ஒரு புலம்பல்
ஒரு புலம்பல் பதிவு
ஓய்வு
பெற்று வந்தபோது இங்கு ஒரு வங்கி அக்கௌண்ட் ஓப்பென் செய்ய வேண்டி இருந்தது வீட்டிலிருந்து ஒரு கி மீட்டருக்குள் இருந்த
வங்கியில் கணக்கு திறக்க முதல் பிரச்சனை வந்தது வங்கி அதிகாரிகளுக்க்குத் தெரிந்த
ஒருவர் என்னைத் தெரிந்ததாக கையெழுத்து கேட்டார்கள் நானோ ஊருக்குப் புதியவன்
வங்கிக்கு தெரிந்தவர்கள் அந்த வங்கியில்
கணக்கு இருப்பவர்களைத் தேடி நான் எங்கு போக ஒரு யோசனை உதித்ததுஅப்போதைய
பஞ்சாயத்து அலுவலகம்சென்று என் வீட்டு பத்திரங்களைக்காட்டி நான் இங்கு வசிப்பவன் என்று கூறி அங்கிருந்த அதிகாரிகளிடம் ஒரு கடிதம் பெற்று வந்து.ஒரு
கணக்கு துவங்கினேன் அது நடந்தது 1992
என்று நினைவு அதன் பின் பிஎச் இ எல் பணப்பட்டுவாடாவை அந்த வங்கிக்கு மாற்றினேன் இப்போது வயது ஏறி விட்டது ஒரு கிமீ தூரத்தில்
இருந்த வ்ங்கி அலுவலகம் நான்கு கி மீ தூரத்துக்கு
மாறிவிட்டது இருந்தால் என்ன இப்போதுதான்
வீட்டிலிருந்தே வங்கி கணக்குகளை இயக்க
முடியுமாமே நெட் பாங்கிங் என்றுஎன் மக்கள்
சொன்னார்கள் எனக்கு அதெல்லாம் க்ரீக் அன்ட் லாட்டின் புரிவதில்லை
என் மக்களின் உதவியோடு ஒரு மாதிரி சமாளித்து வந்தேன் ஒரு நாள் இண்டெர்நெட் பாங்கிங் முடங்கி விட்டது வங்கியின்தலமை
அலுவலகத்துக்கு ஒரு கடிதம் எழுதினேன்
அவர்கள் என் மின்முகவரியை வங்கிக்கிளைக்குத்
தெரியப்படுத்தி கிளைக்கு எழுதச் சொன்னார்கள் எந்த பதிலும் வரவில்லை ஒரு முறை நேரில் சென்று என் இண்டெர்நெட்
அக்கௌண்ட் முடக்கப்பட்டதை கூறி அதை நேர்படுத்த வேண்டினேன் அவர்களும் சரிசெய்வதாகக்
கூறி ஒரு வாரகாலத்துக்குள் சரியாகும் என்றும் என் விலாசத்துக்கு கூரியர்மூலம்
பதில் வருமென்றும் கூறினார்கள் இதனிடையில் என் ஏ டி எம் கார்டில்பணம்கேட்டால்
வரவில்லை சில பல முயற்சிகளுக்குப் பின்
பழைய ஏ டி எம் கார்டை மாற்றி கோல்டென் கார்ட் கொடுக்கப் படும் என்றும்
கூறினார்கள் ஒரு வழியாக அதைமாற்றம்
செய்தேன் ஆனால் அந்தக் கார்ட் மூலம்ரயில்
டிக்கட் போன்றவை சாத்தியப்படாமல் இருக்கிறது
கேட்டால் முதலில் ஏடிஎம் கார்டை
ரெஜிஸ்டர் செய்ய வேண்டுமாம் அது அதே
வங்கியின் ஏடிஎம்கிளையில்தான் சாத்தியமாம்
ஆனால் நான்போகும் போதெல்லாம் அந்த மெஷின் பழுதில் இருப்பதாக தெரிய வருகிறது
இன்னும்
என் இண்டெநெட் அக்கௌன்ட் முடங்கியே
இருக்கிறது போகும் போதெல்லாம் இன்று
மாலைக்குள் சரியாகி விடுமென்று கூறு கிறார்கள்
ஓரளவு விஷய ஞானம் உள்ள
எனக்கே இந்தகதி என்றால்
படிப்பறிவில்லாதவர் பாடுஎப்படி இருக்கும்
பேசாமல் இந்த வங்கிக்
கணக்கை மூடிவேறு ஏதாவது வங்கிக்கு போகலாமென்றால்
