Wednesday, February 15, 2017

ஒரு மீள்பதிவும் காரண காரியங்களும்           ஒரு மீள்பதிவும்  காரணகாரியங்களும் 
           --------------------------------------------------------------   

                                                                                      கனவுக்கு நேரக் கணக்கு ஏதும் கிடையாது .அதிகாலையில் எழுந்திருக்கிறேன். என்ன ஆச்சரியம் .! நான் கட்டிலில் உறங்கிக் கொண்டிருக்கிறேன். என்னால் என்னையும் என் அருகில் படுத்திருந்த மனைவியையும் நன்றாகப் பார்க்க முடிந்தது. உருவமில்லாமல் நான் உயரே சஞ்சரிக்கிறேன். என்னை ஒரு குரல் கூப்பிடுகிறது. எனக்கு ஒரு முறை கனவில் கடவுளிடம் உரையாடிய அனுபவம் இருந்தது.
“ யார் என்னைக் கூப்பிடுவது.?கடவுளாயிருந்தால் முன்பு வந்தது போலென் முன்னே வா “ என்றேன்.
“ எங்கும் வியாபித்திருக்கும் நான் உன் முன்னே வந்தேனா.? என்ன உளறுகிறாய்.? ஏதாவது கனவு கண்டிருப்பாய். “
“ அதுபோல் இது கனவில்லையா.? குரல் மட்டும் கேட்கிறதே.
“ குரல் என்பது உனது பிரமை. உண்மையை உணர்ந்து கொள்ளாமல் நீயே என்னவோ நினைத்துக் கொள்கிறாய். உருவமே இல்லாத எனக்கு ஆயிரம் உருவங்களும் பெயர்களும் கொடுத்து உண்மை என்று நம்பும் கற்பனைத் திறன்தான் உங்களுக்கெல்லாம் இருக்கிறதே. “
“ சரி. உண்மைதான் என்ன.? “
“ உன் ஆழ்மனதில் , ஜீவாத்மா பரமாத்மாவிடம் ஐக்கியமாகத் துடிக்கிறது.உண்மை நிலையைப் புரிந்து கொள்ள மனம் விழைகிறது.
ஜீவாத்மா பரமாத்மா என்று ஏதோ புரியாமல் சொன்னால் எப்படி.?
“ பரமாத்மா என்பது எங்கும் வியாபித்திருக்கும் பிராண வாயு.ஜீவாத்மா என்பது ஒருவனை இயக்கும் பிராணவாயு..அது அவனை விட்டு வந்தால் பரமாத்மாவுடன் ஐக்கியமாகி விடும்.
“ அனாதி காலம் முதல் தேடிவரும் கேள்விக்கு மிக எளிதாகப் பதிலாக ஏதோ கூறுகிறாயே.
“ மக்கள் மத்தியில் ஒரு கதை உலாவுவது தெரியுமா.? ‘ அமாவாசை இரவில் ,விளக்கில்லா அறையில், கருப்புப் பூனையைத் தேடும் குருடன் போல ‘என்று. அதுபோல்தான் அவரவர் கற்பனைக்கு  ஏற்றபடி கதைகள் புனைகிறார்கள். “
“ கொஞ்சம் விளக்கமாகத் தெரியப் படுத்தலாமே.
“ ஒருவன் உயிரோடு இருக்கிறான் என்று எப்போது கூறுகிறாய்.? “
“ அவன் மூச்சு விட்டுக் கொண்டிருக்கும்போது.
“ அவன் மூச்சுவிட மறந்தால்.... தவறினால்... ?
“ இறந்தவனாகக் கருதப் படுவான்.
“ மூச்சு என்பது என்ன.?
“ சுவாசம். ஒருவன் காற்றை உள்ளிழுத்து வெளிவிடுவது சுவாசம். “
“ எந்தக் காற்றையும் உள்ளிழுத்து வெளி விட்டால் சுவாசிப்பதாகுமா.?
