போய்ச்சேர் வீடு நோக்கி.....
--------------------------------------
காலாற நடை பயிலப் பூங்கா சென்றிருந்தேன்.
ஆங்கே, பொன்காட்டும் நிறம் காட்டிப்
பூ காட்டும் விழி காட்டி, இரு தனங்கனக்க,
இடையொடிய மனங்கிளர்க்க மாதொருத்தி,
கண் காட்டி மொழி பேசி,ஆடவர் மனங்கனக்க
விழியாலேவலைவீசி வழி நோக்கிக் காத்திருந்தாள்காலன் கயிறு கொண்டு கடத்திச் செல்லக்
காத்திருக்கும் காலம்தான் என்றாலும் உள்மனதில்
காமம்தான் முற்றும் ஒழியாத மன நிலையில்
நெஞ்சே நீயும் எத்தனை நாள்நெருப்பில் மூழ்கிடுவாய்
தஞ்சமாகத் துணையுடனே தழைக்கும்
பூஞ்சோலை இங்கிருக்க நீ அதனில்கொஞ்சவே
எண்ணுகின்றாய்,இது த்குமோ, முறையோ முரணன்றோ?
எண்ணிப் பார்க்கிறேன் எனக்கென்ன வயசு
எண்ணில் அடங்குவதோ மனசின் வயசு
காதலுடன் கழிந்த காலம் உன்னும்போது
உணர்கின்றேன் எனக்கென்றும் இளமைதான் என்று.
என்னதான் நடக்கும் நோக்கலாமே என்றே எழுச்சியுடன்
ஓரடி ஈரடி நாலடி நான் நடந்தவள் முன் செல்ல
எனைக் கண்டெழுந்தவளிடம் நானறியாதே கூறிவிட்டேன்
உள்ளம் சொன்னதை அநுபவம் கற்றதை..
பொய்க் கனவாய்ப் புகுந்துன் பெண்மை புணர்ந்து
மெய்க்கனவாய் ஆக்கிடுவர் உன் இளமையதை.
கூத்தாள் எனக் கொள்வர், இரவி மறையுமுன் உன்
ஆத்தாள் உனைத் தேடுமுன் போய்ச் சேர் வீடு நோக்கி.
---------------------------------------------
( இது ஒரு மீள்பதிவு)
>>> உன் ஆத்தாள் உனைத் தேடுமுன் போய்ச் சேர் வீடு நோக்கி!..<<<
பதிலளிநீக்குகவிதை முழுதும் நற்பண்பின் மணம் வீசுகின்றது..
ரசித்தேன்.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குகவிதையின் கடைசி வரி நல்லதொரு திருப்பம் ஐயா.
திடீர் திருப்பம். எழுத்தாளர் தி.ஜானகிராமன் பொடி வைத்து எழுதுவதைப் போன்று கதையின் கரு அமைந்துள்ளது.
பதிலளிநீக்குஏற்கெனவே படித்தபோது
பதிலளிநீக்குஇக்கவிதை ஆழமாய் பதிந்திருந்தது
தங்கள் சிறந்த படைப்புகளில் இதுவும் ஒன்று
மிகக்குறிப்பாக இறுதிப் பத்தியின் அடர்த்தி.
ஆஹா, கவிதை. கவிதை என்றாலே காத தூரம் ஓடும் என்னைக் கட்டி இழுத்த கவிதை
பதிலளிநீக்குஅருமை..
பதிலளிநீக்குநல்ல நடை, அழுத்தம்.
God Bless You
மீள் பதிவாக இருந்தால்கூட பல செய்திகள் எப்பொழுதும் பொருந்திவருவனவே. உங்ளது பிற பதிவுகளைப் போல கவிதைப் பதிவும் எங்களுக்கு ஒரு பாடமே.
பதிலளிநீக்குஇன்னுமோர்
பதிலளிநீக்குஇருபது ஆண்டுகள்
கழித்தும் மீள் பதிவு
செய்யத்தக்க
நற்பதிவு
சரியான ஆலோசனை...!
பதிலளிநீக்குகவிதையை இரசித்தேன். வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ துரை செல்வராஜு
நற்பண்பின் மணம் கவிதையின் கடைசியில்தானே தெரிகிறது. வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி ஐயா.
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்
வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி ஸ்ரீ.
பதிலளிநீக்கு@ கில்லர்ஜி
கவிதையின் கடைசி வரி அனுபவத்தின் படிப்பு. வருகைக்கு நன்றி ஜி.
பதிலளிநீக்கு@ தி. தமிழ் இளங்கோ
நான் என் பாணியில் எழுதுகிறேன் அது வேறு சிலரின் எழுத்துப்போல் தோற்றமளிப்பதுஎதேச்சையே என்று கூற விரும்புகிறேன்.
பதிலளிநீக்கு@ ரமணி
ஏற்கனவே எழுதி இருந்தது ஆழமாய்ப் பதிந்திருக்கிறது என்பதே மகிழ்ச்சி அளிக்கிறது வருகைக்கு நன்றி சார்.
பதிலளிநீக்கு@ டாக்டர் கந்தசாமி
உங்கள் சார்பாக எனக்கு நானே ஒரு ஷொட்டு கொடுத்துக் கொள்கிறேன். நன்றி சார்.
பதிலளிநீக்கு@ வெட்டிப் பேச்சு
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்.
பதிலளிநீக்கு@ டாக்டர் ஜம்புலிங்கம்
வயதானாலும் சில நேரங்களில் எண்ணங்கள் மாசுபடும் வாய்ப்பு உள்ளது என்பதும் சொல்ல வந்த கருத்து. வருகைக்கு நன்றி சார்
பதிலளிநீக்கு@ அன்பே சிவம்
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா.
பதிலளிநீக்கு@ திண்டுக்கல் தனபாலன்
ஆலோசனை என் போன்றோருக்கே. வருகைக்கு நன்றி டிடி.
பதிலளிநீக்கு@ வே நடன சபாபதி.
வருகை புரிந்து ரசித்ததற்கு நன்றி ஐயா.
நல்ல யோசனைதான்!
பதிலளிநீக்குஇப்படி ஆலோசனை சொல்ல பெரியவர்கள் இல்லாததால் தான் ,இன்றும் தொட்டில் குழந்தைகள் பெருகி வருகின்றன :)
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
வருகைக்கும் யோசனையைப் பாராட்டியதற்கும் நன்றி மேம்
பதிலளிநீக்கு@ பகவான் ஜி
இதற்கு இப்படியும் ஒரு கோணம் உள்ளதா, வருகைக்கு நன்றி ஜி
அருமையான கவிதை ஐயா
பதிலளிநீக்குகடைசி வரி அருமை
பதிலளிநீக்கு@ கரந்தை ஜெயக்குமார்
/கடைசி வரி அருமை/ கவிதையே அதுதானே ஐயா வருகைக்கு நன்றி.
அருமையான கவிதை சார்! அப்படியே திரும்பத் திரும்ப வாசித்து லயித்து விட்டோம். வயதானாலும் காமம் அழிவதில்லை என்பதைச் சொல்லி இறுதியில் சொன்னீர்கள் பாருங்கள் அந்தத் திருப்பம் தான் இதில் ஹைலைட்! ரசித்தோம்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ துளசிதரன் தில்லையகத்து
கவிதையை ரசித்து வாசித்ததற்கு மிக்க நன்றி. எழுதுவது புரிந்து கொள்ளப்படும்போது அடையும் மகிழ்ச்சியே அலாதி மீண்டும் நன்றி.