சில இடங்களுக்கு இந்த வங்கியையே
காட்டி இருக்கிறேன் என்பதாலும்
மாற்ற நான் இன்னும் பாடுபட
வேண்டிவரும் என்பதாலும் முழிக்கிறேன்
புலம்பலுக்குப் பின் ஒரு மகிழ்ச்சி என்வீட்டில் பூத்த பிரம்ம கமலம்பூக்கள் ஒரு இரவுதான் மலர்ந்திருந்தன மறு நாள் தொய்ந்து விட்டது
புலம்பலுக்குப் பின் ஒரு மகிழ்ச்சி என்வீட்டில் பூத்த பிரம்ம கமலம்பூக்கள் ஒரு இரவுதான் மலர்ந்திருந்தன மறு நாள் தொய்ந்து விட்டது
ராத்திரியில் பூக்கும் இம்மலர்களைக் கண்டதும் ஒரு பாடல் நினவுக்கு வந்தது
புலம்பலுக்குப் பின்
புலம்பலுக்குப் பின்
விஞ்ஞான மாற்றம் பாமரமக்களுக்கு கஷ்டம்தான். காணொளியில் அருமையான தங்கமகன் படப்பாடல் இனிமை.
பதிலளிநீக்குகில்லர்ஜி... 'அருமையான தங்கமகன்' என்று சொன்னது ரஜினியை இல்லையே? சும்மா சந்தேகம் வந்தது... கேட்டேன்....
நீக்குநிச்சயமாக எனது நாவு கனவில்கூட சொல்லாது.
நீக்குஇந்தப்பாடல் நாசூக்காக எழுதப்பட்ட ஆபாசமான பாடல் நல்ல இசை.
விஞ்ஞான மாற்றம் எல்லாம் சரிதான் ஆனால் அதைகொண்டு நடத்துபவருக்கு சேவை மனப் பான்மை வேண்டும்
நீக்கு@நெத கில்லர்ஜியை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை நீங்கள் நடிகர்கள் கிரிக்கெட்காரர்கள் என்றாலே அவருக்குப் பிடிக்காது
நீக்குஎன் கணிப்பு சரிதான் கில்லர்ஜி கனவிலும் நினக்க முடியாதது
நீக்கு//கில்லர்ஜியை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை// - ஜி எம் பி சார்... கில்லர்ஜிக்கு திரையுலக நடிகர்/நடிகையர் பிடிக்காது. அதிலும் அவங்க அரசியலுக்கு வந்தா கொஞ்சம்கூடப் பிடிக்காது.
நீக்குஇருந்தாலும் அவரை வம்புக்கு இழுக்கத்தான் அந்தப் பின்னுட்டம். ஹா ஹா ஹா.
அதில்தான் என்ன சுகமோ அவரானால் கண்டுகொள்ளவே இல்லை
நீக்குநெ.த. என்னை வம்பு இழுப்பது நான் அறிந்த விடயம் ஐயா.
நீக்குஎன் முந்தைய கமெண்டைப் பாருங்களென்னைப் பொய்யாக்கி விட்டீர்கள் கண்டு கொண்டு
நீக்குஇந்தியாவில் கஸ்டமர் செர்வீஸ் என்பதைத்தான் பார்க்க முடியாது, அதிலும் வங்கிகளில். (செல்லப்பா சாரைத்தான் காணோமே கொஞ்ச நாளா... தைரியமாச் சொல்லலாம்).
பதிலளிநீக்குமற்றபடி டெக்னாலஜியில் பெட்டரா இருக்கோம்.
உங்கள் 'புலம்பல்' வங்கியில் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும் உண்டு. இதைவிட மோசமானது என்னுடைய ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி அனுபவம்.
நல்ல வேளை மோடி ஒவ்வொருவர் கணக்கிலும் வங்கியில் பணம் போட்டிருந்தால் மக்கள் அதை உபயோகிக்கத் தெரியாமல் விழிப்பர்
நீக்குவேறு வங்கிக்கு மாறி விடுங்கள் ஐயா... அது தான் நல்லது என்று தோன்றுகிறது...
