அரசாளுபவருக்கு தோதாக தீர்ப்பும் கேடுதானே

      நீக்கு
    2. இதற்குத் தான் முந்தைய ஆட்சியில் வழக்கும் வேண்டாம் தீர்ப்பும் வேண்டாம் என்ற நிலை எடுத்தார்களோ, தெரியவில்லை. -- என்று முந்தைட மத்திய அரசைப் பற்றிச் சொன்னேன்.
      நிலக்கரி ஊழலிலிருந்து எத்தனை ஊழல்கள்..

      நீக்கு
    3. வழக்கும் வேண்டாம் தீர்ப்பும் வேண்டாம் என்பதுகடமையை தட்டிக்கழிப்பதல்லவா அன்று போடப்பட்ட வழக்குகளில் பெரும்பாலோர் குற்ற மற்றவர் என்று விடுதலை ஆகி இருக்கிறார்களே

      நீக்கு
    4. 'குற்றமற்றவர் என்று விடுதலை ஆகி இருக்கிறார்களே!'-- என்று மொட்டையாக முடித்தால் எப்படி?..

      கடமையைத் தட்டிக் கழித்தவர்களின் கட்சிகாரர்களின் வழக்குகளை கடமையோடு
      செயல்படுகிறவர்கள் என்ன செய்தார்கள்?

      நீக்கு
    5. நம் நாட்டில் வழக்குகளே அந்தந்த அரசுகளின் சௌகரியப்படிநடத்த்ப்படுவதுபோல் இருக்கிறது ஒரு சாமானியனால் புரிந்து கொள்ள முடிவதில்லை மலேகான் ப்லாஸ்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள் அதைசெ ய்தவர்கள் சிமி இயக்கத்டை சேர்ந்தவர்கள் எறு கைதுசெய்யப்பட்டனர் சிலர் அதன் பின் அபினவி பாரத் என்னும் இயக்கம் சார்ந்த வர்கள் என்று கருதப்பட்டவர் மீது வழக்கு தொடரப்பட்டது அண்மையில்அவர்களும் குற்ற மற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டனர் ஒரு அரசால் கைது செய்யப்பட்டுவிசாரிக்கப்படுவர் இன்னொரு அரசால் விடுதலை செய்யப் படுகின்றனர் எல்லா விஷயங்களும் தெளிவாகத்தெரியாமல் இருக்கவே என் பெர்செப்ஷன் படி முண்டைய கருத்தை எழுதினேன் மொட்டையாக முடித்திருந்தால் அதுஎனக்கு இந்த வழக்குகளும் நீதியும் சரியாகப் படாததால் தான்

      நீக்கு
    6. பல எழுத்துப் பிழைகள் முதலிலேயே சரிபார்க்கப்பட்டுஇருக்க வேண்டும்தவறு எனதே

      நீக்கு

  6. கர்நாடகவில் உள்ள கள நிலவரங்களை பற்றி மேலும் சில பதிவுகள் எழுதுங்களேன் ஊடகங்கள் பல செய்திகளை மறைத்தும் திரித்தும் எழுதுகிறார்கள் நம்மை போல உள்ள பதிவர்கள்தான் உண்மை நிலவரங்களை அப்படியே எடுத்துரைக்க முடியும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ஆரசியல் ஆராய்ச்சியாளன் அல்ல பலவிஷயங்கள் மனதின் எங்கோ ஒரு மூலையில் இருந்து ஒரு பெர்செப்ஷனைக் கொடுக்கிறது ஆனால் பெர்செப்ஷன் எனெல்லாம் உண்மையாக முடியுமா அந்தமாதிரி பதிவு எழுதும் திற்ன் எனக்கில்லை சார்

      நீக்கு
  7. உண்மைதான். நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதோ ஒன்று நம்மை வாக்களிக்கச் செய்கிறது அடில் வேட்பாளரை விட கட்சி முன் நிற்பது நல்லது என்று தோன்றுகிறது அதை எழுதினேன் நன்றி மேம்

      நீக்கு
  8. ​உங்கள் ஊரில் தேர்தல் நேரம். எனவே தேர்தல் பதிவு போலும். உங்கள் ஊரில் இந்தக் கட்சி வந்தாலும் தமிழகத்திற்கு அதனால் இந்தப் பயனும் இராது.

