வெள்ளி, 19 ஜூன், 2015

அறிந்து கொள்ள புரிந்து கொள்ள.....



                                 அறிந்து கொள்ள.....புரிந்து கொள்ள....
                                 --------------------------------------------------



நிகழ்ந்த விக்ருதி ஆண்டு உற்றாரும் உறவினரும் குறித்த நாள் ஒன்றில்  திருவளர்ச் செல்வன் சிவராமனுக்கும், திருவளர்ச் செல்வி ராஜேஸ்வரிக்கும், நடை பெற்ற திருமணத்துக்கு சுற்றம் சூழ வந்திருந்து வாழ்த்தியருள, மாதரார் தங்கள் மகளென்று பார்த்திருக்க, மாப்பிள்ளை முன் வந்து மணவறையில் காத்திருக்க , காதலாள் மெல்லக் கால் பார்த்து நடந்து வர, கன்னியவள் கையில் கட்டிவைத்த மாலை தர, காளைத் திருக்கரத்தில் கனகமணி சரமெடுக்க, ஆனந்தம் பாடு என ஆன்றோர் குரல் பிறக்கக்.,கொட்டியது மேளம், குவிந்தது கோடிமலர், மனை வாழ்க, துணை வாழ்க,குலம் வாழ்க எனவே கட்டினான் மாங்கல்யம். 
திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர். இரு உயிர்கள் இணைந்து மூன்றாவது உயிருக்கு அடிகோல அனுமதி வழங்குவதே திருமணத்தின் தாத்பர்யம். ஆணும் பெண்ணும் நேரமறிந்து இணைந்தாலேயே மூன்றாவது உயிருக்கு வித்திட்டதாகும்..விலங்கினங்கள் இனப் பெருக்கத்துக்காக மட்டுமே நேரமறிந்தே கூடும்..அன்பு பரிவு எல்லாம் ஒரு கட்டுக்குள்தான் இருக்கும்.,அதிகம் கட்டுப் பாடுகளை வகுத்துக் கொள்வதில்லை. பெற்றுப் போட்டவை தன் காலில் நிற்கும்வரை மட்டுமே அரவணைப்பு, பாதுகாப்பு என்பதெல்லாம். ( மேலை நாடுகளில் மக்களிடம் மெல்ல மெல்ல அப்படி ஒரு நிலை உருவாகி வருகிறதாமே.! இருக்கிறதாமே.!  HEY.! THAT IS BESIDES THE POINT.. OH.! AS IF EVERYTHING WRITTEN IS TO THE POINT AND RELEVANT.!) ஆனால் மனித குலத்தில் திருமணம் இனப் பெருக்கத்துக்குக் கொடுக்கப் படும் லைசென்ஸ். அனுமதி. ஒருவரைச் சார்ந்து ஒருவர் வாழ்ந்து, அன்பும் அறமும் பெற்று இல்வாழ்க்கையைப் பண்பும் பயனும் உடையதாகச் செய்யக் கிடைக்கும் அவகாசம். இதெல்லாம் தெரிந்ததுதானே, எதற்காக இந்தப் பீடிகை எல்லாம் என்று அலுத்துக் கொள்வது புரிகிறது. ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் நடந்தது சிவராமன் ராஜேஸ்வரி திருமணம்.எதிர்பார்ப்புகள் உற்றம் சுற்றத்துக்கு மட்டுமல்ல. அவனுக்கும் அவளுக்கும் இருந்ததும் நியாயமே.