“ இல்லை. ஆகாது. காற்றில் இருக்கும் பிராணவாயுவைத்தான் சுவாசிக்கிறான். அது இல்லாத நச்சுக் காற்றை சுவாசித்து ஆயிரக் கணக்கானவர்கள் போபாலில் இறந்திருக்கிறார்களே.
“ ஆக இந்தப் பிராணவாயுதான் உடலின் எல்லா பாகங்களையும் இயங்கச் செய்கிறது. உடலின் இரத்தத்தை சுத்திகரிக்கிறது. அது உடலின் எல்லா பகுதிகளுக்கும் பாய்ந்து இயக்குகிறது. உடலில் ஏதாவது பாகம் ரத்தம் இல்லாமலிருக்கிறதா. ? இருப்பது
நகமோ முடியோ ஆக இருக்கலாம். சுத்திகரிக்கப் பட்ட ரத்தம் மூளைக்குச் சேரவில்லையானால் அவனை இறந்தவன் என்றே கூறுகிறார்கள். மூளைக்குச் செல்லும் ரத்தத்தில் பிராணவாயு இருக்கிறது.
“ ஜீவாத்மா பரமாத்மா பற்றி விளக்கம் கேட்டால் உடற்கூறு பற்றி விளக்கம் தேவையா.? “
“ அடிப்படை அறிவை கோட்டை விடுவதால் நேராக மூக்கை பிடிக்காமல் தலையைச் சுற்றி அதை அணுகுகிறீர்கள் என்றுகூற வந்தேன்.
”  பிராண வாயு இல்லாமல் இயக்கம் இல்லை என்பது நிச்சயமா.?
“ சந்தேகமில்லாமல். வேற்று கிரகங்களில் உயிரினங்கள் இல்லை என்றால் அதற்குக் காரணம் அங்கு பிராணவாயு இல்லை என்பதால்தான். சந்திரனில் நீர் இருக்கிறதா, செவ்வாயில் நீர் இருக்கிறதா என்ற ஆராய்ச்சிகள் அதைத்தானே கூறு கின்றன. “
“ உலகில் உயிரினங்களை இயக்க பிராணவாயு இருப்பதுபோல வேற்று கிரகங்களை இயக்குவது எது..?
“ வேற்று கிரகங்கள் எங்கே இயங்குகிறது.? அவை இருக்கின்றன அவ்வளவுதான்.
இந்த பேரண்டத்தையே இயக்குபவன் கடவுள் என்கிறார்களே. அதெல்லாம் பொய்யா.?
“ தெரியாதவற்றைப் பொய் என்று கூறமுடியாது. அனுமானங்கள் என்று வேண்டுமானால் கூறலாம். “
“ குழந்தை பிறக்கும் போதே சுவாசித்துக் கொண்டே பிறக்கிறதே . அது எப்படி.? “
“ உயிருடன் இருக்கும் ஆணின் விந்து உயிருள்ளது. பெண்ணின் கரு முட்டை உயிருள்ளது ( மூன்றோ நான்கோ நாட்கள் )இரண்டும் இணையும்போது உயிர்
இருக்கிறது . பின் வளரும்போது தாயின் உடலுடன் தொப்புள் கொடி பிணைப்பால் உயிருடன் இருக்கிறது. வெளிவரும்போது ஒரு ஜீவாத்மாவாகிறது. இறக்கும்போது பரமாத்மாவுடன் இணைகிறது.
“ நான் இப்போது ஜீவாத்மாவாகவும் அல்லாமல் பரமாத்மாவுடன் இணையாமல் அனாந்திரத்தில் இருக்கிறேனே . இதை என்ன சொல்ல. ? “
ஒவ்வொரு முறையும் சுவாசிக்கும்போது மனிதன் ஒரு மாத்திரையோ, குருவோ (உபயம் சுந்தர்ஜி ) இறக்கிறான். பின் உயிர்க்கிறான்.இந்த மாத்திரையோ குருவோ போதும், கனவு காண. நேரம் கணக்கு எல்லாம் கடந்து நிற்கும். உன் ஜீவாத்மா அனாந்திரத்தில் நிற்காமல் உன் கூட்டுக்குள் செல்லட்டும்.. சிறிது தாமதித்தாலும் உன்னைத் தூக்கிக் கொண்டு போய்விடுவார்கள். பரமாத்மாவுடன் இணையாமல் அனாந்திரத்திலேயே இருக்க வேண்டியதுதான் “