பதிலளிநீக்குசில பல கமிட்மெண்டுகள் இந்த வங்கி முலமே செயல் படுத்துகிறேன் மாற்றுவதற்கும் நான்தான் அலைய வேண்டும்
நீக்குஎங்க பையருக்கு ஸ்டேட் வங்கியில் இம்மாதிரி ஆகிப் பின்னர் அவர் இங்கே வந்திருக்கையில் நேரில் சென்று சரி செய்தார். நாங்க பண்ண முடியாதே! இப்போச் சில மாசம் முன்னர் ஈ.பிக்குப் பணம் கட்டும்போது கணினியில் நெட் பிரச்னையில் டைம் அவுட் எனச் சொல்லி எங்க வங்கி எங்க கணக்கை முடக்கி விட்டது. பின்னர் வங்கிக்குத் தொலைபேசிக் கேட்டதில் மறுபடி பதிந்து கொண்டு பாதுகாப்புக் கேள்விகள், பாஸ்வேர்ட் எல்லாம் மாற்றச் சொன்னார்கள். மாற்றினோம். என்றாலும் இணையம் சரியாக வரணும். அதான் முக்கியம்
பதிலளிநீக்குஎனக்கு வங்கிக்கு அடிக்கடி செல்ல முடிவதில்லை
நீக்குபிரம்ம கமலம் நன்றாக இருக்கிறது. காணொளியில் வந்திருக்கும் இந்தப் படம் எல்லாம் பார்த்ததே இல்லை.
பதிலளிநீக்குபிரம்ம கமலமிரவில் பூப்பதால் இப்பாட்டு நினைவுக்குவந்தது அதுவும் முதல் வரிமட்டுமே
நீக்குஇது போல் ஊர் மாற்றி வந்த பின் என் கணவரும் புலம்பினார்கள்.
பதிலளிநீக்குஉங்கள் தோட்டத்தில் மலர்ந்த பிரம்மகமலம் பூக்கள் அழகு.
அமைதிச்சாரல், ராமலக்ஷ்மி, நீங்கள் மூன்று பேரும் இந்த பூக்களை பதிவாக்கி விட்டீர்கள்.
பாடல் கேட்டேன்.
புலம்பல் இன்னும் நிற்பதாகத் தெரியவில்லை
நீக்குஇணைய வழி பணம் செலுத்துவதில் பட்ட கஷ்டங்களைப் புலம்பினால் ஒரு பதிவு போதாது! வங்கிகள் படுத்துகின்றன. 15 நாட்களுக்குள் புதிய ஏ டி எம் கார்டை உபயோகப்படுத்தி பணம் எடுக்கா விட்டால் அதன் பின் நம்பர் செல்லாததாகி விடும்.
பதிலளிநீக்கு15 நாட்களுக்குள் புதிய ஏ டி எம் கார்டை உபயோகப்படுத்தி பணம் எடுக்கா விட்டால் அதன் பின் நம்பர் செல்லாததாகி விடும்./ இந்த செய்தி எனக்கு புதிது
நீக்குகாணொளி : இளையராஜா. எஸ் பி பி. ஹம்சானந்தியில் எனக்கு மிகவும் பிடித்த பாடல். சலங்கை ஒலியில் வரும் "வேதம்.. அணுவிலும் ஒரு நாதம் .." பாடலும் "நாதவினோதங்கள் நடனசந்தோஷங்கள்" பாடலும் இதே ராகம்!
பதிலளிநீக்கு(கீதாவுக்கு இணையப்பிடுங்கல்! எனவே இப்போதைக்கு வரமாட்டார் என்கிற தைரியத்தில் அடித்து விடுகிறேன்!)
//அடித்து விடுகிறேன்//
நீக்குஅப்படீனாக்கா... உண்மை இல்லையா ?
@ ஸ்ரீ கீதா வந்தாலும் எதிர்மறாஐயாக எதுவும் கூறமாட்டார் இணையம் சரியானாலும் இப்பதிவுக்கு வர் வாய்ப்பு மிகக் குறைவு ஆடிக்கொரு முறை வருவார்
நீக்கு@ கில்லர் ஜி இதற்குத்தான் ராகம்தானம்பல்லவி என்று பேசி எல்லாம் தெரிந்ததுபோல் இருக்க வேண்டும்
நீக்குஸ்ரீ கீதா வந்தாலும் எதிர்மறாஐயாக எதுவும் கூறமாட்டார் இணையம் சரியானாலும் இப்பதிவுக்கு வர் வாய்ப்பு மிகக் குறைவு ஆடிக்கொரு முறை வருவார்//
நீக்குஹா அஹ ஹா ஹா ஹா சார் இந்தக் கமென்ட் எனக்குச் சிரிப்பை வரவழைத்துவிட்டது. உங்கள் பதிவுகள் மிஸ் ஆனால் கூடப் பார்த்து கருத்து சொல்பவள் நான். பல ப்ளாகிலும் இப்படித்தான் செய்து வருகிறேன். ஆடிக்கொரு முறை என்று சொல்லியிருக்கீங்க...சிரிச்சுட்டேன் ஸார்...
