விநாயகச் சதுர்த்தி
---------------------------------
விநாயக சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்படுகிறது இதை ஒட்டி நான்
எழுதும்பதிவு இது முதலில் தமிழ்நாட்டில் விநாயகருக்கு விழா என்பதெல்லாம் முன்பு
அவரவர் வீட்டில் மட்டுமே நடக்கும் ஆனால்
ஊருடன் ஒட்டி வாழ்வது நமக்குப் பிடிக்குமே
இப்போது எல்லாம் வீட்டில் வணங்குவதுடன்
அது ஒரு கம்யூனிடி விழாவாகவும் விளங்குகிறது
இந்திய தேச விடுதலையில் விநாயகருக்கு ஒரு பங்கு உண்டு பாம்பேயில்
அரசியல் கூட்டங்களுக்கு மக்களை வரவழைப்பதில்
விநாயகரை கூட்டு சேர்த்துக் கொண்டார்கள் விநாயகர் விழாவென்றால் மக்கள் கூடுவார்கள் அப்போது அரசியலும் போதிக்கப்பட்டது
தமிழ்நட்டில் விநாயகரை வழிபடுவது ஔவையாரால் தொடங்கப்பட்டது
என்று நினைக்கிறேன் அதாவது பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு என்று தோன்றுகிறது ஔவையாரின் காலம் அது
பரஞ்சோதி என்னும்படைத்தலைவன் வாதாபியில் புலகேசியை வென்று அங்கிருந்த விநாயகர்
சிலையை கொண்டு வந்ததாகப் படித்த நினைவு அது
ஏழாம் நூற்றாண்டு என்பதும் நினைவு
கண்பதி என்றும் அழைக்கப்படும் விநாயகர்கதைகள் ஏராளம் ஒவ்வொரு
கதையும் எதை ஏற்பதுஎதை விடுவது என்று அறிய
விடாமல் குழப்பம்வருவிக்கும் அறிந்துஆகப்போவது என்ன எல்லாம் ஏதோ நம்பிக்கைதானே நம்பிகை உடையவருக்கு தும்பிக்கையான் துணை என்பார்கள்
சிலகோவில்களில் இருக்கும் விநாயகர்களுக்கு
சக்திஅதிகம் என்பர்கள் அது எப்படி என்பது
விளங்காதது பிள்ளயார்பட்டி விநாயகர் திருச்சி உச்சி பிள்ளையார் கோவில் மங்களூர்
போகும்பாதையில் இருக்கும் இடுகுஞ்சி விநாயகர் மும்பை சித்தி விநாயகர் கோவில்
கோலாரருகே இருக்கும் காணிப்பாக்கம் விநாயகர்
இவர்களெல்லாம் சக்தி வாய்ந்தவர்களென
நம்பப்படுகிற தெய்வங்கள் சில விநாயகர்களுக் மட்டை உரிக்காத தேங்காய்களை சார்த்துவார்கள்
விநாயகர் வழிபாடு மிகவும் எளிதானது கேட்டதும்
அருள்பவர் எனலாம் பேரம்பேச ஏற்ற
கடவுள் பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்- கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீஎனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா
எத்தனை எளிது…..! பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிது எந்தசெயலைச்செய்வதஏற்கும் பிள்ளையாரின் அனுக்கிரகம் கோரவேண்டும் என்பது நம்பிக்கை அம்மையப்பனும் விதி விலக்கல்ல
விநாயகரை வணங்காதுதிரிபுரம் எரிக்கச் சென்ற இறவனுடைய தேர் அச்சு முறிந்த இடம் (அச்சு +இறு +பாக்கம் )ஆதலின் அச்சிரப்பாக்கம்பெயர் பெற்றது இறைவன் இத்தலத்தில் விநாயகரிடம் அருள் பெற்று தொடர்ந்து சென்று திருவதிகையில் அசுரரை (திரிபுராதிகளை ) வென்றதாக வரலாறு
விநாயகர் வழிபாட்டில் களிமண்ணால் ஆன பெரிய
சிலைகளை நிறுவி பூஜை செய்து விசர்ஜனம்செய்வது வழக்கம் ப்ளாஸ்டர்
ஆஃப் பாரிஸில் செய்யும் சிலைகள்
தடை செய்யப்பட்டுள்ளது சுற்று சூழல் பாதிப்பே
காரணம் பெங்களூரில் விநாயகர் பலநாட்கள் வழிபடப்படுகிறார் இன்று சதுர்த்தி ஆனாலும் .
