சனி, 11 பிப்ரவரி, 2017

என்னவோ நடக்குது ஒன்னுமே புரியலே

                                    என்னவோ நடக்குது ஒன்னுமே புரியலே
                                     -----------------------------------------------------------


 என்னமோ நடக்குது ஒன்னுமே புரியலே

தினமும் பத்திரிகையைப் பார்க்கிறோம் இன்னார் இந்த குற்றம் செய்ததற்காக கைது செய்யப்படுகிறார் என்னும்  செய்தி வராத நாளில்லை  குற்றம்  செய்தவர்கள் தண்டனை அனுபவிக்கத்தானே வேண்டும்  என்று நினைக்கிறோம் அவர்களை சிறையில் வைக்கிறார்கள்  சில நாட்கள் , மாதங்கள் ஏன்  சில வருடங்கள் கூட சிறையில் இருக்கிறார்கள்  பிறகு ஏதோ விசாரணை நடக்கிறது  அவர்கள் பெயிலில் வெளி வருகிறார்கள் எனக்கு இதெல்லாம்  புரிவதில்லை குற்றம் புரிந்தவர் என்று தெரிந்தபின்தானே கைது செய்கிறார்கள் எனக்கு இருக்கும்  சந்தெகம் ---ஆதாரங்கள் இல்லாமல் கைது செய்கிறர்களா. அப்படி ஆதாரங்கள் இருந்தால் குற்றத்தைப்பதிவு செய்து வழக்கை நடத்த தானே வேண்டும் முதலில் சிறையில் அடைத்து காலம்கடந்து குற்றங்களைப் பதிவு செய்வதும்  பெயிலில் விடுவதும் ஆண்டுகள் கழித்து குற்றத்தை  ருசிப்பிக்க இயலாமல் விடுதலை செய்வதும்  ஏன்  ?
 சில வழக்குகள் நினைவுக்கு வருகிறது 2002ம் ஆண்டு நடைபாதையில் படுத்திருந்த சிலர் மீது காரை ஏற்றிக் கொலை செய்ததாக பிரபல நடிகர் சல்மான்கான் மீது வழக்குத் தொடரப்பட்டு அவர் சிறையில் இருந்து பெயிலில் வந்தார் அப்போது ஆதாரமாக அவரது பாதுகாவலரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. அந்த பாதுகாவலர் சில ஆண்டுகள் கழித்து இறந்து போனார்  இறந்து போனாரா கொல்லப்பட்டாரா என்பது புதிராகவே இருக்கிறது இப்போது இவ்வளவு ஆண்டுகள் கழித்து நடிகர் குற்றம்  ருசுவாக வில்லை என்று விடுதலை செய்யப்படுகிறார் என்னவோ நடக்குது .ஒன்னுமே புரியலே

கோவில் நிர்வாகி சங்கர்ராமன் கொலை வழக்கு பரபரப்பாக பேசப் பட்டு  காஞ்சி மட அதிபர் சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டது/ அந்த வழக்கை விசாரித்த காவல் அதிகாரி மாற்றல் செய்யப்பட்டு அந்த வழக்கிலும்  மடாதிபதி விடுதலை செய்யப்பட்டார் என்னவோ நடக்குது ஒன்னுமே புரியலே

முன்னாள் அமைச்சரும் (தயாநிதிமாறன்) அவரது சகோதரர் (கலாநிதி மாறன் ) மீதும்  ஒரு வழக்கு தொடரப்பட்டு அண்மையில் கேஸேதும் ருசுவாகவில்லை என்று விடுவிக்கப்பட்டனர் இந்த வழக்கு இத்துடன்  முடியுமாதொடரப்படுமா என்னும் சந்தேகம் இருக்கிறது என்னவோ நடக்குது ஒன்னுமே புரியலே

