Monday, September 9, 2019

இலக்கியம்துன்பம்                                            இலக்கியம் துன்பம்
                                           --------------------------------


எனக்கு  அடிக்கடி எழும் சந்தேகம்  தமிழ் மொழி பற்றிய என்  அiறிவு பற்றியதே 
பண்டைக் காலத்தில் பாண்டிய நாடு  பன்னீரியாண்டு வற்கடஞ் சென்றது. செல்ல பசிகடுகுதலும், அரசன் சிட்டரை எல்லாங் கூவி , வம்மின் யான் உங்களைப் புறந்தரகில்லேன். நீவீர் நுமக்கறிந்தவாறு சென்று புக்கு, நாடு நாடாயின ஞான்று என்னையுள்ளி வம்மின் என்றான்,என அரசனைவிடுத்து எல்லோரும் போயின பின் கணக்கின்றி பன்னீரியாண்டு கழிந்தது. கழிந்த பின்னர் நாடு மலிய மழை பெய்தது பெய்தபின்னர் அரசன் நாடு நாடாயிற்றாதலின் நூல் வல்லாரை கொணர்க என எல்லாப்பக்கமும் ஆட்போக்க,எழுத்ததிகாரமும் , சொல்லதிகாரமும் , யாப்பதிகாரமும் வல்லாரை கொணர்மின்
. “இதற்குமேல் எதுவும்நினைவுக்கு வரவிலை  மேலே எழுதி இருப்பது யாருக்காவது நினைவுக்கு  வருகிறதா
 சரி நினைவுக்கு வந்தால் மட்டுமே தமிழறிவு இருப்பதாகக் கொள்ளலாமா  இந்த உரைநடை நக்கீரனார் எழுதியது என்று படித்ததாக நினைவு. இப்போது அதன் முழு பகுதியையும் படிக்கும் ஆவலில் கணினியின் உதவியுடன் உலா வந்தேன். மேலும் சில விவரங்கள் படித்தேன். படித்தபிறகு ஒரு முடிவுக்கு வந்தேன், எனக்குத் தமிழ் தெரியவில்லை என்பதுதான் அது.

சொல்லதிகாரம், எழுத்ததிகாரம், யாப்பதிகாரம் இவற்றில் வல்லவர்கள் திரும்ப வந்தனர் என்றும் முக்கியமாக பொருளதிகாரம் வல்லார் எவரும் கிடைக்கவில்லை என்றும் அரசன் அறிந்து வருந்தியபோது மதுரை ஆலவாயிற்கடவுள் அரசனுக்குதவ அறுபது சூத்திரங்களை
  செப்புப் பட்டயத்தில் எழுதி பீடத்தின் அடியில் இட.அடுத்த நாள் தேவர் குலம் வழிபடுவோன் தேவர் கோட்டத்தை எங்குந்துடைத்து நீர் தெளித்துப் பூவிட்டு எங்கும் அலகிட்டான். இட்டாற்கு அவ்வலகினொடு இதழ் போந்தன.போதரக் கொண்டு போந்து நோக்கினார்க்கு வாய்ப்புடைத்தாயிற்றோர் பொருளதிகாரமாய்க் காட்டிற்று. காட்ட பிரமன் சிந்திப்பான்.அரசன் பொருளதிகாரம் இன்றிக் கவல்கின்றான். என்பது கேட்டுச் செல்லா நின்றது உணர்ந்துநம் பெருமான் அருளிச் செய்தானாகும் எனதன் அகம் புகுதாதே, கோயில் தலைக்கடை சென்று நின்று கடைக்காப்பர்க்கு உணர்த்த கடைக் காப்பர் அரசர்க்கு உணர்த்தஅரசன் புகுதுக எனப் பிரமனைக் கூவசென்று புக்குக் காட்ட ஏற்றுக்கொண்டு நோக்கிப் பொருளதிகாரம் ! இது நம் பெருமான் நம் இடுக்கண் கண்டு அருளிச் செய்தானகற்பாலது ! என்று வணங்கி சங்கத்தாரிடம் அதற்குப் பொருள் கூறு மாறு ஏவினான்  இதைப்படித்தபோது கொஞ்சூண்டு மனம் மகிழ்ந்தது
 தமிழ் உரை நடைக்கு பொருள்தெரியாதோ அக்காலத்திலும் இருந்தனர்  எக்காலத்திலுமிருப்பர்
 அகப் பொருள் பற்றிய இலக்கண நூல்களில் தொல்காப்பியத்துக்குப்பிறகு தோன்றிய சிறப்பு மிக்க நூல்  இறையனார் அகப் பொருள். இந்நூலுக்கு உரை பல சங்க காலப் புலவர்கள் எழுதினராம் மாதிரிக்கு ஒன்று.

அம்பலும் அலரும் களவு என்பது இறையனார் களவியலில் உள்ள 22-ம் நூற்பா. இதனை நக்கீரனார் உரை இவ்வாறு விளக்குகிறதாம் 

    அம்பல் என்பது முகிழ்முகிழ்த்தல்,
        
அலர் என்பது சொல் நிகழ்தல்;
        
அம்பல் என்பது சொல் நிகழ்தல்,
        
அலர் என்பது இல் அறிதல்;
        
அம்பல் என்பது இல் அறிதல்,
        
அலர் என்பது அயல் அறிதல்;
        
அம்பல் என்பது அயல் அறிதல்,
        
அலர் என்பது சேரி அறிதல்;
        
அம்பல் என்பது சேரி அறிதல்,
        
அலர் என்பது ஊர் அறிதல்;
        
அம்பல் என்பது ஊர் அறிதல்,
        
அலர் என்பது நாடு அறிதல்;
        
அம்பல் என்பது நாடு அறிதல்,
        
அலர் என்பது தேசம் அறிதல்.
இதையெல்லாம்படித்தும் எனக்கு ஏதும்விளங்கவில்லை  ஒரு வேளை ஊமைக்கனவுகள் விஜூவுக்கு தெரியலாம் அவர் சங்க காலத்தமிழைக்கரைத்துகுடித்தவர் போல் எனக்கு தொன்றும் ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறு பதம்போல் தான் என்வாக்கு மூலமுமிருக்கும்

இருந்தால் என்ன ? இதனை படிக்கும் பலரும் இந்த முடிவுக்குத்தான் வருவீர்கள் என்று எண்ணுகிறேன். ஆனால் ‘உன்னை வைத்து மற்றவரை எடை போடாதே ‘ என்று இன்னும் பலர் நினைக்கலாம்.
 ஒரு அரசனுக்கு ஒரு சந்தேகம் வந்ததாம்  அது மகளிர் கூந்தல் இயற்கையிலேயே வாசமுடையதா இல்லை செயற்கையாகவாசம்வரச் செய்கிறர்களா
  அதற்கு பதிலாக தருமி என்னும் புலவர் மூலம்  சிவனார் ஒரு பதில்கொடுத்தாராம்
 கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின்மயிலியற்
செறியெயிற் றருவை கூந்தலின்
நறியவுமுளவோ நீயறியும் பூவே
குறுந்தொகை பாடல் 2
இதன்பொருளை கூகிள் தேடல் மூலம்படித்தறிந்தேன்
 பூந்தாதுக்களை ஆராய்ந்து தேன் உண்ணும் வண்டே! என்னிடத்துள்ள அன்பின் காரணமாகச் சொல்லாமல், உன் கண்ணால் கண்டபடி சொல்வாயாக. நீ அருந்திய மலரில், இந்தப் பெண்ணின் கூந்தலைப் போல நல்ல மணமுடைய மலர்களும் உளவோ? சொல்வாயாக.
இதில் பொருட்குற்றமும் சொற்குற்றமும் இருக்கிறது  என்று நக்கீரர்சொன்னாராம் சிவனார்க்கு கொபம் வந்ததாம்  குற்றமென்ன என்று கேட்பதற்கு முன் குற்றம்சொன்னவனை இகழ்கிறார்
அங்கங் குலைய அரிவாளி நெய் பூசிப்
பங்கம் படவிரண்டு கால்பரப்பிச் சங்கதனை
கீர் கீர் என அறுக்கும் கீரனோ என் கவியை
ஆராயும் உள்ளத்தவன்
பொருள்
எண்ணையைப் பூசிக்கொண்டு அங்கமே ஆடும்படி உடலை எல்லாம் குலுக்கி, கால்களைப் பரப்பி வைத்துக்கொண்டு சங்குகளை அறுத்து வளையல் செய்யும் நக்கீரனா என் பாட்டைக் குறை சொன்னான்?
இது கேட்டதும் நக்கீரனுக்கும் கோபம்வந்தது
சங்கறுப்பதெங்கள் குலம் சங்கரனார்க்கேது குலம்
பங்கமறச் சொன்னாற் பழுதாமோசங்கை
அரிந்துண்டு வாழ்வோம் அரனே நின்போல
இரந்துண்டு வாழ்வதில்லை
பொருள்:
ஏய்! சிவா! நாங்களாவது சங்குகளை அறுத்து வளையல் மோதிரம் செய்யும் வேளாப் பார்ப்பான் என்ற அந்தண ஜாதியைச் சேர்ந்தவர்கள்; உனக்கோ குலம் கோத்திரம் ஏதுமில்லை
நாங்களாவது சங்குகளை அறுத்து அதை விற்று வாழ்க்கை நடத்துகிறோம்; உன்னைப் போல பிச்சை எடுத்து வாழவில்லையே.
ஒரு சந்தேகத்துக்கு விடை கிடைக்காமல் ஒருவர் பற்றி மற்றவர்  குறை கூறலே நிகழ்ந்தது
 வலிமை மிக்க சிவனார் சபித்து நக்கீரன் சாம்பலானான் என்பதே கதை  
20 comments:

 1. சிறு வயதில் பள்ளியில் படித்த போது மிகவும் இனிமையாக இருந்தது அதுமட்டுமல்லாமல் கோனார் நோட்ஸ் மூலம் புரியாத பகுதிக்கு விளக்கம் கிடைத்தது..ஆனால் இப்ப படித்தால் நிச்சயம் புரிவதில்லை என்பது உண்மைதான்.. விஜு அல்லது கிரேஸ் அவர்கள் எழுதி விளக்கம் சொன்னால்தான் புரியும்

  ReplyDelete
  Replies
  1. அவர்களுக்கு மட்டும் எப்படி புரிகிறது

   Delete
  2. அவர்கள் தமிழனுக்கு அமெரிக்காவிற்குச் சென்று பெசல் தமிழ் வகுப்பு எடுத்தவர்கள்.

   Delete
  3. இதற்காக அமேரிக்கா சென்றார்களா

   Delete
 2. படிக்கறப்பவே நாக்கு குளறுதே இதை டைப் அடிக்கறப்ப விரல்கள் வலிக்கலையா?

  ReplyDelete
  Replies
  1. ஐயாவின் ஐயம் எனக்கும்...

   Delete
  2. @டிபிஆர் எனக்கு சம்ஸ்கிருதம் படிக்கும் போதுதான் நாக்கு குளறும்டைப் அடிக்கும்போது அல்ல

   Delete
  3. !@கில்லர் ஜி எனக்கு த்மிழ் தெரிவதிலை என்பதில் ஐயம் இல்லை

   Delete
 3. பள்ளியில் தமிழாசிரியர் நடத்திய தமிழ் வகுப்பில் இருப்பதுபோலிருந்தது ஐயா.

  ReplyDelete
  Replies
  1. தமிழாசிரியர் பாடம் நடத்துவது புரிவதில்லை

   Delete
 4. ஏதேதோ சொல்லி இருக்கிறீங்க.. இலக்கணம் புரியவில்லை..

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் தமிழில் D அல்லவா

   Delete
 5. சிவாஜி, ஏ பி நாகராஜன் தயவில் கடைசி மூன்று பாடல்கள் தெரியும்.  மற்றவை கஷ்டம்தான்.  அப்போது உபயோகிக்கப் பட்ட பல தமிழ் வார்த்தைகளுக்கு இப்போது வேறு பொருள் கொள்கிறோம்.

  ReplyDelete
 6. எந்த விஷயமும் திரைப்படம்மூலம்கொண்டு செல்ல முடிகிறது

  ReplyDelete
 7. என்னைச் சிந்திக்கத் தூண்டிய பதிவிது
  அருமையான தகவல்

  ReplyDelete
 8. பல முறை சிந்தித்து எழுதியதுஇது

  ReplyDelete
 9. ***எண்ணையைப் பூசிக்கொண்டு அங்கமே ஆடும்படி உடலை எல்லாம் குலுக்கி, கால்களைப் பரப்பி வைத்துக்கொண்டு சங்குகளை அறுத்து வளையல் செய்யும் நக்கீரனா என் பாட்டைக் குறை சொன்னான்?***

  உழச்சுத்தான சம்பாரிக்கிறான் அவன்? இதில் என்ன இகழ்ச்சி இருக்கு?!!

  ஆக, நம்ம "தமிழ்க் கடவுளே" ஒருத்தன் குலத்தை/சாதியை சொல்லி இகழும் "மிக உயர்ந்த பண்பாளராக" இருக்கிறார். அவர் சிஷ்யர்களை கேக்கவா வேணும்? ஹா ஹா ஹா!

  ReplyDelete
 10. அதுவுமொரு பார்வை

  ReplyDelete
 11. பண்டைய தமிழ் புரிவது கடினந்தான் .

  ReplyDelete