Wednesday, June 17, 2015

ஓ....அந்தக் காலம்......! 3..


                                     ஓ....அந்தக்காலம்.......! ( 3)
                                      -----------------------------------
ஏரோ எஞ்சின் டிவிஷன் துவங்கப் பட்ட இடம் காடாக இருந்திருக்க வேண்டும் பாம்புகளின் நடமாட்டம் அதிகமாகவே இருந்தது. HAL MAIN FACTORY-ல் செக்யூரிடி பிரிவில் ஒருவர் இருந்தார். பெயரெல்லாம் மறந்து விட்டது எங்காவது பாம்புகள் தென்பட்டால் உடனே அவருக்குச் செய்தி போகும் அவர் வருவார். பாம்பினைப் பிடிப்பார். அதை எடுத்துக் கொண்டு மேலதிகாரிகளிடம் காட்டினால் அவருக்கு ஒரு தொகை (ரூ10/என்று நினைக்கிறேன்) கொடுக்கப் படும். ஒரு முறை இவர் தான் பிடித்திருந்த பாம்புடன் அப்போதைய ஜெனரல் மேனேஜர் அறைக்குள் நுழைந்து பாம்பைக் காட்டி இஎருக்கிறார். ஜெனரல் மேனேஜர் ஒரு விமானப் படை உயர் அதிகாரி. பாம்பைப் பார்த்தவுடன் தனது கன்னை எடுத்து சுட்டுவிடுவேன் என்று பயமுறுத்த அந்த செக்யூரிடி அதிகாரி வெலவெலத்துப் போய் விட்டார் என்று கேள்வி.
ஏரோஎஞ்சின் தயார் செய்ய ப்ரிஸ்டல் சிடெலி எனும் கம்பனியுடன் ஒப்பந்தம் ஆகி இருந்தது. ஒபந்தப்படி நிறைய ஆங்கிலேயர்கள் வந்திருந்தனர் அவர்களுக்கெல்லாம் இந்தியா என்றால் சாலையில் மாடு. பாம்பாட்டிகள் இருக்கும் ஊர், கழைக்கூத்தாடிகளுக்கும் மேஜிக் காரர்களுக்கும் குறைவில்லாத இடம் என்ற ஓர் எண்ணம் இருந்தது. அவற்றை எல்லாம் ஊர்ஜிதப் படுத்தும் விதமாக ஏரோஎஞ்சின் டிவிஷன் தொடங்கிய பொழுதில் நிறையவே பாம்புகள் தொழிற்சாலைக்குள் தலைக்காட்டும் தொலை பேசி அழைப்பு போகும் . செக்யூரிடி அதிகாரி வருவார். பிடித்த பாம்பைக் காண அந்த வெள்ளையர்களுக்கெல்லாம் ஒரு குஷி பிறக்கும் நம் செக்யூரிடி அதிகாரி லேசுப்பட்டவர் அல்ல. பாம்பைக் காட்டியே கணிசமான தொகை கறந்து விடுவார்.சில பாம்புகள் நீளம் ஒரு அடிக்கும் குறைவாக இருக்கும் . ஆனால் அவை தாவித்தாக்கும்  அந்த வகைப் பாம்பு கிடைத்துவிட்டால் செக்யூரிடி அதிகாரி அவற்றை தொப்பியால் சீண்டி ஜம்ப் செய்ய வைப்பார்.ஒவ்வொரு சீண்டலுக்கும் அவருக்கு தொப்பியில் நிறையவே பணம் சேரும் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளத் தெரிந்த செக்யூரிடி அவர். இந்தியா பற்றி யார் என்ன நினைத்தால் என்ன . அவருக்குப் பணம் வரும்
 இதை எழுதி முடித்த்பின் எனக்கு ஒரு செய்தியும் புகைப்படமும் வந்தது. என் மனைவியின் அக்காள் மகள் வீட்டில் ஒரு குட்டிப்பாம்பு வந்திருக்கிறது அதை அவர்கள் ஒரு பாட்டிலில் போட்டு விட்டனர் படம் கீழே 
குட்டியானாலும் படம் எடுக்கும் பாம்பு  பாட்டிலில்

