Sunday, July 22, 2018

ஒரு பகிர்வு


                                                ஒரு பகிர்வு
                                                 ----------------


-
 கிராமமென்று சொன்னால்  பலருக்கும் பல நினைவுகள் வரலாம் ஆனால் எனக்கு ஒரு தெருவே நினைவுக்கு  வரும் பாலக் காட்டில் இம்மாதிரி பல கிராமங்கள் ஒற்றைத்  தெருவுடன் இருக்கும்    ஆனால் பிரசித்திபெற்ற கல்பாத்தி கிராமம் என்றால் பாலக் காட்டில் அறியாதோர் இருக்க மாட்டார்கள்  கல்பாத்தி விசுவநாதர் கோவிலை  காசியில் பாதி கல்பாத்தி என்று அடைமொழியுடன்  நினவு படுத்துவார்கள்  அதை ஒரு ஹெரிடேஜ்  கிராமமாக அறிவித்திருக்கிறார்கள் இந்த கல்பாத்தி கிராமத்தை ஒட்டியே இருக்கும்  கோவிந்தராஜபுரம் எங்கள் கிராமம்  என்பெயரில் இருக்கும்  ஜீ அதனால்தான் வந்தது ஆனால் அங்கு இப்போது எங்களது என்று சொல்லிக் கொள்ள ஏதுமில்லை என்பெயரின்  இனிஷியலின் முதலெழுத்தை தவிர
. இருந்தாலும்  அந்த கிராம சமூகத்தினர் ஒரு முறை  என் வீடு தேடி பெங்களூர்  வந்தபோது ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்  எந்த மூரிங்கும்( mooring )  இல்லாதஎன் விலாசம் அவர்களுக்கு எப்படிக் கிடைத்தது என்பெங்களூர் விலாசம் எப்படி கிடைத்ததுஎன்பது இன்னும் எனக்கு ஆச்சரியம்தான்  என்னைத் தேடி வந்தவர்களுக்கே சொல்லத் தெரியவில்ல நான்  என் பத்து பதினொன்றாம் வயதில்  என் தந்தை வழிபாட்டியுடன் கிராமத்தில் இருந்திருக்கிறேன்  சில நினைவுகளைப்பதிவிலும்   அசை போட்டிருக்கிறேன்  எங்கள் கிராமக் கோவிலுக்கு  கும்பாபிஷேகம் என்றும் அதற்கு நாங்கள்  வர வேண்டுமென்றும் ஒரு கணிசமான தொகயைஎன்னிடம் எதிர்பார்ப்பதும்  தெரிந்தது என் மனைவிஎங்கள் கிராமத்து கோவில்பணிக்காக அவளால் முடிந்த தொகையைத் திரட்டினாள்  என்மூத்தமகன் அப்போது ஹை எனர்ஜி பாட்டரிஸ் எனும்கம்பனியில் இருந்தான்  கம்பனி சார்பாக ரூ 10000/- விளம்பரம் என்னும் பெயரில் டொனேட் செய்தான் இந்த சமயத்தை நான் என்மக்களுக்கு அவர்களது வேரையும் ஊரையும் காட்ட உபயோகித்தேன்  அதெல்லாம்பழங்கதைகள்
 சில நாட்களுக்கு முன் எனக்கு ஒரு அஞ்சல் வந்தது அதைப் புகைப்படமாகப் பகிர்கிறேன்
எனக்கு வந்த நோட்டீஸ்