ஊரும் உலகமும் கொடுத்த அனுமதியின் பேரில் இருவரும் இணைய அன்றைய மாலைப் பொழுதில் ரம்யமான சூழல் ஏற்படுத்தப் பட்டிருந்தது.
கையில் கையும் வச்சு, கண்ணில் கண்ணும் வச்சு, நெஞ்சின் மன்றம் கொண்டு சேரும் நன் நேரம் சப்ர மஞ்சத்தில் ஆட , சொப்ன லோகத்தில் கூட, ப்ரேமத்தின் கீதங்கள் பாட, சொர்க்கத்தில் ஆனந்தம் தேட, சயன நேரம் மன்மத யாகம்,புலரி வரை நமது யோகம் என்றே சிவராமன் காத்திருந்தான். அவன் எப்படி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவனுக்கு ஏராளமான புத்திமதிகளும் அறிவுரைகளும் கொடுக்கப் பட்டிருந்தன. ஒரு வித ஆர்வமும் பயமும் ஒருசேரக் காத்திருந்தான்.( ஆணுக்கு மட்டும் பயமில்லையா என்ன.?)
பெண்ணுக்கு உன் மேல் மதிப்பு ஏற்படும்படி நடந்துகொள். அனாவசியத்துக்கு அவளை பயமுறுத்திவிடாதே. கொஞ்சம் கொஞ்சமாக அவளிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே, அவளை  உன்பால் ஈர்க்கவேண்டும். முதலிரவு முக்கியமானது .கவனமாய் நடந்து கொள்.
வந்ததும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று மனதிற்குள் ஒரு முறை ஒத்திகை பார்த்துக் கொண்டான் சிவராமன். மெல்லக் கதவு திறக்க தோழிகளின் கிண்டல்களும் கேலிகளும் தொடர அழகுப் பதுமையென ராஜேஸ்வரி உள்ளே நுழைந்தாள். ரிசப்ஷன் நேரத்தில் அணிந்திருந்த நகைகளில் பெரும்பாலானவை காணப்பட வில்லை. பட்டுச்சேலைக்குப் பதில் நல்ல நூல் புடவையே அணிந்திருந்தாள். திட்டமிட்டே உள்ளே அனுப்பப் பட்டிருந்தாள். ‘ செதுக்கிய சிலைபோல் இருக்கும் இவள் எனக்குச் சொந்தம் ‘என்னும் நினைப்பிலேயே அவள் அருகில் சென்று அவள் கையைப் பிடித்தான். ’ஜில்’ என்றிருந்தது. எல்லாம் தெரிந்திருந்தும் அவள் பெயர் முதற்கொண்டு ஒவ்வொரு விஷயமாக அவளிடம் பேச முயன்றான். அவள் அவனிடம் சரளமாகப் பேசவில்லை.பெண்களுக்கே உரித்த நாணமாயிருக்கும் என்று அவன் பொருட்படுத்தவில்லை. சிறிது நேரம் கழிந்தது. ‘ அணைக்கட்டுமா’ என்றான். ’ஹாங்’ என்று அவள் திடுக்கிட்டாள். ‘இல்லை; விளக்கை அணைக்கட்டுமா என்றேன்’ என்று சமாளித்தான். விளக்கு அணைத்து சில வினாடிகள் இருவரும் அசைவில்லாமல் இருந்தனர். சிவராமன் முதலிரவை இழக்க விரும்பவில்லை. மெள்ள அவளைக் கட்டி அணைத்தான். அவன் உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது போல் உணர்ந்தான்.
ராஜேஸ்வரி இணங்குகிறாற்போல் தோன்றவில்லை. அணைப்பை சற்றே இறுக்கினான். திடீரென்று அவனுள்ளே ஏதொ வெடித்ததுபோல் இருந்தது. அவன் உடலின் வெப்பம் தணிந்து உடல் இறுக்கம் குறைந்து தளர்ந்தது. அவளை அணைப்பிலிருந்து தளர்த்தினான்.இது அவன் சற்றும் எதிர்பார்க்காதது. கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு ஒரு பயம் பிறந்தது ‘ ஏன் என்னால் அவளை அடைய முடியவில்லை. அவளது தயக்கம் புரிந்தாலும் தயக்கம் விலகிய பிறகும் என்னால் அவளை அடைய முடியுமா?கேள்விகள் மனசைக் குடைய மறுபடியும் அவளை லேசாக அணைத்தான். அவள் உடல் லேசாக வெடவெடக்க ஆரம்பித்தது. ‘மயிலே மயிலே இறகு போடு என்றும் போடாவிட்டால் பறிக்க வேண்டியதுதான் கைகள் அவளது உடலின் எல்லா பாகங்களிலும் நகர ஆரம்பித்தது. ராஜேஸ்வரி கொஞ்சமும் இணங்குவதாகத் தெரிய வில்லை. ‘ அவள் பெண் அப்படித்தான் இருப்பாள் நான் ஆண் என்னை என் சக்தியை நிலை நாட்ட வேண்டும் ‘ என்று மனதில் உறுதி கொண்டு அவளை நெருக்கினான். மறுபடியும் அவனுள்ளே ஏதோ நிகழ்ந்தது. உடல் இறுக்கம் தளர்ந்தது.சக்தியெல்லாம் வடிந்து விட்டது போல் உணர்ந்தான். சொர்க்கத்தில் ஆனந்தம் தேட சயன நேரம் மன்மத ராகம் புலரிவரை யோகம் என்று கனவு கண்டவன் தான் எங்கோ மேலிருந்து கீழே வீழ்ந்து விட்டதாக எண்ணினான். அவள்தான் அப்படி என்றால் எனக்கு என்ன ஆயிற்று, கடவுளே இது என்ன சோதனை. திருமணம் உடல் இன்பம் எல்லாம் இனி கனவுதானா என்றெல்லாம் எண்ணி மறுகினான். விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் ராஜேஸ்வரி எழுந்து விட்டாள். இரவெல்லாம் உறக்கம் இல்லாமல் அவதிப் பட்டவன் அயர்ந்து தூங்கினான்.