உற்பத்தி தொடங்க பல விதமான மெஷின்கள் இம்போர்ட் செய்யப்பட்டன. அவற்றில் வெர்டிகல் டர்ரெட் என்னும் ஒரு வகை. பெரிய மெஷின் அவை ஃப்ரான்ஸ் நாட்டிலிருந்து  இறக்குமதி ஆனவை.BERTHIEZ MAKE உதிரி பாகங்களாக வந்தவற்றை ஒருங்கிணைக்கும் வேலையைச் செய்ய அந்தக் கம்பனியிலிருந்து ANDRE என்னும் பெயர் கொண்ட ஃப்ரென்ச்சுக்காரர் வந்திருந்தார். அவருக்குச்சுட்டுப்போட்டாலும் ஆங்கிலம் வராது.அது மட்டுமல்லாமல் ஆங்கிலேயர் என்றாலே கோபம் பொத்துக் கொண்டு வரும் பேசும் வார்த்தைகளில் விஷம் கக்குவது தெரியும் அவருடன் சேர்ந்து பணிச்செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பேச்செல்லாம் கிடையாது எல்லாமே செய்கைகள் தான் விளக்குவது சிரமம் என்று தோன்றினால் படம் போட்டுக் காண்பிப்பார். அவருடன் இருந்த காலத்தில் ஒரு சில ஃப்ரென்ச் வார்த்தைகள் கற்றேன். ஏன் ஆங்கிலேயரிடம் அவ்வளவு பகை என்று கேட்டதற்கு அவர் ஒரு EX NAVY MAN என்றும் இரண்டாம் உலகப்போரின் போது நேசப்படைகளில் ஒன்றான ஃப்ரான்ஸ் படையினரை முன்னுக்கு அனுப்பிவிட்டு அந்த ஆங்கிலேயர்கள் சதி செய்தனர் என்றும் கூறுவார் ஒரு முறை ஒரு ஸ்பானரோ ஏதோ இல்லாததால் வெள்ளையர்களிடம் கேட்கலாமா என்று கேட்டதற்கு அப்படிக்கேட்டால் தான் வேலை செய்வதை நிறுத்தி விடுவேன் என்று கூறினார்( அந்தக்கால நினைவுகள் தொடரும்) 

25 comments:

 1. அசைபோட நல்ல நினைவுகள்.

  ReplyDelete
 2. தொடர்கிறேன்.

  பழமையை நினைவு கூர்தல் இன்பம் என்றால் படித்தலும் இன்பம்தான்.

  நன்றி.

  ReplyDelete
 3. எவ்வளவு அனுபவங்கள்!

  எங்கள் ஏரியாவில் கூட பல நிறங்களில், பல அளவுகளில் பாம்புகள் பார்த்திருக்கிறேன். எங்கள் மோட்டார் ரூமுக்குள் ஒருமுறை ஒரு நல்ல பாம்பு புகுந்து செய்த கலாட்டாவை வீடியோவுடன் பதிவிட்டிருந்தேன்.

  ஃபிரெஞ்சுக் காரரின் மாறாத ஆங்கிலேய வெறுப்பு ஒரு ஆச்சர்யம்.

  ReplyDelete
 4. ஜூன் 6, தமிழ் இந்து நாளேட்டில், பாம்பு வளர்த்துப் பணத்தை அள்ளலாம்!

  என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரை...!

  “குறைந்த செலவில் அதிக லாபம் குவிக்கும் தொழிலாக கருநாக வளர்ப்பு வளர்ச்சியடைந்து வருகிறது.‘சிநேக் இந்தியா பார்ம்’ என்ற பெயரில் தமிழகத்தில் கருநாக வளர்ப்பு தொழிலை வெற்றிகரமாக நடத்திவரும் ஈரோடு பெருந்துறையைச் சேர்ந்த பாலா இதுபற்றி எழுதியுள்ள கட்டுரை:

  நான் இந்த பாம்பு பண்ணையை 2009-ம் ஆண்டு 5 ஜோடி குட்டிகளுடன் தொடங்கினேன். ஆரம்பத் தில் நிறைய தடுமாற்றங்களைச் சந்தித்தேன். பிறகு இது தொடர்பாக நிறைய பண்ணையாளர்களுடன் கலந்துரையாடிய பின் இதை எப்படி வெற்றிகரமாகச் செய்வது என்ற தெளிவைப் பெற்றேன்.