 2ஜி கேஸில்  முன்னாள் அமைச்சர் ராஜா பல நாட்கள் சிறையில் இருந்திருக்கிறார்  வழக்கு இன்னும் முடிந்தபாடில்லைஆதாரங்கள் இல்லாமலா கைது செய்தார்கள் அந்த ஆதாரங்களின்  அடிப்படையில் வழக்கை முடிக்காமல் ஏன்  இருக்கிறார்கள் என்னவோ நடக்குது ஒன்னுமே புரியலே
ஒவ்வொரு நாளும் பத்திரிகையில் இன்னார் மீது இன்ன குற்றம்  இருக்கிறது என்று எழுதப்பட்ட செய்தி வந்தவண்ணம் இருக்கிறது எந்த வழக்கும்  முற்றுப்பெறாமலேயே இருக்கிறது பொதுமக்கள் அவற்றை மறந்து போகும் நிலையில்  அவை புதுப்பிக்கப் படுகின்றன ஆனால் வழக்கு முடிந்து தீர்ப்பு வந்தாலும்  மேல் கோர்ட்டில் அப்பீல் ஆகி அவை பின்  நீர்த்துப் போகின்றன மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மேல் சாற்றப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கு ஒரு க்லாசிகல் எக்சாம்பிள்  18 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிமன்றம்  உறுதி செய்து  அவர் தண்டனையும்  வழங்கப்பட்டார். சட்டசபை உறுப்பினர் பதவியையும் இழந்தார் பின்பு ஹை கோர்ட்டில் விடுதலை செய்யப்பட்டார்  மீண்டும்தேர்தலில் நின்று முதலமைச்சராகவும்  இருந்தார்  சுப்ரீம்கோர்ட்டுக்கு அப்பீல் செய்யப்பட்டு வழக்கு முடிந்து தீர்ப்பு வராமல் பல மாதங்களாக இருக்கிறது  அவரும்  இறந்து விட்டார்  ஆனால் அவருடன் குற்றம்சாட்டப்பட்டவர் இன்றும் தீர்ப்பு வராததால்  வெளியே இருக்கிறார் தீர்ப்பு வழங்க தாமதம் ஏன்  அரசியல் விளையாடுகிறதோ என்னும்  சந்தேகம் எழுகிறது அப்படியானால் நம் நீதிமன்றங்களின்  தீர்ப்பை இஷ்டத்துக்கு  அரசியல் வாதிகள் வளைக்க முடியுமா  நம்நீதிமன்றங்கள் சுயமாய் இயங்குவதில்லையா நி ேவையின் கண்கள் கட்டப்பட்டுக் காண்பிக்கப் புகின்று நிக்குக் கண் இல்லை என்பை காண்பிக்கா அல்லு நி எையும் கண்டுக்கு என்பத் ெரிவிக்கஎன்னவோ நடக்குது ஒன்னுமே புரியலே
ஒரு வாதத்துக்கு ஆயிரம்  குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டாலும்  ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பதே தாரக மந்திரமென்றால் அவை எல்லாம் செல்வாக்கும்  பணமும்  உள்ளவர்களுக்கு மட்டுமா. இவர்கள் நிரபராதிகள் என்றால் செய்யாத குற்றத்துக்காக சிறையில் வாடினார்களா அப்படியானால் நீதிமனன்றங்கள் சரியாக செயல் படவில்லையா உண்மையில் நிரபராதிகள் என்றால் அரசும் நீதிமன்றமும்  அவர்களின்  மன உளைச்சலுக்குப் பதில் சொல்ல வேண்டாமா என்னவோ நடக்குர்து ஒன்னுமே புரியலே
ஏதோ நினைவுக்கு வரும்  சில கேஸ்களை மட்டுமே குறிப்பிட்டு இருக்கிறேன்  நடைமுறையில் எங்கோ தவறு இருக்கிறது நமது நீதிமன்றங்கள் சுதந்திரமாக இயங்குவதில்லையா சட்டமும் நீதியும்  எப்படி வேண்டுமானாலும் வளைக்கப்படலாமா அதுவே ஒரு சாதாரணனுக்கு சாதகமாக விளங்குவதில்லையே  என்னவோ நடக்குது ஒன்னுமே புரியலே
 இதை வாசிப்பவர்கள் அவசியம்  அவர்களது கருத்துகளைப் பதிய வேண்டுகிறேன்               

 





37 கருத்துகள்:

  1. நடக்குதே... அஞ்சாயிரம் திருடியவனுக்கும், 100 ரூபாய் லஞ்சம் வாங்கினவனுக்கும் உடனடியாக தண்டனை கிடைத்து விடுகிறதே.. இப்படியா அல்ப தொகையாக ஊழல் செய்து மாட்டுவார்கள்! பெரிய தொகையாக செய்தால் தப்பிக்கலாம்.

