தந்தையும் மகனும்
------------------------------
(ஞாயிற்றுக் கிழமை 21-06-2015 தந்தையர் தினம். அது சார்ந்து இது .என்பேரனுக்கும் என் மகனுக்கும் நடந்த ஓடப் பந்தயம் பார்த்து எழுதியது மீள்பதிவாக)
ஆடிவரும் மைந்தன் ஓடிவரக் கண்டு
ஓடிவந்தால் வீழ்ந்து விடுவாய் -காயம் படும்
கவனம் கவனம் என்றே பதறினாள்
ஒன்றே நன்றெனப் பெற்றெடுத்த தாய்.
இன்று நான் பள்ளியில் பந்தயத்தில்
வென்ற நாள் நானே முதல்வன், நானே முதல்வன்
எனை வெல்ல இங்கு யாருமில்லை என் வேகம் அதிவேகம்.
அப்பா, உன்னையும் நான் வெல்வேன்
பந்தயத்தில் என்னோடு ஓட நீ தயாரா.?
என்றே கேட்ட மகனிடம்
ஆறு வயதுச் சிறுவன் நீ ஒன்றும் அறியாத பாலகன்
உன்னோடு நான் ஓடினால் நானொன்றும் அறியாதவன்
என்றென்னைப் பழிப்பார்கள் நானில்லை ஓடுவதற்கு
என்னிடம் நீ தோல்வி காண விருப்பமில்லை எனக்கு
என்றே அப்பனும் மழுப்பிட
ஒப்புக்கொள் உன்னால் ஓடமுடியாது
ஓட்டத்தில் என்னை வெல்ல முடியாது என்றே
தன கீர்த்தி நிலை நிறுத்த சவாலுக்கு அழைத்தான் மகன்.
மகனை ஓட்டத்தில் வெல்ல விட மகிழ்ச்சிதான்
இருந்தாலும் வாழ்க்கைப் பந்தயத்தில் பங்கு பெற
இதையும் ஒரு பயிற்சியாகக முயற்சிப்போமே
என்றே மகனைப் பெற்றவனும் முனைந்து வந்தான்.
ஓடுகளமும் தூரமும் ஒழுங்காக நிர்ணயிக்கப்பட
ஓட்டமும் துவங்க இலக்கு நோக்கி முன்னேறினான் தந்தை.
அப்பனை முந்தவிட்டால் நாம் தோற்போம் ,அது
நடக்கக் கூடாது என்றே வேகமெடுத்தான் சின்னவன்.
அன்னவனை சற்றே முந்தவிட்டும் பின் தான் முந்தியும்
பந்தய நுணுக்கங்கள் நன்றாய் புரிய விட்டபின்
மகனை வெல்ல விட்டான் ,மகனின் வெற்றியில்
மனம் மகிழ்ந்து தோற்று நின்றான் தந்தை.
என்னை வெல்ல இங்கு யாராலும் முடியாது,
நானே முதல்வன், நானே முதல்வன் என்றே
முழங்கி ஓடிய மகனைப் பரிவுடன் கண்ட தந்தை
தன்னையும் அறியாமல் தன தந்தையை எண்ணினான்.
இதுபோல் தானே அன்றொரு நாள் என்
தந்தை என்னை ஓடவிட்டு தன தோல்வியில்
மகிழ்ந்தபோது நானும் எண்ணினேன்.
தோல்வி கண்டு துவளாது வெற்றியைத் துரத்த
என்னை முந்தவிட்டு ஊக்குவித்த தந்தையின்
அன்பும் நேசமும் அன்று அறிந்திலேன் இன்று
உணர்கிறேன் என்று எண்ணவும் அவன் இதழ்களில்
விரிகிறது ஒரு முறுவல், கண்களில் கசிகிறது இரு துளிக் கண்ணீர்.
============================================
நல்ல நினைவுகள்.
பதிலளிநீக்குஉணர்வைத் தொட்ட நினைவுகள்.
பதிலளிநீக்குததந்தையர் தின வாழ்த்துகள்.
பதிலளிநீக்குன்னையும் அறியாமல் தன் தந்தையை எண்ணினான் //
பதிலளிநீக்குyes...
ஐயா வணக்கம்.
பதிலளிநீக்குகவிதை நடையில் நினைவுகள் சுழித்தோடுகின்றன.
தன்னைப் பிறர் விஞ்சி மேலே செல்லும் போது யாருடைய மனமும் ஒருகணம் துணுக்குறும்.
முயல்வின்மைகளினாலோ, இயலாமையாலோ போதாமையாலோ அது நிகழ்வதை ஒன்றும் செய்ய முடியாவிட்டால் ஆதங்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும்.
ஆனால் தன்னை விஞ்சி ஒருவன் வளரும்போது மகிழ்தல் என்பது தன்மக்களிடத்து மட்டும்தான் நடக்கிறது.
தங்கள் இடுகை நோக்க,
“தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது ”
என்பதை இப்படியாகப் பொருள்காண்கிறது மனம்.
நன்றி.
ஐயா வணக்கம் .
பதிலளிநீக்குதந்தையர் நாள் வாழ்த்துகள் .
இன்று உள்ள ;நிலையில் தந்தையர்கள்
ஆறாம் விரலாய் போனார்கள் .
காலச்சக்கரம் மனிதனை
தன்னல பேயாக மாற்றித்த்
தொலைத்து விட்டது .
மனிதன் மனிதத்தை
இழந்து வருகிறான்.
ஐயா வணக்கம் .
பதிலளிநீக்குதந்தையர் நாள் வாழ்த்துகள் .
இன்று உள்ள ;நிலையில் தந்தையர்கள்
ஆறாம் விரலாய் போனார்கள் .