அதன் சாராம்சம்  கோவிலில் ஒரு உப தேவதையின் (நாக சுப்பிரமணிய சுவாமி) நெற்றிப்பகுதி சேதமடைந்ததால் தாம்பூலப் பிரச்நம் பார்த்ததில்  சிலையை அது நல்ல சக்தி உள்ளதால்  மாற்ற வேண்டாமென்றும் கடு சர்க்கரப் பிரயோகம் மூலம்  ரிப்பேர் செய்து  பூஜைகாரியங்களை செய்து விடலாமென்றும்   முடிவெடுத்து  இருக்கின்றனர்
 மேலும் கிராமமக்களின் மேலும்பக்தர்களின்  மேலும்  தர்ம சாஸ்தா  அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்   நேர்ந்த சில நிகழ்வுளுக்குமன்னிப்பு கோராததால் கோபம்கொண்டிருப்பதாகவும் அவர் கோபத்தைத்  தணிக்க ”க்ஷமாபானம்”  செய்து  அவரிடம்மன்னிப்பு வேண்டிப் பூஜைகள் செய்ய வேண்டும்   என்றும் முடிவெடுத்து இருக்கின்றனர்  இன்னும் ஒரு முக்கிய  தகவலாக பக்தகோடிகள்தினசரி மற்றும்விசேஷ காலநிகழ்ச்சிகளில்  சரியாகக் கலந்துகொள்ளாததையும் குறிப்பிட்டுஅனைவரும் உத்சவ காரியங்களில் பங்கு  வகிக்க வேண்டுமென்றும் கூறி இதன் படி நடக்க இருக்கும் பூஜா காரியங்களில் கலந்து கொள்ள வேண்டியும்  அதற்காகும் செலவுகளுக்கு பண உதவியும்கோரி இருந்தனர்
இதெல்லாம்சரிதான்  ஒரு கிராமக் கோவிலுக்கு  செலவு செய்வதும்  பூஜைபுனஸ்காரங்ளில் மக்கள் பங்கு பெற வேண்டியும்கோருதல் தவறாகப்படவில்லை
 ஆனால் அதற்காக மக்களின் GULLIBILITY  யை பயன்படுத்தி( உம்மாச்சி கோச்சுண்டிருக்கார் ) அவர்களைக் கட்டாயப்படுத்துவதுபோல்  ஒருநிலையை ஏற்படுத்துவதும் சரியா என்று கேட்கத்தோன்றுகிறது  இதையெல்லாம் கேட்டால் நான் கெட்டவனாகி விடுவேன்  என்மனைவி சொல்வதுசரிஎன்று தோன்றுகிறது மனம்விரும்பினால் இதுவரைசெய்ததுபோல்  ஒருதொகையை அனுப்பலாம் இல்லையென்றால் பேசாமல் இருக்கலாம் இருந்தாலும்என் மன நிலையைப் பகிராமல் இருக்க முடியவில்லை     

32 comments:

 1. சொந்த ஊர் என்பதால் நம்மால் இயன்றதை செய்வதே முறை நமது கடவுள் நம்பிக்கை நம்மோடு இருக்கட்டும்.

  ஐயா கோவிந்தராஜபுரம் என்பது தமிழக எல்லையில் உள்ள ஊரா ?
  காணொளி இயக்கமில்லை பிறகு வருகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கு நன்றி ஜி சொந்த ஊர் என்பது இப்போது என் இனிஷியலில் மட்டுமே இருக்கிறதுஇருந்தும் நான் என்னால் இயன்ற ஒரு தொகையை வருடா வருடம் அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறேன் கோவிலுக்குஎன்று கேட்பது தவறாகத் தோன்றவில்லை ஆனால் பதிவில் கண்டபடி மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி பயமுறுத்திக் கேட்பது சரியா என்பதே என் கேள்வி பதிவானது

   Delete
 2. வேருக்கு சென்று உங்கள் குடும்ப படங்களையும், பூர்வீக வீட்டையும் கண்டு வந்தேன் ஐயா.

  ReplyDelete
  Replies
  1. என்பழைய பதிவுக்குச் சென்று படித்தது மகிழ்ச்சி தருகிறதுகோவிந்தராஜபுரம் கேரளத்தில் பாலக்காட்டிலிருக்கிறது விவரமாகஎழுதிய நினைவு

   Delete
 3. இப்படியும் எல்லாம் கூட இருக்கிறார்கள்... ம்... எதுவும் சொல்வதற்கில்லை...

  ReplyDelete
  Replies
  1. மக்களுக்கு தெரிந்திருந்தால் சரி வருகைக்கு நன்றி சார்

   Delete
 4. பயமுறுத்தி தான் பக்தர்களை வர வைக்க வேண்டியிருக்கிறது என நினைக்கிறார்கள்... என்ன சொல்ல.

  பல கோவில்களில் இப்படித்தான் இருக்கிறது நிலை. பரம்பரை குலதெய்வ கோவில்களுக்குச் செல்பவர்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள். பலருக்கு தங்கள் குலதெய்வம் எது என்று கூட தெரிவதில்லை.