காலையில் வெகு சீக்கிரமாக எழுந்துவிட்ட ராஜேஸ்வரியை குளியலறைக்குக் கூட்டிக் கொண்டு போய் அவளையும் அவளது உள்ளாடைகளையும் பெரியவர்கள் சோதித்தனர். ‘எல்லாம் நல்ல படியாக இருந்ததா ‘என்ற கேள்விக்கு உம்..உம்.. என்று பதில் கூறி அகன்றாள்.
காலை உணவு முடித்துக் கொண்டு முதல் வேலையாக சிவராமன் காணச் சென்றது அவனுடைய நெருங்கிய நண்பனும் திருமணம் முடித்து இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையுமான கோபால்ன் வீட்டிற்குத்தான். ‘ என்ன சிவராமா, திருமணம் நடந்த மறு நாள் காலையிலேயே வந்திருக்கிறாய். ஏதாவது ப்ராப்ளமா.?என்று கேட்ட கோபாலனிடம் நடந்ததை எல்லாம் கூறி கிட்டதட்ட அழுதே விட்டான்.
 ‘ சரி போகட்டும் . நான் கேட்கும் கேள்விகளுக்கு சரியாக பதிக் சொல்லிக் கொண்டு வா,
சரி. கேள் “
நீ எப்பொழுதாவது சுய இன்பத்தில் ஈடு பட்டிருக்கிறாயா.?
“ என்ன விளையாடுகிறாயா.? அதெல்லாம் தவறு என்று எனக்குத் தெரியும்.
 “நீ அப்படி ஏதாவது செய்திருந்தால் தவறு ஒன்றுமில்லை. உன்னைப் பற்றி நீயே கொஞ்சம் தெரிந்து கொண்டிருப்பாய். போகட்டும்.ஆண்குறிக்கு CIRCUMSITION என்னும் அறுவை சிகிச்சை பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறாயா.? ஆண் உறுப்பைச் சுற்றியுள்ள உறை போன்ற தோல் புண்ர்வின் போது மேலே செல்ல வேண்டும் இல்லாவிட்டால் உணர்வு ஏற்படும் போதே விந்து வெளியேறி உனக்கு ஏற்பட்ட அனுபவம் சாத்தியக் கூறாகும். நீ என்ன செய்கிறாய் என்றால் முதலில் ஆண் உறுப்பைச் சுற்றியுள்ள தோல்   உறை மேலும் கீழும் போக முடிகிறதா என்று நீயே சோதனை செய்து கொள். பிறகு ஒரு நல்ல மருத்துவரை அணுகி CIRCUMSITION  தேவையா என்று அறிந்து கொள். ,பிறகென்ன இன்பத்த்தின் எல்லைக்கே செல்ல முடியும்.