திடுக்கிட்டு விழித்தேன். வியர்த்துக் கொட்டியது. நான் இன்னும் இறக்கவில்லை. பரமாத்மாவுடன் இணையவில்லை இதுவும் கனவா.? கனவில் கற்ற பாடமா.?

விலங்குகளும் பிராணவாயுவைத்தானே சுவாசிக்கின்றன அவை இறந்தால் பரமாத்மாவுடன் சங்கமிக்குமா  ஏன் கூடாது ?

 முதியவர்களின் வயதை வாசகர்கள் அறிவதால், ஒரு மரியாதையும் மதிப்பும் அவர் என்ன எழுதினாலும் சரி, அவர் எழுதிய எழுத்துக்கு ஏற்பட்டு விடுகிறது. உடனே ஒரு பெரியவரின் கருத்து இது தன்னாலேயே ஒரு மதிப்பும் விலகலும் அவர்களிடம் ஏற்பட்டு விட நிறைய வாய்ப்புகள் உண்டு. தேவையில்லாமல் ஒரு 'ஐயா' நிலையில் அவர்கள் மனசில் நாம் சிம்மாசனம் இட்டுக் கொள்கிறோம். எழுத்தின் முதிர்வு சிறப்புக்கு வயது ஒன்றே காரணம் இல்லாமல் ஒருவர் அடைந்து உணர்ந்த அனுபவமும், அதை வெளிப்படுத்த நிறைய வாசிப்பு அனுபவமும் தான் காரணமாக இருக்கும் என்று நினைப்பவன் நான்.மேலே காண்பது என் பதிவு ஒன்றுக்கு வந்த பின்னூட்டத்தின் ஒரு பகுதி நான் வயதானவன்  என்பதை அறிவதால் பலரும்  எதிர்மறைக் கருத்துகளைக் கூறத் தயங்குவார்கள் என்னும் பொருள் படுகிறதோ தெரியவில்லை
நானும் பலரது கருத்துகளையும்  எழுத்துகளையும்  படிக்கிறேன் பகிர்ந்தும்  கொள்கிறேன் ஆனால் என்னால் இந்த ஸ்டீரியோ டைப்புக்குள் வரவோ எழுதவோ முடிவதில்லை என் மனதைப் பாதிக்காத எந்தக் கருத்துக்கும் நான் உடன் படுகிறேனா என்பதும் கேள்வி

நான் எழுதும் சில இறைசார்ந்த  கருத்துகளுக்கு  பலரது கருத்துகளும்  உடன்படுவதாயில்லை எனக்கு வயதாகிற காரணத்தாலோ என்னவோ நிறைய சிந்திக்கிறேன் பல இடங்களில் படித்தது நினைவுக்கு வரும்போது அதை அசை போடுகிறேன்  அதன் விளைவாக என்னுள்ளும்  சில கருத்துகள் எழுகின்றன சிலரது எழுத்துகள் அவர் என்ன உன்னத ஸ்தானத்தில்  நினைக்கப் பட்டாலும்   என் மனதில் என்ன தாக்கம் ஏற்படுத்துகிறது என்பதே என் எழுத்துகளின்  வெளிப்பாடுகள் அப்படி எழுத முனைந்ததின் காரணமாக விளைந்ததே  என் ஜீவாத்மாவும்  பரமாத்மாவும்  என்னும்  பதிவு

நான் படித்ததில் ஒரு பகுதி இது என்னை பாதித்த தலைப்பு இது

 ஜீவாத்மா வேறு, பரமாத்மா வேறு இரண்டும் தனித்தனி என்பது மத்வாரின் துவைதம். நமக்கு முன்னும் நமக்குப் பின்னும் இறைவன் இருப்பதால் இறைவன் வேறு, நாம் வேறு என்று சொல்லி இறைவனையும், நம்மையும் இரண்டாகப் பாவிப்பது துவைதம்.
இராமானுஜரின் விஷிஷ்டாத்வைதம் ஜீவாத்மா பரமாத்மாவின் ஒரு சிறிய பகுதி. அதாவது ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒரே பொருளால் ஆனவைதான். ஜீவாத்மா பரமாத்மாவிலிருந்துதான் வெளிப்பட்டது. சித்து, அசித்துச் சேர்க்கையால் விளங்கும் இரண்டற்றதான பிரம்மம் உண்டென்பதே உட்கருத்து. பிரம்மம் ஒருவரே. அவர் சத்து என்றும் பிரம்மம் என்றும் ஈசுவரன் என்றும் பெயர் பெறுகிறார். அவர் சித்து என்னும் ஆத்மாவுடனும் அசித்து எனப்படும் சடத்தோடும் எப்போதும் சேர்ந்திருக்கிறார். பரமாத்மாவே நிலையானவர். சுதந்திரம் உடையவர் சித்தும் அசித்தும் அவரைச் சார்ந்திருப்பவை என்பது அவர் கருத்து.
ஆதிசங்கரரின் அத்வைதத் தத்துவம் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே. இரண்டும் வேறு வேறு அல்ல என்பதாகும். இறைவன் நம்மோடு இருக்கிறார் என்பது அத்துவைதம். (துவைதம் அற்ற நிலை, இரண்டற்ற ஒருமை நிலை)
அத்வைதம், துவைதம் இந்த இரண்டு கோட்பாடுகளையும் ஏற்றுக் கொள்வது விசிஷ்டாத்வைதம்.(செவ்விருமை)

