சனி, 7 செப்டம்பர், 2019

மஹாபாரதக் கதைகள்



                                      சிசுபாலன்
                                     -------------------

மஹாபாரதக் கtதைகள் பற்றி எழுதி வந்திருக்கிறேன் ஜராசந்தன் ஜயத்ரதன்  சந்தனு ராஜா பொன்றவை அடங்கும் அண்மையில் ருக்மிணி கல்யாணம் பற்றி  எழுதி இருந்தேன்   அதில் ஒரு பின்னூட்டம்   சிசுபாலன்பற்றிக்கேட்டு இருந்தது  ஆகவே இப்போது சிசுபாலன் கதை
 சேதிநாட்டில் மன்னனின்  ம்கனாகப் பிறந்தவன்  சிசுபாலன்   பிறக்கும் போதே நான்குகரங்களுடனும் மூன்றுகண்களுடனும்பிறந்தவன்  சிசுபாலன் தாய் இப்பிறவிகண்டுவருந்தி அழுதாள் அப்போது ஒரு அசரீரி யா மடியில்வைக்கும்போதுஇக்குழந்தையின் வேண்டாத உறுப்புகள் மறைகிறதோ அவராலேயே இப்பிறவியின் மரணமும் சம்பவிக்குமென்று கூறியதுபிறந்த குழந்தையைக் காணவும்   ஆசி வழங்கவும்   பலரும்வந்திருந்தனர் அவர்களுள் துவாரகை மன்னன் கிருஷ்ணனும் இருந்தார் கண்ணனின்  மடியில் குழந்தையைக் கிடத்தியதும் வேண்டாத உறுப்புகள் மறைந்தன  சிசுபாலனின் தாய் கண்ணனிடம் அசரீரி பற்றிக் கூறி தன் பிள்ளையைக் கொல்லாதிருக்க வேண்டினாள்அதற்கு கண்ணன் சிசுபாலன் செய்யும் நூறு குற்றங்களை மன்னிப்பேன்  என்று உறுதி கூறினான்  சிசுபாலன் ஒரு விதத்தில்கிருஷ்ணனின் பங்காளி தன் நண்பன் ருக்மியின்  சகோதரி ருக்மிணியை திருமணம் செய்ய வந்தபோது அவளைக் கவர்ந்து சென்று மணம் முடித்தகிருஷ்ணனிடம் பகை கொண்டவன் 
 கிருஷ்ணனின்  ஆலோசனைப்படி இந்திரப் பிரஸ்தத்தில் ஒரு ராஜ சூய யாகம்செய்து தன்னை  பிரகடனப்படுத்த விரும்பிய தர்மன் பீஷ்மரின்  ஆலோசனைப்படி கிருஷ்ணனுக்கு முதல் மரியாதைசெய்ய விரும்பினான்அநேக அரசர்கள் அழைக்கப்பட்டிருந்தனர் அவர்களில் துரியோதனதியருடன் சிசுபாலனும் அழைக்கப்பட்டிருந்தான் சிசுபாலனின் பரம எதிரியாகக கருதப்பட்டகிருஷ்ணனுக்கு முதல் மரியாதைஎன்பதை சிசுபாலனால்  ஏற்கமுடியவில்லை ஆன்றோர் பலர் இருக்கும்போது இடையன் கிருஷ்ணனுக்கு மரியாதையா  பீஷ்மர் தவறு செய்தாலும் உங்களால் எப்படி ஒரு இடையனுக்கு மரியாதை செய்ய ஒப்பமுடிந்தது என்று எல்லோரிடமும் கூறிஅவர்களைத் தன்பக்கம் இழுக்கமுற்பட்டான்
 சிசுபாலன் தன் அதிருப்தியைக் காட்ட கண்ணனை பலவாறு இகழ்ந்தான். ஆத்திரத்தில் பீஷ்மர் மற்றும் தர்மரின்மனதைப் புண்படுத்தினான். . கங்கை மைந்தன் பீஷ்மரை வேசிமகன் என்று ஏசினான். (கங்கையில் பலரும் நீராடுவதால் கங்கையை பொதுமகள் என்று ஏசினான்) சிசுபாலனின் அவமானங்களை பொறுத்துக்கொண்டிருந்த கண்ணன் அவனது குற்றங்க்சள்வரம்பு மீறுவது தெரிந்து ஒரு கட்டத்தில் அவனின் மரணம் நெருங்கி வருவதையும் உணர்ந்து அவன் மீது சக்கராயுதத்தைசெலுத்தினார். அது சிசுபாலனின் தலையை உடலிலிருந்து அறுத்தெறிந்தது இப்படியாகத்தானே  சிசுபாலன் வதம் நிகழ்ந்தது
மஹாபாரதக் கதைகளில்ஜராசந்தன்  ஜயத்ரதன்  கதைகளுக்கு சுட்டி கொடுத்திருக்கிறேன் படித்துப்பாருங்களேன்    