கீதா
வாசகரின்பின்னூட்டம் பதிவு எழுதிய ஓரிரு நாட்களுக்குப்பின் வந்தால் அப்படித்தோன்று கிறதோ
நீக்குவங்கி அனுபவம் வருத்தம் அளிக்கிறது. ஏடிஎம் மெஷின்கள் பழுதாகிப் போவதும் பல இடங்களில் நடக்கிறது.
பதிலளிநீக்குபிரம்மக் கமலம் பூத்து விட்டதில் மகிழ்ச்சி. அழகிய பகிர்வு. ஆம், பூத்த மறுநாள் காலையிலேயே மூடிக் கொள்ளும்.
நனும்பல நாள் காத்திருந்து பிரம்மகமலம் பூ மலர்ந்துகண்டேன் வருகைக்கு நன்றி மேம்
நீக்குடிஜிட்டல் இந்தியாவில் இந்த கஷ்டங்களை எல்லாம் எளிதாக எடுத்து கொள்ளனும் அப்படி இல்லாமல் இப்படி புலம்பினால் உங்களை ஆண்டி இண்டியன் என்று முத்திரை குத்த வேண்டி வரும்
பதிலளிநீக்குஎந்தக் கஷ்டத்தையும் எளிதாக கையாள்பவன்நான் ஆனால் இந்தவயசு படுத்துகிறதே
நீக்குமாதத்திற்கு ஒரு முறை மாத கைச் செலவுகளுக்கு வங்கியிலிருந்து கொஞம் பணம் எடுத்து வருவேன். மற்றபடி ஒரு செக் புக்கும் டெபிட் கார்டும் எனக்குப் போதும். கடந்த பல வருடஙகளாக இப்படித் தான் காலம் ஓடிக் கொண்டிருக்கிறது.
பதிலளிநீக்குஎனக்கேற்பட்டிருக்கும் கண் கோளாறுகளினால் பதிவுகளில் வந்து பின்னூட்டம் இப்பொழுதெல்லாம் போடுவதில்லை. கொஞ்ச காலத்திற்கு இப்படியே இருப்போம் என்றிருந்தேன்.
என்னைப் பற்றிய சென்ற உஙகள் பதிவு அந்த எண்ணத்தை மாற்றியிருக்கிறது.
அன்புடன்,
ஜீவி
கண் என்னையும்படுத்துகிறது நிறையவே பிழைகள் தட்டச்சும்போது நெட் பாங்கிங் இல்லாததே பிரச்சனை யாகத் தெரிகிறது அதை எல்லாம் என் மகனது உதவியால்தான் செய்கிறேன் ஆனால் வசதியே முடக்கப் பட்டால் புலம்பல்தான்
நீக்குநீங்கள்பதிவுக்கு வராதது அயல் நாடுசென்று இருப்பீர்களோ என்றுநினைக்க வைத்தது
AMD-- AGE RELATED MACULAR DEGENERATION. இடது கண்ணில் பார்வை பாதித்திருக்கிறது. வலது கண்ணைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியில் இருக்கிறேன்.
நீக்குMacular degeration பற்றி அறிய கீழ்கண்ட லிங்கிற்குப் போய்ப் பார்க்கவும்.
https://www.macular.org/what-macular-degeneration
ஆமாம். அயல் தேசம் தான்.
இப்பொழுது அமெரிக்காவில் இருக்கிறேன்.
சுட்டி பார்த்தேன் நிறைய விஷயங்கள் தெரியாதவை மருத்துவ ஆலோசனைப்படி நடக்கவும் அனாவசிய பயம் தவிர்க்கவும் இதையெல்லாம் பார்க்கும்பொது அறியாமை இருளே பரவாயில்லை என்று தோன்று கிறது
நீக்குசுட்டியைப் பார்த்தமைக்கும் தங்கள் ஆலோசனைக்கும் நன்றி. எல்லா அனுபவிப்புகளும் அனுபவங்களே. தமிழகம் வந்து சேர்ந்ததும் இது பற்றி விவரமாகத் தெரிவிக்கிறேன்.