பகவத் கீதை மஹா வாக்கிய விளக்கமாக அமைந்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது மஹா வாக்கியம் என்பது பரமாத்மாவுக்கும் ஜீவாத்துமாவுக்கும் உள்ள சம்பந்தத்தைச் சொல்கிறது. மஹாவாக்கியங்களுள் ஒன்று தத்  த்வம்  அஸி
அதில் த்வம் நீ, தத்-அதுவாக, அஸி- இருக்கிறாய். என்று பொருள் படும்
இது போன்ற கருத்துகள் என்னையும் சிந்திக்க வைக்கிறது  என்ன............... ...என்னால் பலராலும்  நடந்து போனபாட்டையில் சிந்திக்க முடியவில்லை

நாம் ஏன் முன்னோர் சொன்னதைப் பார்க்க வேண்டும் ? நாமே சுயமாய்ச் சிந்திக்கக் கூடாதா என்றால் இது வரை ஓடியவர்களின் ஓட்டத்தை அறிதல் அவ்விடத்தில் இருந்து அல்லது அதிற் பயனுண்டா இல்லையா என்பதை அறிந்து. அதற்பின்.. இன்னொரு திக்கில் ஓடி அறிந்ததைச் சேர்க்க உதவும் என்பதே என் நிலைப்பாடாக இருக்கிறது.

அதுவும் நான் அறிந்ததுதான் அறிவாக முடிந்த பொருளாக இருக்க வேண்டும் என்பதும் இல்லை. எனக்குப்பின் அதிலிருந்து இன்னொருவர் தொடரலாம்.

நான் நினைப்பதுபோலெல்லாம் முன்பே நினைத்தவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதன் விளைவே  இத்தனை மாறுபட்ட சிந்தனைகள்  என்று அறிந்து கொள்வதும்  தவறல்லவே


           

 

34 comments:

 1. உங்களின் சிந்தனையை அறிந்து கொண்டேன்... அவ்வளவே... வேறு எதுவும் பதில் சொல்ல சிந்திக்க வேண்டும்...!

  ReplyDelete
  Replies
  1. அவ்வளவுதானா சிந்தியுங்கள் தெளிவு கிடைக்கலாம்

   Delete
 2. நீங்கள் சொல்வது உண்மை ,தெரிந்து கொள்வதை விட அறிந்து கொள்ள வேண்டும் என்பதில் எனக்கும் உடன்பாடு உண்டு :)

  ReplyDelete
  Replies
  1. அறிந்து கொள்ளும் முயற்சியே எழுத்தில் வருகைக்கு நன்றி ஜி

   Delete
 3. www.ujiladevi.in/2017/01/tamil-post_30.html

  ReplyDelete
  Replies
  1. இணைப்பு : நல்லதொரு ஆழமான கட்டுரை... அதுவும் அவ்வளவே...(!)...?

   Delete
  2. மீள் கருத்துக்கு நன்றி சார்

   Delete
 4. படித்தேன். கருத்து ஒன்றும் இல்லை.

  ReplyDelete
  Replies
  1. இப்படிச் சொன்னால் எப்படி உடன்பாடு இல்லை எனலாமா

   Delete
  2. இல்லை, அப்படி அர்த்தத்தில் சொல்லவில்லை. கருத்து சொல்ல சிந்திக்கவேண்டும். அப்படி சிந்திக்க சோம்பல். அதனால்தான் அந்த பின்னூட்டம். மற்றபடி உங்கள் சிந்தனைகள் யதார்த்தத்துடன்தான் இருக்கும் என்று நம்புகிறேன்.

   Delete
 5. படித்தேன். கருத்து ஒன்றும் இல்லை.

  ReplyDelete
  Replies
  1. "படித்தேன். கருத்து ஒன்றும் இல்லை"

   பதிவில் கருத்து இல்லை என்று அர்த்தம் வருகிறது. வார்த்தைப் பிரயோகம் தவறு. என்னால் கருத்து ஒன்றும் சொல்ல இயலவில்லை என்று பொருள் கொள்ளவும்.

   Delete
  2. மீண்டும் வந்து விளக்கியதற்கு நன்றி சார்

   Delete
 6. நிறைய யோசிக்கிறீர்கள்.