    உதயகீதம் என்று நினைக்கிறேன், அந்தப் படத்தில் கவுண்டமணி ஐம்பது பைசா அடித்து சிறைக்கு வரும் செந்திலை ஓங்கி அறைந்து "அம்பது பைசாவுக்கெல்லாம் ஜெயிலு.. காவலுக்கு நாலு போலீஸ்காரங்க .." என்பார். அது போலத்தான்.

    ("நான் படம் எல்லாம் பார்ப்பதில்லை. வருகைக்கு நன்றி ஸ்ரீ " என்று பதில் சொல்வீர்கள் என்று நினைக்கிறேன்!!!!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப்பதிவை எழுதியதே நீதித்துறையில் அரசியல் விளையாடுகிறதோ என்னும் எண்ணத்தால்தான் நான் இப்போதுதான் படங்கள் பார்ப்பது இல்லை. முன்பெல்லாம் பார்த்திருக்கிறேன் ஸ்ரீ வருகைக்கு நன்றி

      நீக்கு
  2. தம இன்னும் சப்மிட் செய்யப்படவில்லை என்பதால் வாக்களிக்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தம் மூன்று வாக்குகள் விழுந்திருக்கின்றன யாருடைய உபயமோ அவர்களுக்கு நன்றி

      நீக்கு
  3. ஏழைக்கு மட்டுமே தண்டனை உடனே கிடைக்கும்...
    பணமிருந்தால் அரசே சாமரம் வீசும்.

    பதிலளிநீக்கு
  4. சட்டம் ஏழைகளுக்கு இரும்புக் கம்பியாகவும் பணம் படைத்தவனுக்கும் ரப்பர் கம்பியாகவும் வளைகிறது ஐயா
    த.ம.1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசியல் வாதிகளின் வளைப்புக்கு வளைகிறதோ நீதி.வருகைக்கு நன்றி ஜி

      நீக்கு
  5. பதில்கள்
    1. இல்லை நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டு இருக்கிறது வருகைக்கு நன்றி மேம்

      நீக்கு
  6. பதில்கள்
    1. ஏதும் புரியாமல் இருப்பதா . நன்றி சார்

      நீக்கு
    2. இப்படி நினைத்தால் ஒரு பதிவு தேற்றி இருக்க முடியுமா சார் வருகைக்கு நன்றி சார்

      நீக்கு
  7. பதில்கள்
    1. பாழும் அரசியல்வாதிகளுக்குத் துணை போகாமல் இருக்கலாம் வருகைக்கு நன்றி மேம்

      நீக்கு
  8. ஏதேதோ புரிந்த மாதிரித்தான் இருக்கிறது ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதைவிட விலாவாரியாக எழுதி இருக்க வேண்டுமோ வருகைக்கு நன்றி சார்

      நீக்கு
  9. எல்லாவற்றுக்கும் ஒரு விலையுண்டு ,இது நீதிக்கும் பொருந்தும் :)

    பதிலளிநீக்கு
  10. பதில்கள்
    1. பணம் இல்லாமல் அரசியல் இல்லை அரசியல் இல்லாமல் நீதியும் இல்லை சரிதானே டிடி

      நீக்கு
  11. அதிகமாக தலையில் முடி இருப்பவர்கள் தான் பிய்த்து கொள்ள வேண்டும். நல்ல வேளை எனக்கு அந்த பிரச்னை இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதில் முடியைப் பிய்த்துக் கொள்ளும் அளவுக்கு என்ன இருக்கிறது ஸ்ட்ரெயிட் ஃபார்வார்ட் கேஸ்கள் தானே கூறி இருக்கிறேன் வருகைக்கு நன்றி ஐயா

      நீக்கு
  12. அதிகமாக தலையில் முடி இருப்பவர்கள் தான் பிய்த்து கொள்ள வேண்டும். நல்ல வேளை எனக்கு அந்த பிரச்னை இல்லை.