  ReplyDelete
  Replies
  1. குல தெய்வம் என்பது ஒரு அட்டாச் மெண்டுக்காகத்தானெஅவர்களிடம் நெருக்கி நன்கொடை கேட்கலாம் என் நினைவு சரியானால் சில நகரத்தார் கோவில்களில் இன்ன குடும்பத்தாரிவ்வளவு நன்கொடைதர வேண்டும் என்னும் நிலை இருக்கிறது

   Delete
 5. கிராமத்துக் கோவில்களை பராமரிப்பதும் அதற்கான சேவைகளில் ஈடுபடுவதும் கஷ்டமான விஷயம். அதற்கான பணத்துக்காக முடிந்தவர்களிடம் கேட்டோ, நெருக்கியோ பணத்தைச் சேகரிக்கின்றனர். தவறில்லை.

  ஆனால் கொஞ்சம் பயமுறுத்துவதுபோல் நோட்டீஸ் அனுப்பியிருப்பது, செண்டிமெண்ட் டச்சுக்காகவா? இதனை இன்னும் நல்ல மொழியில் சொல்லியிருக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. கோவில் கும்பாபிஷேகம் என்று வந்தபோது முடிந்தஅளவு நன்கொடை கொடுத்திருக்கிறோம் பதிவின் மையக்கருத்தை தொட்டிருக்கிறீர்கள்

   Delete
 6. சமீபத்தில் சென்றிருந்த கோவில்களில் சிலவற்றில் சட்டையைக் கழற்றித்தான் சன்னிதிக்குச் செல்லவேண்டும். ஒரு கோவிலில் அப்படி சட்டையைக் கழற்றவில்லை. வெளியில் இருந்தே வணங்கிக்கொண்டேன். கால மாறுதல்களினால் எண்ணவோட்டங்களிலும் மாறுதலா என்பது தெரியவில்லை.

  ReplyDelete
 7. சமீபத்தில் சென்றிருந்த கோவில்களில் சிலவற்றில் சட்டையைக் கழற்றித்தான் சன்னிதிக்குச் செல்லவேண்டும். ஒரு கோவிலில் அப்படி சட்டையைக் கழற்றவில்லை. வெளியில் இருந்தே வணங்கிக்கொண்டேன். கால மாறுதல்களினால் எண்ணவோட்டங்களிலும் மாறுதலா என்பது தெரியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. பெரும்பாலான கேரளக் கோவில்களில் அம்மாதிரிதான் சட்டயைக் கழற்ற வேண்டும் சிதம்பரம் கோவிலில் கூட ரெஸ்ட்ரிக்டெட் இடத்தில் இருந்து தரிசிக்க ஆண்கள் மேலாடையைக் கழற்ற வேண்டும்

   Delete
 8. சமக ஜபம் யாராவது கேட்டீர்களா தெரியவில்லையே

  ReplyDelete
 9. ருத்ரம், சமகம் இரண்டும் தினம் தினம் கேட்டுக் கொண்டிருக்கோம். காணொளியில் இருப்பதும் அதுவே என நினைக்கிறேன். மற்றபடி வேறே ஏதும் சொல்வதற்கில்லை!

  ReplyDelete
  Replies
  1. கோவில் விஷயம் பற்றி எழுதியதால் சமகம் காணொளி சேர்த்தேன் வருகைக்கு நன்றி

   Delete
 10. ' HE is not happy with his devotees participation for his day to day activities or during festivities. If this trend continues it would be a great catosphere..'

  நல்லதொரு காமெடி பீஸைப் படிக்கக் கொடுத்ததற்கு நன்றி! Catosphere என்றொரு புதுவார்த்தை ஆங்கில மொழியில் கோவிந்தராஜபுரம் பெருமக்களால் சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கூடுதல் சந்தோஷம்!

  நீங்களும் ரொம்பவும் வருத்தப்படாமல் இதையெல்லாம் ரசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்!


  ReplyDelete
  Replies
  1. துன்பம் நேர்கையில் நகுக அதுவும் ஒரு கோணம் நோடிஸ் அனுப்பியவர்களுக்கு நக்கீரர்கள் பற்றித்தெரியவில்லை

   Delete
 11. மனிதர்கள் கடவுள் பெயரால் செய்யும் அனா பினா!

  ReplyDelete
  Replies
  1. அனா பினா----அதிகப் பிரசங்கித்தனம்...?