எங்கும் எப்படியும் வழிபடக் கூடிய
தெய்வம்கணபதி அரசமரத்தடியிலும் கூரை ஏதுமின்றியும்
அருள் பாலிப்பவர் விநாயகர் வெறுமே மஞ்சளைப் பிடித்து விநாயகராகபாவித்தும்வழிபடலாம் எளிய முறையில்
விநாயகர் சிலை செய்யும்விதம் காணொளியில்
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாக கொண்டாடுவது பிள்ளையார் சதுர்த்தி.
பதிலளிநீக்குஅனைவருக்கும் "கொழுக்கட்டை தின" வாழ்த்துகள்!!!
அன்று கொழுக்கட்டைதினமாகவே கொண்டாடபடுவதால் இப்படி வாழ்த்தா
நீக்குவிநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் ஐயா
பதிலளிநீக்குதெலுங்கில் சொன்ன பிள்ளையார் செய்முறை காணொளி கண்டு ரசித்தேன்
இப்போதெல்லாம் விநாயகர் வழிபாடு ஒரு கூட்டு வழிபாடாகி விட்டது எக்செப்ட் வீட்டில் கொழுக்கட்டை செய்வது தவிர
நீக்குஎளிய முறையில் வழிபடலாம் ஐயா.
பதிலளிநீக்குஆமாம்
நீக்குவிநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவாழ்த்துகளோடு நின்று விட்டீர்களே
நீக்குபிள்ளை-யார் தின வாழ்த்துகள்...
பதிலளிநீக்குநன்றி
நீக்குஆர்ப்பாட்டம் இல்லாத கொண்டாட்டம் நன்று.
பதிலளிநீக்குபிள்ளையார் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
பிள்ளையார் சதுர்த்தி என்றால் சினிமாப்பாட்டு வாத்திய சத்தங்களும் காதை பிளக்கும் இங்கெல்லாம் வசூல் வேட்டை வேறு இருக்கும் ஆனால் கொஞ்சம் கொஞ்சமாய் குறைகிறது
பதிலளிநீக்குபண்டிகைகள் கொண்டாட்டங்கள் ஏதோவொரு வழியில் நம்மை ஒவ்வொரு சமயத்திலும் உற்சாகப்படுத்துகின்றது.
பதிலளிநீக்குஅகில உலகிலும் ஏதாவது விழாக்கள் இருந்தே உள்ளது
நீக்குவிநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள். நடுநடுவே இப்படியான விழாக்கள் வருவது நல்லது.
பதிலளிநீக்குஆண்டு முழுவதும் ஏதாவது விழாக்கள் இருக்கின்றனவே
நீக்குசங்க காலம் அதற்கு முன்னர் தொல்காப்பியர் ஆகியோரெல்லாம் விநாயகர் பற்றி எழுதி இருக்கின்றனர். இப்போ தேடி எடுத்துப் போட நேரமில்லை. மேலும் திருநாவுக்கரசர் மேல் சமணர்கள் யானைகளை ஏவி விட்டபோது அவர் விநாயகரைத் துதித்தே அதிலிருந்து மீண்டார். பரஞ்சோதி எல்லாம் நாவுக்கரசருக்குப் பின்னர் வந்தவர். அவர் வாதாபியிலிருந்து பிள்ளையார் விக்ரஹம் கொண்டு வந்ததால் தான் விநாயகர் வழிபாடு பிரபலம் என்னும் செய்தியில் ஆதாரம் ஏதும் இல்லை. அதன் முன்னரே பிள்ளையார்பட்டிக் கற்பக விநாயகர் முற்காலப் பாண்டிய மன்னர்களால் குடவரைக்கோயிலில் எழுந்தருள வைக்கப்பட்டார்.
பதிலளிநீக்கு/சிறுத்தொண்டர் என்னும் பரஞ்சோதியார் நரசிம்மவர்மப் பல்லவனின் படைத்தலைவராகப் படையுடன் சென்று சாளுக்கிய மன்னனின் வாதாபி என்னும் தொன்னகரைத் துகளாக்கி, அங்கிருந்த கணபதியைக் கொண்டு வந்து தாம் வழிபட்ட திருச்செங்காட்டங்குடியில் நிறுவினார். இவருக்கு வாதாபி கணபதி என்று பெயர்.[6] கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து, கி.பி.இரண்டாம் நூற்றாண்டு வரை வந்த சங்ககால தமிழ் இலக்கியம் , அகழ்வாராய்ச்சி ,கல்வெட்டு இவைகள் எவற்றிலும் இந்த கணபதி தமிழகத்தில் வழிபாட்டில் இருந்ததாக குறிப்பிடப்படவில்லை. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் வட்டெழுத்துப் பொறிப்புகளுடன் விநாயகர் சிலை திண்டிவனத்தருகே ஆலகிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.[7]/ என் தேடல் இதிலிருந்தே இருப்பினும் நீங்கள் சொல்வதையும் ஏற்கிறேன்
பதிலளிநீக்குநேற்றுக் கூட இதைப்பற்றிப் படித்தேன். என்னால் இப்போது ஆதாரங்கள் தர முடியாத சூழ்நிலை. தேடணும். மற்றபடி சங்ககாலங்களிலும் அதற்கு முன்னரும் கணபதி வழிபாடு தமிழகத்தில் இருந்துள்ளது. நாவுக்கரசர் பரஞ்சோதிக்கு மூத்தவர். அவர் விநாயகரை வணங்கியே தன் தொல்லைகளில் இருந்து விடுபட்டார். தேவாரம் தேடிப் போடுகிறேன்.