    பதிலளிநீக்கு
  13. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  14. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  15. தலைப்பை பார்த்ததும் சந்திரபாபு பாடல் நினைவிற்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சொல்ல வந்ததேவேறு உங்களுக்கு திரைப்படப்பாடல் நினைவுக்கு வருகிறது எங்கோ தவறு போல் இருக்கிறதே தலைப்பு வைத்ததிலா

      நீக்கு
  16. சட்டம் எல்லோருக்கும் பொது என்று சொல்கிறார்கள். ஆனால் அது வசதி படைத்தவருக்கு ‘வசதி’யாக அல்லவா இருக்கிறது. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல சட்டத்தில் உள்ளவை படிக்க மட்டுமே.உதவும் என்பது மறுக்கமுடியாத உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீதித்துறையின் மீதே நம்பிக்கை போய்விடுகிறதுநமது அரசின் நான்கு தூண்களில் ஒன்றான நீதித்துறைக்கே இந்த கதியா . வருகைக்கு நன்றி ஐயா

      நீக்கு
  17. சார் நீங்கள் சொல்லியிருப்பதுதான் உண்மை சார். நீதி மன்றமும் மனிதர் தானே. அங்கும் அரசியல்....சின்னத் திருடர்கள் தண்டிக்கப் படுவார்கள். பெரிய முதலைகள் தப்பித்துவிடும்.இது தான் நம் ஊர் நீதி. ஓன்னுமே புரியலை...இது நமமைப் போன்ற சாமானியர்களுக்கு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீதித் துறையும் அரசியலும் கை கோர்த்தால் கேட்கவே வேண்டாம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார் /மேம்

      நீக்கு
  18. அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய 'நீதி தேவன் மயக்கம்' நாடகம் தான் நினைவுக்கு வருகிறது.

    யஷ்பால் கபூர் நினைவிருக்கிறதா, ஐயா?.. ஒன்றுமில்லாத விஷயத்திற்காக (அரசு ஊழியரை தேர்தல் களத்தில் பயன்படுத்திக் கொண்டதாக) ஆட்சியிலிருந்த பிரதமர் மீதே நீதி மன்றம் மேற்கொண்ட நடவடிக்கை உங்களுக்கும் தெரியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அறிஞர் அண்ணாவின் நாடகம்பற்றித்தெரியாதுயஷ்பால் கபூர் பற்றிய சில நினைவுகள் இருக்கிறது உப்பு சப்பு பெறாத சில விஷயங்களில் நீதி மன்றங்கள் சில அரசியல் வாதிகளின் தூண்டுதல் பேரில் நடவடிக்கை எடுத்திருக்கிறது அதன் விளைவே பிற்காலத்திய எமெர்ஜென்சி என்று நினைவு பிற வாசகர்களுக்காவது நீங்கள் உங்கள் கருத்தை இன்னும் விளக்கி இருக்கலாம் என்று தோன்றுகிறது வருகைக்கு நன்றி சார்

      நீக்கு
  19. இதுமாதிரியான விஷயங்களை நமக்கென்ன வந்தது என்று கண்களை மூடிக்கொள்ள முடியாமலும், நம்மால் என்ன செய்ய முடியும் என்று சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  20. இவர்கள் புண்ணியத்தில் பதிவர்களுக்கு எழுத பொருள் கிடைக்கிறதே இடுக்கண் வருங்கால் நகுக என்பதுதான் நினைவுக்கு வருகிறது

    பதிலளிநீக்கு
  21. எல்லாம் பணம் படுத்தும் பாடு............

    பதிலளிநீக்கு