   Delete
  2. வலைப் பதிவுகளில் இப்படி நிறையவே சுருக்கங்கள் பார்க்கிறேன் பெரும்பாலும் புரிவதில்லை விளக்கிச் சொன்னால் குறைந்தா போய்விடும் அபுரி உக்களிடம் கற்றது

   Delete
 12. எனக்குஒருமலையாளநண்பனொருவனிருந்தான். அவனும்இதுபற்றிச்ச்சொல்லியிருக்கிறான். அவனுக்கும்கூடஇனிஷியல்ஊர்ப்பெயர்என்று சொன்னானாவீட்டின்பெயர்என்றுசொன்னானாஎன்றுநினைவில்லை.

  ReplyDelete
  Replies
  1. கேரளத் தமிழர்கள் ஊர் பெயரையும் தந்தையின் பெயரையும் இனிஷியல் ஆக்குவார்கள் கேரள மலையாளிகள் வீட்டி பெயரை இனிஷியல் ஆக்குவார்கள் துளசிதரன் விளக்கலாம்

   Delete
 13. கோயிலுக்கு எனினும் மிரட்டிக் கேட்பது தவறுதான், நன்கொடையாக உங்களால் முயன்றதைக் கொடுங்கள் எனக் கேட்டால், நமக்கும் மனம் வரும் குடுக்க.

  நம் ஊர்க் கோயிலும் அப்படித்தான், முன்பு 15 நாட்கள் திருவிளாவாக இருந்ததை இப்போ 25 நாட்கள் ஆக்கி, ஒவ்வொரு திருவிளாவுக்கும், குறைந்தது ஒரு லட்சம் கோயிலுக்கு கட்ட வேண்டும் திருவிளாக்காரர்கள்.. என்ன இருப்பினும் கடவுளுக்காகச் செய்வது என்றைக்கும் வீண்போகாது... நம்மூர்க் கோயிலைப் பராமரிப்பது நம் கடமைகளுள் ஒன்றுதானே..

  ReplyDelete
 14. அது ஒரு மறைமுக மிரட்டல் என்னைப் போல் எல்லோரும் இருப்பார்களா கடவுளுக்காக எங்கே செய்கிறோம் கடவுள் பெயரால் பயமுறுத்தப்படுகிறோம்

  ReplyDelete
 15. திரைப்படங்களில் அடியாட்கள் வருவதைப்போல வசூலுக்கு வருவதைப்போல காட்சிகள் வரும். அதனை நினைவுபடுத்துகிறது இப்பதிவு.

  ReplyDelete
  Replies
  1. இவர்கள்பயமுறுத்துவது கடவுல் கோபமாய் இருக்கிறார் என்றே நேரில் வரவில்லை ஓலை மூலம் வந்தனர்

   Delete


 16. நாம் கோயிலுக்கு கொடுக்கும் நன்கொடை எல்லாம் கோவிலுக்காக செலவழிக்கப்படுவதில்லை. அதை சார்ந்த பல குடும்பத்தினர் வாழவே பயன்படுகிறது..... இப்போது விலைவாசிகளும் ஏறிவிட்டதால் கோவிலை நம்பியுள்ளவர்களும் பிழைக்க வேண்டியிருப்பதால் இப்படி கேட்கிறார்கள் இது பல மதங்களின் வழிபாட்டுதளங்களிலும் நடை பெறுகிறது...அதனால் நம்மால் முடிந்தால் நிச்சயம் நன்கொடை கொடுக்கலாம். ஏதோ சிலபேர் வாழ நம்மால் உதவ முடிந்தால் நல்லதுதானே

  ReplyDelete
  Replies
  1. இருப்பவர்கள் முடியும்போது கொடுக்கலாம் ஆனால் பயமுறுத்தி நன்கொடை வாங்குவது பற்றித்தான் பதிவு

   Delete
 17. பயமுறுத்தி வாங்க கூடாது.
  நம் குலதெயவ கோவில் அதை நன்றாக வைத்துக் கொள்ள ஊர் மக்கள் உதவுங்கள். உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் இறைவன் ஆசிர்வதிப்பார், உங்கள் குடும்பத்தை நல்லபடியாக வாழவைப்பார் என்று கேட்டால் நிச்சியம் முடிந்ததை கொடுப்பார்கள் மக்கள்.

  ReplyDelete
 18. இல்லையென்றால் ஊர்மக்களொன்று கூடிஆண்டுக்கு ஒவ்வொரு வீடும் இவ்வளவு பணம்தர வேண்டுமென்று முடிவு செய்யலாம்

  ReplyDelete