நீக்குஆலந்தான் உகந்து அமுது செயதானை
நீக்குஆதியை அமரர் தொழுது ஏத்தும்
சீலந்தான் பெரிதும் உடையானைச்
சிந்திப்பார் அவர் சிந்தையுளானை
ஏலவார் குழலாள் உமைநங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
காலகாலனைக் கம்பன் எம்மானைக்
காணக்கண் அடியேன் பெற்றவாரே"
திரு ஜீவி சாருக்குக் கண் குணம் அடையப் பிரார்த்திக்கிறேன். இந்த சுந்தரர் பதிகத்தைத் தினமும் பாராயணம் பண்ணி வரலாம். ஏற்கெனவே தெரிந்திருக்கும் எனினும் நினைவூட்டினேன்.
உங்கள் பிரார்த்தனைக்கு பாராட்டுகள் தலை வணங்குகிறேன் நன்றி
நீக்கு@ ஜீவி நான் சுட்ட்யைப் புரிந்து கொண்ட அளவில் மற்ற கண்ணுக்கு பதிப்பு இதனாலேற்படும் போல் இல்லை மன தைரியத்தோடு நார்மலாக இருக்க முயற்சி செய்யுங்கள் உங்கள் நலனுக்குப் பிரார்த்தனை செய்ய நிறையவே நல்ல உள்ளங்கள் உண்டு
நீக்குசாமானியர்களை மனதில் வைத்து எந்த சட்டமும், திட்டமும் வகுப்பதில்லைப்பா...
பதிலளிநீக்குஅருமையான பாடல்..
பிரம்மக்கமலம் செடியில் பூக்குமா?! இல்ல கொடியில் பூக்குமா?! இப்பதான் இந்த பேரையே கேள்விப்படுறேன்
பிரம்ம கமலம் அல்லதுநிஷா கந்தி என்று அழைக்கப் படும் இப்பூ இலை வழியே பூக்கிறது செடிதான் கொடி அல்ல
நீக்குஇது புலம்பல் இல்லை. இது குறித்து ஒரு தொடர் பதிவு எழுத எண்ணம் உண்டு. நன்றி.
பதிலளிநீக்குபின்னூட்டங்களில் இம்மாதிரி அனுபவங்கள் எனக்கு மட்டுமல்ல என்று தெரிகிறது,உங்கள் மூலமொருபதிவு வருமானால் நிச்சயம்பலருக்கும் பலன் இருக்குமென்று எண்ணுகிறேன் நன்றி
பதிலளிநீக்குதுளசிதரன் : இப்படியான அனுபவங்கள் உண்டு சார். எல்லோருக்குமே ஏற்பட்டிருக்கும் என்றும் நினைக்கிறேன்.
பதிலளிநீக்குகீதா: எனக்கு பேங்க் அனுபவம் அத்தனை இல்லை என்பதால் சொலல்த் தெரியவில்லை ஸார். ஆனால் சமீபத்தில் அரசு சார்ந்த வங்கி ஒன்றில் ஒரு காமன் அக்கவுன்ட் ஆனால் என் பெயரில் தொடங்க நேர்ந்த போது அனுபவங்கள் ரொம்பவே எரிச்சலைத் தந்தது, மகனுக்குச் செம கடுப்பாகிவிட்டான்.
வங்கிகளில் சேவை மனப் பான்மை குறைந்து காணப் படுகிறது தெரியாதவர்கள் ஏதாவதுகேட்டால் வெறுமே அலைக்கழிக்கிறார்கள் அதுவும் எரிச்சல் பட்டுக் கொண்டே
நீக்குபிரம்ம கமலம் பூ ரொம்ப அழகாக இருக்கிறது. பூத்திருப்பதும் வியப்புதான்
பதிலளிநீக்குதுளசிதரன், கீதா
இமாதிரி செடிகள் வீட்டில் நிறையவே உண்டு பூ செடியின் இலையிலிருந்தே துளிர் விடுகிறது பூத்தபூ வின் ஆயுசும் ஒரு இரவே முதல் முறையாகப் பூத்ததன் படம்
நீக்கு