விநாயகர் வழிபாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விநாயகர் வழிபாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 2 செப்டம்பர், 2019

விநாயக சதுர்த்தி




                                                   விநாயகச் சதுர்த்தி
                                                    ---------------------------------

 
விநாயக சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்படுகிறது இதை ஒட்டி நான் எழுதும்பதிவு இது முதலில் தமிழ்நாட்டில் விநாயகருக்கு விழா என்பதெல்லாம் முன்பு அவரவர் வீட்டில் மட்டுமே நடக்கும்   ஆனால் ஊருடன்  ஒட்டி வாழ்வது நமக்குப் பிடிக்குமே இப்போது எல்லாம்  வீட்டில் வணங்குவதுடன் அது  ஒரு கம்யூனிடி விழாவாகவும்   விளங்குகிறது
இந்திய தேச விடுதலையில் விநாயகருக்கு ஒரு பங்கு உண்டு பாம்பேயில் அரசியல் கூட்டங்களுக்கு மக்களை வரவழைப்பதில்  விநாயகரை கூட்டு சேர்த்துக் கொண்டார்கள் விநாயகர் விழாவென்றால் மக்கள்  கூடுவார்கள் அப்போது அரசியலும் போதிக்கப்பட்டது
தமிழ்நட்டில் விநாயகரை வழிபடுவது ஔவையாரால் தொடங்கப்பட்டது என்று  நினைக்கிறேன்   அதாவது பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு  என்று தோன்றுகிறது ஔவையாரின் காலம் அது பரஞ்சோதி என்னும்படைத்தலைவன் வாதாபியில் புலகேசியை வென்று அங்கிருந்த விநாயகர் சிலையை  கொண்டு வந்ததாகப் படித்த நினைவு அது ஏழாம் நூற்றாண்டு என்பதும் நினைவு
           
கண்பதி என்றும் அழைக்கப்படும் விநாயகர்கதைகள் ஏராளம் ஒவ்வொரு கதையும்  எதை ஏற்பதுஎதை விடுவது என்று அறிய விடாமல் குழப்பம்வருவிக்கும் அறிந்துஆகப்போவது என்ன  எல்லாம் ஏதோ நம்பிக்கைதானே  நம்பிகை உடையவருக்கு தும்பிக்கையான் துணை  என்பார்கள்
 சிலகோவில்களில் இருக்கும் விநாயகர்களுக்கு சக்திஅதிகம் என்பர்கள்  அது எப்படி என்பது விளங்காதது  பிள்ளயார்பட்டி விநாயகர்  திருச்சி உச்சி பிள்ளையார் கோவில் மங்களூர் போகும்பாதையில் இருக்கும் இடுகுஞ்சி விநாயகர் மும்பை சித்தி விநாயகர் கோவில் கோலாரருகே இருக்கும் காணிப்பாக்கம் விநாயகர்  இவர்களெல்லாம்   சக்தி வாய்ந்தவர்களென நம்பப்படுகிற தெய்வங்கள் சில விநாயகர்களுக் மட்டை உரிக்காத தேங்காய்களை சார்த்துவார்கள்
 விநாயகர் வழிபாடு மிகவும் எளிதானது கேட்டதும் அருள்பவர் எனலாம்  பேரம்பேச ஏற்ற கடவுள்  பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்- கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீஎனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா
எத்தனை எளிது…..! பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிது  எந்தசெயலைச்செய்வதஏற்கும்  பிள்ளையாரின் அனுக்கிரகம்  கோரவேண்டும் என்பது நம்பிக்கை அம்மையப்பனும்  விதி விலக்கல்ல
விநாயகரை வணங்காதுதிரிபுரம் எரிக்கச் சென்ற இறவனுடைய  தேர் அச்சு முறிந்த இடம் (அச்சு +இறு +பாக்கம் )ஆதலின்  அச்சிரப்பாக்கம்பெயர் பெற்றது இறைவன் இத்தலத்தில் விநாயகரிடம் அருள் பெற்று  தொடர்ந்து சென்று திருவதிகையில் அசுரரை (திரிபுராதிகளை ) வென்றதாக வரலாறு   
  விநாயகர் வழிபாட்டில் களிமண்ணால் ஆன பெரிய சிலைகளை நிறுவி பூஜை செய்து விசர்ஜனம்செய்வது வழக்கம்  ப்ளாஸ்டர்  ஆஃப் பாரிஸில்  செய்யும் சிலைகள் தடை செய்யப்பட்டுள்ளது  சுற்று சூழல் பாதிப்பே காரணம் பெங்களூரில் விநாயகர் பலநாட்கள் வழிபடப்படுகிறார்  இன்று சதுர்த்தி ஆனாலும் .

 எங்கும் எப்படியும் வழிபடக் கூடிய
 தெய்வம்கணபதி அரசமரத்தடியிலும் கூரை ஏதுமின்றியும் அருள் பாலிப்பவர் விநாயகர் வெறுமே மஞ்சளைப் பிடித்து  விநாயகராகபாவித்தும்வழிபடலாம் எளிய முறையில் விநாயகர் சிலை செய்யும்விதம் காணொளியில்