“ ஆனால் ராஜேஸ்வரிக்கும் உடலுறவில் சிறிதும் ஆர்வம் இருப்பது போல் தெரிய வில்லையே “
“ அது உறவு பற்றிய பல விஷயங்களை அவள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கலாம். வேண்டாதது எல்லாம் கூறப்பட்டு உடலுறவு மேல் அவளுக்குஒரு வெறுப்போ பயமோ இருக்கலாம். ஆணின் ஆதிக்கம் ,குழந்தைப் பேறு குறித்த பயம் என்று என்னவெல்லாமோ ஆழ்மனதில் உறங்கிக் கிடக்கலாம். இவை எல்லாம் ஒரு பெண் FRIGID  ஆக இருப்பதற்குக் காரணமாகலாம்.
 இதல்லாமல் சாதாரணமாக பெண்கள் உடலுறவுக்குத் தயாராக நேரம் பிடிக்கும். ஆண், பெண் இருவரின் அணுகுமுறையும் உடலுறவு என்று வரும்போது வித்தியாசமானது. இருவரும் ஒருசேர இன்பம் அனுபவிப்பது பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டிய விஷயம். ஆணும் பெண்ணும் புரிந்து கொள்ளல் மிக அவசியம். வெறுமே இன விருத்திக்காக உடல் உறவில் ஈடுபட மனிதன் விரும்புவதில்லை. இந்த விஷயத்தில் விலங்கினத்திட மிருந்து மனிதன் வெகு தூரம் வந்து விட்டான். எதற்கும் கவலைப் படாதே. இதுவும் கடந்து போகும். “ என்றெல்லாம் ஆறுதல் கூறி கோபாலன் ,சிவராமனை அனுப்பி வைத்தான்.

சில மாதங்கள் கழித்து கோபலன் சிவராமன் ராஜேஸ்வரி தம்பதியர் வீட்டுக்கு வந்தபோது
காது கொடுத்துக்கேட்டேன்
குவா குவா சப்தம்
இனி கணவனுக்குக் கிட்டாது
அவள் குழந்தைக்குத்தான்  முத்தம்
என்ற பாட்டு சப்தம் கேட்டு புன்முறுவலுடன் திரும்பி விட்டார்.
( ஆண்களிடம் IMPOTENCE  பெண்களிடம் FRIGIDITY  போன்ற குறைபாடுகள் பற்றி அதிகம் விவாதிக்கப் படுவதில்லை. மனதிற்குள் குமுறி வாழ்க்கையில் துன்பம் அனுபவிப்போர் சிலர் எனக்குப் பரிச்சயம் உண்டு. ஒரு விழிப்புணைச்சிக் கதையாக இதனைப் பதிவிடுகிறேன். )                        :      .               .                                  .                                    

29 கருத்துகள்:

  1. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் - எனது நண்பர் ஒருவருக்கும் இதே பிரச்னை..

    அங்கே - ராஜேஸ்வரி படித்த பெண்ணாக இருந்ததால் - பக்குவமாக விஷயத்தைக் கையாண்டாள்..

    விளைவு - வெற்றிக் கனியைப் பறித்தான் - சிவராமன்!..