காலச்சக்கரம் மனிதனை
தன்னல பேயாக மாற்றித்த்
தொலைத்து விட்டது .
மனிதன் மனிதத்தை
இழந்து வருகிறான்.
>>> கண்களில் கசிகிறது இரு துளிக் கண்ணீர் <<<
பதிலளிநீக்குதந்தையின் நினைவினில் எல்லாருக்கும் இந்த நிலைதான்..
பதிலளிநீக்கு@ டாக்டர் கந்தசாமி
வருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@ எஸ்.பி. செந்தில் குமார்
ஒரு தந்தையாகி இருந்த நான் என் மகனை ஒரு தந்தையாகக் கண்டதன் விளைவே இப்பதிவு. வருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
வாழ்த்துக்கு நன்றி மேம்
பதிலளிநீக்கு@ திண்டுக்கல் தனபாலன்
அன்று மகன் இன்று தந்தை. உணர்ச்சிகளின் காரணம் வருகைக்கு நன்றி டிடி.
@ ஊமைக்கனவுகள்
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்ஹு மிக்கப்பின்னூட்டத்துக்கும் நன்றி ஐயா.
பதிலளிநீக்கு@ மாலதி
எக்செப்ஷன்ஸ் விதியாகாது. எல்லாத்தந்தையரையும் ஆறாம் விரலாக எண்ண முடியாது. வருகைக்கு நன்றி மேம்
பதிலளிநீக்கு@ துரை செல்வராஜு
இன்றும் என் தந்தை நினைவில் என் கண்கள் பனிக்கும் வருகைக்கு நன்றி ஐயா ,
பதிலளிநீக்கு@ மாலதி.
வெகு நாட்களுக்குப்பின் வலைப்பக்கமா?
பதிலளிநீக்குகடைசி வரிகளில் கண்ணீர் துளிர்த்தது ஐயா.
பதிலளிநீக்கு@ கில்லர்ஜி
கடைசி வரிகள் உணர்வு. நடுவில் வாழ்வியல் பாடம் வருகைக்கு நன்றி ஜி
ஒவ்வொரு தந்தையும் தன் மகன் தன்னை விஞ்சி இருக்கவேண்டும் என நினைப்பதை அழகாய் சொல்லியிருக்கிறீர்கள். தந்தையார் நாள் வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஅருமை. தந்தை மீது பாசம் கொள்ள ஒரு வயது, கதாநாயகனாக நினைக்க ஒரு வயது, எதிரியாக எண்ணிச் சலிக்க ஒரு வயது, மீண்டும் உண்மையை உணர ஒரு வயது....
பதிலளிநீக்குஇதுபோல் தானே அன்றொரு நாள் என்
பதிலளிநீக்குதந்தை என்னை ஓடவிட்டு தன தோல்வியில்
மகிழ்ந்தபோது நானும் எண்ணினேன்.
தந்தையின் மகிழ்ச்சி பிள்ளையின் வெற்றியில் அல்லவா
நெகிழ்ந்து போனேன் ஐயா
தந்தையர் தின வாழ்த்துக்கள்
விட்டுக் கொடுத்து மகிழும் தந்தையின் பாச உணர்வை சிறப்பாக்கியது பதிவு! நன்றி!
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ வே.நடனசபாபதி
அருமையான புரிதலுக்கு நன்றி ஐயா.
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்
எனக்கு எல்லா அனுபவங்களும் இருந்ததில்லைஎன்றும் என் தந்தை என்னை ஒரு நண்பன் போல்தான் நடத்தி இருந்தார். வருகைக்கு நன்றி ஸ்ரீ.
பதிலளிநீக்கு@ கரந்தை ஜெயக்குமார்
பிள்ளைகளின் வெற்றி எப்போதும் தந்தைக்கு இனியதே. வருகைக்கு நன்றி சார்.
பதிலளிநீக்கு@ தளிர் சுரேஷ்
தெளிவான புரிதலுக்கு நன்றி ஐயா.
தந்தை மகனாக. வித்தியாசமான முறையில் நல்ல அனுபவத்தைப் பகிர்ந்துள்ளீர்கள்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ டாக்டர் ஜம்புலிங்கம்
அவையத்து முந்தி இருப்பச் செயல் எனும் போது ஒரு தந்தை வாழ்வியலைக் கற்பிப்பதையும் கற்றதையும் உன்னி எழுதிய பதிவு வருகைக்கு நன்றி ஐயா.
அன்னவனை சற்றே முந்தவிட்டும் பின் தான் முந்தியும்
பதிலளிநீக்குபந்தய நுணுக்கங்கள் நன்றாய் புரிய விட்டபின்
மகனை வெல்ல விட்டான் ,மகனின் வெற்றியில்
மனம் மகிழ்ந்து தோற்று நின்றான் தந்தை. //
அற்புதம், ஒட்டுமொத்தமாய்!
பதிலளிநீக்கு@ செல்ல பாண்டியன்
முதல்(?) வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா. தொடர்ந்து வாருங்கள்
தந்தை தனக்கு கற்றுத்தந்ததை பிசகாமல் மகனுக்குக் கற்றுத்தந்து பெருமைப்படும் தந்தைமை... சிறப்பான ஆக்கம். அழகான எழுத்து. பாராட்டுகள் ஐயா.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ கீதாமஞ்சரி
உங்கள் பாராட்டு பெருமை சேர்க்கிறது நன்றி மேம்
@ யாதவன் நம்பி
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றி, இதுபோல் வலைச்சரத்தில் அறிமுகமாகும் பதிவர்களுக்கும் தெரியப் படுத்துகிறீர்களென்று நம்புகிறேன்