 

19 கருத்துகள்:

  1. படித்திருக்கிறேன். மீண்டும் படித்தேன்.  நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிசுபாலன் பற்றி வேறெங்காவது படித்திருக்கலாம் சிசுபாலன்பற்றி இதுவே என் முதல் பதிவு வருகைக்கு நன்றி ஸ்ரீ

      நீக்கு
  2. அவையடக்கம் இல்லாதோர்க்கு சிசுபாலன் நல்ல உதாரணம்...

    பதிலளிநீக்கு
  3. சிசுபாலன்..இன்று ஒரு புதிய பாடம் கற்றோம் ஐயா.

    பதிலளிநீக்கு
  4. சிசுபாலன் பற்றி அறிந்துகொள்ள உதவியமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிசுபாஅன் கதையை இன்னும் விரிவாகச்சொல்லீருக்கலாமோ என்றும் தோன்றுகிறது

      நீக்கு
  5. சுருக்கமாயும் தெளிவாயும் எழுதி இருக்கிறீர்கள். சிசுபாலனும் அவன் தம்பி தந்தவக்ரனும் திருமாலால் வதைக்கப்பட்ட மூன்று சகோதரர்களுள் இருவர் ; மற்றவர் இரண்யகசிபு - இரண்யாட்ஷன்,இராவணன் - கும்பகர்ணன் . இவர்கள் முன்பு திருமாலின் காவலர்களாய் இருந்த ஜயன் - விஜயன் என்பவர்களின் அடுத்தடுத்த பிறவிகள் .
    ஆயர்பாடியில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த கண்ணன் எவ்வாறு துவாரகை மன்னன் ஆனான் என்பதைத் தெரிவிக்கக் கோருகிறேன் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் எதையாவது சொல்லி மாட்டிக் கொள்ளகூடாது இல்லையா இப்பதிவின் ஜராசந்தன் சுட்டியில்துவரகைக்குபோனதை கோடிகாட்டி இருக்கிறேன்

      நீக்கு
  6. படித்த கதை.... உங்கள் தளம் வழி மீண்டும் படிக்கக் கிடைத்ததில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  7. என் தளத்தில் நான் எழுதுவது இதுவே முதல் தடவை

    பதிலளிநீக்கு
  8. எனக்கு புதிய செய்தியே... நன்று.

    பதிலளிநீக்கு
  9. தெரிந்த கதை மீண்டும் படித்தேன்.உங்கள் பதிவு நன்றாக இருக்கிறது.

    சினிமாவில் ஆடு மேய்க்கும் கண்ணா வா வா கோபியர் கண்ணா வா வா என்று நடன மாதுகள் கேலி செய்து பாடுவார்கள். கண்ணின் கருணை பார்வையால் மீண்டும் நடன மாதுகள் கோகுலா கண்ணா வா வா என்று இகழ்ந்த வாயை புகழ்ந்து பாட வைத்தாயே! என்று பாடுவார்கள். முன்பு கிருஷ்ண ஜெயந்தி சமயம் அந்த பாடலை வானொலியில் வைப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  10. இது சிசுபாலனின் கதை கிருஷ்ணர் ஒரு பாத்திரம் மட்டுமே

    பதிலளிநீக்கு
  11. சிசுபாலன் தான் அந்த படத்தில் கிருஷ்ண்ரை அவமான படுத்த சொல்லுவார் நடன் மாதுக்களை.

    பதிலளிநீக்கு
  12. நான் அந்தப்படம் பார்த்ததில்லை

    பதிலளிநீக்கு
  13. தெரிந்தகதை மீண்டும் உங்கள்பகிர்வில் மனதில் நிற்கிறது.

    பதிலளிநீக்கு