மறக்க மனம் விடுவதில்லையே
----------------------------------------------
நேற்று
என்னவோ மனசே சரியாயிருக்கவில்லை.
காரணம்தெரியாத ஒரு சஞ்சலம் அப்போதுதான்
என் மனைவி சொன்னாள் இது மார்ச்
இரண்டாம் தேதியின் இஃபெக்டாக இருக்கலாம்
என்று. இருக்கலாம்தான் அது ஆயிற்று அறுபது ஆண்டுகள் அவர் இருந்திருந்தால் 108 வயது
முடிந்திருக்கும் நினைவுகள்
நினைவுகள் நினைவுகள் ஆண்டுகள் எத்தனை
போனால் என்ன அப்பாவின் நினைவுகளுக்குக்
குறைவில்லை அவரை ஒரு ஹீரோவாக, நண்பனாக, காரியவாதியாக ரசிகராக முன்
எச்சரிக்கை மிகுந்தவராக என்று பல பரிமாணங்களில் பார்த்திருக்கிறேன் என்
மேல் அலாதி அன்பு செலுத்தியவர் என்னை மேல் படிப்பு படிக்க முடியாமல் போன
கையாலாகதவராக மிகவும் ஃபீல்
செய்திருக்கிறார் அப்போது நீலகிரியில் கல்லூரி ஏதும் இருக்கவில்லை கல்லூரி போகவேண்டுமென்றால் கோவைக்குத்தான் போக வேண்டும் ஹி குட் நாட்
அஃப்ஃபோர்ட் தட்
.
அவரை ஒரு அசடனாகச் சித்தரிப்பதில் என்
தாய் வீட்டுக்காரர்களுக்கு ஒரு
குஷி.திருமணம் முடித்தபோது அப்பாவுக்குக்
குடுமி இருந்ததாம் முதன் முதலில்
கால்களுக்கு ஷூ அணிந்த போது கால்கள் மாற்றிப் போட்டுக் கொண்டாராம்
ஆனால்
அவர்களுடைய மூக்கை தகுந்த நேரத்தில் உடைத்தவர் அவர். என் தாயார் இறந்தபோது என் சித்தியையே மறுமணம்
செய்ய வேண்டினார்கள் ஆனால் அவருக்கென்று ஒரு மனம்
இருக்கத்தானே செய்தது தன் தங்கையை
தன் மச்சினனுக்கே திருமணம் செய்வித்து அது
முடிந்ததும் தான் இஷ்டப்பட்ட வேறோர் பெண்ணை மணம் முடிந்து அவர்கள் எண்ணங்களைத்
தகர்த்தவர்
அவர்
ஒரு நாள் மிகவும் வருத்தத்தில் இருந்தார்
காரணம் என் தம்பி யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் எங்கோ ஓடிவிட்டான் வெல்லிங்டனிலும் கூனூரிலும் தேடினார் ஒரு ஹோட்டல் விடாமல் எல்லா இடங்களுக்கும் சென்று விசாரித்திருக்கிறார் அப்போதெல்லாம் எல்லா இடங்களுக்கும் நடந்தே
செல்ல வேண்டிய கட்டாயம் ஒரு வேளை ஊட்டிக்குச்
சென்றிருப்பானோ என்னும் சந்தேகம் இருந்தது
ஊட்டி நாங்கள் இருந்த வெல்லிங்டனில் இருந்து சுமார் இருபது கி மீ க்கும் மேல் இருந்தது
அடுத்தநாள் அங்கும் சென்று அலைந்து
திரிந்து ஏமாற்றத்துடன் திரும்பினார் உணவு செல்லவில்லை உறக்கம் வரவில்லை இரண்டு நாளில் மிகவும் நலிந்து விட்டார் என்ன செய்வது என்று
தெரியவில்லை இப்போது போல் தகவல் தொடர்புகள் எளிதல்ல. எங்கே போனானோ என்ன
செய்கிறானோ என்றே கவலையிலாழ்ந்தார்
அவனிடம் யாராவது கடுமையாக நடந்து கொண்டார்களா
என்று அடிக்கடி விசாரித்துக் கேட்டுக் கொண்டார் இவ்வாறு மூன்று நான்கு
நாட்கள் கழிந்தது ஐந்தாவது நாள் என்று நினைக்கிறேன் அப்பாவுக்கு என் மாமா ஒருவரிடமிருந்து ஒரு
கார்ட் வந்தது அதில் என் தம்பி பாலக்
காட்டில் மாமாவின் அத்தைமகள் வீட்டுக்கு வந்து போனதாக தகவல் இருந்தது முன்பெல்லாம்
கடிதங்கள் எழுதினால் ஓரிரு நாட்களில் வந்து விடும் ( அது அந்தக் காலம் ) என் அப்பா பாலக்காட்டுக்குப் பயணமானார் அங்கு
என் அம்மாவின் (சித்தி) வீட்டில் அவனைக்
கண்டு பிடித்தார் என் அம்மாவின் உறவு அவர் எங்களுடன் அரக் கோணத்தில் இருந்தவர் என் தம்பிக்குப் பிடித்தமானவர்
பிறகென்ன அவனைக் கூட்டிக் கொண்டு வந்தார்
எங்களுக்கெல்லாம்
ஒரே ஆச்சரியம் இவனிடம் காசு ஏதும்
இருக்கவில்லை பின் எப்படி பாலக்காடு
சென்றான் அவன் சொன்னதைக் கேட்டபோது நம்பமுடியவில்லை
ஆச்சரியமாக இருந்தது வீட்டில் போர் அடித்ததால்
மேட்டுப்பாளையம் வரை ( சுமார் முப்பது
கிமீ/ )தண்டவாளங்களிலேயே நடந்து சென்றானாம்
பின் அங்கிருந்து டிக்கட்
வாங்காமல் பாலக் காடு வரைப் பயணம் நினைத்துப் ,பார்க்கும் போது இன்றும் ஆச்சரியம் வருகிறது ப்ராடிகல் சன் என்று படித்ததுண்டு. அப்பா அவனிடம் கோபித்துக்
கொள்ளாமல் செல்லம் கொஞ்சியது அதை விட
ஆச்சரியம்