  அதை பின்பற்றியதிலிருந்து மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வருமானமாக பெற முடிகிறது. இன்று குறைந்த முதலீட்டில் நிறைய சம்பாதிக்க நினைக்கும் ஆட்களுக்கு இந்த தொழில் ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. இன்று தமிழகம் முழுவதிலும் பலர் இதுபற்றிய விவரங்களை பெற்று பாம்பு பண்ணை தொடங்க ஆலோசனை கேட்ட வண்ணம் உள்ளனர்.

  பண்ணைவைக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு எனது பண்ணையிலிருந்தே குட்டிகளை தந்து உதவுகிறேன்.

  இதற்கு ஆகும் செலவு:

  5 ஜோடி பாம்பு குட்டிகள் : ரூ.10,000

  25 வெள்ளை எலிகள் (தீவனம்) : ரூ.2,000

  கொட்டாய் செலவு : ரூ.10,000

  பாம்பு முட்டையை பொரிக்க

  உதவும் இன்குபேட்டர் : ரூ.60,000

  ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவான முதலீட்டில் ஆறே மாதங்களில் 5 லட்ச ரூபாய்

  வரை வருமானம் பெற வாய்ப்பு உள்ளது.

  குட்டிகளைத் தேர்வு செய்யும் முறை:

  குட்டிகளுக்கு பார்வைத் திறனும்,கேட்கும் திறனும் உள்ளதா, நல்ல கடிக்கும் திறன் உள்ளதா என கவனித்து வாங்க வேண்டும். 3 மாதத்துக்கு மேல் உள்ள குட்டிகளை தேர்வு செய்வதே புத்திசாலித்தனம். ஏனென்றால் அப்போதுதான் அவை அதிகமாக இறக்காது. குட்டிகளை வெயில் படாத இடமாக பார்த்து வளர்க்க வேண்டும்.

  5 ஜோடி பாம்புகள் வளர்ந்த பின் ஒவ்வொரு ஜோடியில் இருந்தும் மாதத்துக்கு 200 மில்லி விஷம் கிடைக்கும். 1 லிட்டர் பாம்பு விஷத்தின் இன்றைய சர்வதேச விலை ரூ.1 லட்சம். ஒவ்வொரு பாம்பும் தன் வாழ்நாளில் 20 லிட்டர் விஷத்தை உற்பத்தி செய்யும். இந்த ஐந்து ஜோடி பாம்புகளே 200 லிட்டர் விஷத்தை உற்பத்தி செய்யும். இதன் மூலம் 2 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

  மேலும் ஒவ்வொரு ஜோடி பாம்பும் மூன்று மாதத்துக்கு ஒருமுறை 30 முட்டைகள் வரை இடும். அவற்றை இன்குபேட்டரில் வைத்து பராமரித்தால் வருடத்துக்கு 4 முறை என்று ஆண்டொன்றுக்கு 600 பாம்பு குட்டிகள் கிடைக்கும். அவற்றை விற்பனை செய்வதன் மூலம் ரூ.60 லட்சம் சம்பாதிக்கலாம்.

  கேட்கவே தலை சுற்றுகிறதா? இது தவிர பாம்பின் தோல், மாமிசம் ஆகியவற்றையும் நல்ல விலைக்கு விற்கலாம்.

  ஆகவே குறைந்த முதலீட்டில் நிறைந்த லாபத்தை பெற எங்களை அணுகுங்கள். நிறைய பணத்தை அள்ளுங்கள்.

  தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:

  கோப்ரா கோபால்,

  1000/1 தண்டுமுட்டிப்பாளையம்,

  பெருந்துறை,

  ஈரோடு - 634717

  (ஸ்ஸப்ப்பாப்ப்ப்பபா... உங்களை நம்ப வைக்க எவ்வளவெல்லாம் எழுத வேண்டி இருக்கு. இப்படி ஒரு புருடா விட்டாலும் பணத்தை கொண்டு வந்து கொட்ட ஒரு பேராசை பிடித்த கூட்டமே இருக்கு)

  பின்குறிப்பு:

  ஒட்டக முட்டையை பொரிப்பது பற்றி அடுத்த கட்டுரை வெளியாகும். அதையும் தெரிந்துகொண்டு லட்சக்கணக்கில் பணத்தை அள்ளுங்கள்.”

  பகிரத் தோன்றியது.

  நன்றி.

  ReplyDelete
 5. பாம்புப் பண்ணை(!)க்குள் எப்படி தைரியமாக வேலை செய்தீர்கள்!..

  பாட்டிலின் உள்ளே அடைபட்ட நாகத்திற்கு எவ்வளவு கோபம் இருக்கும்!?..

  ஆங்கிலேயர் மீது பிரெஞ்சு மக்கள் கொண்டிருக்கும் கோபத்தைப் பற்றி நானும் படித்திருக்கின்றேன்..

  ReplyDelete

 6. நினைவுகளை நானும் தொடர்கிறேன்
  குட்டிப்பாம்பை பாட்டிலுக்குள் அடைப்பது பாவம் இல்லையா....

  ReplyDelete
 7. சுவாரஸ்யமான நினைவுகள்! குட்டிப்பாம்பு பாட்டிலுக்குள் இருந்தால் படம் எடுத்து பயமுறுத்துகிறது!

  ReplyDelete
 8. சுவாரஸ்யமான அனுபவங்கள்
  /நினைவுகள்
  ஆர்வத்துடன் தொடர்கிறோம்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete

 9. @ டாக்டர் கந்தசாமி
  அது என்னவோ நல்ல நினைவுகளே மீண்டும் மீண்டும் வருகிறது வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 10. @ ஊமைக்கனவுகள்
  பழமையை நினைவு கூர்தல் இன்பம் என்றால் படித்தலும் இன்பம்தான்., என்றால் எழுதுவதும் இன்பம் நன்றி ஐயா.

  ReplyDelete

 11. @ ஸ்ரீராம்
  நான் இதுவரை அடித்துக் கொன்றபாம்புகள் நான்குக்கு மேலிருக்கும் மனைவியின் அக்காள் மகள் வீட்டில் வந்த பாம்பு வேறெங்கோ கொண்டு விடப்பட்டது.பாம்புகள் பற்றி நான் ஒரு பதிவு எழுதி இருந்தேன் உங்களிடம்ம் அந்த வீடியோ இன்னும் இருக்கிறதா. வருகைக்கு நன்றி ஸ்ரீ.

  ReplyDelete

 12. @ ஊமைக்கனவுகள்
  கிட்டத்தட்ட ஒரு பதிவின் அளவுக்குப் பின்னூட்டம் திரு.வே நடனசபாபதி ஏமாற்றுவதும் ஒரு கலைதான் என்று எழுதி வருகிறார். அவர் பதிவில் ஈமூ கோழிகள் தேக்குமர விவசாயாம் எல்லாம் வந்தாட்விட்டது. பாம்புப் பண்ணை இனி வர வேண்டியது. இதைப் பார்த்தால் அது பற்றி எழுத மாட்டார். ஏற்கனவே வந்து விட்டதால். கடைசியில் சொன்ன விஷயங்களைப்படிக்கும் வரை இதில் ஏதோ கேட் இருபது தெரியவில்லைவருகைக்கு நன்றி ஐயா. உங்கள் பதிவில் பாம்பு குளம் வேறு நினைவுகளைத் தூண்டியது.

  ReplyDelete

 13. @ துரை செல்வராஜு
  பாம்புப் பண்ணைக்குள் நான் எங்கு போனேன் அந்தப் படம் உறவினரிடம் இருந்து வந்தது. ஆங்கிலேயர் மீது எனக்கும் கோபம் வருவது உண்டு. இன்னும் அவர்களை உயர்வாகவே எண்ணுபவர்கள். வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 14. உங்களது அனுபவங்களைத் தொடர்ந்து படித்து வருகிறோம். இன்று கொஞ்சம் பீதியுடன் படித்தோம், பாம்பின் காரணமாக.