    நல்லதொரு அணுகுமுறையால் - குடும்பம் காக்கப்பட்டது!..வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  2. முக்கிய தகவலை நல்ல ஒரு விழிப்புணர்ச்சி கதையாக தந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

  3. திருமணத்திற்கு முன்னே
    சொல்லப்பட்டிருக்கவேண்டிய விஷயம்
    சொல்லப்படாததால் அறிந்து கொள்ளாததால்
    சிலருடைய வாழ்வில் இதுபோல் சிறு தடுமாற்றம்
    நேர்ந்து பின் சரியாவதைக் கேள்விப்பட்டிருக்கிறேன்

    சொல்லிச் சென்ற விதம் அருமை

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. பிரச்சினையை மிகவும் நாசூக்காக கையாண்டிருக்கிறீர்க்ள. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  5. ஒரு நிகழ்வை எதிர்கொள்வது என்பது ஒரு புறமிருக்க அதனைப் பகிர்வது என்பது மிகவும் சிரமம். தாங்கள் அனைவருக்கும் புரியும் வகையில் பகிர்ந்துள்ளீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  6. விழிப்புண்ர்வுக் கதை ஐயா
    தாங்கள் எடுத்தாண்ட விதம் நன்று
    நன்றி

    பதிலளிநீக்கு
  7. நல்லதொரு விழிப்'புணர்வு'க் கதை! :)))))

    சொல்லிக் கொடுத்து வருவதல்ல மன்மதக் கலை என்பார்கள். சிலருக்கு இதைவிடவும் சிறிய விஷயங்கள் பெரிய பிரச்னையாக இருந்ததைக் கண்டதுண்டு.

    பதிலளிநீக்கு

  8. இந்தப்பதிவு பலருக்கும் பயன் பெறும் நல்லதொரு தகவலே...

    பதிலளிநீக்கு

  9. @ துரை செல்வராஜு,
    எப்போதுமே புனைவுக் கதைகளிலும் ஒரு உண்மைத்தனம் இருக்க வேண்டும் என்பது என் கருத்து, வருகைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  10. @ வே.நடனசபாபதி
    கதையாக எழுதியதே அது அதிக வாசகர்களைச் சென்றடையும் என்னும் நம்பிக்கையில்தா ஐயா. வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு

  11. @ திண்டுக்கல் தனபாலன்
    வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி டிடி.

    பதிலளிநீக்கு

  12. @ ரமணி
    பாலியல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் மிகவும் அரிதாகவே பேசப் படுகின்றன. அது பற்றி எழுதுவதும் கத்தி முனைமேல் நடப்பது போல. பாராட்டுக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு

  13. @ டாக்டர் கந்தசாமி
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  14. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    இந்த மாதிரி நிகழ்வுகளை எதிர்கொள்ள நல்ல புரிதல் உள்ள சுற்றத்தவர் வேண்டும் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சார்.

    பதிலளிநீக்கு

  15. @ கரந்தை ஜெயக்குமார்
    வருகை தந்து ஊக்கு விப்பதற்கு நன்றி ஐயா,

    பதிலளிநீக்கு

  16. @ ஸ்ரீராம்
    வருகை தந்து கருத்துப் பகிர்ந்தமைக்கு நன்றி ஸ்ரீ

    பதிலளிநீக்கு

  17. @ கில்லர்ஜி
    ஆனால் இப்பதிவுக்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை ஏமாற்றமளிக்கிறது வருகைக்கு நன்றி ஜி

    பதிலளிநீக்கு
  18. மிக அருமையான பதிவு. செக்ஸ் பற்றி குறைவான அறிவும். அதைப் பற்றி பேச அதிக கூச்சப்படும் ஒரு சமுதாயத்தில் இது அவசிய தேவையான பதிவு. நன்றி அய்யா!

    பதிலளிநீக்கு

  19. @ செந்தில் குமார்
    உங்கள் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி சார்

    பதிலளிநீக்கு
  20. மீள் பதிவோ?
    இந்தத் தலைமுறை எவ்வளவோ முன்னேறியிருப்பதாக நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு

  21. @ அப்பாதுரை
    இந்த சமூகம் எவ்வளவோ முன்னேறி இருந்தாலும் அடிப்படையில் தங்கள் பாலியல் குறைகளை வெளியில்கூறிக்கொள்ளத் தயங்குகிறார்கள் என்றே தோன்றுகிறது, உங்கள் நினைவாற்றலுக்கு ஒரு ஷொட்டு கொடுத்துக் கொள்ளுங்கள் .வருகைக்கு நன்ரீ ஸாஆற்

    பதிலளிநீக்கு
  22. உண்மையா தெரியாது. பெங்களூரு நண்பர் ஒருவர் மகனுடன் பெண் பார்க்கப் போன போது பெண்ணும் பிள்ளையும் தனியாகப் பேசுகையில் உடலுறவில் பையனுக்கு நாட்டம் உண்டா என்று வெளிப்படையாகக் கேட்டாளாம் பெண்.