  தம +1

  ReplyDelete
  Replies
  1. இப்போது அதுவே வேலையாய் விட்டது வருகைக்கு நன்றி ஸ்ரீ

   Delete
 7. எனக்குத் தெரிந்ததெல்லாம், என்னைப்போன்றவர்கள் ஜீவாத்மா. உங்களைப் போன்ற அனுபவசாலிகள் பரமாத்மா. ஜீவாத்மா, பரமாத்மாவை மரியாதையோடு நடத்தவேண்டும். பரமாத்மா, ஜீவாத்மாக்களிடம் கருணையோடு நடந்துகொள்ளவேண்டும். ஜீவாத்மா, ஒரு காலத்தில் பரமாத்மாவாக் மாறவேண்டிவரும். ஆனால் பரமாத்மா ஒருபோதும் ஜீவாத்மாவாக மாறவேண்டியதில்லை. விடாமல் blog எழுதிக்கொண்டிருந்தால் போதும். ஜீவாத்மா பரமாத்மாவாக மாறியபின்னும் அந்த blog - களுக்கு பின்னூட்டம் போடுவதை யாராலும் தடுக்க முடியாது.... (உளறுகிறேனோ?)

  - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

  ReplyDelete
  Replies
  1. தெரிந்தால் சரி வருகைக்கு நன்றி சார்

   Delete
 8. ஜீவாத்மா,பரமாத்மா பற்றி ஒரு புதிய கோணத்தில் சிந்தித்ததை வியக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. சிந்தனையின் காரணமும் எழுதி இருக்கிறேனே வருகைக்கு நன்றி மேம்

   Delete
 9. இந்த விஷயத்தில் கருத்துச் சொல்லும் அளவுக்கு ஏதும் தெரியாது. ஆனாலும் பரந்து விரிந்த உங்கள் சிந்தனைக்குப் பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷியா வருகைக்கு நன்றி மேம்

   Delete
 10. உள்ளம் பெருங்கோயில்
  ஊனுடம்பு ஆலயம்
  வாய் கோபுர வாசல்
  என்று படித்தது நினைவிற்கு வருகிறது ஐயா

  ReplyDelete
  Replies
  1. என்னால் அப்படியெல்லாம் நினைக்க முடியவில்லை ஐயா வருகைக்கு நன்றி

   Delete
 11. நிறைய யோசிக்கிறீர்கள்.//

  ஸ்ரீராம் சொன்னது போல் தான் நானும்
  நினைத்தேன் நிறைய சிந்தனை செய்கிறீர்கள் என்று.
  எப்போதும் சிந்தனை செய்வது நல்லது.

  ReplyDelete
  Replies
  1. சிலர் பைத்தியக்காரனின் சிந்தனை என்றும் நினைக்கலாம் வருகைக்கு நன்றி மேம்

   Delete
 12. ஜீவாத்மா பரமாத்மா பற்றி நிறைய படித்து குழம்பியிருக்கிறேன். தங்களின் பதிவு அந்த குழப்பத்தை போக்கியிருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. நானும் குழம்பி இருக்கிறேன் ஒருவேளை அதன் வெளிப்பாடுதானோ என்னவோ ஆனால் எனக்கு இவற்றில் சிறிதும் உடன்பாடு இல்லை ஒரு வித்தியாசமான சிந்தனையின் நீட்சியே இப்பதிவு வருகைக்கு நன்றி சார்

   Delete
 13. ரொம்ப ஆழமாகச் சிந்திக்க வேண்டியவை என்று தோன்றுகிறது. எனக்குத் தெரிந்த ஒன்று ஜீவாத்மா என்பது நாம் என்றால் நம்முள்ளும் அந்தப் பரமாத்மா இருக்கிறான். நம் மனதில் நல்லவனும் இருக்கிறான் கெட்ட சிந்தனைகள் உள்ளவனும் இருக்கிறான். நல்லதை நினைத்து நல்லதைச் செய்து வரும் போது நாம் பரமாத்மா அதாவது நல்ல சக்திக்கு அருகில் வருகிறோம் என்பதே...

  கீதா: மேற் சொல்லப்பட்ட கருத்துடன்... சார் நீங்கள் நிறைய சிந்திக்கிறீர்கள் என்று தெரிகிறது! ஜீவாத்மா பரமாத்மா என்பதெல்லாம் என் அறிவிற்கு அப்பாற்பட்டவை. ஆனால் துளசியின் கருத்துதான் எனதும் என்றாலும் உங்களது இந்தக் கருத்து //“ பரமாத்மா என்பது எங்கும் வியாபித்திருக்கும் பிராண வாயு.ஜீவாத்மா என்பது ஒருவனை இயக்கும் பிராணவாயு..அது அவனை விட்டு வந்தால் பரமாத்மாவுடன் ஐக்கியமாகி விடும்.”// மிகவும் யதார்த்தமான அறிவியல் ரீதியான நல்ல சிந்தனையாகத் தோன்றியது. அதே போன்று துளசியின் கருத்தும் எனது கருத்து என்ன கொஞ்சம் இப்படிச் சிந்திப்பேன். ஹீரோ, வில்லன். ஹீரோ அதாவது சூப்பர் மேன் ஆர் பவர் ஹீரோ....அது ஒரு சக்தி! நம்முள்ளும் நெகட்டிவ் எனர்ஜி, பாசிட்டிவ் எனர்ஜி இருக்கிறது. அது நமது சிந்தனைகளின் விளைவாக எழுவதே. நேர்மறை எண்ணங்கள், எதிர்மறை எண்ணங்கள்.

  ஒருவர் எனக்குத் தெரிந்த ஒருவர் ஃபேஸ் ரீடிங்க் செய்பவர். அவர் ஒரு முறை தன்னுடன் கிரிஸ்டல் கொண்டு வந்து ஓர் உறவினர் வீட்டில் அவர்களது பெண்ணின் பக்கத்தில் வைக்கவும் அது ஆண்டி க்ளாக்வைசில் சுத்தியது.அதே சமயம் அவள் கணவன் ஃபோட்டோ அருகில் வைத்ததும் க்ளாக்வைசில் சுற்றியது. பெண்ணிடம் நெகட்டிவ் எனர்ஜி இருப்பதாகச் சொன்னார். அது மிக மிக உண்மை. அந்த நெகட்டிவ் எனர்ஜிதான் அதாவது னெகட்டிவ் சிந்தனைகள் தான் அவளது பெர்சனாலிட்டியையே தகர்த்து பெர்சானாலிட்டி டிஸ் ஆர்டர் என்று பருவ வயதில் தொடங்கியது இப்போது மணமாகி அதனாலேயே பிரிந்து இருக்கும் வரை தொடர்கிறது.

  எனவே நம்முள் இருக்கும் கெட்ட குணங்களை மாற்ற முயன்று நல்ல எண்ணங்களை விதைக்கும் போது பாசிட்டிவாக மாறும் போது ஒரு நலல் பெர்சனாலிட்டி உருவாகி ஜீவாத்மா என்று சொல்லப்படும் இது நல்ல அந்த ஹீரோவின்/நல்ல சக்தியின் அருகில் நெருங்குவதாகவும் சிந்தித்ததுண்டு சார்.

  ReplyDelete
  Replies
  1. எனக்கு இந்தமாதிரித் தோன்றுவதே என்னையும் ஒரு மடாதிபதி நிலைக்குக் கொண்டு சென்றால் பலனிருக்கும் என்று தோன்றவைக்கிறது என் பதிவின் கடைசியில் நான் சிந்திப்பதே அறுதியானது என்று தோன்றவில்லை ரிலே ரேசின் ஒரு ஓட்டக்காரனாகவும் இருக்கலாம் என்றும்ன் தோன்றுகிறது இம்மாதிரி ஜீவாத்மா பரமாத்மா என்று கூறி பிழைப்பு நடத்துபவர்களுக்கான ஒரு மாற்று சிந்தனையே இது நான் சிந்திப்பதை எல்லாம் அவ்வப்போது எழுதி வருகிறேன் வாசிப்பவர்கள் பயஸ் இல்லாமல் இருந்தால் புரியும் வருகைக்கு நன்றி சார் /மேம்

   Delete
 14. This comment has been removed by the author.

  ReplyDelete
 15. இப்போதும் சிலபேர், நம்முடைய வயதை முன்னிட்டு, அவர்களுடைய உண்மையான அபிப்பிராயங்களைச் சொல்வதில் யோசனை செய்தே சொல்வதாக நினைக்கிறேன்.

  ReplyDelete
 16. உங்களின் எழுத்தை நாங்கள் ரசிக்கிறோம். அனுபவங்களைப் பாடமாகக் கொள்கிறோம். தவிர, நீங்கள் சொல்வதில் சிறிது உண்மை உள்ளது ஐயா.

  ReplyDelete