நீக்கு, பிள்ளையார்பட்டி கோயிலின் காலம் 5ம் நூற்றாண்டு என்ற தொல்லியல் தகவலும், உத்திரமேரூர் மற்றும் வேளச்சேரி புடைப்புச் சிற்பங்களின் தொன்மையும், மேலும் திருமூலர், அப்பர் போன்றவர்களின் பாடல்களும் கணபதியின் தொன்மையை விளங்கச் செய்யும். மேலும் ஔவையாரை மறந்துட்டீங்களே? ஔவையாருக்கு விநாயகர் தான் பிடித்த கடவுள். விநாயகர் அகவல் அவரால் தான் எழுதப்பட்டது.
நீக்குதிருமுருகாற்றுப்படை, நேரிசை வெண்பாவில் ஏழாம் வெண்பாவில் ஒருகைமுகன் தம்பி என முருகன் அழைக்கப்படுகிறார். விரைவில் சங்ககாலப்பாடல்கள், தொல்காப்பியம், நாவுக்கரசரின் தேவாரப் பதிகம் ஆகியவற்றைத் தேடி எடுத்துப் போடுகிறேன்.
நீக்குஒளவையார் எனும் பெயரில்பலரிருந்ததாகத் தகவல் அகவல் எழுதியதாகக் குதப்படும் ஒளவையாரின் காலம்பத்தாம் நூற்றாண்டு என்று கூறப்படுகிறது
நீக்குபம்பு கடித்து பினுயிர்ப்பிகப்பட்ட சிறுதொண்டர்தான் பரஞ்சோதியா அவர் காலமும் அப்பரின்காலமும் ஒன்றாயிருக்க வேண்டும்
நீக்குஅதுசரி எப்போது விநாயகர் வழிபாடு துவங்கினால் என்ன ஆர் பெயரைச்சொல்லி கொழுக்கட்டை கிடைக்கிறதே
நீக்குஅந்தக் காலத்தில் களிமண் பிள்ளையார் ஃப்ரெஸாக செய்து கும்பிட்டுவிட்டு அடுத்த நாள் கிணற்றில் போடுவாங்க. சிறுவர்களுக்கு ஒரு கொண்டாட்டமான விசயம் பிள்ளையாரை கிணற்றில் போடுவது. இப்போ எல்லாம் பெரிய பெரிய பிள்ளயாரை (வண்ணசிலைகள்) வச்சு ஊர்வலம் போவதாக சொல்றாங்க. ஒருவேளை இப்போ எல்லாம் எங்கும் தண்ணீர் பஞ்சம் ஆகிவிட்டதால் கிணற்றில் தண்ணி இல்லாததால் இந்த மாதிரி வணங்குவதை மாற்றிக் கொண்டாங்களானு தெரியவில்லை.
பதிலளிநீக்குஇங்கும் சில இடங்களில் வீட்டில் கும்பிடும் பில்லையாரை கரைக்க ட்ரம்களில் நீர் கொண்டு வருகிறார்கள் கிணறுகள்தான் இல்லாமல் போய் விட்டதே
நீக்கு*** சிலகோவில்களில் இருக்கும் விநாயகர்களுக்கு சக்திஅதிகம் என்பர்கள் ***
பதிலளிநீக்குஹா ஹா ஹா! எல்லாம் பக்தனின் நம்பிக்கையைப் பொறுத்து கூட்டிக்கலாம் குறைத்துக்கலாம்! :)
சில நம்பிக்கையாளர் கள்கேள்வி கேட்பதை விரும்புவதில்லை
நீக்குவிநாயக சதுர்தி வாழ்துகள்.
பதிலளிநீக்குஎங்கள் குலதெய்வமும் சித்தி விநாயகர்தான்.
வாழ்த்துகளுக்கு நன்றி
பதிலளிநீக்கு