    ஊடகங்கள் சமூகப் பொறுப்பை மறந்து வெகு நாட்களாகி விட்டன. ​ஊடகங்களில் வருவதை நம்பி உணர்ச்சி வசப்படுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உங்கள் ஊரில் இந்தக் கட்சி வந்தாலும் //

      எந்தக் கட்சி வந்தாலும் என்று இருக்கவேண்டும்.

      நீக்கு
    2. தமிழ் நாட்டுக்கு எதற்காக பயன் இருக்க வேண்டும்?

      நீக்கு
    3. @ஸ்ரீ ஆனால் ஊடகங்களில் வருவதெல்லாம் நிஜம் என்று எண்ணுபவரே அதிகம்ஓரிரு நாட்களுக்குமுன் பிரதமர் பேசியதை நினைவு கூறுகிறேன் கோவாவில் ஓடும் நதிமஹதாயி கோவவுக்கும் கர்நாடகாவுக்கும் நதிநீர் பங்கீட்டுப்பிரச்சனை கர்நாடகாவில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் பிரச்சனை சுமூகமாகும் என்றார் கோவா பிஜேபியின் வசம் இருக்கிறது சில நாட்கள் முன் கோவாவின்முதல் மந்திரி பிஜேபிதலைவர் யெடியூரப்பாவுடன்பிரச்சனையை தீர்க்கலாம் என்றரர் அவர் ஆட்சியில் இருக்கும் கட்சியுடந்தான் உடன்படிக்கை செய்யவேண்டும் என்னும் அடிப்படை நியதி தெரியாதவரா இப்போது மோடி ஆட்சிக்கு வந்தால் பிரச்சனையைத் தீர்க்ககலாம் என்கிறார் மோடி இந்தியப் பிரதமரா இல்லை பிஜேபி பிரதமரா மற்றவை உங்கள்யூகத்துக்கு காவிரி மேலாமை வாரியமோ ஒரு அமைப்போ ஏற்படுத்த மத்திய அரசுக்கு உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டது கடைசி நாளன்று விளக்கம் கேட்டார்கள் அடுவரைமௌனம் காப்பதன்நோக்கமென்ன இப்போதுபிரயாணத்தில் இருப்பதாலும் நேரம் தேவை என்பதாலும் கூடுதல் அவகாசம் கேட்கிறார்கள்பாஜக ஆட்சிக்கு வராவிட்டால் என்ன நடக்கும் தமிழகத் தலைவர்களிடம் பேரம் பேசலாம் பேரம்படிந்தாலும் படியாவிட்டாலும் அப்போது பா ஜக வுக்கு நஸ்டம் ஏதுமில்லை அல்லவா

      நீக்கு
    4. @ துரை அடானே தமிழ் நாட்டுக்கு எதற்காகப் பயனிருக்க வேண்டும் எரிகிற வீட்டில் கொள்ளி பறிப்பவர்களல்லவா போட்டியில்

      நீக்கு
    5. // எரிகிற வீட்டில் கொள்ளி பறிப்பவர்களல்லவா போட்டியில்//

      தமிழர்களைச் சொல்கிறீர்களா ஜி எம் பி ஸார்?

      நீக்கு
    6. அப்பாதுரை,, நான் காவிரிப் பிரச்னையைச் சொல்கிறேன். அங்கு, இங்கு ஒரே கட்சி ஆட்சியில் இருந்தாலும் காவிரிப் பிரச்னையில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் பேசுவார்கள். இதோ இன்று கூட உச்ச நீதி மன்றத்தில் பெங்களூரு வழக்கறிஞர் "தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீர் கூட தரமாட்டோம்" என்று சொல்லி இருக்கிறார்.

      நீக்கு
    7. நதிநீர்ப் பிரச்னை சர்வதேச அளவிலேயே இருக்கிறது ஜி எம் பி ஸார்.. பாகிஸ்தான் சிந்து நதி விஷயத்தில் இப்போது இந்தியா மீது குற்றம் சாட்டி இருக்கிறது. அரசியவியாதிகள் பிரச்னைகளை வைத்து அரசியல் செய்யும் வரை இதுபோன்ற பிரச்னைகள் தீராது. பிரச்னை இல்லாவிட்டால் அவர்களே கிளப்பி விடுவார்கள்.