    பதிலளிநீக்கு

  23. @ அப்பாதுரை
    நான் என்முந்தைய மறுமொழியில் கூறி இருந்தது பொதுவான கருத்து. நீங்கள்குறிப்பிடும் மாதிரியான பெண்களும் இருக்கலாம் மீள் வருகைக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  24. இந்தக் காலத்திலுமா விவரம் இல்லாமல் இருக்கிறார்கள்?

    பதிலளிநீக்கு

  25. @ துளசி கோபால்
    சிலர் அதி விவரமுடன் இருக்கிறார்கள் மேலே அப்பாதுரையின் பின்னூட்டம் பார்க்கவும் வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  26. அன்புடையீர்,

    தங்களது தளம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வருகைதந்து சிறப்பிக்கவும்.

    http://blogintamil.blogspot.in/2015/08/blog-post_14.html

    அன்புடன்,
    எஸ்.பி.செந்தில்குமார்

    பதிலளிநீக்கு
  27. பாலியல் தொடர்பான அறிவு நம் மக்களிடையே குறைவாக இருப்பதற்கு நம் சமுதாயக் கட்டமைப்பும் ஒரு காரணம். ஆனால் இங்கு ஆஸியில் பதினாறு வயது ஆண் பெண் பிள்ளைகளுக்கு பாலியல் கல்வி கட்டாயமாகக் கற்பிக்கப்படுகிறது. கர்ப்பம் தவிர்க்கும் முறை, ஆணுறைகளைப் பயன்படுத்தும் முறை போன்றவற்றை ஆசிரியர்களே கற்றுத்தருகிறார்கள். பாதுகாப்பான உடலுறவுக்குப் பிள்ளைகளை இப்போதிலிருந்தே தயார்படுத்துகிறார்கள். ஆரம்பத்தில் எனக்கு இது அதிர்ச்சியாக இருந்தாலும், வாழும் சமுதாயத்தில் வாழத் தேவையான பாடத்தைத்தானே அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள் என்று மனத்தைத் தேற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

    கிராவின் கதைகளில் இதுபோன்ற பாலியல் தொடர்பான சங்கதிகள் கதையின் போகிற போக்கில் வந்துவிழும். அதைப் போல இங்கு சமுதாயத்தில் பலர் எழுதவும் வெளியில் பேசவும் பயன்படும் ஒரு விஷயத்தை மிக அழகாக கதையில் வெளிப்படுத்தியுள்ளீர்கள். மனமார்ந்த பாராட்டுகள்.

    மருத்துவர் முருகானந்தன் அவர்களின் தளத்திலும் இதுபோன்று பாலியல் சார்ந்த பல சந்தேகங்களையும் பயங்களையும் மருத்துவ அடிப்படையில் தெளிவுபடுத்துவது பாராட்டுக்குரியது.

    பதிலளிநீக்கு

  28. @ கீதமஞ்சரி
    பாலியல் தொடர்பான அறிவு நம் மக்களிடையே குறைவாக இருக்கக் காரணம் நம் சமூகக் கட்டமைப்பே. பள்ளியில் கற்றுக் கொடுக்கப் போனால் தவறாகப் புரிந்து நடக்க வாய்ப்புகள் அதிகம்.சமூகக் கட்டமைப்பில் தெரிந்து கொண்டு செயல் படுதல் அவசியம் ஏதோ எனக்குப் பட்டதை ஒரு விழிப்புணர்வுக் கதையாக்கி இருக்கிறேன் வலைச்சரம் மூலம் வந்தீர்களென்று நினைக்கிறேன் வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு