ஞாயிறு, 22 மே, 2022

ராமானுஜனின் மாஜிக் எண்கள்

 



                       22         12         18          87

                       88          17          9          25

                       10          24          89        16

                       19          86          23         11    

மேலே உஉள்ள எண்கள் ஒவ்வொரு கட்டத்தில் இருப்பதாக பாவித்துக் கொள்ளுங்கள். (கட்டம் போட்டுக் காட்ட என் கணினி அறிவு போதவில்லை.) இது ஒரு மேஜிக் சதுரம். இதில் உள்ள  தனித்தன்மகிமை என்ன என்று புரிகிறதா. ? இது நம் கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் வடிவமைஅமைத்தது. அப்படி என்ன தனித் தன்மை என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா.?இதில் எந்த வரிசையிபக்கம் கூட்டினாலும் கூட்டுத்தொகை (இடமிருந்து வலம் அல்லது மேலிருந்து கீழ்.) 139 வரும்.

குறுக்கா எப்படிக் கூட்டினாலும் கூட்டுத்தொகை 139 வரும்.( 22+17+89+11 = 139
                                                    87+9+24+19  = 139

மூலைகளில் இருக்கும் எண்களைக் கூட்டினாலும் கூட்டுத் தொகை 139 வரும்.
                                                    22+87+11+19 =139
நடுவில் இருக்கும் நான்கு எண்களின் கூட்டுத்தொகை 139 (17+9+89+24 =139 )

மேல்வரிசை கீழ்வரிசைகளில் இருக்கும் இரண்டாவது மூன்றாவது எண்களின் கூட்டுத்தொகை 139 வரும் ( 12+18+86+23 = 139 )

மேலிருந்து கீழாக உள்ள வரிசைகளில்முத்ல் வரிசையின் இரண்டாம் மூன்றாம் எண்களும்  கடைசி வரிசையின் இரண்டாம் மூன்றாம் எண்களும் கூட்டினால் வரும் கூட்டுத்தொகை 139.( 88+10+25+16 =139 ) 

இதோ இன்னொரு கூட்டின் எண்ணிக்கை:
முதல் வரிசை இடமிருந்து வலம் இரண்டாவது எண்.
முதல் வரிசை மேலிருந்து கீழ் இரண்டாவது எண்
இடமிருந்து வலம் கடைசி வரிசை மூன்றாவது எண்
மேலிருந்து கீழ் கடைசி வரிசை மூன்றாவது எண்  இவற்றின் கூட்டுத்தொகை 139.
18+10+86+25=139
( 12+88+23+16 =139.

இன்னுமொரு காம்பினேஷன்
முதல் வரிசை இடமிருந்து வலம் மூன்றாவது எண்
முத்ல் வரிசை மேலிருந்து கீழ் மூன்றாவது எண்
இடமிருந்து வலம் கடைசி வரிசை இரண்டாவது எண்
மேலிருந்து கீழ் கடைசி வரிசை இரண்டாவது எண் இவற்றின் கூட்டுத்தொகை 139( 18+10+86+25 = 139 )



இந்த சதுரத்தை நான்கு சம சதுரங்களாகப் பிரித்தால் ஒவ்வொரு சிறிய சதுரங்களில் உள்ள எண்களின் கூட்டுத்தொகை 139
உ-ம் 22+12+88+17= 139
      18+87+9+25= 139
      10+24+19+86=139
      89+16+23+11= 139.

இன்னும் சில காம்பினேஷன்களை முயற்சி செய்து பாருங்கள்.

இதோ முத்தாய்ப்பாக ஒரு செய்தி. ஸ்ரீனிவாசன் ராமானுஜனின் பிறந்த நாள் உங்களுக்குத் தெரியுமா.? முதல் வரிசை எண்களைப் பாருங்கள். என்ன தெரிகிறது.?
22   12   18   87   விளங்க வில்லையா.?அவரது பிறந்த நாள் 22 -12 -1887......!
இந்திஇய்இந்தியனாய்இருப்பதில் பெருமை கொள்ளுங்கள்.


6 கருத்துகள்:

  1. சில கோணங்களில் கணக்கு சரியாக வராது...


    Perfect Magic Square பற்றி அறிய வேண்டுமா...? அதே போல் நம் பிறந்த நாளையும் கணக்கிட்டு பார்க்க வேண்டுமா...?

    சொடுக்குக : இணைப்பு :-

    மாயச்சதுரம்

    பதிலளிநீக்கு
  2. அதிலேயே அவர் பிறந்த நாள்..  அட..  அதை வைத்துதான் கணக்கை அமைத்திருப்பாரோ...

    பதிலளிநீக்கு
  3. அறிவு ஜீவி! எனக்கும் கணக்கிற்கும் வெகு தூரம் என்பதால் இது எல்லாமே பிரமிப்புதான்.

    இந்தச் சதுரம் பற்றி முன்பு எப்போதோ வாசித்த நினைவு ஆனால் அவர் பிறந்த நாள் வருவது புதிய தகவல்.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. எல்லாம் தெரியவேண்டியதில்லை

    பதிலளிநீக்கு