      நீக்கு
    8. எரிகிற வீட்டில் கொள்ளி பறிப்பவர்கள் எல்லாக் கட்சியிலும் உண்டு தமிழர் கன்னடியரென்ற வேறுபாடுஇல்லை

      நீக்கு
    9. @ஸ்ரீ காவிரி நீர்ப்பிரச்சனை 200 ஆண்டுகாலமாக இருக்கிறாஅது என்று உச்ச நீதிமன்றம்சொன்ன நினைவுஏதாவது கூறி தங்கள் மாநிலப்பற்றை காட்டிக் கொள்கிறார்கள்

      நீக்கு
    10. @அதுதான் அரசியல் ஸ்ரீ பிரித்துப்பார்க்கும் அறிவு நமக்கு வேண்டும்

      நீக்கு
    11. ஸ்ரீ.. தமிழகத்துக்கு எதற்காக நீர் கொடுக்க வேண்டும்? தனக்கு மிஞ்சித் தான் தானமும் தர்மமும். தண்ணீர் கொடுப்பது தான் தமிழருக்குப் பயனா? ஆயிரமாயிரம் தமிழ்க் குடும்பங்கள் கர்நாடகாவில் செழிக்கவில்லையா? அதெல்லாம் பயன் இல்லையா?

      sadly, அரசியல் வாதிகளின் கைப்பிள்ளையாக மாறி புத்தி இழந்து காவிரி காவிரி என்று சாமி வந்தது போல் ஆடுகிறோம். சென்னையிலிருந்து ராமேசுரம் வரை வற்றாத நீர் நிலையிருக்கையில் தண்ணீர் பிரச்சினை என்று சொல்வது வெட்கம். என்னவோ காவிரி நிரந்தரம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் ஐம்பது வருடங்களில் கர்நாடகாவுக்கே காவிரி நீர் கிடைக்குமா என்பது சந்தேகம்.. ஆனால் தமிழ் அரசியல்வாதிகள் போலவும் மக்கள் போலவும் இருக்காமல் வேறு ஏற்பாடு செய்து கொள்வார்கள்.. நம் சந்ததி நம்மைப் போலவே அரசியலை நம்பி காவிரி காவிரி என்று கும்மி அடிக்காமல் இருந்தால் சரி தான்.

      நீக்கு
    12. அப்படிச் சொல்லி அரசியல் வாதிகளால் குப்பை கொட்ட முடியுமா ஒரு தமிழ் நடிகர் சிம்பு என்று நினைக்கிறேன் ஓரளவுக்கு அதுபோல் பேசினார்

      நீக்கு
  9. Hope BJP does not win. Don’t know if Congress is any better, of course. But what I see from here on BJP is scary.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. watched a debate between swamy and raj.. imo, raj was no match for swamy.. unprepared.
      but some of what swamy said were atrocious.

      interesting that prakash raj raised his voice against female panel members, but was a lamb when facing male panel members - i thought swamy destroyed him, unfortunately.. it was like watching bad guys beat good guys.. swamy scares me.. raj seemed to have better ideals than swamy.

      நீக்கு
    2. ப்ரகாஷ் ராய் என்பதே அவர் பெயர் அரசியல் பேசுகிறார் கட்சி ஏதும் ஆரம்பிக்கவில்லை

      நீக்கு
    3. சுப்பிரமணியன் சுவாமி படித்தவர் ஆனால் என்னால் அவரை ஒரு பச்சோந்தியாகத்தான் பார்க்கமுடிகிறதுஅவர் பேசியதைஎல்லாம் நினைவில் வைத்துக் கொள்ளமுடிந்தால் பெரும்பாலும்முன்னுக்கு பின் முரணாய் இருக்கும் புள்ளி விவரங்க்சளோடுபேசுவார் ஆனால் அவற்றில் நம்ப்சகத்தன்மை இருக்காது அவருடனொப்பிட்டால் ப்ரகாஷ் ராஇ ஒருகுழந்தை

      நீக்கு
  10. //கட்சி தாவியவர் யாராக இருந்தாலும் நிராகரிக்கப்பட வேண்டும்//

    ரொம்பச் சரி !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாவற்றுக்கும் ஒருவிலை இருக்கிறது அல்லவா

      நீக்கு
  11. கர்நாடக அரசியல் நிலவரங்களைத் தொடர்ந்து எழுதுங்கள் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் எழுதினால் அது பெர்செப்ஷன் அடிப்படையில்தான் இருக்கும்

      நீக்கு
  12. பதிவின் கடைசிவரியை முதலிலேயே எழுதியிருந்தால் மேற்கொண்டு எழுதவேண்டிய அவசியம் வந்திருக்காது. ஆனால் ஒரு பதிவு தேறவேண்டுமே!

    பதிலளிநீக்கு