வரன் தேடல்........?
-----------------------
பெண் பார்க்கும் படலங்கள்
இப்பதிவுக்கு
தொடக்கமாக நான்பெண்பார்த்தவிவரம்
முதலில் ஒரு நாள் மாலை நான் தங்கி இருந்த
இடத்துக்கு எதிரில் ஒரு இளம் பெண் நின்று கொண்டிருந்தாள் என் நண்பர்களில் ஒருவன் யார் அந்த அழகி என்று கேட்டான்எனக்கு ஏன்
கோபம்வர வேண்டும் அவளை நான் மனதால் வரித்து விட்டிருந்தேன் அவளைப் பற்றி யாரும் பேசுவதை நான்பொறுத்துக்
கொள்ள முடியவில்லை அப்போடுதான் அறிந்தேன்
நான்காதல் வயப்பட்டிருந்ததை அதே பெண்ணை
நான் கைப்பிடித்து மணம்செய்து ஆகிறது 54 வருடங்கள்
என் மூத்த மகனுக்கு
திருமணத்துக்கு பெண் பார்த்ததும்
நினைவுக்குவருகிறது குடியிருப்பில் நாங்கள் இருந்தது மேல் தளத்தில் எங்கள் வீட்டுக்கு நேர் கீழ் இருந்த வீட்டுக்கு ஒருபெண் அடிக்கடி சைக்கிளில்
வருவாள் பெண் பார்க்கலட்சணமாக இருக்கவே
எனக்கு நாமேன் அந்தப் பெண்ணை நம் மகனுக்குப்
பார்க்கக்கூடாது என்றுதோன்றியது
கீழ் வீட்டில் இருந்த பெண்ணைப் பார்க்க வருபவள் ஆதலால்
அந்தப்பெண்ணிடம் யார் என்று விசாரித்தேன் என்
நண்பன் ஒருவன் மூலம் அந்தப்பெண்ணின் பெற்றோருக்கு என் ஐடியாவைத்
தெரியப்படுத்தவேண்டினேன்
பெண்ணின்
பெற்றோருக்கும் எங்கள் வீட்டில் சம்பந்தம்
வைக்க விருப்பம் என்று தெரிந்தது ஒரு நாள்
பெண்ணின் தந்தை என் வீட்டுக்கு
வந்து திருமணம்பற்றிப்பேச ஆரம்பித்தார் அவருக்கு ஜாதகப்பொருத்தம் பார்க்க விருப்பம்
என்று கூறினார் அவர்கள் பார்ப்பது எனக்கு
ஆட்சேபணை இல்லை என்றேன்
அவர்கள் ஜாதகம்பார்த்து பெண்ணுக்கு இன்னும் இரண்டு மாததுக்குள் மணம் முடிக்க வேண்டும் என்பது ஜாதகப்பலன்
என்றார் இப்படியாகஒரு நல்ல நாள் பார்த்து உற்றார் உறவினர் சம்மதத்துடன் திருமணம்
நடந்தது ஏன் இத்தனை சீக்கிரம் மணம் என்னும்
கேள்வி எழுந்தது மகனுக்கு 25 வயதே ஆகி இருந்ததுசீக்கிரம் திருமணம் நடந்தால் அவன் ஓய்வு பெறும்
வயதுவரும்போது அவனது கடமைகள்செய்து முடிக்கப்பெற்றிருக்கும்என்பதே என்பதிலாக
இருந்ததுஇப்போது அவனுக்கு 52 வயது அவனது
மகன் திருமணத்துக்கு தயார்
நானும் என் மனைவியும் வேற்று
சாதி மொழி என்றுஅமைந்து விட்டது இதை அறிந்தஎன் நண்பர் ஒருவர் இதே போல் இருக்கும்
ஒரு தம்பதிகளுக்கு ஒருபெண் இருப்பதாகவும்
என் இரண்டாம் மகனுக்குப் பார்க்கலாம் என்று
கூறிவந்தனர் பெண்வீட்டார்நல்ல வசதி
உள்ளவர்கள் என்றும் திருமணம் முடிந்து மாப்பிள்ளையை வெளி நாட்டில் படிக்க
வைக் தயாரென்றும் கூறி என்னை வற்புறுத்திக் கேட்டனர் அப்போது நான் என் இரண்டாம் மகனுக்கு திருமணத்துக்குப் பார்க்கவில்லை
என்று கூறி தவிர்த்து வந்தேன் இருந்தாலும்
உற்ற நண்பரின் மனம்நோகக் கூடாது என்று பெண் வீட்டாரை சந்திக்க ஒப்புதல் கொடுத்தேன்
இதை வெறும் சாதாரண விசிட் என்றும் கூறினேன் இருந்தும் நாங்கள் நானும் மனைவியும் போனபோது தடபுடல் செய்துவிட்டார்கள் பெண்பார்க்கும்
படலமாகவே நினைத்தார்கள் பெண்ணைப்பார்த்தபோது மிகவும் சின்ன
வயதுப்பெண்ணாகத்தெரிந்தாள் பதினைந்து வயதே ஆகி இருந்தது ஆனால் பெரிய சரீரம் பத்தாவது
கூட கரெஸ்பாண்டெண்டில் படித்து வந்தாள்
வேண்டாமென்பதை பக்குவமாகக் கூறினேன் பதினெட்டு வயதுக்கு முன் திருமணம் சட்டப்படி தவறு என்று கூறினேன் என்நண்பருக்கு மிகவும் வருத்தம் எந்த அளவுக்கு என்றால் அவனது திருமணம் நடந்த போது
அதற்கு அவர்கள் வரவில்லை…..! நான் விருப்பஓய்வு பெற்று வந்தபோது ஒரு முறை பேரூந்தில்
ஒருபெண்ணைபார்த்து அவளை என் இரண்டாம்மகனுக்கு மணம் பேச பின் தொடர்ந்து சென்றதும் இப்போது நினைவுக்கு வருகிறது இரண்டாமவனுக்கும் ஒருநண்பர் மூலமே மணப் பேச்சு வார்த்தை நடந்தது
இங்கும் ஜாதகப்பொருத்தம் பார்க்க வேண்டும் என்றார்கள் எனக்கு ஆட்சேபணை
இருக்கவில்லை இரண்டு மூன்று
தினங்களுக்குப் பின் ஜாதகம் பொருந்த வில்லை என்று கூறினார்கள் அதற்குப்பின் வேறு ஒரு சோதிடரிடம் காட்டி இருக்கிறார்கள்
நல்லபொருத்தம் என்று கூறி மறுபடியும் வந்தார்கள் ஒரு நாள் பெண்ணைப்பார்க்க அவர்கள் வீட்டுக்குச்சென்றேன் பெற்றோர் இருக்கவில்லைபெண்மட்டும் இருந்தாள்
அவ்ள் நாங்கள் யாரென்று யூகித்து விட்டாள் என்வீட்டுக்கு வர அழைப்பு விடுத்தேன் என்மகன்
டெல்லிக்குச் சென்றிருந்தான் என்
மூத்த மகனது திருமண வீடியோவைக் காட்டி
அதன் மூலம் என் இரண்டாம் மகனைப்பற்றிதெரிய
வைத்தேன்
பிற்கென்ன ஜாம்ஜாமென்று திருமணம்நடந்து
24 ஆண்டுகள் ஆயிற்று இது வரை கூறியது பெண்பார்க்கும் படலங்கள் என்வீட்டு
சமாச்சாரம் இப்போதுஎன் பேரன் அவனுக்கு
அவனே பெண்பார்த்துவிட்டான் பெற்றோர்களும்
ஓக்கே கொடுத்து விட்டனர்