  ReplyDelete

 15. @ கில்லர்ஜி
  குட்டிப்பாம்பை பாட்டிலுக்குள் அடைத்து எங்காவது கொண்டு போய் விடுவார்கள். என்போல் ஒருவன் முன் வந்திருந்தால் அது சாகடிக்கப் பட்டிருக்கும் வருகைக்கு நன்றி ஜி

  ReplyDelete

 16. @ தளிர் சுரேஷ்
  பாம்பு அதன் குணத்தை காட்டுகிறது. கூண்டிலும் சிங்கம் உறுமுவதில்லையா, வருகைக்கு நன்றி சார்

  ReplyDelete

 17. @ ரமணி
  சுவாரிசியமான அனுபவப் பகிர்வுகளும் தொடரும் தொடர்ந்து ஆதரவு அளிப்பதற்கு நன்றி சார்

  ReplyDelete

 18. @ டாக்டர் ஜம்புலிங்கம்
  என் பதிவைவிட ஊமைக்கனவுகளின் பின்னூட்டம் இன்னும் ரசிக்க வைக்கிறது. வருகைக்கு நன்றி ஐயா.

  ReplyDelete
 19. பாம்பிற்கு பணம்...!

  ஜோசப் விஜூ ஐயாவின் கருத்துரையும் சுவாரஸ்யம்...

  ReplyDelete

 20. @ திண்டுக்கல் தனாஅலன்
  வருகைக்கு நன்றி டிடி.

  ReplyDelete
 21. @ திண்டுக்கல் தனபாலன்
  மேலே த்னபாலன் தவறாக தட்டச்சாகி விட்டது பொறுத்தருளவும்

  ReplyDelete
 22. சுவாரஸ்யமான அனுபவங்களை பகிர்ந்தமைக்கு நன்றி!

  //கிட்டத்தட்ட ஒரு பதிவின் அளவுக்குப் பின்னூட்டம் திரு.வே நடனசபாபதி ஏமாற்றுவதும் ஒரு கலைதான் என்று எழுதி வருகிறார். அவர் பதிவில் ஈமூ கோழிகள் தேக்குமர விவசாயம் எல்லாம் வந்துவிட்டது. பாம்புப் பண்ணை இனி வர வேண்டியது. இதைப் பார்த்தால் அது பற்றி எழுத மாட்டார். ஏற்கனவே வந்து விட்டதால்.//

  ஐயா, பாம்பு பண்ணை பற்றி எனக்கு தெரியாது எனவே அதைப்பற்றி எழுதவில்லை/எழுதப்போவதும் இல்லை. எனது தந்தை அவர் இறக்கும் வரை பாம்பு கடிக்கு பச்சிலை கொடுத்து பல நூறு உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறார்.அதுபற்றி பின்னர் எழுதுவேன்.

  ReplyDelete

 23. @ வே.நடனசபாபதி
  ஐயா வணக்கம் நீங்கள் சில செய்திகளைப் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்கிறீர்கள் நான் என் நினைவுகளைப் பதிவாக்குகிறேன் வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 24. இன்றும் சில வெள்ளையர்கள் இந்தியாவைப். ப்ற்றி காட்டுத்தனமாக நினைக்கிறார்கள்.
  பாம்பு நல்ல தமாஷ். பிடித்த பாம்பையே மறுபடி கொண்டுவருவாரோ?
  ப்ரெஞ்சுக்காரர்களுக்கு ஆங்கிலேயரைக் கண்டால் ஆகாது.. பரஸ்பர உணர்வு.

  யுட்யூபில் fawlty towers கிடைக்கிறது. நேரம் கிடைத்தால் பாருங்கள். நகைச்சுவையான சீரியல்.

  ReplyDelete

 25. @ அப்பாதுரை
  வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி சார்

  ReplyDelete